ராஜீவ் காந்தி இறந்துவிட்டார் என்ற செய்தி டெல்லியில் இருந்த சோனியா காந்திக்கு இரவு 12 மணி அளவில் தெரிவிக்கப்பட்டது. அவர் அதிர்ச்சியால் உறைந்து போனார். ராஜீவ் காந்தியின் ஒரே மகன் ராகுல் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தார். அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் உடனடியாக விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டார். சோனியாவும், மகள் பிரியங்காவும் தனி விமானம் மூலம் சென்னைக்கு விரைந்தனர். இதற்கிடையே ராஜீவ் காந்தியின் உடல் வேன் மூலம் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டது. அங்கு உடல் பரிசோதனை நடந்தது.
டெல்லிக்கு கொண்டு செல்லப்படுவதற்காக பெட்டியில் வைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி நடந்து வந்தது. கவர்னர்
பீஷ்மநாராயண் சிங் ஆஸ்பத்திரிக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் ராஜீவ் உடல் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு கொண்டு போகப்பட்டது. டெல்லியில் இருந்து சோனியாவுடனும், பிரியங்காவுடனும் புறப்பட்ட தனி விமானம் சென்னை வந்து சேர்ந்தது.
ராஜீவ் காந்தி உடலைப் பார்த்து சோனியாவும், பிரியங்காவும் கதறித்துடித்தனர். பின்னர் அவர்கள் வந்த தனி விமானத்திலேயே ராஜீவ் உடல் டெல்லிக்கு கொண்டு போகப்பட்டது. சோனியாவும், பிரியங்காவும் காங்கிரஸ் தலைவர்களும் உடன் சென்றார்கள்
டெல்லிக்குக் கொண்டு போகப்பட்ட ராஜீவ் காந்தியின் உடல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆபரேஷன்கள் மூலம் உடலை டாக்டர்கள் சீரமைத்தனர். பின்னர் ராஜீவ் காந்தியின் வீட்டுக்கு உடல் கொண்டு போகப்பட்டது.
அங்கு சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக தீன்மூர்த்தி இல்லத்துக்கு (பண்டித நேரு வசித்த வீடு) கொண்டு போய் வைத்தார்கள். இதற்கிடையில் அமெரிக்காவில் இருந்து ராகுல் டெல்லி வந்து சேர்ந்தார். தந்தையின் உடலைக்கண்டு அலறித்துடித்தார்.
ராஜீவ் உடல் அருகே சோனியாவும், பிரியங்காவும் துயரமே உருவாக அமர்ந்திருந்தனர். சஞ்சய் காந்தியின் மனைவி மேனகாவும் சோகத்துடன் அமர்ந்திருந்தார்.
பிரதமர் சந்திரசேகர் தலைமையில் மத்திய மந்திரிசபை கூடி ராஜீவ் மரணத்துக்கு அனுதாபம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிப்பது என்றும், அரசு மரியாதையுடன் ராஜீவ் உடலை தகனம் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர், பூடான் மன்னர், அமெரிக்க துணை ஜனாதிபதி, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் உலகப் பிரமுகர்கள் பலர் வந்திருந்து இறுதி மரியாதை செலுத்தினர். 23-ந்தேதி பிற்பகல் இறுதி ஊர்வலம் நடந்தது. முப்படை தளபதிகள்,
ராஜீவ் உடலை சுமந்து வந்து பீரங்கி வண்டியில் வைத்தார்கள். பிரதமர் சந்திரசேகர், முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங் மற்றும் பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ராஜீவ் உடலை தகனம் செய்ய,
இந்திரா காந்தி சமாதி இருக்கும் சக்தி ஸ்தலத்தில் தகன மேடை அமைக்கப்பட்டிருந்தது. மாலை 4.45 மணிக்கு இறுதி ஊர்வலம் அந்த இடத்தை அடைந்தது. ராஜீவ் உடலை ராகுல், நடிகர் அமிதாபச்சன் மற்றும் உறவினர்கள் தூக்கி வந்து தகன மேடையில் வைத்தார்கள்.
உடல் மீது சந்தனக் கட்டைகள் அடுக்கப்பட்டு, வைதீக சடங்குகள் நடந்தன. பிறகு "சிதை"க்கு ராகுல் தீ மூட்டினார். மைதானத்தில் திரண்டிருந்த பொதுமக்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். மறுநாள் ராஜீவ் காந்தி அஸ்தி 34 கலசங்களில் சேகரிக்கப்பட்டது. அலகாபாத்தில் கங்கையும்,
யமுனையும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்திலும், இமயமலை சாரல் உள்பட இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் கரைப்பதற்காக அஸ்தி கலசங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. திரிவேணி சங்கமத்துக்கு சோனியா காந்தி சென்றிருந்தார்.
ராஜீவ் காந்தி அஸ்தி சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ராஜாஜி மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், ரெயில் மூலம் கன்னியாகுமரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.
இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை பற்றி துப்புதுலக்க சிறப்பு மத்திய புலனாய்வு பிரிவு அமைக்கப்பட்டது. அந்த குழுவைச் சேர்ந்த 20 அதிகாரிகள் ராஜீவ் கொல்லப்பட்ட இடமான ஸ்ரீபெரும்புதூருக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்கள். வெடித்த வெடிகுண்டு துண்டுகளை சேகரித்தனர்.
ராஜீவ் காந்தியின் உடல் அருகே சிதைந்து கிடந்த பெண்தான் கொலையாளியாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்தனர். சக்தி வாய்ந்த குண்டை அவள் பயன்படுத்தி வெடிக்க செய்திருக்க வேண்டும் என்று ஊகித்தார்கள். மேலும் கொலை சம்பவம் நடந்த இடத்தில் பெண்கள்
அணியும் பெல்ட்' ஒன்றும் சிதைந்து கிடந்ததை கண்டு எடுத்தார்கள். அதில் வெடிகுண்டு மருந்து நெடி வீசுவதையும் கண்டுபிடித்தனர். எனவே கொலையாளி அவளேதான் என்று உறுதிப்படுத்தினார்கள். ஆனாலும் அவள் யார், பெயர் என்ன என்ற விவரம் எதுவும் தெரியாமல் இருந்தது.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது அருகே இருந்த செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள் ராஜகுரு, எட்வர்டு, சப்-இன்ஸ்பெக்டர் எத்திராஜ், போலீஸ்காரர்கள் ரவி, தர்மன், பீட்டர், முருகன்,
பெண் போலீஸ் சந்திரா, முன்னாள் எம்.எல்.சி. முனுசாமி, லதா கண்ணன், கோகிலா, ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரி குந்தா உள்பட 18 பேர் இறந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மரகதம் சந்திரசேகர், போலீஸ் டி.ஐ.ஜி. மாத்தூர், போலீஸ் அதிகாரி நாஞ்சில் குமரன் ஆகியோர்
உள்பட 21 பேர் காயம் அடைந்தனர். டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி, ராஜீவ் காந்தி வகித்து வந்த காங்கிரஸ் தலைவர் பதவியை சோனியா ஏற்க வேண்டும் என்றும், அமேதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனால் இந்த கோரிக்கைகளை ஏற்க சோனியா மறுத்து விட்டார். ராஜீவ் காந்தி மரணம் அடைந்ததால் இரண்டாவது கட்ட தேர்தல் மே 23-ல் இருந்து ஜுன் 12-ந்தேதிக்கும், மூன்றாவது கட்ட தேர்தல் மே 26-ல் இருந்து ஜுன் 15-ந்தேதிக்கும் தள்ளி வைக்கப்பட்டது. இந்த சமயத்தில் ராஜீவ் கொலைக்கும்,
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தொடர்புகள் இருக்கலாம் என்று செய்திகள் வெளியாயின. இதை மறுத்து விடுதலைப்புலி தளபதிகளில் ஒருவரான கிட்டு அறிக்கை விடுத்தார். "ராஜீவ் காந்தி மரணச்செய்தி எங்களுக்கு அதிகமாக அதிர்ச்சி அளித்தது. எங்களால் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியவில்லை.
இதில் எந்த வகையிலும் எங்களுக்கு தொடர்பு இல்லை" என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்' தொடரில் குறிப்பிடப்பட்டிருந்த அண்ணா, சம்பத் ஆகியோர் நடித்த "சிவாஜி கண்ட இந்துராஜ்ஜியம்' நாடகத்தில் விடுப்பட்டுப் போன மறக்க முடியாத நகைச்சுவை நிகழ்வை மறைந்த எனது தந்தையார் இரா.சங்கரலிங்கனார் என்னிடம் கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அந்நாடகத்தில் அடுத்த காட்சிக்காகக் காத்திருக்க நேரிட்ட சம்பத், புகைபிடித்துக் கொண்டு இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, திடீரென்று திரை விலகி விளக்குகள் எரிந்தன. காகப்பட்டராக நடித்த அண்ணாவின் கேள்விக்கணைகளுக்குப்
பதிலளிக்கத் தொடங்கிய சம்பத்தின் வாயிலிருந்து சிகரெட்டின் புகையைப் பார்த்த அண்ணா, உடனே சுதாரித்துக் கொண்டு, ""சிவாஜி, கனல் கக்கப் பேசுவாய் என்று நினைத்தேன். ஆனால் நீயோ புகை கக்கப் பேசுகிறாயே'' என்று சொன்னபோது மாநாட்டு அரங்கத்தில் பலத்த சிரிப்பொலி.
இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழகத்துக்கு முன்னாள் பிரதமர் நேரு அனுப்பிய உறுதிமொழி கடிதம்.
இந்தி திணிப்பு விவகாரம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.வே.கி.சம்பத்துக்கு முன்னாள் பிரதமர் நேரு அனுப்பிய கடிதத்தில் என்ன குறிப்பிட்டிருந்தார் தெரியுமா?
இந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு எதிராக தமிழக மக்களால்1937-ம் ஆண்டு முதல்முறையாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது சென்னை மாகாணத்தில் முதல்முறையாக வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது.
ஈரோடு வெங்கடசாமியின் மகன் கிருஷ்ணசாமி. இவரது தம்பி தான் தமிழகத்தின் தந்தை பெரியார். கிருஷ்ணசாமியின் மகன் தான் சம்பத். 1926ல் பிறந்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்து முடித்ததும் சம்பத்தை திராவிடர் கழகத்தின் மாணவர் அமைப்பின் தலைவர் பதவியில் அமரவைத்தார், அதன்பின் கருஞ்சட்டை படையின் அமைப்பாளராக்கினார்.
குயடிரசு இதழின் பொறுப்பை சம்பத் கவனித்தார். பெரியாரின் வாரிசு அவர் தான் என அனைவரும் நினைத்தனர். அந்தளவுக்கு சம்பத் இயக்கத்தில் வலம் வந்தார்.
கலைஞர் பாவாடை நாடா பற்றி சொன்னதாக அவர் மேல் வதந்தி பரப்பினர். விஜயகாந்தும் அப்படி சொல்ல.. கலைஞர் அவர் மீது அவதூறு வழக்கு போட...
கடைசியில் சட்டசபை குறிப்பில் அப்படி ஏதும் இல்லை எனக் கண்டறிந்த விஜயகாந்த் கடைசியில் மன்னிப்பு கேட்டுள்ளார்
வக்கீல் நோட்டீஸ்
27-2-2008 தேதியிட்ட குமுதம் வார இதழில் நீங் கள் (விஜயகாந்த்) பேட்டி கொடுத்துள்ளீர்கள். அதில் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்து நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் தவறானவை, அடிப்படை ஆதாரம் இல் லாதவை.
பேட்டியில் நீங்கள்,
"சட்ட சபையில் திராவிட நாடு பற்றிய ஒரு கேள்வியை எழுப்பி னார் காங்கிரசின் அனந்த நாயகி. இவர் உடனே எழுந்து, நாடாவைக் கழற்றி பாவா டையை தூக்கிப்பார் அங்கே தெரியும் என்றார். சட்டசபை அல்லோகலப்பட்டது. அரசுக் கோப்பின் நாடாவை அவிழ்த்து பார்ப்பதைத்தான்
`கந்தஹார் விமானக் கடத்தல்.. வாஜ்பாய் அரசு செய்தது தவறு' - பரபரப்பைக் கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி புத்தகம்
அமிர்தசரஸில் அரை மணி நேரம் விமானத்தை நிறுத்திவைக்கிறார் பைலட். சந்தேகமடைந்த தீவிரவாதக்குழுத் தலைவன், விமானத்தை எடுக்குமாறு பைலட்டை மிரட்டுகிறான்.
ஆனால், பைலட் மறுக்கிறார். உடனே 25 வயது பயணி ஒருவரைப் பதம் பார்க்கிறது தீவிரவாதக்குழுத் தலைவனின் கத்தி!
1999-ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்குக் கடத்தப்பட்ட இந்திய விமானத்தை மீட்பதற்காக மூன்று பயங்கரவாதிகளை விடுவித்தது இந்திய அரசு. இதை `நவீன இந்திய வரலாற்றில் மிக மோசமாக பயங்கரவாதிகளிடம் சரணடைந்த சம்பவம் இது'
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை அடைந்த 26 பேரும், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதிகள் கே.டி.தாமஸ், டி.பி.வாத்வா, எஸ்.எஸ்.எம்.டுவாத்ரி ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்' இந்த வழக்கை விசாரித்தது.
11-5-1999 அன்று இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. நளினி, அவளது கணவன் முருகன், விடுதலைப்புலி சாந்தன், என்ஜினீயர் பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கும் தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. ராபர்ட், ஜெயக்குமார்,
ரவிச்சந்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள். மீதி 19 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். நளினிக்கு தூக்கு தண்டனை விதிப்பதில், நீதிபதிகள் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது.