ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 26 பேர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருந்ததாவது:- "அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியதால் ராஜீவ் காந்தி மீது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு
விரோதம் இருந்தது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே போர் நடந்து வந்தது. அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பினார். விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும் என்று ஒப்பந்தம் ஏற்பட்டது.
முன்னதாக இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்த 1987-ம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டார். டெல்லி அசோகா ஓட்டலில் தங்கியிருந்த தன்னை கட்டாயப்படுத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியதாக பிரபாகரன் குற்றம் சாட்டினார்.
"ராஜீவ்காந்தி என் முதுகில் குத்திவிட்டார்" என்று கூறினார். யாழ்ப்பாணத்தில் புலேந்திரன், குமரப்பா உள்பட 17 பேர்களை அமைதிப்படையினர் பிடித்து இலங்கை அரசிடம் ஒப்படைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திலீபன்'
உண்ணாவிரதம் இருந்தார். இந்தப் பிரச்சினையில் விடுதலைப்புலிகளுக்கு உதவ ராஜீவ்காந்தி மறுத்துவிட்டார். இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்ட 17 விடுதலைப்புலிகளும் சயனைடு விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்கள்.
இதனால் ராஜீவ் காந்தி மீது பிரபாகரனுக்கு இருந்த கோபம் அதிகரித்தது. பின்னர் வி.பி.சிங் பிரதமரானார். அவர் ஆட்சி கவிழ்ந்து, 1991-ல் தேர்தல் வருவதாக இருந்தது. ராஜீவ் காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஒப்பந்தத்தை அமுல்படுத்தி விடுவார் என்ற அச்சம்
விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டது. இதனால் ராஜீவ் காந்தியை தீர்த்துக்கட்ட விடுதலைப்புலிகள் திட்டம் வகுத்தனர். இதன் பிறகு, 1991-ம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலைப்புலி முருகனை யாழ்ப்பாணத்தில் இருந்து பொட்டு அம்மான் அனுப்பி வைத்தார்.
இந்திய மக்களிடம் சகஜமாக பழகி காரியத்தை வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்று பொட்டு அம்மான் உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில் வசித்த நர்சு பத்மா, நளினி ஆகியோரிடம் நன்றாக பழகி முருகன் அக்குடும்பத்தில் ஒருவரானார்.
இதன் பிறகு 1991-ம் ஆண்டு மே மாதம் ஒற்றைக்கண் சிவராசன் தமிழ்நாட்டுக்கு வந்தான். அவனுடன் சின்னசாந்தன், தனு, சுபா, டிரைவர் அண்ணா, விஜயன், சங்கர் ஆகிய விடுதலைப்புலிகளும் சென்னைக்கு வந்தனர். கொடுங்கையூரில் உள்ள ஜெயகுமார் வீட்டில் சிவராசன் தங்கினான்.
தனுவும், சுபாவும் அங்கு தங்கினார்கள். அங்கு "வயர்லெஸ்" கருவி அமைக்கப்பட்டது. "ராஜீவ் காந்தி போன்ற தலைவர்களை எப்படி நெருங்கிச் சென்று கொலை செய்வது" என்பதற்கு ஒத்திகை பார்க்க சிவராசன் திட்டமிட்டான். 8-5-1991 அன்று வி.பி.சிங் சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசுவதாக இருந்தார்.
அந்த கூட்டத்தை ஒத்திகைக்களமாக சிவராசன் பயன்படுத்திக் கொண்டான். 8-5-1991 அன்று வி.பி.சிங் சென்னை நந்தனம் பொதுக்கூட்டத்தில் பேசினார். சிவராசன் பத்திரிகையாளர்கள் அமரும் இடத்தில் உட்கார்ந்து கொண்டான். அங்கு தனு, சுபா, நளினி, அரிபாபு, பேரறிவாளன், முருகன் ஆகியோர் வந்திருந்தனர்.
தனு கூட்டத்தோடு கூட்டமாக சென்று வி.பி.சிங்கிற்கு மாலை அணிவித்தாள். இதில் அவளுக்கு வெற்றி கிடைத்தது. இதுபற்றி பொட்டு அம்மானுக்கு, தனுவும், சுபாவும் கடிதம் எழுதினார்கள். மே மாதம் 2-ந்தேதி பேரறிவாளன் வயர்லெஸ் கருவியை இயக்க ஒரு எக்சைடு பேட்டரியை சிவராசனுக்கு வாங்கிக் கொடுத்தான்.
பின்பு தனு இயக்க இருக்கும் மனித வெடிகுண்டிற்கு 2 பாட்டரிகளையும் சிவராசனுக்கு வாங்கிக் கொடுத்தார். ராஜீவ் காந்தி தமிழ்நாட்டுக்கு 21-ந்தேதி வருகிறார் என்று 19-ந்தேதியே பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. இதை சிவராசன் தெரிந்து கொண்டான்.
மறுநாள் தனுவுடன் சிவராசன் மைலாப்பூரில் உள்ள கல்யாணி நர்சிங் ஹோம் சென்றான். அங்கு நர்சாக இருக்கும் பத்மாவிடம் தனுவுக்காக "புரூபன் கேப்ஸ்"என்ற மாத்திரையை வாங்கினான். "ராஜீவ் காந்திக்கு அணிவிக்க ஒரு மாலையை வாங்கிக்கொண்டு நாளை 5 மணிக்கு வா" என்று அரிபாபுவிற்கு சிவராசன் உத்தரவிட்டான்.
இதேபோல வில்லிவாக்கத்தில் உள்ள வீட்டில் நளினியை பிற்பகல் 3 மணிக்கு தயாராக இருக்கும்படி சிவராசன் கூறினான். அடையாறில் வேலை பார்க்கும் நளினி 21-ந்தேதி அரை நாள் லீவு எடுத்துக்கொண்டு வில்லிவாக்கம் வீட்டிற்கு வந்துவிட்டாள். அரிபாபுவும் அண்ணாசாலையில் உள்ள
கைவினைப்பொருள் விற்பனை நிலையத்தில் ஒரு சந்தன மாலை வாங்கிக்கொண்டு, பிராட்வே பஸ் நிலையத்திற்கு வந்தான். தனது நண்பரின் கேமராவையும் வாங்கிக்கொண்டு அங்கு தயாராக காத்திருந்தான். கொடுங்கையூரில் உள்ள ஜெயகுமார் வீட்டிற்கு சிவராசன் வந்தான். அங்கு குர்தா,
பைஜாமா ஆடையை சிவராசன் அணிந்து கொண்டான். 9 எம்.எம். கைத்துப்பாக்கி ஒன்றை ஒரு துணிப்பையில் (ஜோல்னா பை) வைத்துக்கொண்டான். அந்த பையை ஜெயகுமாரின் மனைவி சாந்தி தைத்துக் கொடுத்திருந்தாள்.
இதன் பிறகு நேராக கொடுங்கையூரில் உள்ள விஜயன் வீட்டிற்கு சிவராசன் சென்றான். அங்கு தனு, சுபா ஆகியோர் தங்கி இருந்தனர். சிவராசன் வந்ததும் தனு பெல்டில் குண்டை கட்டிக்கொண்டு, மேலே சுடிதாரை அணிந்து கொண்டாள். இந்த சுடிதார் புரசைவாக்கத்தில் தைக்கப்பட்டதாகும்.
இதன் பிறகு சுபா, தனு, சிவராசன் ஆகியோர் வில்லிவாக்கம் சென்று நளினியை பார்த்தனர். நளினியுடன் இவர்கள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்கள். 5 மணிக்கு பிராட்வே பஸ் நிலையத்திற்கு 4 பேரும் போய்ச்சேர்ந்தனர். அங்கு மாலையுடன் தயாராக காத்திருந்த அரிபாபுவை சந்தித்தனர்.
பிறகு காஞ்சீபுரம் பஸ்சில் ஏறி ஸ்ரீபெரும்புதூருக்கு சென்றனர். இரவு 7 மணிக்கு சென்றடைந்த அவர்கள் அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டனர். பிறகு பூ வாங்கிக்கொண்டு பொதுக்கூட்டம் நடக்கும் மேடை அருகே வந்தனர்.
சுபா, நளினி இருவரும் மேடை முன்பு பொது மக்களோடு தரையில் அமர்ந்து கொண்டனர். சிவராசன் நிருபர் போல நின்று கொண்டான்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்' தொடரில் குறிப்பிடப்பட்டிருந்த அண்ணா, சம்பத் ஆகியோர் நடித்த "சிவாஜி கண்ட இந்துராஜ்ஜியம்' நாடகத்தில் விடுப்பட்டுப் போன மறக்க முடியாத நகைச்சுவை நிகழ்வை மறைந்த எனது தந்தையார் இரா.சங்கரலிங்கனார் என்னிடம் கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அந்நாடகத்தில் அடுத்த காட்சிக்காகக் காத்திருக்க நேரிட்ட சம்பத், புகைபிடித்துக் கொண்டு இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, திடீரென்று திரை விலகி விளக்குகள் எரிந்தன. காகப்பட்டராக நடித்த அண்ணாவின் கேள்விக்கணைகளுக்குப்
பதிலளிக்கத் தொடங்கிய சம்பத்தின் வாயிலிருந்து சிகரெட்டின் புகையைப் பார்த்த அண்ணா, உடனே சுதாரித்துக் கொண்டு, ""சிவாஜி, கனல் கக்கப் பேசுவாய் என்று நினைத்தேன். ஆனால் நீயோ புகை கக்கப் பேசுகிறாயே'' என்று சொன்னபோது மாநாட்டு அரங்கத்தில் பலத்த சிரிப்பொலி.
இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழகத்துக்கு முன்னாள் பிரதமர் நேரு அனுப்பிய உறுதிமொழி கடிதம்.
இந்தி திணிப்பு விவகாரம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.வே.கி.சம்பத்துக்கு முன்னாள் பிரதமர் நேரு அனுப்பிய கடிதத்தில் என்ன குறிப்பிட்டிருந்தார் தெரியுமா?
இந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு எதிராக தமிழக மக்களால்1937-ம் ஆண்டு முதல்முறையாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது சென்னை மாகாணத்தில் முதல்முறையாக வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது.
ஈரோடு வெங்கடசாமியின் மகன் கிருஷ்ணசாமி. இவரது தம்பி தான் தமிழகத்தின் தந்தை பெரியார். கிருஷ்ணசாமியின் மகன் தான் சம்பத். 1926ல் பிறந்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்து முடித்ததும் சம்பத்தை திராவிடர் கழகத்தின் மாணவர் அமைப்பின் தலைவர் பதவியில் அமரவைத்தார், அதன்பின் கருஞ்சட்டை படையின் அமைப்பாளராக்கினார்.
குயடிரசு இதழின் பொறுப்பை சம்பத் கவனித்தார். பெரியாரின் வாரிசு அவர் தான் என அனைவரும் நினைத்தனர். அந்தளவுக்கு சம்பத் இயக்கத்தில் வலம் வந்தார்.
கலைஞர் பாவாடை நாடா பற்றி சொன்னதாக அவர் மேல் வதந்தி பரப்பினர். விஜயகாந்தும் அப்படி சொல்ல.. கலைஞர் அவர் மீது அவதூறு வழக்கு போட...
கடைசியில் சட்டசபை குறிப்பில் அப்படி ஏதும் இல்லை எனக் கண்டறிந்த விஜயகாந்த் கடைசியில் மன்னிப்பு கேட்டுள்ளார்
வக்கீல் நோட்டீஸ்
27-2-2008 தேதியிட்ட குமுதம் வார இதழில் நீங் கள் (விஜயகாந்த்) பேட்டி கொடுத்துள்ளீர்கள். அதில் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்து நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் தவறானவை, அடிப்படை ஆதாரம் இல் லாதவை.
பேட்டியில் நீங்கள்,
"சட்ட சபையில் திராவிட நாடு பற்றிய ஒரு கேள்வியை எழுப்பி னார் காங்கிரசின் அனந்த நாயகி. இவர் உடனே எழுந்து, நாடாவைக் கழற்றி பாவா டையை தூக்கிப்பார் அங்கே தெரியும் என்றார். சட்டசபை அல்லோகலப்பட்டது. அரசுக் கோப்பின் நாடாவை அவிழ்த்து பார்ப்பதைத்தான்
`கந்தஹார் விமானக் கடத்தல்.. வாஜ்பாய் அரசு செய்தது தவறு' - பரபரப்பைக் கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி புத்தகம்
அமிர்தசரஸில் அரை மணி நேரம் விமானத்தை நிறுத்திவைக்கிறார் பைலட். சந்தேகமடைந்த தீவிரவாதக்குழுத் தலைவன், விமானத்தை எடுக்குமாறு பைலட்டை மிரட்டுகிறான்.
ஆனால், பைலட் மறுக்கிறார். உடனே 25 வயது பயணி ஒருவரைப் பதம் பார்க்கிறது தீவிரவாதக்குழுத் தலைவனின் கத்தி!
1999-ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்குக் கடத்தப்பட்ட இந்திய விமானத்தை மீட்பதற்காக மூன்று பயங்கரவாதிகளை விடுவித்தது இந்திய அரசு. இதை `நவீன இந்திய வரலாற்றில் மிக மோசமாக பயங்கரவாதிகளிடம் சரணடைந்த சம்பவம் இது'
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை அடைந்த 26 பேரும், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதிகள் கே.டி.தாமஸ், டி.பி.வாத்வா, எஸ்.எஸ்.எம்.டுவாத்ரி ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்' இந்த வழக்கை விசாரித்தது.
11-5-1999 அன்று இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. நளினி, அவளது கணவன் முருகன், விடுதலைப்புலி சாந்தன், என்ஜினீயர் பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கும் தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. ராபர்ட், ஜெயக்குமார்,
ரவிச்சந்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள். மீதி 19 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். நளினிக்கு தூக்கு தண்டனை விதிப்பதில், நீதிபதிகள் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது.