சட்டசபைக்கு நடக்கும் தேர்தலாக இருந்தாலும் நகரசபை பஞ்சாயத்து களுக்கு நடக்கும் தேர்தலாக இருந்தாலும் நாம் ஒரு நாள் ஒரு ஓட்டு சீட்டில் குத்தும் ஒரு முத்திரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நம்மை ஆள போகின்றது யார் என்பதற்காக போடப்படும்
முத்திரை என்பதை உணரும்போது நமது முத்திரைக்கு எவ்வளவு சக்தி உள்ளது என்பது தெரிகின்றது அல்லவா. நம்மிடம் எவ்வளவு பெரிய சக்தி இருக்கின்றது என்பதை உணர்ந்து கொண்டோம். ஆனால் அந்த சக்தியை உபயோகிக்காமல் இருக்க முடியுமா?
முடியவே முடியாது! இந்த சக்தியை எப்படி உபயோகிப்பது எந்தச் சின்னத்தில் முத்திரையைக் குத்துவது? என்பதைப் பற்றி யோசனையை எல்லாம் சக்தியின் வலிமையை தெரிந்து கொண்டதும் தானாகவே உண்டாகி விடும் என்பதில் சந்தேகமில்லை பொறுப்பு உணர்ந்து
வாக்குச் சீட்டின் சக்தியை உணர்ந்து நல்ல முறையில் ஓட்டு போடும் பழக்கம் மக்களுக்கு இருக்க வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு வரும் தனித்தனியாக டமுத்திரை குத்துவது மூலம் அளிக்கும் சக்தி அனைத்தும் ஒன்று இரண்டாக சேர்ந்து நாட்டை ஆளுகின்ற சக்தியாக உருவாகும் போது நல்ல சக்தி வாய்ந்த கட்சி
ஆட்சியில் அமர முடியும்.
நாட்டை நாளை ஆளப்போய் கின்ற சக்தி எது என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு வாக்காளர் களிடம் இருக்கிறது என்பது தெளிவாக தெரிந்து விட்டதல்லவா?
இனி நாட்டை ஆள தகுந்த சக்தி எது என்பதை வாக்குச்
சாவடிக்கு போவதற்கு முன்னால் வாக்காளர்கள் நன்றாக சிந்தித்து தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியமாகும்.
அப்படிப் பார்த்தால் தேர்தலில் போட்டி போடும் கட்சிகளின் ஏதாவது ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் முதலில் கவனிக்க வேண்டிய புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.
முதலில் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு எந்தக் கட்சிக்கு சக்தி உள்ளது. அப்படி எந்தக் கட்சி சொல்லுகிறது. ஏற்கனவே எங்காவது அந்த கட்சி பொறுப்பை ஏற்று ஆட்சி நடத்தி இருக்கின்றதா? அப்படியானால் அப்போது முன்பு சொன்னபடி எதையாவது செய்து இருக்கின்றார் களா!
அல்லது செய்யத் தொடங்கிய முயற்சியாவது எடுத்து இருக்கின்றார் களா? அவர்களுடைய கொள்கை என்ன ?அவை நாட்டுக்கு நல்லது செய்யுமா? செய்யாதா? இப்படி பல கேள்விகளை வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்குள்ளேயே கேட்டு நடைமுறை களைக் கொண்டு பதில்களை தெரிந்து கொண்டாக வேண்டும்.
அதோடு தேர்தலில் போட்டியிடும் பல்வேறு கட்சிகளின் கொள்கை களையும் அவற்றின் நடைமுறை களையும் எல்லாவற்றையும் விட எந்த கட்சி நாட்டில் மபொறுப்பை ஏற்று ஆள தகுந்த சக்தி பெற்றிருக் கின்றது பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு சுயமான சக்தி இருக்கின்றதா
தவிர தயவு தாட்சண்யம் இல்லாமல் ஆட்சி ஆள முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும்.ஆளும் கட்சியாக வரக்கூடும் என்று நினைக்கக் கூடிய கட்சிக்கு இப்படிப்பட்ட தகுதிகள் அவசியமாகும். அப்போதுதான் நாட்டில் நிலையான அரசாங்கத்தை கொண்டு செயல்பட முடியும்.
நிலையான அரசாங்கம் என்றால் என்ன? அப்படிப்பட்ட அரசாங்கம் தேவை என்பது ணஎவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? அதனால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன என்பதையும் தெரிந்து கொள்வது முக்கியமாகும்
நிலையான அரசாங்கம் என்பது முதலில் பூரண மெஜாரிட்டி பலம் உள்ள கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்பதுதான். அடுத்து அந்தக் கட்சியின் பலம் இடையில் சிதைந்து விடாமல் சுய பலத்திலேயே இருக்க வேண்டியது அவசியமாகும்.
இப்படி அமையும் நிலையான அரசாங்கத் தினால் தான் ஆளும் கட்சி தனது பலம் குறைந்து விடுமோ என்ற பயமில்லாமல் நிர்வாக வேலைகளை தயவு தாட்சண்யம் இல்லாமல் செய்ய முடியும்.
ஆகவே ஓட்டு போடும் போது எந்த கட்சிக்கு எந்த சின்னத்தின் மீது முத்திரை குத்தினால் நல்லது அதனால் நிலையான அரசாங்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் கவனித்து வாக்கு செய்வது வாக்காளர் களின் கடமையாகும்
இப்படியே தமிழ்நாட்டில் மட்டும் நிலையான அரசாங்கம் இருந்தால் போதுமா போதவே போதாது மக்களுக்குச் சேவை செய்கின்ற நல்ல ஒரு அரசாங்கமாக மத்திய அரசு இருந்தால்தான் நமது தேசத்தின் மக்களுக்கு நல்ல வசதிகளையும நல்ல பாதுகாப்பை யும் செய்து கொள்வது சாத்தியமாகும்.
நமது நாடு பரந்த தேசம் இதில் பல மொழிக்காரர் களும் பல ஜாதி மதங்களைச் சேர்ந்தவர் களும் இருக்கின்றார் கள் இந்த வித்தியாசங் களை பெரிது படுத்துக் கொண்டிருந் தால் முடிவில்லாத தகராறுகள் தான் ஏற்படுமே தவிர நாட்டில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படாது
அதனால் தான் பெருந்தகை பேரறிஞர் அண்ணா அவர்கள் மாநிலத்தில் சுயாட்சி மத்தியிலே கூட்டாட்சி என்ற கொள்கையை எடுத்து வைத்தார்கள். இப்பொழுது நாம் சொல்லுவதும் அதே தான் மாநிலத்தில்
சுயாட்சி மத்தியிலே கூட்டாட்சி தத்துவத்தை தான் நாமும் செய்ய வேண்டிய அவசியத்தில் இருக்கின் றோம். மத்தியிலே ஒரே கட்சி உடைய ஆட்சி இன்று நடப்பதால் தான் மக்கள் மிகவும் துன்பத்திற்கு ஆளாகி கொண்டு இருக்கின்றார் .
கள். நாடு எங்கு போய்க் கொண்டிருக் கின்றது என்பது யாருக்கும் தெரியவில்லைநாட்டிலே எங்கும் விவசாயி களுடைய போராட்டம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு பண மதிப்பிழப்பு கொள்கையால் பாளாய் போன மக்கள் பாராளுமன்றத்திலே ஆளும்
கட்சிக்கு சாதகமான சட்டங்களை நிறைவேற்றிக் கொள்வது இந்த நாட்டில் பிறந்தவர் களையே இந்த நாட்டை விட்டு வெளியேற்ற துடிப்பது போன்ற கொடுமையான செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. போராட்டத்தில் கலந்து கொள்ளும் மக்கள் ஆளும் கட்சி கார்களால் வாகனங்களை ஏற்றிக் கொல்லப் படுகின்றார்கள
இது போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டன.பல்வேறு கொள்கை களைக் கொண்ட கட்சி கள் மற்ற மாநிலங்களில் இருந்தாலும் இந்திய நாட்டு மக்களின் நலன் கருதி மாநிலக் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மத்தியிலே ஒரு கூட்டாட்சியை அமைப்பது தான் இன்றைய இந்திய ஜனநாயகத் திற்கு
அவசியமாக இருக்கின்றது.இந்திய நாட்டின் நலன் கருதி ஏர் இந்தியாவின் விமானச் சேவை நிறுவனத்தை நாட்டுடமை ஆக்கியது காங்கிரஸ் அரசு. இன்று அதை அப்படியே திருப்பி டாட்டா நிர்வாகமான தனியாரிடம் பிஜேபி அரசு ஒப்படைத்து விட்டது .130 கோடி மக்கள் வாழுகின்ற
இந்த இந்திய திரு நாட்டில் ஆசியக் கண்டத்திலேயே ஒரு விமானம் கூட அரசாங்கத் திற்கு சொந்த மில்லாத நாடக இந்தியா
இருக்கிறது என்பது எதை காட்டு கிடைக்கின்றது கொடுமை யிலும் கொடுமை இது.
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து ஆறாம் ஆண்டில் நேரு அவர்கள் எல் ஐ சி நிறுவனத்தைஇந்தியாவில் துவக்கி வைத்தார்கள் அதன் அப்போதைய மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய்தான் ஆனால் தற்போது அறிக்கையில் அதன் மதிப்பு முப்பத்து ஒரு லட்சம் கோடி ரூபாய் ஆக உயர்ந்து நிற்கின்றது
எல் ஐ சி நிறுவனம். சென்ற ஆண்டு மட்டும் ஈட்டித் தந்த வருமானத்தில் உள்ள லாபம் மட்டுமே 2611 கோடி ரூபாய். இந்த அபரிமிதமான வருமானத்தை தருகின்ற நிறுவனத்தைவிற்பது யார் இந்த Bjb ஆட்சி தானே.
தனி ஒரு கட்சி பெரும் பான்மையுடன் மத்தியில் ஆட்சி செய்வதனால் தானே இப்படி யெல்லாம் செய்ய முடிகின்றது. மத்தியிலே கூட்டாட்சியாக இருந்தால் இப்படி எல்லாம் செய்ய முடியுமா?தேவை இல்லாத சட்டங்கள எல்லாம் போட முடியுமா என்ன!
நல்ல திட்டங்களை கொண்டு வர நிராகரிக்கும் அரசாங்கம்; ஏழைகள் முன்னேற கூடாது என்று நினைத்துக்கொண்டு மேலும் மேலும் பணக்காரர்கள் பணம் சம்பாதித்து மேலும் பணக்காரர்கள் ஆவதற்கு தடை செய்யக்கூடாது என்று நினைக்கின் றது .
மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் ஏன்று உபதேசம் செய்யும் ஒரு கட்சி மத்தியில் ஆட்சியில் இருப்பதால் இது இந்த நாட்டிற்கு ஏற்பட்ட துரதிஷ்டம் தான்.
மகாத்மா காந்தியடிகள் எதற்காக பாடுபட்டார்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் எதற்காக மாநில சுயாட்சி வேண்டும் மத்தியில் கூட்டாட்சி வேண்டும் என்றார்கள். இன்று இந்திய நாட்டின் கோடிக் கணக்கான மக்களுக்கு வாழ வழி இல்லை .இந்த ஆட்சியிலே வேலை இல்லை! தொழில் இல்லை!! பணமும் கிடையாது!!!
சுருக்கமாகச் சொன்னால் சுதந்திரம் கூட கிடையாது. வயிறார சோறு கிடைக்க வில்லை. கோடான கோடி ஏழைகளுக்கு வாழ்வு கிடைக்க வேண்டும். ஒவ்வொரு வருடைய வாழ்வும் தரமும் மற்றவர்களைப் போல உயர வேண்டும் என்பதே பேரறிஞர் அண்ணா தலைவர் கலைஞர்
அவர்கள் இன்றைய நமது மாண்புமிகு முதலமைச்சர் தளபதியார் அவர்களது லட்சியமாகும். இது மட்டுமா இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் ஜாதி மத பேதமின்றி இருக்க வேண்டும் வாழ்க்கையின் தரத்தை மட்டுமல்ல சமூக சமுதாய அந்தஸ்திலும் மக்கள் அனைவரும் சரி நிகர் சமானம் என்ற உணர்ச்சி
நாடெங்கும் நிலவ வேண் டும். உயர்வு தாழ்வு என்ற உணர்ச்சிக்கு இடமின்றி மக்கள் வாழ வேண்டும் என்று தானே
சுதந்திர த்திற்காக பாடுபட்டார்கள். இன்று மக்கள் சுதந்திரமாக வாழ முடிகிறதா என்ன!!
நம்முடைய நாடு எப்படிப்பட்டது நாடு எப்போதும் இப்படித்தான் தாழ்ந்து கிடந்ததா இல்லையே! உலகத்தில் உள்ள மற்ற நாடுகளெல் லாம் தாழ்ந்து கிடந்த நேரத்தில் நம்முடைய நாடு மிகவும் உயர்வான நிலையில் இருந்தது. உலகநாடு களின் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் எல்லா நாடுகளுமே தாழ்ந்து இருந்த
நேரத்தில் நமது நாட்டவர்கள் சிறப்பான நிலையில் வாழ்ந்து வந்ததாகவும் ஆட்சி செய்ததாகவும் தானே வரலாறு கூறுகிறது. அன்று உயர்ந்து நல்லபடியாக வாழ்ந்த நாடு இன்று இந்த நேரத்தில் முன்பு இருந்த நாடுகளை விட தாழ்ந்து இருப்பதைப் பார்க்கின்றோம் எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது.
தலை கீழான மாறுதல் இதற்கு காரணம் என்ன? சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்மிடையே என்ன கோளாறு? எதனால்தான் தாழ்ந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு பொறுப்பாளி யார்?;கடந்த ஏட்டாண்டு காலமாக பிஜேபியின் கைக்கு ஆட்சி போனது தானே காரணம்.
பண மதிப்பிழப்பு திட்டம் தானே பணக்காரனை மேலும் மேலும் பணக்காரனாகி நன்றாக வாழ்ந்து வந்தவர்கள் அனைவரையும் ஏழையாக ஆக்கி வைத்திருக் கின்றது.
இந்த நிலை மாறவேண்டும் அல்லவா? மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றது என்று நினைத்து நாம் கைகட்டி இருந்து விடக்கூடாது
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை அடைந்த 26 பேரும், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதிகள் கே.டி.தாமஸ், டி.பி.வாத்வா, எஸ்.எஸ்.எம்.டுவாத்ரி ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்' இந்த வழக்கை விசாரித்தது.
11-5-1999 அன்று இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. நளினி, அவளது கணவன் முருகன், விடுதலைப்புலி சாந்தன், என்ஜினீயர் பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கும் தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. ராபர்ட், ஜெயக்குமார்,
ரவிச்சந்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள். மீதி 19 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். நளினிக்கு தூக்கு தண்டனை விதிப்பதில், நீதிபதிகள் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 26 பேர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருந்ததாவது:- "அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியதால் ராஜீவ் காந்தி மீது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு
விரோதம் இருந்தது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே போர் நடந்து வந்தது. அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பினார். விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும் என்று ஒப்பந்தம் ஏற்பட்டது.
முன்னதாக இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்த 1987-ம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டார். டெல்லி அசோகா ஓட்டலில் தங்கியிருந்த தன்னை கட்டாயப்படுத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியதாக பிரபாகரன் குற்றம் சாட்டினார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிடிபட்டவர்களை அடைத்து வைக்க பூந்தமல்லி சப்-ஜெயில் பலத்த பாதுகாப்பு கொண்டதாக மாற்றி அமைக்கப்பட்டது. 14 அடி உயரம் கொண்ட சுற்றுச்சுவர் 18 அடி உயரத்துக்கு உயர்த்திக் கட்டப்பட்டது. மேலே கண்ணாடி துண்டுகள் பதிக்கப்பட்டன.
கூடுதலாக 10 சிறை அறைகள் கட்டப்பட்டன. இங்கு நளினி, முருகன் உள்பட ராஜீவ் கொலையையொட்டி கைதானவர்கள் அடைக்கப்பட்டனர். சி.பி.ஐ. பிடித்து வைத்து விசாரித்து வந்த நளினியின் தங்கை கல்யாணி விடுவிக்கப்பட்டாள்.
ராஜீவ் கொலை வழக்கில் புதிதாக விஜயன் என்கிற பெருமாள் விஜயன் (வயது 26), பாஸ்கர் என்கிற வேலாயுதம் (55) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டார்கள். மாமனார் -மருமகனான இவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள்தான். அகதிகளாக இந்தியா வந்தவர்கள். கொடுங்கையூரில் தங்கி இருந்தார்கள்.
சென்னை ஆழ்வார்திருநகரில் பதுங்கியிருந்த ஒற்றைக்கண் சிவராசனும், சுபாவும் இனியும் சென்னையில் இருந்தால் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்று நினைத்தனர். அதனால் சென்னையிலிருந்து தப்பிச்செல்ல என்ன வழி என்று யோசித்தனர். சில விடுதலைப்புலிகளின்
உதவியுடன் டேங்கர் லாரிக்குள் மறைந்து கொண்டு ரகசியமாக பெங்களூருக்குச் சென்றார்கள். 29-6-1991-ல் பெங்களூர் போய்ச் சேர்ந்தனர். அங்கு தலைமறைவாக இருந்த அவர்கள் 1 மாத காலம் போலீஸ் கண்ணில் படாமல் அங்கும் இங்கும் திரிந்தனர்.
பிறகு கோனேகுண்டே என்ற இடத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கினர். இதுபோல் பல விடுதலைப்புலிகள் கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்தனர். பெங்களூர் புறநகரில் உள்ள இந்திரா நகர் காலனியில்
இந்தக்கொலையில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது தமிழக போலீசாருக்கு பெரிய சவாலாக இருந்தது. இந்த கொலையில் துப்புதுலக்கும் பொறுப்பு "ஐ.ஜி." கார்த்திகேயன் தலைமையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் துப்பு துலக்கிய விதம் மர்மப்பட மன்னன் ஹிட்ச்ஹாக்
படங்களையும் மிஞ்சுவதாக இருந்தது. ராஜீவ் காந்தியின் நிகழ்ச்சிகளை அரிபாபு என்ற போட்டோகிராபர் படம் எடுத்துக் கொண்டிருந்தார். குண்டு வெடிப்பில் அவர் இறந்து போனாலும் அவருடைய கேமரா சேதம் அடையாமல் கிடந்தது. அந்த கேமராவை போலீசார் கைப்பற்றி உள்ளே பதிவாகியிருந்த
படங்களை பிரிண்ட் போட்டுப் பார்த்தனர். ஒரு படத்தில் லதா கண்ணன், கோகிலா ஆகியோருக்கு நடுவே கையில் சந்தன மாலையுடன் மர்மப்பெண் நின்று கொண்டிருந்தாள். அடுத்த படத்தில் சிறுமி கோகிலாவை ராஜீவ் பாராட்டிய காட்சி பதிவாகியிருந்தது. அருகே அந்த மர்மப்பெண்ணின் தலை தெரிந்தது.
ராஜீவ் காந்தி இறந்துவிட்டார் என்ற செய்தி டெல்லியில் இருந்த சோனியா காந்திக்கு இரவு 12 மணி அளவில் தெரிவிக்கப்பட்டது. அவர் அதிர்ச்சியால் உறைந்து போனார். ராஜீவ் காந்தியின் ஒரே மகன் ராகுல் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தார். அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் உடனடியாக விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டார். சோனியாவும், மகள் பிரியங்காவும் தனி விமானம் மூலம் சென்னைக்கு விரைந்தனர். இதற்கிடையே ராஜீவ் காந்தியின் உடல் வேன் மூலம் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டது. அங்கு உடல் பரிசோதனை நடந்தது.
டெல்லிக்கு கொண்டு செல்லப்படுவதற்காக பெட்டியில் வைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி நடந்து வந்தது. கவர்னர்
பீஷ்மநாராயண் சிங் ஆஸ்பத்திரிக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.