ஆமாம், ஆர் எஸ் எஸ் பின்னணியிலிருந்துதான் அதிகாரிகள் வருகிறார்கள். இப்போ என்ன? - பிஜேபி வானதி சீனிவாசன்.
என்ன கொடுமையிது சரவணா!!!
காலனிய ஆட்சி அகற்றப்பட்டு இந்த நிலப்பரப்பின் பல நாடுகளை ஒன்றித்து ஒன்றியமாக்கி, எல்லா நிலையிலும் நவீன வாழ்விலிருந்து - 1
பின் தங்கிக் கிடந்த குகைவாழ்விகளின் தர்மா வாழ்விலிருந்து மீட்டெடுக்க ஜவஹர்லால் நேரு மட்டும் அன்றைய முதல் பிரதமராக பதவியேற்காமல் போயிருந்தால், இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் பல விசயங்கள் நமக்கு அறிமுகப்படுத்தப்படாமலேயே போயிருக்கும். - 2
அன்று நேரு தனது அறிவின் உயரத்தைக் கொண்டு சரியான நாடுகளோடு போட்டியிட்டு இந்த நாட்டிற்கு அறிமுகமே இல்லாத பல அறிவியல், சமூகத் துறைகளை அந்த நாடுகளுக்கு இணையாக எதிர்காலத்தில் வருமாறு தொடங்கி வைத்தார். ஆரோக்கியமான மக்களாட்சி பின்னணியில் சீர்படுத்தப்பட்ட நிலத்தில் அன்று - 3
விதைக்கப்பட்ட விதையில் மெல்ல தலையெடுத்து வளர்ந்ததுதான் இன்று நாம் நம்மைச் சுற்றி காணும் விசயங்கள் அனைத்தும்.
அதனைத்தான் இன்று கூறு போட்டு விற்று உண்ணும் பிஜேபி, அன்றும் நேரடியாக ஆட்சிக் கட்டிலில் வர முட்டி மோதி முடியாத நிலையில் காங்கிரஸ்குள் தன்னை கரைத்துக் கொண்டு - 4
சரியான சூழல் அமைய பிரணாப் முகர்ஜி போன்றவர்களை உள்ளமர்த்தியபடியே, நாட்டின் வளர்ச்சியை ஒரு மட்டுக்குள் வைத்திருந்தது.
ஏன் இத்தனை அறிவார்ந்தவர்களின் முயற்சியைப் கொடுத்தும், உலகத்தின் இவ்வளவுப் பெரிய மக்களாட்சி நாடான இந்தியா ஏழ்மையிலும், சமூகநீதி பரவலிலும் பிற வளர்ந்த நாடுகளோடு - 5
ஒப்பிடும் போது மிகவும் பின் தங்கியுள்ளது?
ஏனென்றால், இதோ பிஜேபியின் ஒரு முக்கியமான நபர் வெளிப்படையாக வந்து நாங்கள் ஒரு ஜனநாயக நாட்டின் மாண்புகளை சிதைக்கும் வண்ணம் அடிப்படைவாதத்தில் நம்பிக்கை கொண்ட உயரதிகாரிகளை அரசு நிர்வாகத்தில் பணியமர்த்த செய்கிறோம் என்று - 6
ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இந்தியாவை உலகரங்கில் தலைகுணியச் செய்திருக்கிறார்.
இந்தச் சிந்தனையும், செயலும் ஒரு நாட்டின் ஒருமைபாட்டை நாட்பட சிதைக்கும். சிதைபட சிதைபட மக்களிடையே அமைதி, நம்பிக்கை சீர்கெடும். எப்பொழுதும் ஒரு நிச்சயமற்ற தன்மை வியாபித்து இருப்பதால், - 7
வெளிநாட்டு முதலீட்டை அது விரட்டியடிக்கும். நிரந்தர தரித்தரம் குடிமக்களின் அடையாளமாகும். மதமே ரூல் ஆஃப் த டே ஆக சட்டம் ஒழுங்கை விட முதன்மை இடத்தை நிரப்பும் பொழுது உத்திரபிரதேச, பீகாரிய நிகழ்வுகள் பெருகும். - 8
வானதி சீனிவாசனின் அறிவிப்பு, இந்தியாவை ஆஃப்கான், பாகிஸ்தானிற்கு இணையான இடத்தில் வைத்துப்பார்க்க விரும்பும் பாதை. நேரு கண்ட கனவான வளர்ந்தநாடுகளுக்கு இணையான கனவல்ல அது! -end-
பி•டி•ஆர் நம்மிடையே மாறி வந்திருக்கிற திராவிட சிந்தனைக் கொண்ட இளையோர்களுக்கான ஓர் அடையாள மனிதர்.
எப்படி?
ஒரு காலத்தில வெகுஜன ஊடகங்களின் வழியாக நமது பொது புத்தியில் சமூகநீதி, ஜாதியம், இடஒதுக்கீடு, பகுத்தறிவு, திராவிடம் என்று பேசினால், - 1/n @ptrmadurai
ஓரளவிற்கு படித்து விட்டோம் என்பவர்களிடையே, அது போன்ற சாய்வு நிலை "மேட்டிமை தனத்திற்கு" கீழே உள்ள வளர்ச்சியாக நம்ப வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த ஏழாண்டுகளில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கொஞ்சம் இறுக்கமும், கள அரசியலும் புரிந்து அந்த மனச்சிக்கலை உடைத்துக் - 2/n
கொண்டு நம்மில் பலரும் வெளிப்படையாக தங்களது அரசியல் நிலைப்பாட்டை முன் வைத்து எழுதியும் பேசியும் வருகிறோம்.
பி•டி•ஆரின் பின்னணியை வைத்து அவர் ஒயிட் காலர் சொல்லாடலுக்கு கீழாக இறங்கி, தான் பேசவிருக்கும் விசயங்களின் நிலமையின் தீவிரத்தை விளக்க அஞ்சுவார் என்ற நிலையில் - 3/n
இந்த ஊட்டி, கொடைக்கானல், தேராதூன் அப்படின்னு மலைப்பாங்கான இடங்களில் தங்கிப் படிச்சு (boarding school) வளர்ந்த பிள்ளைங்கதான் தனக்கு எப்படி அந்த வசதி வாய்ப்பு கிடைச்சிச்சின்னு தெரியாம மரம் மாதிரி சமூக உணர்வே இல்லாம வளர்ந்து நிற்பானுங்கன்னு நினைச்சேன்... contd
ஆனா பாரு அரசு பள்ளிகளிலேயே படிச்சு, அரசு பாடப் புத்தகங்களையும், நோட்டுக்களையும் வாங்கி எழுதப் படிக்க கற்றுக்கொண்டவிங்கக் கூட என்னமோ தானும் அந்த ஷெப்ஃபெர்ட் சர்வ தேச பள்ளியில படிச்சு வளர்ந்தவிங்க மாதிரி நட்டுக்கிட்டு பேசித் திரியாறனுங்களே அதெப்படிடா?
முட்டாபயலுகளா! சொல்லுறேன் கேட்டுக்கோங்க... வீட்டில இருந்து நடந்து போற அல்லது மிதிவண்டி மிதிச்சு போய்ச் சேருகிற தூரத்தில அவ்வளவு பள்ளிகளை திறந்து வைச்சதுனாலேதான் ஏதோ நம்ம தாத்தா, பாட்டிக்கு கிடைக்காத கல்வி வாசனை நமக்கும் கிடைச்சது. மறந்திடாதே!
வேட்டையாடிகளாக இருந்த பொழுது, நம்முடைய புலம்பெயர்வு என்பது விலங்குகளுடனும், அந்த நிலப்பரப்பின் தட்பவெப்ப நிலையையும் சுற்றியே இருந்தது. பிறகு சரியான நிலப்பரப்பு நீண்ட நெடிய தங்குதலுக்கு உகந்ததாக அமைந்த பொழுது மெல்ல வேளாண்குடிகளாக ஓரிடத்தில் நிலை கொள்ள ஆரம்பித்தோம். - 2
அதனையொட்டி வாழ்வும், சமூகமும் மொல்ல மெல்ல பல சிக்கலான கட்டமைப்பிற்குள் நகர்ந்து நாகரீகங்களாக எழுவதும், வீழ்வதுமென இந்த மனிதகுலம் கடந்து இன்றைய நிலையை வந்தடைந்திருக்கிறது.
இந்த சிக்கலான கட்டமைப்பில் ஒரு பரந்த நிலப்பரப்பின் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளவும், - 3
சமமாக அனைவருக்கும் வாழ்வாதார பொருட்களும், அதற்கான பாதுகாப்பையும் உறுதிப் படுத்த அவர்களிடையே பரந்துபட்ட பார்வை கொண்ட ஒருவரை தேர்ந்தெடுத்து கொடுத்து விட்டு, ஏனையவர்கள் அவரவர்கள் பணிகளில் கவனம் செலுத்தி வாழ்வதாக இருந்தது.