#கோட்டை_மாரியம்மன்
#திண்டுக்கல்

🌿பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய பீடமும், அம்மனின் மூலஸ்தான விக்ரகம் மட்டுமே இருந்தது. மலைக்கோட்டையின் கீழ் திப்பு சுல்தான் காலத்தில் இருந்த ராணுவத்தினர் ஒரு சிறு மடம் நிறுவி மாரியம்மன் சிலையை வைத்தனர். Image
அதுவே திண்டுக்கல் மக்களுக்கு "கோட்டை மாரியம்மனாகவும்' காவல் தெய்வாமாக உள்ளது.

🌿மேற்கு திசையில் மலையும், அதன் மீது கோட்டையும், அமைந்துள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபபட்ட கோட்டை இன்றும் அழியாமல் உள்ளது. இந்த கோட்டையிலிருந்து பழநிக்கு சுரங்கப்பாதை இருப்பதாகவும், Image
இந்த வழியாக பல முறை திப்புசுல்தான் பழநிக்கு சென்றாக வரலாறு கூறுகிறது.

🌿இந்த மலைக்கோட்டையின் அழகான பின்ணனியில்தான் இந்த அம்மன் கோயில் இருக்கிறது.இந்த கோட்டையால்தான் அம்மனும் கோட்டை மாரியம்மன் என அழைக்கப்படுகிறாள்

🌿அம்மன் அமர்ந்த கோலத்தில் இத்தலத்தில் எழிலுற வீற்றிருக்கிறாள் Image
🌿8 கைகளுடன் காட்சி தரும் அம்மனின் வலது கைகளில் பாம்பு, சூலாயுதம், மணி, கபாலம், ஆகியவையும், இடது கையில் வில், கிண்ணம், பாம்பு, ஆகியவைகள் காணப்படுகின்றது.

🌿 இந்த அம்மன் மற்ற தெய்வங்களை காட்டிலும் சிலையின் அடிப்பகுதி, பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் புதைந்து இருப்பது சிறப்பு, Image
🌿இக்கோயிலுக்குகென்று சிறப்பு வாயில்கள் மூன்று உள்ளது. அம்மன் ஊர்வலக்காலங்களில் வெளியே செல்வது முன்புறமாக செல்லும். பின்புற வாயிகள் மலைக்கோட்டையை ஒட்டியுள்ளது.

🌿 ஆண்டுதோறும் மாசிமாதம் 20 நாட்கள் திருவிழா நடைபெறும். Image
🌿சன்னதியின் உள்புறத்தில் நூழைவாயில் கம்பத்தடி அமைந்துள்ளது. தாமிரத்தால் கலந்து செய்யப்பட்டடுள்ளது. அம்மன் சன்னதியை ஒட்டி முன்புறம் தெற்குப்பக்கம விநாயகர் கோவிலும், வடக்குப்பக்கம் மதுரைவீரன் சாமிகோயில், முன்புற வடக்கில் நவக்கிரங்கள், Image
பின்பக்கம் தென்புரம் மூனீஸ்வரசுவாமிசன்னதி, வடபுறம் கருப்பணசாமி சன்னதி உள்ளது.காளியம்மன் சிலை, துர்கை சிலை உள்ளது. மேலும் சிம்மவாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம், ஆகிய வாகனங்கள் விழாக்காலத்தில் அம்மன காட்சிதருவார். Image
🌿திருவிழா தொடங்க முன் அறிவிப்பாக மாசிமாதம் அமாவாசை முடிந்த 5ம் நாள் கொடியேற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து 20 நாள்கள் சிறப்பாக விழா கொண்டாடப்படும் அதிகப்பட்சமாக ஒரு மாதம் வரை திருவிழா நடைபெறும் Image
🌿திண்டுக்கல் நகரின் மத்தியில் கோயில் இருப்பதால் கோயிலுக்கு ஆட்டோ அல்லது பேருந்து மூலம் கோயிலுக்கு சென்று வரலாம்

🌿நோய் நொடிகள் நீங்க மஞ்சளும், உப்பும் கொடி கம்பத்தடியில் இடுகிறார்கள்.

🌿 கொடி ஏற்றும் போது பெண்கள் புனித நீர் அபிஷேகம் நடத்துவர். Image
இதன் மூலம் அம்மனின் கோபம் தணிந்து நாட்டுக்கு நன்மை தருவதாக ஐதீகம்.

🌿தீச்சட்டி ஏந்திவருவது, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அனுதினமும் வழிபட்டால் குழந்தைபாக்கியம் கிட்டும். அவ்வாறு நன்மை பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளை கரும்பு தொட்டிலில் சுமந்தும், Image
மாவிளக்கு ஏற்றி கண்களில் வைத்தும் அம்மனை வழிபடுவது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியாகும். இதுபோன்ற பல்வேறு நேர்த்திகடனை செலுத்துவார்கள்.🙏🙏🙏 @Pvd5888

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கண்ணன்தேவன்

கண்ணன்தேவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kannanthvan

17 Oct
சீன ராணுவத்துடன் ஒப்பிட்டு நம்மை விட சீன ராணுவம் மிக வலுவான நிலையில் உள்ளது என கூறும் சில நண்பர்களுக்காக இப்பதிவு

1. பிரம்மோஸ்

உலகிலேயே அதிவேகமாக சென்று தாக்கும் ஏவுகணை (ஒலியை விட 2.5 மடங்கு) இதற்கு இணையான ஒரு ஏவுகணையை பத்தாண்டு ஆராய்ச்சி செய்தும் Image
அமெரிக்கா மற்றும் சீனாவால் தயாரிக்க முடியவில்லை

2. பிருத்வி

உலகிலேயே ஒரே ஏவுகணையில் 6 அணுகுண்டுகளை சுமந்து, ஒரே நேரத்தில் ஆறு இலக்குகளை தாக்கும் ஒரே ஏவுகணை

3. தேஜஸ்

உலகிலேயே மிகச்சிறிய நவீன போர்விமானம்

4. சுகோய்-30

உலகிலேயே அதிவேக போர்விமானம் Image
5. ஆகாஷ்

உலகிலேயே ஒரே ஏவுகணையில் 10 எதிரி விமானங்களை வீழ்த்தும் ஆற்றல் பெற்ற ஏவுகணை

6. அக்னி-5

உலக அணு ஆயுத ஏவுகணையில் காற்றில்லா உயரத்திற்கு சென்று 5000 கி.மீ தொலைவை 17 நிமிடத்தில் தாக்கும் அதிவேக அணுஆயுத ஏவுகணை
Read 5 tweets
17 Oct
#அருள்மிகு_மாசாணியம்மன்
#திருக்கோயில்_ஆனைமலை
#பொள்ளாச்சி

#ஸ்தல_வரலாறு:

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை நன்னன் எனும் அரசன் ஆட்சி செய்தான்.

அவன் ஆழியாற்றின் கரையில் மாமரம் ஒன்றை வளர்த்து வந்தான்.
அம்மரத்தின் காய், கனிகளை யாரும் பறிக்கவோ, Image
பயன்படுத்தவோ கூடாது எனவும்கட்டளையிட்டிருந்தான்.

ஓர்நாள்,

ஆழியாற்றில் குளித்துக்கொண்டிருந்த இளம்பெண் ஒருத்தி,
ஆற்றில் மிதந்து வந்த அம்மரத்தின் கனியை உண்டுவிட்டாள்.
இதையறிந்த மன்னன்,
அவளுக்கு மரண தண்டனை கொடுத்தான்.
ஊர்மக்கள் எதிர்த்தனர். Image
ஆனால்,
மன்னன் தண்டனையை நிறைவேற்றி விட்டான்.
வருத்தம் கொண்ட மக்கள்
மயானத்தில் அவளை சமாதிப்படுத்தி,

அவ்விடத்தில் அவளைப் போலவே சயனித்த நிலையிலான உருவத்தை செய்து வைத்தனர்.

காலப்போக்கில் அவளே ஊர்காக்கும் அம்மனாக இருந்திட,

மக்கள் இவ்விடத்திலேயே கோயில் எழுப்பி வழிபட்டனர். Image
Read 12 tweets
16 Oct
#இரண்டாவது_திவ்யதேசம்

#அருள்மிகு_அழகிய_மணவாளர் #திருக்கோயில்_உறையூர்_திருச்சி

மூலவர் :- அழகிய மணவாளர்
தாயார் :- கமலவல்லி

பாடியவர்கள்:

திருமங்கையாழ்வார்

கோழியும் கடலும் கோயில் கொண்ட கோவலரே யொப்பர் குன்றமன்ன பாழியும் தோழுமோர் நான்குடையர் பண்டிவர் தம்மையும் Image
கண்டறியோம் வாழியரோ விவர் வண்ண மென்னில் மாகடல் போன்றுளர் கையில் வெய்ய ஆழியொன்று ஏந்தியோர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா
#திருமங்கையாழ்வார்

#தல_சிறப்பு

திருப்பாணாழ்வார் இத்தலத்தில் அவதரித்தவர். இவர் தனிச்சன்னதியில் இருக்கிறார். நாயன்மார்களில் புகழ் சோழர், Image
கோச்செங்கட்சோழர் ஆகிய இருவரும் இவ்வூரில் அவதரித்தவர்களே ஆவர். பொதுவாக வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் சொர்க்கவாசலைக் கடந்து வரும் வைபவம் வைணவத் தலங்களில் நடைபெறும். இதிலிருந்து மாறுபட்டு, தாயார் சொர்க்கவாசல் கடக்கும் நிகழ்ச்சி மாசி மாத தேய்பிறை ஏகாதசி நாளில், Image
Read 19 tweets
16 Oct
இந்தியா #சற்றுமுன் ருத்ரம் 1 என்ற ஆன்டி ரேடியேஷன் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது.. இந்த ஏவுகணை நம் சுகாய் விமானத்தில் இருந்து செலுத்த பட்டது..

விமானத்தில் இந்த ஏவுகணையை எடுத்து சென்று தோராயமாக ரேடியேஷன் உள்ள ஒரு இடத்தில் விட்டு விட்டால் போதும்.. Image
இந்த ஏவுகணை எந்த இடத்தில் இருந்து எதிரியின் ரேடார் கதிர் வீச்சு வருகிறதோ அந்த இடத்தை தானாக அழித்து விடும்..

இந்த ஏவுகணை மூலம் எதிரியின் தரையில் ரேடார்கள், கட்டுபாட்டு அறைகள் போன்றவற்றை மிக துள்ளியமாக அழிக்க முடியும்..
நவீன போர் முனையின் கண் எனப்படுவது ரேடார்கள் தான்.. அந்த ரேடார்களையே அழித்து விட்டால், பின் எதிரியை குருடாக்கி விட்டு அவனை உதைப்பதை போன்றது..

சீனாவிடமும் இதே போல் Y 91 என்னும் ஆன்டி ரேடியேஷன் ஏவுகணை உள்ளது ஆனால் அதன் தாக்கும் தூரம் 100 கிலோமீட்டருக்குள் தான்..
Read 7 tweets
15 Oct
#இன்று_ஒரு_கோவிலை_பற்றி
#தெரிந்து_கொள்வோமா.

#உறையூர்_வெக்காளியம்மன்_கோயில்

அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் மேற்கு பகுதியில் உள்ள உறையூரில் உள்ளது. இக்கோயில் காலத்தால் முற்பட்டதும் வரலாற்று சிறப்புற்றதுமாகும். Image
தல வரலாறு...

“சோழன் நெடுங்கிள்ளியின் மகன் பெருநற்கிள்ளி, உறையூரில், நங்கைக்கு பத்தினிக் கோட்டம் சமைத்து நாள்தோறும் விழாவெடுத்து, அலங்காரம் நிகழ்த்தி வந்தான்” என்று சிலப்பதிகார காவியத்தின் வரலாற்றுச் செய்தி மூலம் தெரியவருகிறது. Image
இந்த பத்தினி கோட்டத்தில் எழுந்தருளச் செய்த கண்ணகி வழிபாடுதான், காலப்போக்கில் வெக்காளியாக பெயர் மருவி வந்துள்ளதாகத் தெரிகிறது.

பழம்பெருமை வாய்ந்த உறையூர்..

காவிரிக்கரையின் தென் பகுதியில் உள்ள மிகப்பழமை வாய்ந்த, சோழர்களின் தலை நகராக விளங்கிய உறையூர், Image
Read 19 tweets
23 Sep
🔴🟠🟡🟢🔵🟣⚫️⚪️🟤🔴🟠🟡🟢🔵🟣⚫️⚪️
நாகலிங்கப்பூ விசேஷங்கள் !

நாகலிங்கப்பூ.
இதுவே கடவுள்.

இந்தப் பூவுக்குள்ளே இறைவன் தானே இறங்கி வந்து குடியிருக்கிறான்.

அத்தகைய ஒரு பெருமைக்குரிய மலர்தான் நாகலிங்கப்பூ.

நாகமுமிருக்கிறது …………..உள்ளே 🌹லிங்கமும் இருக்கிறது.
சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள். தேவ கணங்களும் இருக்கின்றன.

உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உற்று கவனித்தால் ஒரு 🌹மினியேச்சர் கைலாயமே கைக்குள் இருப்பது போல் இருக்கும்.

ஒரு சில நிமிடங்கள் நம் கவனத்தை ஒழுங்குபடுத்தி இந்தப் பூவின் மத்தியப் பகுதியில் இருக்கும்
சிவ லிங்கத்தை உற்று நோக்கி அப்படியே நம்மை தியானத்தில் கொண்டு சென்று விட்டால் ..

உடல் சிலிர்க்கும்.
உள்ளம் அமைதி பெறும்.
கயிலாயம் கண்ணுக்குள் விரியும்

சிவபூஜைக்கு உரிய அஷ்ட மலர்களில் இது இடம் பெறவில்லை.

பூமிக்கு வந்த சிவ மலர் என்பதாலோ என்னமோ விசேஷமான நாகாபரணத்துடன் கூடிய
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(