அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் எல்லோரும், அமைதியான சமூகத்திற்கு ஒரு ஆபத்தாக தான் பார்க்கப்படுகிறார்கள். புராணக்கதைகளில் இருந்து இந்நாள் வரை இது தான் நடக்கிறது.
நெருப்பை திருடிய Prometheus, கேள்வி கேட்ட சாத்தான், சம உரிமை கோரிய லிலித் என்று கேள்வி கேட்பவர் எல்லோரும் ஒரு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறார்கள். சாத்தான் அவன் அகங்காரத்தால் வீழ்ந்ததாக சொல்லப்படுகிறது.
எது அகங்காரம்? தனக்கு சரி என்று பட்டதை கேட்பது அகங்காரமா? சம உரிமை கோரியது அகங்காரமா? உன் விருப்பத்தை என் மேல் திணிக்காதே என்பது அகங்காரமா?
அல்லது யாரும் என்னை கேள்வியே கேட்க கூடாது என்பது அகங்காரமா? ஒரு சாராருக்கு மட்டும் ஆதரவாக இருக்கும் சமூக கட்டமைப்பை கேள்வி கேட்க கூடாது என்பது அகங்காரமா? எனக்கு சமம் யாருமே இல்லை என்று நினைப்பது அகங்காரமா?
Who is being arrogant? The one who thinks he can question the established system or the one who feels nobody can question his omnipotent hold?
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சுட்ட செங்கல்லால் வீடுகட்டிக் கொள்ளவும், மாடி கட்டவும், வீட்டுத் தோட்டத்தில் கிணறு வெட்டிக்கொள்ளவும் அக்காலத்தில் அரசர்களின் அனுமதி வேண்டும். அந்த அனுமதி பார்ப்பனர்களுக்கு மட்டுமே இயல்பாக வழங்கப்பட்டிருந்தது.
பார்ப்பனர்களின் தீட்டுக் கோட்பாட்டை அரண் செய்வதற்கும் பேணிக் கொள்வதற்கும் ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியாகக் கிணறுகள் இருப்பதனை இப்பொழுதும் பார்ப்பனத் தெருக்களில் (அக்கிரகாரங்களில்) காண இயலும். இந்த உரிமையினை அரசர்கள் மற்ற சாதியாருக்கு வழங்கவில்லை.
சாதிவாரியாக வீடுகட்டும் உரிமைகள் அரசர்களால்
வகுக்கப்பட்டிருந்ததை அறிய பல சான்றுகள் கிடைக்கின்றன. பழனிக்கருகிலுள்ள கீரனூர்க் கல்வெட்டு
பன்னிரண்டாம் நூற்றாண்டில் அப்பகுதியில் வாழ்ந்த
இடையர்களுக்கு அரசன் சில உரிமைகளை
வழங்கியதைக் குறிப்பிடுகிறது.
நவீன மனநல மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் ஆஸ்திரிய மருத்துவர் சிக்மண்ட் பிராய்ட், மனிதரின் மனம் பற்றிய ஆய்வுகளில் பல புரட்சிகரமான கோட்பாடுகளைக் கண்டு பிடித்து இருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்குமிக்க மற்றும் சர்ச்சைக்குரிய சிந்தனையாளர்களில் ஒருவர்.
சிக்மண்ட் பிராய்ட் வியன்னா பல்கலைக்கழகத்தில் 1881-ல் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். செரிப்ரல் பால்ஸி, அபேஸியா போன்ற மூளை பாதிப்புகள் தொடர்பாக வியன்னா பொது மருத்துவமனையில் 1895-ல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அங்கு பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.
தனியாக மருத்துவமனை தொடங்கி, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தார்.மனநோய்கள் குறித்த விளக்கங்கள், நோயாளி - மருத்துவர் உரையாடல் சிகிச்சை முறை ஆகியவை மூலம் மிகவும் பிரபலமடைந்தார். ஹிஸ்டீரியா குறித்து ஆராய்ந்தார்.
280-230 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இப்போது இருக்கும் எல்லா கண்டங்களும் ஒன்றாக ஒரே நிலப்பரப்பாக இருந்தது. அதுதான் Pangea.
பூமி தட்டுகள் ( tectonic plates) அசைவாலும், எரிமலை வெடிப்புகளாலும் அந்த ஒரே நிலப்பரப்பு மெல்ல மெல்ல பல்லாயிரக்கணக்கான வருடங்களாக பிரிந்து தனி தனி கண்டங்களாக ஆனது. இந்த நிகழ்வை சில இறையாளர்கள் பூமி ஒரே நிலப்பரப்பாக இருக்கும்போது அதன் மைபுள்ளியாக இருந்தது தற்போதைய middle East தான்.
அதனால் தான் எல்லா prophet உம் Abrahamic religion உம் அங்கு உருவானது. அங்கு இருந்துதான் மக்கள் பிரிந்து சென்றார்கள் அது babel கதையை நிறுவுகிறது என்கிறார்கள். ஆனால் இது சாத்தியமற்றதே. ஏனென்றால் Pangea இருந்தது 280-230 மில்லியன் வருடங்களுக்கு முன்பு.
இந்த வரி எந்திரன் படத்தில் வரும் ராஜாளி பாடல் வரி. ரோபோ சம்பந்தபட்ட கதைகள் படித்தவர்கள், படம் பார்த்தவர்களுக்கு அசிமோவின் மூன்று ரோபோடிக்ஸ் விதிகள் பரிச்சயம் ஆகி இருக்கும்.
1. ரோபோ ஒரு மனிதனுக்கு எந்தத் தீங்கும் இழைக்கலாகாது. தனது செயலற்ற தன்மையால் தீங்கும் நேரும்படியும் செய்யகூடாது.
2. முதல் விதிக்கு முரண்படாத வகையில் ரோபோ மனிதனின் உத்தரவுக்கு இணங்க வேண்டும்.
3. முதல் இரண்டு விதிகளுக்கு உட்பட்டு ரோபோ தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த மூன்று விதிகளை வகுத்த ஐசக் அசிமோவ், அமெரிக்க அறிவியல் புனைக்கதை எழுத்தாளர்களின் முன்னோடி. ரஷ்யாவில் பிறந்த இவர் 5 வயதில் தானாகவே எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டார். சிறு வயதிலேயே அறிவியல் புனைகதைகளைப் படிக்கத் தொடங்கினார்.
Jacob பையன் Joseph அ அவனோட brothers Egypt க்கு அடிமையாக வித்துறுவாங்க ஆனா அங்க இருந்த Pharoah கிட்ட நல்ல பேரு வாங்கி அவரு நல்ல position க்கு வந்துடுவாரு. அப்புறம் ஒரு பெரிய பஞ்சம் வரும் Joseph அவரு சொந்தக்காரங்க எல்லாரையும் Egypt க்கு வாங்க நான் இங்க நல்ல நிலைமையில் இருக்கேன்
உங்க எல்லாரையும் பார்த்துக்கறேன் அப்படினு கூப்பிடுவார். இதெல்லாம் பெரிய கதை அப்புறமா ஒரு தனி thread ஆ போடுறேன். அங்க போய் இந்த Israelites பல்கி பெருகிடுவாங்க. ஜோசப் செத்து போய்டுவாரு அவர support பண்ணுன Pharoah வும் செத்து போய்டுவாரு. புது Pharoah வந்து என்னடா இது நம்ம நாட்டுல
இந்த Israelites ஜன தொகை இவளோ அதிகமாக போச்சே விட்டா நம்மள ஓரம்கட்டி நாட்ட இவங்க கைபற்றிடுவாங்க போல அப்படினு அவங்கள கொடுமை படுத்துனது மட்டும் இல்லாம புதுசா பிறக்குற பிள்ளைங்க எல்லாம் கொன்னு போடுங்க என்று order போட்டாரு. இதுக்கு பயந்து மோசஸ் அம்மா மோசஸ் அ ஒரு பெட்டியில் வச்சு
எல்லா அறிவியல் பெயர்களும் லத்தீன் ல தான் வைக்கப்படும்.
காரணம் ஒரு பொது பெயர் அவசியமா இருக்கு செம்பருத்தி பூவோட குணாதிசியங்கள் பற்றி ஒரு அறிவியலார் விளக்குறார்.
இன்னொருவர் மந்தாரா பூவோட குணாதிசியங்கள் பற்றி விளக்குறார் ரெண்டுமே ஒரே பூ தான், ஆனா வேற வேற பெயர் என்பதால் குழப்பங்கள் வரும். செம்பருத்திக்கு தெலுங்கு ல மந்தாரா அனால் தமிழ்ல இருவாட்சிக்கு மந்தாரை அப்படினும் சொல்லுவாங்க.
இது போன்ற குழப்பங்களை தவிர்க்க உலகம் எங்கும் ஒரே பொது பெயர் தேவை பட்டது அதுதான் Scientific name. செம்பருத்திக்கு Hibiscus rosa-sinensis.