இந்த வரி எந்திரன் படத்தில் வரும் ராஜாளி பாடல் வரி. ரோபோ சம்பந்தபட்ட கதைகள் படித்தவர்கள், படம் பார்த்தவர்களுக்கு அசிமோவின் மூன்று ரோபோடிக்ஸ் விதிகள் பரிச்சயம் ஆகி இருக்கும்.
1. ரோபோ ஒரு மனிதனுக்கு எந்தத் தீங்கும் இழைக்கலாகாது. தனது செயலற்ற தன்மையால் தீங்கும் நேரும்படியும் செய்யகூடாது.
2. முதல் விதிக்கு முரண்படாத வகையில் ரோபோ மனிதனின் உத்தரவுக்கு இணங்க வேண்டும்.
3. முதல் இரண்டு விதிகளுக்கு உட்பட்டு ரோபோ தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த மூன்று விதிகளை வகுத்த ஐசக் அசிமோவ், அமெரிக்க அறிவியல் புனைக்கதை எழுத்தாளர்களின் முன்னோடி. ரஷ்யாவில் பிறந்த இவர் 5 வயதில் தானாகவே எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டார். சிறு வயதிலேயே அறிவியல் புனைகதைகளைப் படிக்கத் தொடங்கினார்.
11 வயதில் கதை எழுதினார்.
19 வயதில் இவரது கதைகள் நாளிதழ்களில் வெளிவந்தன. 1938-ல் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1948-ல் உயிர் வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்றார்.
1950-ல் இவரது கதைத் தொகுப்பு ‘ஐ ரோபோ’ வெளிவந்தது. அடுத்த ஆண்டே இவரது ‘பவுண்டேஷன்’ நாவல் வெளிவந்தது.
படைப்பாற்றல் மிக்க இவரது கதைகள் உலகம் முழுவதும் பிரபலமாயின. 1958-ல் முழுநேர எழுத்தாளர் ஆனார். வானவியல், உயிரியல், கணிதம், மதம், இலக்கியம் போன்ற துறைகளிலும் சுய சரிதையாகவும் ஏறக்குறைய 500 புத்தகங்கள் படைத்துள்ளார்.
உலகின் அறிவியல் புனைகதை (சயின்ஸ் ஃபிக்ஷன்) எழுத்தாளர்களில் முக்கியமானவராகக் கருதப்பட்டார். இவர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இவரது நாவலைத் தழுவி வில் ஸ்மித் நடிப்பில் வெளிவந்த ‘ஐ ரோபோ’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
புதினங்கள், கதைகள் தவிர, குறுநாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றையும் படைத்துள்ளார். இவர் 72-வது வயதில் மறைந்தார்.
"ரோபாட்டிக்ஸ்" என்ற வார்த்தையை உருவாக்கியவர் ஐசக் அசிமோவ்.
அவர் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் சிறந்தவை என்றாலும் அதில் குறிப்பிட தகுந்தவை
1. Foundation series 2. The Gods Themselves 3. I, Robot 4. Guide to Science 5. How Did We Find Out About Numbers? 6. How Did We Find Out About Our Human Roots? 7. Guide to the Bible 8. Guide to Shakespeare 9. The Caves of Steel 10. Guide to Space and Earth
இவரது Foundation புத்தகத்தை ஐ தழுவி Apple TV+ Foundation என்னும் series வெளியிட்டு இருக்கிறது.
கற்றுக் கொள்ள மறுப்பது அல்லது கற்றுக்கொள்ளாததால் நிம்மதி அடைவது என்பது ஒரு விதமான தற்கொலையாகும்.
- ஐசக் அசிமோவ்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Jacob பையன் Joseph அ அவனோட brothers Egypt க்கு அடிமையாக வித்துறுவாங்க ஆனா அங்க இருந்த Pharoah கிட்ட நல்ல பேரு வாங்கி அவரு நல்ல position க்கு வந்துடுவாரு. அப்புறம் ஒரு பெரிய பஞ்சம் வரும் Joseph அவரு சொந்தக்காரங்க எல்லாரையும் Egypt க்கு வாங்க நான் இங்க நல்ல நிலைமையில் இருக்கேன்
உங்க எல்லாரையும் பார்த்துக்கறேன் அப்படினு கூப்பிடுவார். இதெல்லாம் பெரிய கதை அப்புறமா ஒரு தனி thread ஆ போடுறேன். அங்க போய் இந்த Israelites பல்கி பெருகிடுவாங்க. ஜோசப் செத்து போய்டுவாரு அவர support பண்ணுன Pharoah வும் செத்து போய்டுவாரு. புது Pharoah வந்து என்னடா இது நம்ம நாட்டுல
இந்த Israelites ஜன தொகை இவளோ அதிகமாக போச்சே விட்டா நம்மள ஓரம்கட்டி நாட்ட இவங்க கைபற்றிடுவாங்க போல அப்படினு அவங்கள கொடுமை படுத்துனது மட்டும் இல்லாம புதுசா பிறக்குற பிள்ளைங்க எல்லாம் கொன்னு போடுங்க என்று order போட்டாரு. இதுக்கு பயந்து மோசஸ் அம்மா மோசஸ் அ ஒரு பெட்டியில் வச்சு
எல்லா அறிவியல் பெயர்களும் லத்தீன் ல தான் வைக்கப்படும்.
காரணம் ஒரு பொது பெயர் அவசியமா இருக்கு செம்பருத்தி பூவோட குணாதிசியங்கள் பற்றி ஒரு அறிவியலார் விளக்குறார்.
இன்னொருவர் மந்தாரா பூவோட குணாதிசியங்கள் பற்றி விளக்குறார் ரெண்டுமே ஒரே பூ தான், ஆனா வேற வேற பெயர் என்பதால் குழப்பங்கள் வரும். செம்பருத்திக்கு தெலுங்கு ல மந்தாரா அனால் தமிழ்ல இருவாட்சிக்கு மந்தாரை அப்படினும் சொல்லுவாங்க.
இது போன்ற குழப்பங்களை தவிர்க்க உலகம் எங்கும் ஒரே பொது பெயர் தேவை பட்டது அதுதான் Scientific name. செம்பருத்திக்கு Hibiscus rosa-sinensis.
Time travel லில் இரண்டு வகை உள்ளன. ஒன்று எதிர்காலத்திற்கு பயணிப்பது. மற்றொன்று இறந்த காலத்திற்கு பயணிப்பது.
நீங்கள் விண்வெளிக்கு சென்று அங்கு light speed க்கு ஈடான வேகத்தில் பயணித்தீர்கள் என்றால், உங்களுக்கு நேரம் மெதுவாக செல்லும். பூமியில் நேரம் வேகமாக செல்லும்.
நீங்கள் திரும்பிவரும்போது பூமியில் பல வருடங்கள் ஓடி இருக்கும். ஆக நீங்கள் எதிர்காலத்தை வந்து அடைவீர்கள்.
Black hole அருகே நீங்கள் இருந்தால், நேரம் அங்கே மெதுவாக தான் இயங்கும். ஆகையால், நீங்கள் பூமிக்கு திரும்பி வரும்போது உங்களுக்கு சிறிய அளவிலான காலம் தான் கடந்து இருக்கும்.
ஆனால் பூமியில் பெரிய அளவிலான காலம் கடந்து போய் இருக்கும்.
இப்படியாக எதிர்காலத்திற்கு பயணிப்பது என்பது எப்போதுமே சர்ச்சைக்குரிய ஒரு விஷயமல்ல. சாத்தியமான ஒன்றாக தான் ஆய்வாளர்கள் பார்க்கிறார்கள்.
இந்த பைபிள் ல கால்வாசி கதைகள் apocalyptic கதைகள் தான். Daniel, Revelation, 1 Enoch, 2 and 3 Baruch, 4 Ezra, Apocalypse of Abraham, Shepherd of Hermas, Apocalypse of Peter, Joel, Zechariah, Isaiah இப்படி நிறைய...
அதாவது கெட்டவர்கள் அதிகமாகி அவங்க அட்டகாசம் தாங்க முடியாம கடவுள் உலகத்தை அழிச்சுருவாரு. அப்புறம் மறுபடி புதுசா ஒரு சொர்க்க உலகத்தை படைப்பார் என்கிற கதை. எல்லா கோட்டையும் அழிங்க நான் முதல்ல இருந்து உலகத்தை படைக்கறேன் அப்படிங்கற மாதிரி. ஏன் இப்படி apocalyptic கதைகள் இருக்கு?!
தலைமுறை தலைமுறையாக இந்த ஹீப்ரு மக்களின் கஷ்டம் அதாவது யூத மக்கள் கஷ்டம் அதிகரித்து கொண்டே வருது. எகிப்தியர்கள், பாபிலோனியர்கள், ரோமானியர்கள் இப்படி யாராவது ஒருத்தர் யூத மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வருகிறார்கள்.
Lucifer யார்?
சாத்தன் (Satan) என்கிற Hebrew வார்த்தைக்கு கேள்வி கேட்பவன் என்று பொருள். Diabolos என்கிற கிரேக்க வார்த்தையில் இருந்து தான் devil என்கிற வார்த்தை வந்து இருக்கக்கூடும் என்கிறார்கள். Diabolos என்றால் குற்றம் சாட்டுபவன் என்று பொருள்.
"Devil's advocate" என்கிற சொல்லாடலை கேள்விப்பட்டு இருப்பீர்கள். Mock Trial லில் வக்கீல்கள் அவர்களது வழக்கு கோர்ட்க்கு சென்றால் அங்கு எதிர் தரப்பு என்னென்ன கேள்விகள் கேட்பார்கள்? என்னென்ன ஓட்டைகள் இவர்களது வாதத்தில் இருக்கிறது என்று இவர்களுக்குள் விவாதித்து கொள்வார்கள்.
அதாவது, எதிர் தரப்பின் கருத்தை ஆதரிக்கவில்லை ஆனால் அந்த எதிர்தரப்பின் சார்பாக கேள்விகள் கேட்டு நமது தரப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்வது. இப்படி எதிர் தரப்பு சார்பாக கடினமான கேள்விகள் கேட்பவர் Devil's advocate எனப்படுகிறார்.
பழிவாங்கத் துடிக்கும் ஆண் தமிழ்ச்சமூகத்தில் வீரனாகவும் தெய்வமாகவும் சித்தரிக்கப்படுகிறான். சுடலைமாடன், கருப்பசாமி, காத்தவராயன் என ஆண் தெய்வங்களின் வரலாறெல்லாம் அவைதாம். மறுதலையாக, பழிவாங்கத் துடிக்கும் பெண் எந்தச் சமயவாதியாலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவளாகிறாள்.
தமிழ் நாட்டார் மரபில் பெண்கள் நீலியின் கதையைப் பேணி வந்திருக்கிறார்கள். பலதார மணம் என்பது தமிழ்ச் சமூகத்தில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இயல்பாக இருந்திருக்கிறது. பெண்களுக்கான சொத்துரிமை மறுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு பெண்ணுக்குக் கணவனின் தங்கை கொடியவளாகவே தோற்றமளிக்கிறாள்.
அது போலவே மறுமணம் செய்துகொண்ட கணவனும் மாற்றாளும் (சகக்களத்தியும்) மனித மதிப்புக் குறைந்தவர்களாவார்கள். பாலியல் பொறாமையும் சொத்துரிமை மறுப்பும் பெண்களைப் பெண்களே எதிரிகளாக நினைக்கும் சமூக உளவியலை உருவாக்கி வைத்துள்ளன.