எந்தப் புலவனுக்கும் வராத கோபம் பெரியாருக்கு வந்தது-வாலாசா வல்லவன்.
மபொசியும் ஆதித்தனாரும் தமிழ் தேசிய போராளிகளா ?
பெ .மணியரசன் ,சீமான் ஆகியோர்கள் முப்பாட்டன் முருகனிலிருந்து ஆரியனை முப்பாட்டனாக ஏற்று அதிக நாட்கள் கடந்து விட்டது .
டர் ..டமார் ...கிழி ...
தமிழ் தேசம் எனும் இந்த தேசத்தின் உண்மையான எதிரிகள் ,இன்றைக்கு நம்மை ஒடுக்குகின்ற பார்ப்பனிய ,பாசிச ,ஒன்றிய அரசு தான் .
குடியுரிமை வழங்கும் அதிகாரம் மாநில அரசின் கையில் இல்லை அது ஒன்றிய அரசால் மட்டுமே முடியும் . ஏறத்தாழ 35 ஆண்டுக்கு மேல் ஈழத் தமிழர்கள் புலம்பெயரந்து தமிழகத்தில் வசிக்கிறார்கள் .
ஆனால் இந்திய குடியுரிமை சட்டம் என்ன சொல்கிறது எனில் வெளிநாட்டிலிருந்து வரும் அகதிகள் 11 ஆண்டுகள் வாழ்ந்துவிட்ட்டால் குடியிருமை வழங்க வேண்டும் என்பது குடியிருமை சட்டத்தில் உள்ள விதி .
குடியிரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிற ஒன்றிய அரசு ,அதில் வங்காளம் ,பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் பெரும்பான்மை மதமாகிய இஸ்லாமியர்களால் ஒடுக்கப்பட்டுள்ள இந்துக்கள் ,சமணர்கள்,பவுத்தர்கள் பார்சிகள் இவர்களுக்கு இந்தியாவில் குடியிரிமை வழங்கலாம் .
இஸ்லாமியர்களுக்கு கிடையாது ஏனெனில் அவர்கள் பெரும்பான்மையினரால் ஒடுக்கப்படவில்லையாம் .அதே சட்டம் தமிழ்நாட்டில் ஈழத்தில் பவுத்த பெரும்பான்மையினரால் ஒடுக்கப்பட்ட தமிழர்கள் இங்கே வசிக்கிறார்கள் அவர்கள் சைவர்கள் என உங்கள் கணக்குப்படி வைத்துக்கொள்ளுங்கள் .
பெரும்பான்மையினரால் ஒடுக்கப்பட்ட இவர்களுக்கு மோடி கொண்டுவந்துள்ள அதே சட்டம் குடியிருமை மறுக்கிறது .ஆனால் அங்கேயே அவர்களை மதமாற்ற பார்க்கிறார்கள் .இங்கே இருந்தால் நீ இனமாக பார்க்கிறாய் , தமிழன் எனும் ஒரேயொரு காரணத்திற்காக .
பதினைந்து நாட்களுக்கு முன் மதுரைஉயர்நீதிமன்ற கிளையில் இதே ஈழத்தமிழர் தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசின் வழக்கறிஞர் சொல்கிறார் ,உணர்ச்சி வசப்பட்டு ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது –தமிழ் இந்துவில் வந்த செய்தி இது .
ஒரு சட்டம் என்றால் எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டுமே தவிர அவர்களுக்கொரு சட்டம் , இவர்களுக்கென ஒரு சட்டம் போடுவதா ? இவ்வளவு அநியாயமாக அரசு நடந்து கொண்டிருக்கிறது
ஒரு காலத்தில் முக்கடலும் தமிழனுக்கு சொந்தமாக இருந்தது .இந்தப்பக்கம் சேர நாடு –இன்றைக்கு மலையாள நாடு என இருக்கலாம் எழநூறு முதல் ஆயிரமாண்டுகள் என இருக்கடும் சேரநாடு –கேரள நாடாகியது .அந்தப்பக்கம் ஆந்திரா என சீனா வரை ,கிரேக்கம் வரை தமிழன் வணிகம் செய்தான் .
முக்கடலும் தமிழனின் பேராதிக்கத்தில் இருந்தது ” ரோமிலா தாபர்” இந்திய வரலாற்றில் எழுதியுள்ளார் .எந்த ஒரு சிற்றரசுக்கும், எந்த ஒரு பேரரசுக்கும் இல்லாத பெருமை சோழர்களின் கப்பல் படைக்கு உண்டு .ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உலகிலேயே மிகப்பெரிய கப்பல் படையை கட்டி ஆண்டவன் சோழன் .
சோழ ஆட்சியில் பார்ப்பனியம் புகுந்தது எனும் பேச்சு இரண்டாவது .அன்றைக்கு மிகப்பெரிய கடல் ஆதிக்கத்தை கொண்டது நம்முடைய தமிழ்நாடு.
என்றைக்கு இந்தியா எனும் அரசியல் கட்டமைப்பு வந்ததோ அன்றிலிருந்து கடல் உரிமை முற்றிலும் போய் விட்டது
ஈழத்தமிழர்களை கொத்து கொத்தாக கொன்ற நேரத்தில் கூட தமிழ்நாட்டு முதலமைச்சர் யாராக இருந்தாலும் சரி ,சீமான் வந்தாலும் சரி நேரடியாக கேள்வி கேட்க முடியாது .ஏனெனில் மாநில அரசுகளுக்கு அந்த உரிமைகள் இல்லை .
இந்திய அரசியல் சட்டத்தின் படி வெளியுறவு கொள்கை என்பது ஒன்றிய அரசின் கையில் உள்ளது .மாநில அரசுகளுக்கு கிடையாது .
இந்தியா என்பது ஏறத்தாழ 562 சிற்றரசகளை ஒடுக்கி உருவாக்கப்பட்ட தேசம் .மாகாபாரத காலத்தில் 56 தேசங்கள் இருந்துள்ளது .
56 தேசங்களுக்கும் லிகிதம் அனுப்பிவிட்டாயா என துரியோதனன் தெருக்கூத்தில் கேட்பான் .அந்தக் கதையில் எல்லா நாடுகளும் வரும் .பாண்டிய நாடு ,சேர நாடு ,சோழ நாடு அதில் திராவிட நாடும் வருகிறது
ஜெகதீஸ் அய்யர் என்பவர் 56 தேசங்கள் பற்றி ஒரு நூலை எழுதியுள்ளார்
அதில் 56 தேசங்கள் பற்றி தனித்தனியாக வரைபடத்துடன் விளக்கவுரையை காணலாம் .
ஒவ்வொரு தேசத்தின் இயற்கை அமைப்பை பற்றி எழுதியுள்ளார் .சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது அந்த நூலை . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அப்படி இருந்தது 56 தேசங்கள்.
(ஆரிய-திராவிட ஆராய்ச்சியில் நான் நுழைய விரும்பவில்லை அதற்காக பேச பேராசிரியர் காருனானந்தம் வந்துள்ளார் என்பதால்) நான் அரசியல் சார்ந்தவன் என்பதால் நீதிக் கட்சி தொடங்கி பெரியார் வரை விளக்கம் சொல்லி என் உரையை முடித்துக்கொள்கிறேன் )
நீதிக்கட்சியின் பெயர் The Justice Party, officially the South Indian Liberal Federation, was a political party in the Madras Presidency of British India (தென்னிந்திய நல உரிமை சங்கம் எனும் கூட்டமைப்பு டாக்டர் .டி.எம் .நாயரால் தோற்றுவிக்கப்பட்டது
.ஐரோப்பியாவில் படித்த டி.எம் .நாயர் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் சரியாக வரைவுரை செய்துள்ளார் .
திராவிடம் என்பது ஒரேயொரு நாடு கிடையாது .வட நாட்டிலிருந்து தென்னாடு பிரிந்த போது தமிழ்நாடு ,ஆந்திரா ,கர்நாடகா ,கேரளா இந்த நான்கும் ஒரு கூட்டாட்சியின் படி இருக்க வேண்டும்
திராவிடம் என்பது ஒரேயொரு நாடு கிடையாது .வட நாட்டிலிருந்து தென்னாடு பிரிந்த போது தமிழ்நாடு ,ஆந்திரா ,கர்நாடகா ,கேரளா இந்த நான்கும் ஒரு கூட்டாட்சியின் படி இருக்க வேண்டும் என்பதற்காக தான் கட்சியின் பெயரே Federation என C. Natesa Mudaliar உருவாக்கினார் .
1949 ல் திமுக ஆரம்பிக்கும் போதே அதன் பெயர் Dravidian Progressive Federation, DMK) –திராவிட கூட்டரசு . திராவிட நாடு என்பது தனி நாடு கிடையாது அதை அண்ணா தான் விளக்கமும் கொடுத்தார் .
இந்த நான்கு மொழி பேசுகின்ற மக்களும் வட இந்தியாவிலிருந்து துண்டிக்கப்பட்டு ஒரு கூட்டரசாக இயங்கலாம் என்பது டி.எம் .நாயர் போட்டு வைத்த கொள்கை .
நீதிகட்சி ஆட்சியில் தான் தமிழுக்கு பல உரிமைகள் வந்தன .
தமிழ் லெக்சிகன் 1922 முதல் 1933 வரை தொகுதிகளாக வந்தது . நீதிகட்சி ஆட்சியில் தமிழுக்கு உரிமைகள் வழங்கினார்கள் . மற்ற மொழிகளுக்கு அல்ல (தெலுங்கு ,கன்னட ,மலையாள ).
1925 தமிழ் புலவர் படிப்பு அதாவது
முற்காலத்தில் பண்டிட் இப்போது பி.எட் ஆகியுள்ளது அதற்கு கூட சமஸ்கிருதம் கட்டாயம் .பனகல் அரசர் ஆணை பிறப்பிக்கிறார் . இந்த அரசு திராவிட மொழிகளுக்கு மட்டும் தான் செலவளிக்கும்.அதன் பிறகு தான் சமஸ்கிருதம் கலக்காமல் தமிழ் படிக்கலாம் என்பதை பார்பனர்கள் ஏற்று கொண்டனர்
2. 1925ஆம் ஆண்டு வரை சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் புலவர் பட்டம் பெற வேண்டுமானால் கட்டாயம் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கினார்கள். நீதிக்கட்சியின் முதல்வரான பனகல் அரசர் தான், புலவர் படிப்புக்கு சமஸ்கிருதம் தேவை இல்லை என்ற உத்தரவைப் பிறப்பித்தார்.
மறைமலையடிகள் பேரன் சாரதா நம்பியூரான் முனைவர் பட்ட ஆய்வு நூலில் இதை விரிவாகப் பதிவு செய்துள்ளார். தனது முனைவர் பட்ட ஆய்வை அவர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தார். அந்த ஆய்வு, திருநாவுக்கரசு, ‘நம்நாடு’ முத்துகிருட்டிணன் ஆகியோரின் மொழி பெயர்ப்பில் தமிழில் வெளி வந்திருக்கிறது
3. சைவ நெறியைப் போற்றியவரும் தனித் தமிழ் இயக்கத்தை நடத்தியவருமான மறைமலையடிகள் எழுதிய ‘அறிவுரைக் கொத்து’ நூல் சென்னை பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பார்ப்பனர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தபோது நூல் தடை செய்யப்பட்டது. பெரியார்
மறைமலையடி களாருக்கு இடையே ‘சைவம்’ குறித்து முரண்பாடுகள் இருந்த நிலையில், பெரியார், மறைமலை அடிகளார் பக்கம் நின்று நூல் தடை செய்ததை எதிர்த்து, அதை இயக்கமாக்கினார். நாடு முழுதும் உள்ள சுயமரியாதை இயக்கங்கள் ‘அறிவுரைக் கொத்து’த் தடைக்கு
எதிராகக் கண்டனத் தீர்மானங்களைப் போட வேண்டுகோள் விடுத்தார். கண்டனங்கள் குவிந்தன (1935 ‘குடிஅரசு’, இந்த செய்திகளை பதிவு செய்திருக்கிறது).
4. மறைமலை அடிகள், 1902இல் இதழ் தொடங்கி, 1916இல் தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கினாலும் 1920க்குப் பிறகு தான் அந்த இயக்கம் வளரத் தொடங்கியது. அதற்குக் காரணம், 1916இல் தொடங்கிய பார்ப்பனரல்லாதார் இயக்கம் உருவாக்கிய தாக்கம் தான் என்று சாரதா நம்பியூரான்,
தனது முனைவர் பட்ட ஆய்வில் விளக்குகிறார். பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஊட்டிய உணர்வே வடமொழி எதிர்ப்பு இயக்கத்துக்கு உரமூட்டியது.
இந்தி எதிர்ப்பு - மக்கள் இயக்கமாக்கியது யார்?
இந்தி எதிர்ப்பு இயக்கத்தை மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழறிஞர்கள்தான் தொடங்கினார்கள். பெரியார் இடையில் வந்து புகுந்து கொண்டார் என்று பெ. மணியரசன் பேசுவது சரியா?
1. இது, கலப்படமற்ற பொய். 1926ஆம் ஆண்டிலேயே இந்தியை எதிர்த்து பெரியார், ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதினார். 1931இல் நன்னிலம் என்ற தஞ்சை மாவட்டத்திலுள்ள ஊரில் இந்தியை எதிர்த்துப் பேசினார். 1930இல் வன்னியர் சங்க மாநாட்டில் பேசிய பெரியார்,
“இந்தியா ஒரு நேஷனா? (நாடா?)” என்ற கேள்வியை எழுப்பி இந்தியை எதிர்த்தார். (1.6.1931 ‘குடிஅரசு’ இதழில் இந்தப் பேச்சு வெளி வந்திருக்கிறது)
2. 1938இல் இராஜகோபாலாச்சாரி பள்ளிகளில் கட்டாய இந்தித் திணிப்பைக் கொண்டு வந்தபோது தமிழ்நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்தது.
ஓராண்டு காலம் பெரியார் போராடினார். 1938 ஆகஸ்ட் மாதம் திருச்சியி லிருந்து பெரியார் இயக்க சார்பில், பட்டுக்கோட்டை அழகிரியைத் தளபதி யாகக் கொண்டு மூவலூர் இராமாமிர்தத்தம்மையார் உள்ளிட்ட 102 பேர் பங்கேற்ற இந்தி எதிர்ப்புப் படை
சென்னை நோக்கி புறப்பட்டது. 42 நாட்கள் நடந்தே சென்னை வந்தனர். அது கடுமையான மழைக் காலம். இரண்டு இடங்களில் கழுத்தளவு வெள்ளத்தில் நீந்தி ஆற்றைக் கடந்து படை நகர்ந்தது. பகல் முழுதும் கிராமங்களில் பிரச்சாரம் மாலையில் பொதுக் கூட்டம் படையை திருச்சியிலிருந்து
வழியனுப்பி வைக்கும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர் கி.ஆ.பெ. விசுவநாதம் மற்றும் பெரியார் தொண்டர் தி.பொ. வேதாசலம்.
3. சென்னை கடற்கரையில் ஒன்றரை இலட்சம் மக்கள் கூடிய இந்தி எதிர்ப்புக் கூட்டத்துக்கு படை வந்து சேர்ந்தது. 11.9.1938இல் நடந்த அந்தக் கூட்டத்தின் தலைவர் மறைமலை அடிகள்,
நாவலர் சோமசுந்தர பாரதியார் - வரவேற்புரை. நிறைவுரையாற்றியவர் பெரியார். அடுத்தக்கட்டத்தில் மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், பெரியார் - தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை முன் வைத்தனர்.
4. பெரியார் இந்தி எதிர்ப்பை முன்னெடுக்கவில்லை என்றும் தமிழ் அறிஞர்கள் தான் முன்னெடுத்தனர் என்றும் மணியரசன் பேசுகிறார். அவரிடம் கேட்கிறேன், அந்த ஒரு கூட்டத்துக்குப் பிறகு அடுத்த 40 ஆண்டுகள் வரை மறைமலையடிகள்
ஒரு முறைகூட தமிழ்நாடு தமிழருக்கே எனும் முழக்கத்தை முன் வைத்ததே இல்லை. அப்படிப் பேசினார் என்பதற்கு உங்களால் ஆதாரம் காட்ட முடியுமா?
• அந்தப் போராட்டத்தில் மறைமலை அடிகளையோ நாவலரையோ அன்றைய இராஜகோபாலாச்சாரி கைது செய்யவில்லை. பெரியாரைத் தான் கைது செய்தது. பெண்கள் மாநாடு நடத்தி இந்தி எதிர்ப்புக்காகப் பெண்களை தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் 3 ஆண்டுகள் தண்டிக்கப்பட்டார்.
தமிழ் நாட்டு சிறையில் வைத்தால் தமிழர்கள் சந்திப்பார்கள் என்பதற்காக பெல்லாரி சிறையில் பெரியாரை அடைக்க இராஜகோபாலாச்சாரி உத்தரவிட்டார்.
• இந்தி எதிர்ப்புக்காக அன்றைய இராஜகோபாலாச்சாரி ஆட்சி, பெரியாரை பழி வாங்கத் துடித்தது. அப்போது நீதிக்கட்சித் தலைவராக இருந்த பொப்பிலி அரசர், தென்னாப்பிரிக்க நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து விட்டு சென்னை திரும்பிய நிலையில் ஆச்சாரியார் அவரை அழைத்து
நீதிக்கட்சித் தலைவர் பதவியிலிருந்து ‘இராஜினாமா செய்; இல்லாவிட்டால் ஜமீன்தார் ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்து, சொத்துகளைப் பறி முதல் செய்வேன்’ என்று மிரட்டி னார். ஜமீன்தார்கள் அனைவரும் பொப்பிலி அரசனிடம் சென்று பதவி விலகி விடுங்கள் என்று மன்றாடினர்.
பொப்பிலி அரசர், நீதிக்கட்சித் தலைவர் பதவியி லிருந்து விலகினார். நீதிக்கட்சி தலைவர் இல்லாத கட்சியாகவே இருந்தது.
• அந்த நெருக்கடியான காலகட்டத்தில் பெரியார் தான் கட்சித் தலைவராக இருக்க வேண்டும். அதற்கு அவரை வலியுறுத்தி ஏற்கச் செய்ய வேண்டும் என்று இரண்டு தலைவர்கள்
பெல்லாரி சிறைக்குப் போய் பெரியாரைச் சந்திக் கிறார்கள். ஒருவர் சர். ஏ.டி. பன்னீர் செல்வம் (பார்-அட்-லா படித்த வழக்கறிஞர், சுயமரியாதை இயக்க ஆதரவாளர், மாவட்ட நிர்வாகத் தலைவர் என்ற பதவிகளில் இருந்தவர். இந்தியாவுக்கு பொறுப்பு வகிக்கும் பிரிட்டிஷ் அமைச்சரின்
ஆலோசகர் பொறுப்புக்குத் தேர்வாகி, விமானத்தில் இலண்டன் செல்லும்போது விமான விபத்தில் பலியானவர்). மற்றொருவர், கி.ஆ.பெ. விசுவநாதம். பெரியாரை தலைவர் பதவியேற்க சம்மதிக்க வைத்து நீதிக்கட்சி மாநாட்டுக்கு தலைமை உரையையும் பெரியாரிடம் எழுதி வாங்கினார்கள்.
அந்த உரையின் இறுதி வரியே ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்றுதான் முடியும். இத்தகவல்களை கி.ஆ.பெ. விசுவநாதமே எழுதியுள்ள ‘எனது நண்பர்கள்’ என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார்.
• 1938 டிசம்பர் 29இல் சென்னையில் கூடிய நீதிக்கட்சியின் 14ஆவது மாநாட்டில் பெரியார் பெல்லாரி சிறையிலிருந்தபடியே தலைவராக்கப்படுகிறார். பெரியார் சிறையிலிருந்து எழுதித் தந்த உரையே சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் பாதி உரையையும், கி.ஆ.பெ. விசுவநாதம் பாதி உரையையும் மாநாட்டில் படித்தனர்.
திராவிட எதிர்ப்பு என்பதே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ‘ஒற்றைத் தீர்வு’ என்று நிழல் யுத்தம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார்கள், தோழர்கள் மணியரசனும் (தமிழ் தேச பேரியக்கம்), சீமானும் (நாம் தமிழர் கட்சி).
இதற்கு தமிழர் ‘மெய்யியல்’, ‘அறம்’ என்றெல்லாம் உள்ளடக்க விளக்கம் ஏதுமற்ற ‘சொல்லா டல்களை’ போர்த்திக் கொண்டு தத்துவமளிக்கும் முயற்சிகள் வேறு நடக்கின்றன.
19.9.2021 அன்று கருத்தரங்கில் ‘திராவிட எதிர்ப்பு’ கூச்சலுக்கு ஆழமான
எதிர்வினைகள் வரலாற்று தரவுகளோடு முன் வைத்து பல சிந்தனையாளர்கள் உரையாற்றினார்கள். அதன் மய்யமான கருத்துத் தொகுப்புகளை சுருக்கமாக இளைய தலைமுறையின் சிந்தனைக்கு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சிறு சிறு பகுதிகளாகத் தொடர்ந்து வெளியிட இருக்கிறது.
திராவிட இயக்கம் கேட்டது கேரளம் - ஆந்திரா - கருநாடகா - தமிழ் நாட்டை ஒரே பிரதேசமாக்கும் திராவிட நாடா?
1. அப்படிக் கூறுவது அபத்தம், வரலாற்றுப் புரட்டு. நீதிக் கட்சி முன்னோடிகளில் ஒருவரான டி.எம். நாயர்,
தென்னிந்திய நான்கு மாநிலங்களையும் தனித் தனி நாடுகளாக அங்கீகரிக்கும் கூட்டாட்சி ஒன்றை உருவாக்க வேண்டும் என்றே வற்புறுத்தினார். ‘ஜஸ்டிஸ்’, ‘திராவிடன்’ ஏடுகளில் இது குறித்து விரிவாக எழுதியிருக்கிறார்.
2. தி.மு.க. கேட்ட ‘திராவிட நாடு’ என்பதும், நான்கு மாநிலங்களையும் உள்ளடக்கிய ‘திராவிடக் கூட்டாட்சி’யைத்தான். 1944இல் தி.மு.க.வுக்கு சூட்டப்பட்ட பெயரே (திராவிட முற்போக்குக் கூட்டமைப்பு கழகம்’ (Dravidian Progressive Federation) என்பதாகும்.
அப்படித் தான் தி.மு.க. சட்டப் புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டது. பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் என்று மாற்றப்பட்டது. அதில் ‘முன்னேற்றம்’ என்பது ‘மேம்பாடு’ என்ற பொருளில் அல்ல; ‘முற்போக்கு’ என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது.
வள்ளலார் மறைந்து 145 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தமிழ்நாட்டு அரசாங்கம் அவரை கெளரவித்து உள்ளது! முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டுதோறும் “தனிப்பெருங்கருணை நாள்”
எனக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்து உள்ளார்! வள்ளலாருக்கு வடலூரில் 72 ஏக்கர் பரப்பளவில் பெரிய மணிமண்டபம் கட்டும் முயற்சியையும் இந்த அரசு மேற் கொண்டு வருகிறது! வள்ளலார் சென்னை தங்கசாலையில் வாழ்ந்த இடத்திற்கு அண்மையில் அமைச்சர் சேகர்பாபு சென்ற போது சொன்னார்.
முதன்முறையாக வள்ளலார் இல்லம் வந்த அமைச்சர் நான் தான்! இது மதவாத பாஜக அரசை எதிர்கொள்ள ஸ்டாலின் கை கொள்ளும் யுத்த தந்திரங்களில் ஒன்றாகும்!
ஸ்டாலின் அமைதியாக செய்ய வேண்டிய நற்காரியங்களை செய்து செயல்பாட்டாளராக விளங்குகிறார்!
"The Spur Tank Meeting" டி .எம் .நாயர்.
திராவிட மக்களின் போர்க்குரல்
பறையரைவிட்டு இரண்டு, மூன்று பார்ப்பனர்களை அடிக்கும்படி தூண்டியதாகப் பத்திரிகை களில் வாசித்தோம். இராஜாங்க விஷயமான அபிப்ராய பேதமிருந்து இதை சாதி பேதச் சண்டையுடன் முடிச்சுப் போட்டு அடிதடி வரை ....
டாக்டர் தரவாட் மாதவன் நாயர் என்ற முழுப் பெயர் கொண்ட டாக்டர் டி.எம். நாயர் தென்னகத்தின் புகழ்பூத்த இந்திய அரசியல்வாதி. சென்னை மாகாணத்தில் திராவிட இயக்கத்தின் முன்னோடி தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை (நீதிக்கட்சி) சர்.பிட்டி. தியாக ராய செட்டியார்,
டாக்டர் சி. நடேச முதலியார் ஆகியோருடன் இணைந்து தோற்று வித்தவர். அச்சங்கத்திற்கான விதிகளை யும் கொள்கை நெறிகளையும் வடித்துத் தந்தவர். மிகத் திறமையும் அறிவாற்ற லும் அஞ்சாமையும் நிறைந்த ஒப்பற்ற தலைவர் டாக்டர் டி.எம். நாயர்.
பெண்ணுரிமை குரல்கள் ,பெண்களுக்கு நடக்கும் அவலங்களுக்கு டிவிட்டரில் முதல் குரல்கள் ,அண்ணாமலை குஷ்பூவை பேசினால் கூட குஷ்புக்கு டிவிட் போட்டு என்னக்கா ஆறுதல் சொல்வது போல் வசன நடை ,
ஒரு முறை குஷ்புவே இந்த அம்மணியை போம்மான்னு சொன்னதெல்லாம் பதிவில் உள்ளது .
தன்னை ஒருவர் டிவிட்டரில் எதிர்த்து பேசினால் அவற் பணிபுரியும் கம்பெனிக்கே சென்று மிரட்டுவது ,அதே நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு தூக்குவது ,கொலை ,
கொள்ளை பலானா பெரிய மேட்டர்கள் தலையீடு ,டிவிட்டர் பிரபலம் என்ற பெயரில் உல்லாச வாழ்க்கை
ம.பொ.சி. தன் வாழ்நாள் முழுவதும் இந்தியத் தேசியத்தையே தூக்கிப் பிடித்தார். செங்கோல் இதழில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15, ஜனவரி 26, அக்டோபர் 2, காந்தி பிறந்த நாள் திலகர் நாள் (6-8-62 செங்கோல்) தீபாவளி வாழ்த்து கூறும்போது கூட
“நாம் தமிழர்களாக மட்டுமல்லாமல் இந்துக்களாகவும் இந்தியர்களாகவும் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது” (செங்கோல் 24-10-65)
"சித்திரை முதல் நாளைத்தான் ஆண்டு பிறந்த நாளாகக் கொண்டாட வேண்டுமாம். பஞ்சாகத்துக்கு மாற்றான தைத்திங்கள் முதல் நாள் ஆண்டு புத்தாண்டு தேவையில்லை. அரசின் வரவு செலவுத் திட்டத்தை இந்தச் சித்திரையிலே அரசு தொடங்கலாம். 60 ஆண்டு சுழற்சி முறையும் நன்றாகத்தான் உள்ளது." (செங்கோல் 18-4-65)
1782 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது மைசூர் போரில் ஹைதர் அலி இறந்து விடவே அவருடைய மகன் திப்பு சுல்தான் போருக்கு பொறுப்பேற்று போரில் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டான்.
திப்பு சுல்தானின் ஆட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கப் பட்டிணத்தில் அதுவும் திப்புவின் அரண்மனைக்கு 300 அடி தொலைவில் தான் ஆதி சங்கரனால் தோற்றுவிக்கப்பட்ட சிருங்கேரி சாரதா பீடம் என் அழைக்கப்படும் சங்கர மடம் உள்ளது.
திப்பு சுல்தானும் தன் தந்தை அய்தர் அலியைப் போலவே சிருங்கேரி சங்கர மடத்தினிடம் நல்லுறவு கொண்டிருந்தார் என்று அவர் சங்கர மடத்திற்கு எழுதிய கடிதங்களிலிருந்தும், சங்கர மடத்திலிருந்து திப்புவிற்கு எழுதப்பட்ட பதில் கடிதங்களிலிருந்தும் அறிந்து கொள்ள முடிகிறது.