#ஶ்ரீகிருஷ்ணன்கதைள் கப்பல் ஒன்று கடலில் வழி தவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது. அதில் ஒருவன் மட்டும் தப்பி அருகிலுள்ள தீவில் கரையேறுகிறான். இறைவா இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு. ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பது? என் மனைவி மக்களை
பார்க்க வேண்டாமா என்று பிரார்த்திக்கிறேன். ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று தினசரி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துவிடுகிறான். தன்னை காத்துக்கொள்ள தீவில் கிடைத்த பொருட்கள் மற்றும் கப்பலின் உடைந்த பாகங்கள் இவற்றை கொண்டு ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டுகிறான்.
அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள் மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்தி தானும் தங்கி வந்தான். இப்படியே நாட்கள் ஓடுகின்றன. இவன் பிரார்த்தனையை மட்டும் விடவில்லை. கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று நம்பினான். ஒரு நாள் இவன் உணவு
தேடுவதற்காக வெளியே சென்றுவிட்டு திரும்புகையில் அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிட வைத்தது. இவன் தங்குவதுகென்று இருந்த ஒரே குடிசையும் வானுயுற எழும்பிய புகையுடன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. குடிசைக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும் தீக்கிரையாகியிருந்தன. அதை பார்த்த இவன் அலறித்
துடித்தான். இறைவா… என்னை காப்பாற்றும்படி தானே உன்னை மன்றாடினேன். நீ என்னவென்றால் இருப்பவற்றையும் பறித்துக் கொண்டாயே இது தான் உன் நீதியோ என்று கதறி அழுதான். மறுநாள் காலை ஒரு கப்பலின் சப்தம் இவனை எழுப்பியது. இவன் தீவை நோக்கி அது வந்து கொண்டிருந்தது. உற்சாகத்தில் துள்ளி குதித்தான்.
கப்பல் சிப்பந்திகள் இவனை லைஃப் போட்டில் அழைத்து சென்றார்கள். தான் இங்கே தீவில் மாட்டிக் கொண்டிருப்பது எப்படி தெரியும் என்று அவர்களிடம் கேட்க, தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை எழும்பியதை பார்த்தோம். யாரோ தீவில் கரை ஒதுங்கி காப்பாற்ற வேண்டி சிக்னல் கொடுக்கிறார்கள் என்று நினைத்தோம்
என்றார்கள் அவர்கள். அப்போது இறைவன் குடிசையை எரித்த காரணம் இவனுக்கு புரிந்தது. இறைவனுக்கு நன்றி சொன்னான்.
அந்த வழியில் கப்பல்கள் வருவதே மிக மிக அரிதான நிலையில், குடிசை மட்டும் தீப்பிடித்து எரியவில்லை என்றால் தன் நிலை என்னவாகியிருக்கும் என்று அவனுக்கு புரிந்தது. அவசரப்பட்டு இறைவனை
நிந்தித்ததை நினைத்து வெட்கினான். வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நாம் இப்படித்தான் இறைவனை அவசரப்பட்டு தவறாக நினைக்கிறோம். நம்மை காக்கவே அவன் ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறான். அவன் தரும் சோதனைகள் அனைத்தும் நம்மை வேறொரு மிகப் பெரிய ஆபத்திலிருந்து காக்கவே என்று நாம் புரிந்து
கொண்டால் எதைப் பற்றியும் அலட்டி கொள்ள வேண்டியதில்லை. கஷ்டம் ஏற்படும்போது இறைவனின் அருட்பார்வை நம் மீது விழுந்து விட்டது விரைவில் நல்லது நடக்கும் என்று நம்பவேண்டும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் துரோணர் அரச குடும்பத்து ஆசிரியர், எல்லா விதத்திலும் அரசனுக்கு கட்டுபட்டவர், அவனை மீறி அவர் ஏதும் செய்துவிட முடியாது. சுருக்கமாக சொன்னால் அரச குடும்பத்து அடிமைகளில் ஒருவர் எனலாம். அந்நாளில் எல்லோரும் எல்லாம் பயின்றால் அரசுக்கு எதிரான சக்திகள் தலையெடுக்கும்
என்பதால் ராஜவம்சத்துக்கு மட்டுமே, ஷத்ரிய வம்சத்துக்கு மட்டுமே சில பயிற்சிகள் கற்றுக்கொடுக்கபடும்.
அவ்வகையில் பாண்டவரும், கௌரவரும் பயில்கிறார்கள். அவர்கள் அரங்கேற்றம் முடிந்தபின்புதான் ஏகலைவன் என்றொருவன் இருப்பதும் அவன் வில்வித்தையில் அர்ஜூனனையும் மிஞ்சி நிற்பதும் அறியபடுகிறது.
அரசு வாரிசுகளையும் மீறி ஒருவன் வித்தையில் மிஞ்சி நிற்பது அரச குடும்பத்துக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல, அவன் எதிரிகளின் கையில் கிடைத்தால் முடிந்தது கதை. ஏகலைவன் மன்னன் ஜராசந்தன் பகுதியில் வாழ்ந்த வேடுவ தலைவனின் மகன். அர்ஜூனனை மீறி ஜொலித்து நின்றான் ஏகலைவன். ஏகலைவன் குரு என யார் என
Our country is a repository of spirituality blended with humanness. God is celebrated as part of us. There is a temple situated in #Thiruvarppu in Kottayam Kerala which is at least 1500 years old. Lord Krishna here is said to be always hungry. So all the 23.58 hours, 365 days the
temple is open. The temple is closed for only 2 minutes, from 11.58 pm to 12.00 am. Unlike other temples the priest here is given an Axe along with the key to reopen the door in the early hours (after closing for minutes). Since Krishna cannot tolerate hunger, if there is any
delay in opening the door with the key, the priest is permitted to break open the latch with an axe. It is believed that Lord Krishna's idol in the Temple is very exhausted Krishna after killing Kamsa. So after the Abhishekam is over first the lord's head is dried, the naivedyam
திருவாரூரை அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேங்கட சுப்பிரமணியம். வேத விற்பன்னர். மகாபெரியவர் சன்னிதானத்தில் முதல் பக்தர். ஒரு முறை மகாபெரியவர் மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு விஜயம் செய்தார். கற்பகாம்பாள் சன்னிதியில் கொடுக்கப்பட்ட குங்குமப் பிரசாதத்தைப் பார்த்ததும், அந்தக்
#குங்குமம் சுத்தமான தயாரிப்பாக இருக்க முடியாது என்று அவருக்குத் தோன்றியது. தூரத்தே கோஷ்டியில் நின்று கொண்டிருந்த வேங்கட சுப்பிரமணியத்தை அருகில் வரும்படி கட்டளையிட்டார்.
உனக்கொரு வேலை கொடுக்கப் போறேன். செய்வியா என்றார். உத்தரவு என்றார் வேங்கட சுப்பிரமணியம். தமிழ்நாட்டில் பல
கோயில்களில் அம்பாள் சன்னிதியில் கொடுக்கப்படும் குங்குமம் அசலான தயாரிப்பாக இல்லை. எனவே பக்தர்களுக்காக நீ சாஸ்திரோக்தமாக குங்குமம் தயாரிக்க வேண்டும் என்று ஆக்ஞையிட்டார் மகாபெரியவர்.
மகாபெரியவர் கட்டளையிட்டவுடன் வேங்கட சுப்புரமண்யம் வேதங்கள், உபநிஷத்துக்கள், அம்பாளின் மகத்துவத்தை
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் காவிரிக் கரையிலுள்ள மணலில் சிறுவர்கள் கூடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த ஒரு கல்லை எடுத்து நிமிர்த்தி வைத்து, இவர் தான் இனி நம் பெருமாள் என்று சொன்னார்கள். அந்தப் பெருமாளுக்குப் பிரசாதமாக மண் உருண்டைகளையே எடுத்து நிவேதனம் செய்தார்கள். தங்களுடைய
விளையாட்டு, பார்ப்போரின் கண்களுக்குக் கோயிலில் நடைபெறும் நித்திய பூஜையைப் போலவே தெரிய வேண்டும் என்று கருதினார்கள் அச்சிறுவர்கள். அதனால் ஒருவன் அர்ச்சகரைப் போலவும் ஒருவன் மடப்பள்ளி சமையல்காரரைப் போலவும், சிலர் வேதம் ஓதுவாரைப் போலவும், சிலர் ஆழ்வார் பாசுரங்களை ஓதுவார் போலவும்,
சிலர் ஸ்ரீபாதம் தாங்கிகள் போலவும் பலவாறு வேடமிட்டுக் கொண்டார்கள். அச்சிறுவர்களுள் ஒருவன் கோயிலில் முதல் மரியாதைகளைப் பெறும் ராமாநுஜரைப் போல் காவி உடை அணிந்து கொண்டான். கோவிலில் பிரசாத நிவேதனம் ஆனவுடன், அர்ச்சகர், “ஜீயரே வாரும்” என்று ராமாநுஜரை முதல் மரியாதை பெற்றுக் கொள்வதற்காக
கோமாதாவான பசுவை வழிபடுவது மிகவும் மகத்துவமானது. அனைத்திலும் வெற்றியைத் தரவல்லது. பசுவின் கண்கள் சூரிய சந்திரர்; வால் பகுதி ராகுவும் கேதுவும்; மடிக் காம்புகள் நான்கும் வேதங்கள்; நாசிகளில் முருகனும் விநாயகரும் திகழ்கிறார்கள். பசுவின் நெற்றியில் சிவனும் கழுத்துப் பகுதியில்
திருமாலும் பிரம்மனும், கால் பகுதியில் அனுமனும் திகழ, வயிற்றுப் பகுதியில் தேவர்களும் ரிஷிகளும் யாகம் புரிகிறார்கள். பசுவின் பின்புறத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள். அதனால் பசு தெய்வாம்சம் பொருந்தியது. பசுவை மூன்று முறை வலம் வந்து வணங்கினால் அனைத்துத் தெய்வங்களையும் தீர்த்தங்களையும்
வலம் வந்த புண்ணியம் கிடைக்கும்.
இறந்த பிறகு ஆத்மாவானது அதிபத்ர வனத்தைக் கடந்து வைத்ரன்ய நதியின் முன் பிறவி மோட்சம் வேண்டி நிற்கும்போது அந்த நிலையை அடைய கோ பூஜை மற்றும் கோ தானம் செய்த புண்ணியமே உதவும் என்கிறது கருடபுராணம். மாட்டின் வயிற்றிலிருந்து கன்று வெளிப்படும்போது முப்பத்து
மனநோய் தீர்த்து மன அமைதி தருபவர் குணசீலம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள். திருக்கரத்தில் செங்கோல் ஏந்தியபடி காட்சி தருகிறார் குணசீலம் பெருமாள். இங்கே உள்ள பிரசன்ன வேங்கடாசலபதியை மனதாரத் தொழுதால் மனதில் நல்ல குணத்தை விதைப்பார். ஐஸ்வர்யமும் தந்தருள்வார்.
திருச்சி- சேலம் ரோட்டில்
திருச்சியில் இருந்து 24 கி.மீ. தூரத்தில் குணசீலம் என்ற இடத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில். மூலவர் பிரசன்ன வெங்கடாஜலபதி. உற்சவர் ஸ்ரீனிவாசர். திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்த குணசீலர் என்ற பக்தர், காவிரிக்கரையில் இருந்த தனது ஆஸ்ரமத்தில் பெருமாள் எழுந்தருள
வேண்டுமென விரும்பினார். இதற்காக தவமிருக்கவே, சுவாமி அவருக்கு காட்சி கொடுத்தார். குணசீலரின் வேண்டுதலின்படி இங்கேயே எழுந்தருளினார்.
குணசீலரின் பெயரால் அப்பகுதிக்கு குணசீலம் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு சமயம் குணசீலரின் குரு தன்னுடன் இருக்கும்படி அவரை அழைத்தார். குணசீலர் தன் சீடன்