#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் துரோணர் அரச குடும்பத்து ஆசிரியர், எல்லா விதத்திலும் அரசனுக்கு கட்டுபட்டவர், அவனை மீறி அவர் ஏதும் செய்துவிட முடியாது. சுருக்கமாக சொன்னால் அரச குடும்பத்து அடிமைகளில் ஒருவர் எனலாம். அந்நாளில் எல்லோரும் எல்லாம் பயின்றால் அரசுக்கு எதிரான சக்திகள் தலையெடுக்கும்
என்பதால் ராஜவம்சத்துக்கு மட்டுமே, ஷத்ரிய வம்சத்துக்கு மட்டுமே சில பயிற்சிகள் கற்றுக்கொடுக்கபடும்.
அவ்வகையில் பாண்டவரும், கௌரவரும் பயில்கிறார்கள். அவர்கள் அரங்கேற்றம் முடிந்தபின்புதான் ஏகலைவன் என்றொருவன் இருப்பதும் அவன் வில்வித்தையில் அர்ஜூனனையும் மிஞ்சி நிற்பதும் அறியபடுகிறது.
அரசு வாரிசுகளையும் மீறி ஒருவன் வித்தையில் மிஞ்சி நிற்பது அரச குடும்பத்துக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல, அவன் எதிரிகளின் கையில் கிடைத்தால் முடிந்தது கதை. ஏகலைவன் மன்னன் ஜராசந்தன் பகுதியில் வாழ்ந்த வேடுவ தலைவனின் மகன். அர்ஜூனனை மீறி ஜொலித்து நின்றான் ஏகலைவன். ஏகலைவன் குரு என யார் என
கேட்க அவன் துரோணர் சிலையினை காட்டுகின்றான். ஆம் துரோணரை மனத்தால் வணங்கி குருவாக ஏற்று வித்தை கற்றவன் ஏகலைவன். ஆனால் இது துரோணருக்கே தெரியாது. துரோணர் அதிர்கிறார். அவர் அரச குடும்பத்துக்கு மட்டுமே ஆசிரியர். அப்படியானால் இவனை இவ்வளவு திறமையாக அவர் உருவாக்க காரணம் என்ன எனும் சந்தேக
கேள்விகள் எழும். சிக்கலில் தவிக்கிறார் துரோணர், ராஜதுரோக குற்றசாட்டு அவர்மேல் சுமத்தபடும். அரசனின் கோபம் ஏகலைவனை முதலில் கொல்லும், துரோணரை அடுத்து கொல்லும், ராஜதுரோகம் எனும் குற்றத்துக்கான தண்டனை அது. யோசித்தார் துரோணர், அந்த சீடன் அழிவதில் அவருக்கு விருப்பமில்லை அவனை பலமிழக்க
வைத்தால் போதுமென குருதட்சனையாக கட்டை விரலை கேட்கிறார். இதை அந்த வில்லாளி பிராமணனாகவோ ஷத்திரியனாகவோ இருந்தாலும் கேட்டிருப்பார். இதை அவர் தெளிவு படுத்துகிறார். குரு கேட்டால் தலைகொடுக்கவும் துணியும் ஏகலைவன் கட்டை விரலை மகிழ்வாய் கொடுத்து பலமிழக்கின்றான். இனி அவனால் வில்வித்தையை
துல்லியமாக செய்யமுடியாது. குருவுக்கு சிஷ்யன் கொடுக்கும் காணிக்கை அவரை காக்கும் என்பது சாஸ்திர நம்பிக்கை. கண்ணீரோடு அவனின் கட்டை விரலை தாயத்தில் வைத்து கழுத்தில் கட்டிகொள்கின்றார் துரோணர். ஏகலவைனுக்கோ குருநாதருக்காக வித்தையினையே கொடுத்துவிட்ட தியாக மகிழ்ச்சி, தன் கட்டைவிரல் அவர்
கழுத்தில் இருப்பதில் தானே அவரின் மார்பில் சாய்ந்ததாக மகிழ்ந்தான். துரோணர் அவன் உயிரை காத்தார் அவன் துரோணர் உயிரை காத்தான். மகாபாரதப் போர் வந்தது. துரோணர் கழுத்தில் இருப்பது உன்னதமான சிஷ்யனின் காணிக்கை, அதன் சக்தி வலியது, அது இருக்கும்வரை துரோணர் வீழமாட்டார். அதனால் ஏழை அந்தணராக
மாறிய கண்ணன் யாசகனாய் வந்தான், தன் மகளுக்கு திருமணமென்றும் ஒரு தாலிக்கும் வழியில்லை எனவும் அழுது அந்த தாயத்தையே உற்று பார்த்தான். குறிப்பறிந்த துரோணர் இதைவிட பெரும் தாலி இல்லை, இது ஆசிமிக்கது என அதை வழங்கினார். துரோணரின் கழுத்தில் இருந்து அந்த பெரும் கவசத்தை அகற்றினான் கண்ணன்.
அதன் பின் எல்லாம் முடிந்தது, சாகும் வேளையில் துரோணர் முன் தன் புல்லாங்குழலை காட்டினான் கண்ணன், ஆம் அதில் அந்த விரலை பதித்திருந்தான். அதை கண்டவுடன் துரோணருக்கு எல்லாம் விளங்கிற்று, மெல்ல பேசினான் கண்ணன் அவன் குரல் அந்த ஞான தத்துவத்தை போதித்தது. "துரோணாச்சாரியே.. சிஷ்யர்களில்
எல்லாம் உயர்ந்தவன் ஏகலைவன், ஆசிரியரில் எல்லாம் உயந்தவன் நீ. உங்களுக்குள்ளான உணர்வும் புரிந்துணர்வும் பாசமும் எந்த குருவுக்கும் சீடனுக்கும் அமையாது. அவனை அன்றே நீ கொன்றிருந்தால் நீ பாவியாகி இருப்பாய், விட்டிருந்தால் அவனை நீனே வளர்த்தாய் என பழி சுமந்திருப்பாய். அவன் பாண்டவர் பக்கம்
வந்தாலும் கௌரவர் பக்கம் வந்தாலும் பழி உனக்கே. உன் மாணவர்களின் அர்ஜூனன் பெரும் அடையாளம் ஆனால் நீ நேரடியாக பயிற்றுவித்தாய், ஆனால் உன்னை மனதால் வணங்கி வளர்ந்த ஏகலைவனே அவனை விட உயர்ந்தவன், ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதன் அடையாளம். அங்கு உன் உயிரை அவன் காத்து மாணவனின்
கடமையினை செய்தான், நீ அவன் உயிரை காப்பாற்றி ஆசிரியனுக்குரிய கடமையினை காத்தாய். துரோணாச்சாரியே நீ கேட்டவுடன் கொடுத்த உன் சிஷ்யனின் விரல் அவனின் தியாகத்துக்கும், நல்ல குருசிஷ்ய நடத்தைக்கும் என்றும் எடுத்துகாட்டாய் இருக்கும், உன் பெயர் இருக்குமிடமெல்லாம் அவனும் இருப்பான். அந்த
புல்லாங்குழலின் இருந்த விரலை நோக்கியபடியே உயிர்நீத்தார் துரோணர். நல்ல மாணவன் தன் ஆசிரியர் அளவு வரலாற்றில் நிலைப்பான் என்பதுதான் ஏகலைவன் வாழ்வின் தத்துவம்.
மகாபாரதத்தின் ஒவ்வொருவரும் நம் சந்திதியினர் நமக்கு விட்டு சென்ற தர்ம சாஸ்திரம். நம் குருக்கள் விட்டு சென்ற அற வழியில்
வாழ்ந்து காட்டுவோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
@threadreaderapp please compile thanks

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

24 Oct
Our country is a repository of spirituality blended with humanness. God is celebrated as part of us. There is a temple situated in #Thiruvarppu in Kottayam Kerala which is at least 1500 years old. Lord Krishna here is said to be always hungry. So all the 23.58 hours, 365 days the
temple is open. The temple is closed for only 2 minutes, from 11.58 pm to 12.00 am. Unlike other temples the priest here is given an Axe along with the key to reopen the door in the early hours (after closing for minutes). Since Krishna cannot tolerate hunger, if there is any
delay in opening the door with the key, the priest is permitted to break open the latch with an axe. It is believed that Lord Krishna's idol in the Temple is very exhausted Krishna after killing Kamsa. So after the Abhishekam is over first the lord's head is dried, the naivedyam
Read 8 tweets
24 Oct
#ஶ்ரீகிருஷ்ணன்கதைள் கப்பல் ஒன்று கடலில் வழி தவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது. அதில் ஒருவன் மட்டும் தப்பி அருகிலுள்ள தீவில் கரையேறுகிறான். இறைவா இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு. ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பது? என் மனைவி மக்களை
பார்க்க வேண்டாமா என்று பிரார்த்திக்கிறேன். ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று தினசரி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துவிடுகிறான். தன்னை காத்துக்கொள்ள தீவில் கிடைத்த பொருட்கள் மற்றும் கப்பலின் உடைந்த பாகங்கள் இவற்றை கொண்டு ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டுகிறான்.
அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள் மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்தி தானும் தங்கி வந்தான். இப்படியே நாட்கள் ஓடுகின்றன. இவன் பிரார்த்தனையை மட்டும் விடவில்லை. கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று நம்பினான். ஒரு நாள் இவன் உணவு
Read 9 tweets
24 Oct
திருவாரூரை அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேங்கட சுப்பிரமணியம். வேத விற்பன்னர். மகாபெரியவர் சன்னிதானத்தில் முதல் பக்தர். ஒரு முறை மகாபெரியவர் மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு விஜயம் செய்தார். கற்பகாம்பாள் சன்னிதியில் கொடுக்கப்பட்ட குங்குமப் பிரசாதத்தைப் பார்த்ததும், அந்தக்
#குங்குமம் சுத்தமான தயாரிப்பாக இருக்க முடியாது என்று அவருக்குத் தோன்றியது. தூரத்தே கோஷ்டியில் நின்று கொண்டிருந்த வேங்கட சுப்பிரமணியத்தை அருகில் வரும்படி கட்டளையிட்டார்.
உனக்கொரு வேலை கொடுக்கப் போறேன். செய்வியா என்றார். உத்தரவு என்றார் வேங்கட சுப்பிரமணியம். தமிழ்நாட்டில் பல
கோயில்களில் அம்பாள் சன்னிதியில் கொடுக்கப்படும் குங்குமம் அசலான தயாரிப்பாக இல்லை. எனவே பக்தர்களுக்காக நீ சாஸ்திரோக்தமாக குங்குமம் தயாரிக்க வேண்டும் என்று ஆக்ஞையிட்டார் மகாபெரியவர்.
மகாபெரியவர் கட்டளையிட்டவுடன் வேங்கட சுப்புரமண்யம் வேதங்கள், உபநிஷத்துக்கள், அம்பாளின் மகத்துவத்தை
Read 16 tweets
23 Oct
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் காவிரிக் கரையிலுள்ள மணலில் சிறுவர்கள் கூடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த ஒரு கல்லை எடுத்து நிமிர்த்தி வைத்து, இவர் தான் இனி நம் பெருமாள் என்று சொன்னார்கள். அந்தப் பெருமாளுக்குப் பிரசாதமாக மண் உருண்டைகளையே எடுத்து நிவேதனம் செய்தார்கள். தங்களுடைய
விளையாட்டு, பார்ப்போரின் கண்களுக்குக் கோயிலில் நடைபெறும் நித்திய பூஜையைப் போலவே தெரிய வேண்டும் என்று கருதினார்கள் அச்சிறுவர்கள். அதனால் ஒருவன் அர்ச்சகரைப் போலவும் ஒருவன் மடப்பள்ளி சமையல்காரரைப் போலவும், சிலர் வேதம் ஓதுவாரைப் போலவும், சிலர் ஆழ்வார் பாசுரங்களை ஓதுவார் போலவும்,
சிலர் ஸ்ரீபாதம் தாங்கிகள் போலவும் பலவாறு வேடமிட்டுக் கொண்டார்கள். அச்சிறுவர்களுள் ஒருவன் கோயிலில் முதல் மரியாதைகளைப் பெறும் ராமாநுஜரைப் போல் காவி உடை அணிந்து கொண்டான். கோவிலில் பிரசாத நிவேதனம் ஆனவுடன், அர்ச்சகர், “ஜீயரே வாரும்” என்று ராமாநுஜரை முதல் மரியாதை பெற்றுக் கொள்வதற்காக
Read 13 tweets
22 Oct
கோமாதாவான பசுவை வழிபடுவது மிகவும் மகத்துவமானது. அனைத்திலும் வெற்றியைத் தரவல்லது. பசுவின் கண்கள் சூரிய சந்திரர்; வால் பகுதி ராகுவும் கேதுவும்; மடிக் காம்புகள் நான்கும் வேதங்கள்; நாசிகளில் முருகனும் விநாயகரும் திகழ்கிறார்கள். பசுவின் நெற்றியில் சிவனும் கழுத்துப் பகுதியில் Image
திருமாலும் பிரம்மனும், கால் பகுதியில் அனுமனும் திகழ, வயிற்றுப் பகுதியில் தேவர்களும் ரிஷிகளும் யாகம் புரிகிறார்கள். பசுவின் பின்புறத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள். அதனால் பசு தெய்வாம்சம் பொருந்தியது. பசுவை மூன்று முறை வலம் வந்து வணங்கினால் அனைத்துத் தெய்வங்களையும் தீர்த்தங்களையும் Image
வலம் வந்த புண்ணியம் கிடைக்கும்.
இறந்த பிறகு ஆத்மாவானது அதிபத்ர வனத்தைக் கடந்து வைத்ரன்ய நதியின் முன் பிறவி மோட்சம் வேண்டி நிற்கும்போது அந்த நிலையை அடைய கோ பூஜை மற்றும் கோ தானம் செய்த புண்ணியமே உதவும் என்கிறது கருடபுராணம். மாட்டின் வயிற்றிலிருந்து கன்று வெளிப்படும்போது முப்பத்து Image
Read 5 tweets
22 Oct
மனநோய் தீர்த்து மன அமைதி தருபவர் குணசீலம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள். திருக்கரத்தில் செங்கோல் ஏந்தியபடி காட்சி தருகிறார் குணசீலம் பெருமாள். இங்கே உள்ள பிரசன்ன வேங்கடாசலபதியை மனதாரத் தொழுதால் மனதில் நல்ல குணத்தை விதைப்பார். ஐஸ்வர்யமும் தந்தருள்வார்.
திருச்சி- சேலம் ரோட்டில் Image
திருச்சியில் இருந்து 24 கி.மீ. தூரத்தில் குணசீலம் என்ற இடத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில். மூலவர் பிரசன்ன வெங்கடாஜலபதி. உற்சவர் ஸ்ரீனிவாசர். திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்த குணசீலர் என்ற பக்தர், காவிரிக்கரையில் இருந்த தனது ஆஸ்ரமத்தில் பெருமாள் எழுந்தருள Image
வேண்டுமென விரும்பினார். இதற்காக தவமிருக்கவே, சுவாமி அவருக்கு காட்சி கொடுத்தார். குணசீலரின் வேண்டுதலின்படி இங்கேயே எழுந்தருளினார்.
குணசீலரின் பெயரால் அப்பகுதிக்கு குணசீலம் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு சமயம் குணசீலரின் குரு தன்னுடன் இருக்கும்படி அவரை அழைத்தார். குணசீலர் தன் சீடன்
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(