ஆபிரகாமிய மதங்கள் என்பது யூத மதம், கிரிஸ்துவ மதம் மற்றும் இஸ்லாமிய மதம். இவை மூன்றையும் ஆபிரகாமிய மதங்கள் என்று கூற காரணம் இவை மூன்றும் ஆபிரகாம் என்கிற patriarch இல் இருந்து தோன்றிய மதங்களாகும்.

இந்த மூன்று மதங்களுக்கும் ஒரே கடவுள் தான். இவர்களின் கடவுளுக்கு பெயர் இல்லை.
கடவுள் என்பதை Hebrew மொழியில் யெகோவா என்று யூதர்களும், ஆங்கில மொழியில் God என்று கிறிஸ்துவர்களும், அல்லா என்று அரேபிய மொழியில் இஸ்லாமியர்களும் அழைக்கிறார்கள். ஆனால் இந்த மூன்று பேர் தொழும் கடவுள் ஒருவரே.
ஆதாமின் வம்சாவளி இந்த ஆபிரகாம். ஆபிரகாமிற்கு குழந்தை இல்லாததால் அவனது மனைவி சாராள் அவனை அவர்களது எகிப்திய பணிப்பெண் ஆகார் மூலமாக ஒரு குழந்தை பெற்று கொள்ளும்படி சொன்னாள். இவர்களுக்கு பிறந்த மகன் தான் இஸ்மவேல் அல்லது இஸ்மாயில். இஸ்மவேல் பிறந்தபின் சாராள் கருவுற்று ஒரு மகனை பெற்றாள்
அவன் தான் இசாக். Sarah, Abraham கிட்ட அடிமை பெண்ணையும் அவளுக்கு பிறந்த மகனையும் துரத்தி விடு என டார்ச்சர் பண்ணதால் கடவுள் ஆபிரகாம் கிட்ட அதான் இசாக் இருக்கான் ல அதனால் sarah பேச்சை கேட்டு அவங்க ரெண்டு பேரையும் அனுப்பி விடு என்றார். அவனும் அதே போல அவர்களை அனுப்பிவிட்டான்.
ஆகாரும் குழந்தையையும் கைவிடவில்லை. பெயெர்செபாவின் வனாந்தரத்திலே தண்ணீர் இன்றி தவிக்கிறார்கள். தேவதூதன் ஆகாரக்கு ஒரு கிணற்றண்டைக் காண்பித்தார்; அவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள். இஸ்மவேல் ஒரு திறமையான வேட்டைக்காரர் மற்றும் வில்லனாக வளர்ந்தார். அவர் நாடோடி அரபு மக்களுக்கு தலைவன்.
இந்த பக்கம் இசாக் சந்ததியினர் எகிப்தில் அடிமையாக இருக்கிறார்கள். அவர்களை விடுவித்து அழைத்து வந்தது மோசஸ் என்னும் இறை தூதர். மோசஸ் தான் யூத மதத்தை முறைபடுத்தியது.
ஆப்ரஹாமின் மூத்த மகன் இஸ்மாயீல் இந்த இஸ்மவேலின் வம்சத்தில் தான் முஹம்மத் என்ற இறைத்தூதர் அவர்கள் பிறக்கிறார்கள்.

நான் அவனை ஆசிர்வதித்து அவனை மிகவும் அதிதமாக பலுகவும் பெருகவும் பண்ணுவேன். அவன் பணிரென்டு பிரபுகளைப் பெறுவான். அவனைப் பெரிய ஜாதியாக்குவேன். (ஆதி 17:20)
ஈசாக்கின் வழிவந்தோர் யூதர்கள் என்று அழைக்கப்பட்டனர். இஸ்மாயில் வழித்தோன்றல்கள்
அரேபியர்கள் ஆனார்கள்.

யூதர்களின் புனித நூல் தோரா (Torah). கிறிஸ்தவர்களின் புனித நூல் பைபிள். முஸ்லீம்களின் குர் ஆன்
ஆகிய மூன்று புனித நூல்களும் இதனைத் தெரிவிக்கின்றன.
Moses க்கு யெகோவா (Jehovah) தன்னை வெளிப்படுத்தி எப்படி யூதர்களை வழி நடத்த வேண்டும் என்று கூறுகிறார். அதன்படி கடவுள் தனக்கு அளித்த கட்டளைகள் அடிப்படையில் மோசஸ் ஒருங்கிணைத்துதான் யூத மதம் (Judaism). Moses தனக்கு பின் தீர்க்கதரிசி வருவார் என்கிறார்.
உபாகமம் 18:15 உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.
இப்படி சொல்லிவிட்டு மோசஸ் இறந்தபின், 1500 வருடங்கள் கழித்து முதலாம் நூற்றாண்டில் ஒருவர் ஜெருசலேம் வந்து அங்கு இருக்கும் பரிசேயர்கள் அதாவது யூத குருமார்களை எல்லாம் கேள்வி கேட்கிறார். கோவில் வாசலில் வணிகம் செய்து கொண்டு இருந்தவர்களை விரட்டி அடிக்கிறார்.
நான் தான் கடவுளின் மகன் என்று பல அற்புதங்கள் செய்து காட்டுகிறார். கடவுள் கூறிய வார்த்தைகளை பின்பற்றாமல் வழி தவறி விட்டீர்கள் என்று ஜெருசலேம் வீதிகளில் போதனைகள் செய்கிறார்.
அவர்தான் இயேசு கிறிஸ்து.
எப்படி இந்து மதத்தில் ராமானுஜர் பல சீர்திருத்தங்களை கொண்டுவந்தாரோ, அதே போல யூத மதத்தில் இயேசு கிறிஸ்துவும் பல சீர்திருத்தங்களை கொண்டு வருகிறார். இவர் ஒரு யூதர்தான் யூத மதத்தை சேர்ந்தவர். மக்களிடம் யூத புனிதநூலான தோராவை தான் பிரசங்கம் செய்து வந்தார்.
இவரை யூதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசு ஒரு கலகக்காரர் என்றார்கள். இவர் நான்தான் கடவுளின் மகன் என்றதை இறைவனுக்கு எதிரான துவேஷம் என்றார்கள். இறுதியில் என்ன ஆனது என்று உங்களுக்கு தெரியும் அவரை சிலுவையில் அறைந்துவிட்டார்கள்.
இயேசு சொன்ன போதனைகளை அவரது சீடர்கள் உலகெங்கும் பரப்பி வந்தார்கள். பலர் இயேசுவை இறைவனின் மகனாக ஏற்று கொண்டார்கள் அவர்களில் யூதர்களும், கிரேக்கர்களும், ரோமானியர்களும் அடக்கம்.
இயேசுவின் போதனைகளை பரப்பியதில் முக்கியமான நபர் பவுல்.
இவர் Antioch இல் பரப்புரை செய்யும் போதுதான் Christians என்கிற வார்த்தை பயன்பாட்டுக்கு வருகிறது. Acts 11:26 "அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று."
கிறிஸ்தவர்கள் புனிதநூலில் யூதர்களின் புனிதநூலான தோராவும் அடக்கம் அது தான் பழைய ஏற்பாடு.

யூதர்களை பொறுத்தவரை Malachi தான் இறுதி இறைத்தூதர். அதன் பின் எந்த தூதரும் வரவில்லை. இயேசு கிறிஸ்துவை அவர்கள் இறைத்தூதராக கூட ஏற்கவில்லை.
Malachi க்கு பின் வேறு ஒரு தூதுவர் வருவார் என்று இன்று வரை காத்து இருக்கிறார்கள்.
கிறிஸ்தவர்களை பொறுத்தவரை யூதர்கள் வழி மாறி போனதால் இனி இறைத்தூதரை அனுப்பி பயனில்லை என்று தன் ஒரே மகனான இயேசுவை உலகிற்கு இறைவன் அனுப்பி வைத்தான்.
முதலாம் நூற்றாண்டில் கிறிஸ்துவின் பிறப்புடன் கிறிஸ்துவத்தின் வரலாறு தொடங்குகிறது. 7ஆம் நூற்றாண்டில்  முஹம்மது நபியுடன் இஸ்லாம் மதத்தின் வரலாறு தொடங்குகிறது.
இஸ்லாம் மதம் யூதர்கள் புனிதநூல் தோராவையும் ஏற்கிறது, இயேசு கிறிஸ்துவையும் ஒரு இறை தூதராக கடவுளின் மகன் அல்ல இறை தூதராக பார்க்கிறது.
இஸ்மாயிலில் இருந்து அரேபியர்கள் வந்தார்கள் என்று பார்த்தோம் அல்லவா? அவர்கள் காலப்போக்கில் பல கடவுள்களை ஏற்றுக்கொண்டு வாழ தொடங்கிவிட்டார்கள்.
570 CE இல் Saudi Arabia வில் இருக்கும் Meccaவில் நபிகள் பிறக்கிறார். 610 CE இல் யூத மதத்தில் சொல்லப்பட்டு இருக்கும் கடவுள் Gabriel என்னும் தேவதூதனை அனுப்பி முஹம்மது நபிக்கு இறைவனின் வார்த்தைகள் சொல்கிறார்.
அதன் பின் அவர் வாழ்நாள் முழுவதும் அவ்வப்போது Gabriel மூலமாக இறைவன் முஹம்மது நபிக்கு சொல்லியது தான் இஸ்லாமியர்களின் புனித நூல் குரான்.
எப்படி யூதர்கள் வழி மாறியதால் இறைவன் இயேசு கிறிஸ்துவை அனுப்பினாரோ அதே போல வழி மாறிய இஸ்மாயீலின் வழித்தோன்றல்களே வழிநடத்த முஹம்மது நபி மூலம் தனது வார்த்தைகளை அருளினார்.
முஹம்மது நபியும் மோசஸ், இயேசு கிறிஸ்துவை போல ஒரு இறைத்தூதர். அவர்தான் கடவுளால் இறுதியாக அனுப்பப்பட்ட தூதர்.
இவருக்குப்பின் இனி தூதர்கள் இல்லை. குரான் தான் இறுதியாக கடவுள் மனிதனுக்காக வழங்கிய வார்த்தை என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை.
யூதர்கள், யூத மதத்தில் பிறந்த இயேசுவையே ஒரு பொருட்டா மதிக்கலை. அப்போ முஹம்மது நபியை பற்றி கேட்கவா வேண்டும்?
யூதர்களை பொறுத்தவரை ஏசுவும் சரி நபிகளும் சரி இறை தூதர்கள் அல்ல. கிறிஸ்தவர்களும் முஹம்மது நபியை இறை தூதராக ஏற்பது இல்லை. அவர்கள் முஹம்மது நபி பைபிளில் குறிப்பிடப்பட்டு இருக்கும் கள்ளத் தீர்க்கத்தரிசி என்கிறார்கள்.
மத்தேயு 24:23-28 "அப்பொழுது யாராவது உங்களிடம், ‘இதோ, மெசியா இங்கே இருக்கிறார்! அதோ, அங்கே இருக்கிறார்’ எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம். 24ஏனெனில், போலி மெசியாக்களும், போலி இறைவாக்கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறி தவறச் செய்ய பெரும்
அடையாளங்களையும் அருஞ் செயல்களையும் செய்வார்கள். 25இதை முன்னதாகவே நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன். 26ஆகையால், எவராவது உங்களிடம் வந்து, ‘அதோ, பாலைநிலத்தில் இருக்கிறார்’ என்றால் அங்கே போகாதீர்கள்; ‘இதோ, உள்ளறையில் இருக்கிறார்’ என்றால் நம்பாதீர்கள்."
இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இறைவனின் வார்த்தையை சிதைத்து விட்டார்கள். பல மொழிபெயர்ப்பு, editing, அது போதாதென்று இறைவனின் வார்த்தைக்கு பல அர்த்தங்கள் கற்பித்து இறைவனின் வார்த்தையை மதிப்பிழக்க செய்துவிட்டார்கள்.
அதனால் தான் இறைவன் முஹம்மது நபிக்கு இறுதி வார்த்தையாக இனி என்றும் மாறாத வார்த்தையாக குரானை வழங்கி இருக்கிறார் என்கிறார்கள்.
ஆக Judaism, Christianity, Islam ஆகிய மதங்களின் சுருக்கமான வரலாறு இதுதான். மூன்று பேரும் வழிபடும் கடவுள் ஒருவர் தான் ஆனால் அதிலேயே அவர்களுக்குள் எத்தனை சண்ட
அதுபோக ஒவ்வொரு மதத்திற்குள்ளும் எத்தனை உட்பிரிவுகள்? மதத்திற்குள்ளேயே பல சண்டைகள். எனவே உலகம் முழுவதும் ஒரே கடவுள் ஒரே மதம் என்றாலும் கூட கடவுளின் பெயரில் மனிதன் அடித்து கொள்வதை நிறுத்தமாட்டான். மதத்தினால் மனிதனை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Swathika

Swathika Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @swathikasarah

28 Oct
மதம் மனிதனுக்கு ஒழுக்கத்தை போதிக்கிறதா?
மதம் சொல்லும் ஒழுக்கம் என்ன?
*மதம் கணவனுக்கு கீழ்படியாத பெண்களை அடிக்க சொல்கிறது
*மதம் சிறுமிகளை திருமணம் செய்வது தவறு இல்லை என்று சொல்கிறது
*மதம் கற்பழிப்பை தவறு என்று சொல்வதில்லை மாறாக ஒருபெண்ணை கற்பழித்தால் அவளை திருமணம் செய்துகொள் அல்லது அவளது அப்பாவிற்கு (உரிமையாளருக்கு) பணம் குடு என்கிறது.
*மதம் நெருங்கிய உறவுக்குள் உருவாகும் தகாத உறவுகளை கற்று தருகிறது.
ஒழுக்கத்தை நோக்கி முன்னேறும் போதெல்லாம் அதை எதிர்த்தது மதங்கள் தான்.
கறுப்பின அடிமை முறையை ஒழித்ததை எதிர்த்தது மதம் தான். அது மதவாதிகள் தான் மதம் இல்லை, கடவுளின் தவறு இல்லை என்று சொல்ல கூடாது. அந்த மதவாதிகள் அதை எங்கிருந்து கற்றனர்? மதநூல்களில் இருந்து தானே கற்றனர்.
Read 13 tweets
28 Oct
Franz Kafka's Metamorphosis in lowest price...

'One morning, when Gregor Samsa woke from troubled dreams, he found himself transformed in his bed into a horrible vermin.'

Thus begins The Metamorphosis, cited as one of the seminal works of fiction of the twentieth century.
A story of Gregor Samsa, a travelling salesman, who wakes up one day to discover that he has metamorphosed into a bug, The Metamorphosis is a book that concerns itself with the themes of alienation, disillusionment and existentialism.
As Samsa struggles to reconcile his humanity, Kafka, very deftly, weaves his readers into a web that deals with absurdity of existence, alienating experience of modern life & cruelty & incomprehensibility of authoritarian power, leaving them at once stunned & impressed.
Read 4 tweets
22 Oct
Leonardo da Vinci

லியோனார்டோ டாவின்சியை கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. பிரபலமான சர்ச்சைக்குரிய டாவின்சி கோட் படம் அல்லது புத்தகம் பார்த்தவர்களுக்கு தெரியும். பிரசித்தி பெற்ற மோனலிசா ஓவியத்தை வரைந்தவர் இவரே.
பல புகழ் பெற்ற ஓவியங்களுக்காக இவர் அறியப்பட்டாலும் இவர் வெறும் ஓவியர் மட்டுமல்ல. கவிஞர், தத்துவமேதை, விளையாட்டு வீரர், பொருளியல் வல்லுநர், கட்டடக்கலை நிபுணர், கடல் ஆராய்ச்சியாளர், வானியல் விஞ்ஞானி, மனித உடற்கூறு ஆய்வாளர், நீர்ப்பாசன நிபுணர், ராணுவ ஆலோசகர், இசை ஆர்வலர்,
கதாசிரியர் இப்படி ஆல் இன் ஆல் அழகுசாமி.
இத்தாலியின் வின்சி நகரில் உள்ள `ஆன்கியானோ' என்ற கிராமத்தில் 1452-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி `செர் பியரோ தா வின்சி - கத்தரீனா' இணையருக்குத் திருமணம் ஆகாமலேயே பிறந்தவர் லியோனார்டோ டா வின்சி.
Read 8 tweets
21 Oct
சுட்ட செங்கல்லால் வீடுகட்டிக் கொள்ளவும், மாடி கட்டவும், வீட்டுத் தோட்டத்தில் கிணறு வெட்டிக்கொள்ளவும் அக்காலத்தில் அரசர்களின் அனுமதி வேண்டும். அந்த அனுமதி பார்ப்பனர்களுக்கு மட்டுமே இயல்பாக வழங்கப்பட்டிருந்தது.
பார்ப்பனர்களின் தீட்டுக் கோட்பாட்டை அரண் செய்வதற்கும் பேணிக் கொள்வதற்கும் ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியாகக் கிணறுகள் இருப்பதனை இப்பொழுதும் பார்ப்பனத் தெருக்களில் (அக்கிரகாரங்களில்) காண இயலும். இந்த உரிமையினை அரசர்கள் மற்ற சாதியாருக்கு வழங்கவில்லை.
சாதிவாரியாக வீடுகட்டும் உரிமைகள் அரசர்களால்
வகுக்கப்பட்டிருந்ததை அறிய பல சான்றுகள் கிடைக்கின்றன. பழனிக்கருகிலுள்ள கீரனூர்க் கல்வெட்டு
பன்னிரண்டாம் நூற்றாண்டில் அப்பகுதியில் வாழ்ந்த
இடையர்களுக்கு அரசன் சில உரிமைகளை
வழங்கியதைக் குறிப்பிடுகிறது.
Read 9 tweets
20 Oct
அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் எல்லோரும், அமைதியான சமூகத்திற்கு ஒரு ஆபத்தாக தான் பார்க்கப்படுகிறார்கள். புராணக்கதைகளில் இருந்து இந்நாள் வரை இது தான் நடக்கிறது.
நெருப்பை திருடிய Prometheus, கேள்வி கேட்ட சாத்தான், சம உரிமை கோரிய லிலித் என்று கேள்வி கேட்பவர் எல்லோரும் ஒரு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறார்கள். சாத்தான் அவன் அகங்காரத்தால் வீழ்ந்ததாக சொல்லப்படுகிறது.
எது அகங்காரம்? தனக்கு சரி என்று பட்டதை கேட்பது அகங்காரமா? சம உரிமை கோரியது அகங்காரமா? உன் விருப்பத்தை என் மேல் திணிக்காதே என்பது அகங்காரமா?
Read 5 tweets
19 Oct
நவீன மனநல மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் ஆஸ்திரிய மருத்துவர் சிக்மண்ட் பிராய்ட், மனிதரின் மனம் பற்றிய ஆய்வுகளில் பல புரட்சிகரமான கோட்பாடுகளைக் கண்டு பிடித்து இருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்குமிக்க மற்றும் சர்ச்சைக்குரிய சிந்தனையாளர்களில் ஒருவர்.
சிக்மண்ட் பிராய்ட் வியன்னா பல்கலைக்கழகத்தில் 1881-ல் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். செரிப்ரல் பால்ஸி, அபேஸியா போன்ற மூளை பாதிப்புகள் தொடர்பாக வியன்னா பொது மருத்துவமனையில் 1895-ல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அங்கு பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.
தனியாக மருத்துவமனை தொடங்கி, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தார்.மனநோய்கள் குறித்த விளக்கங்கள், நோயாளி - மருத்துவர் உரையாடல் சிகிச்சை முறை ஆகியவை மூலம் மிகவும் பிரபலமடைந்தார். ஹிஸ்டீரியா குறித்து ஆராய்ந்தார்.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(