#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு ஈயும், தேனீயும் ஒரு நாள் வழியில் சந்தித்துக் கொண்டன. ஈ தேனீயிடம் நண்பா சாப்பிட்டு விட்டாயா என்று கேட்டது. அதற்கு தேனீ, இல்லை நண்பா அதற்காகத்தான் பூக்களைத் தேடிப் பறந்து கொண்டிருக்கிறேன் என்றது. தேனீயின் பதிலைக் கேட்ட ஈ விழுந்து விழுந்து சிரித்தது . பூமி
முழுக்க சுவையான உணவுகள் இறைந்து கிடக்க நீ பூக்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறாயே. உனக்குக் கண்களில் கோளாறா இல்லை புத்தியில் கோளாறா? அனுபவிக்க வேண்டிய இன்பங்கள் கண் முன்னே கொட்டிக் கிடக்க அரிதான விஷயத்தைத் தேடி இவ்வளது தூரம் அலைந்து கஷ்டப்படுகிற உன்னைப் பைத்தியம் என்றுதான் சொல்ல
வேண்டும் என்றது. தேனீ கோபப்படவில்லை அமைதியாய் கூறியது, உன் கண்களுக்கு இனிய உணவாகவும், இன்ப மயமாகவும் காட்சியளிக்கும் சகலமும் எனக்கு நாற்றம் பிடித்தவையாகவும், வெறுக்கத் தக்கவையாகவும் தோன்றுகிறதே. நான் சேமித்து வைக்கும் என் உணவு ஆண்டுகள் பல ஆனாலும் அதே சுவையோடு அப்படியே இருந்து பல
பேருக்குப் பயன்படும். ஆனால் உன் உணவு கொஞ்ச நேரத்திலேயே அழுகிப் புழுத்து அழிந்து போகும். அத்துடன் உன்னுடைய கூட்டம் மட்டுமே அந்த நாற்றத்தைத் தேடிப் போகும் என்றது. ஈ அதற்கு மேல் ஒன்றும் பேச முடியாமல் ஓடிப் போனது. பாவங்களை இன்பமாகக் கருதி வாழும் சில பிறவிகளின் கண்களுக்குப் பரந்தமான்
பக்தர்கள் கூட பைத்தியங்களாய்த் தோன்றுவது இயற்கைதான். சிற்றின்பம் ஈ தேடுவது, பேரின்பம் தேனி தேடுவது. அதனால் தான் அந்த இறைவனை அடையும் பேரின்பத்தை தேடிய நித்திய பரமஹம்சர்களின் வாழ்க்கையும், அவர்களின் வார்த்தைகளும் இன்றும் தேனாய் இனித்துக் கொண்டிருக்கிறன. பிரகலாதன் சொன்ன நாராயண
மந்திரம், அனுமன் உரைத்த ராம மந்திரம், ராமகிருஷ்ணர் கூறிய காளி மந்திரம், நாயன்மார்கள் கூறி சென்ற நமசிவாய மந்திரம் என காலத்தால் அழியாத வார்த்தையாக இன்றும் காற்றில் ஒலித்து கொண்டு இருக்கிறது. நாமும் தேனீயாக வாழ்வில் மலர மதிப்பு வாயிந்த பகவான் ஸ்ரீமந் நாராயணன் நாமம்சொல்லி மேன்மை
அடைவோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

1 Nov
#கோனேரிராஜபுரம் நடராஜரின் சிறப்பு.
சோழ மன்னன் ஒரு மிகச்சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்து பஞ்சலோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை, உயிரோட்டமாக 90 நாட்களுக்குள் வடித்துத் தர உத்தரவிட்டான் மன்னன். குறிப்பிட்ட நாட்களுக்குள் சிலையை வடிக்கவில்லை என்றால் தலையை துண்டித்து விடுவதாகவும் எச்சரித்தான்
சிவ பக்தரான அந்த சிற்பி, ஈசனை வணங்கி தனது பணியைத் தொடங்கினார். எவ்வளவு முறை செய்தாலும், அதில் ஏதேனும் ஒரு குறைபாடு ஏற்பட்டு, சிலையை சிற்பியால் வடிக்க முடியாமல் போனது. மன்னன் கூறிச் சென்ற கால அவகாசம் நெருங்க, நெருங்க சிற்பிக்கு கவலையும், ஆதங்கமும் ஏற்பட்டது. இறுதி முயற்சியாக ஒரு
நாள் சிற்பி கொதித்துக் கொண்டிருக்கும் உலோக கூழை (பஞ்சலோகத்தை) தான் செய்துள்ள அச்சில் ஊற்றுவதற்குத் தயாரானார். அப்போது சிவபெருமான் புலையன் உருவத்தில், கையில் நான்கு வேதங்களையும் நாய்களாக பிடித்துக் கொண்டு வந்தார். அவருடன் அம்பிகை தலையில் கள் குடத்தை சுமந்தபடி முருகப்பெருமானை சிறு
Read 10 tweets
1 Nov
#கோரக்கர் ஒரு சமுத்திரம். அவரின் குரு ஸ்ரீ #மச்சேந்திரநாதர் ஒருசமயம் சிவபெருமானும், பார்வதிதேவியும் கடற்கரை ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ராமதாரக மந்திரத்தின் பெருமையைச் சிவபெருமான் உமாதேவியாருக்கு உபதேசம் செய்தார். இதை மிகுந்த கவனத்துடன் ஒரு மீன்குஞ்சு கேட்டுக்
கொண்டிருந்தது. இந்த மகாமந்திரத்தை கேட்ட புண்ணியத்தால் அந்த மீன் குஞ்சு ஒரு மானிடனாக பிறந்தது. இவர் மீனாக இருந்து மானிட வடிவம் பெற்றவர் என்ற செய்தி மக்களுக்கு தெரிந்து இவரை மச்சேந்திரநாதர் என்று அழைக்கலாயினர். இவர் தோற்றத்திலும், செயல்களிலும் முனிவர் போல தோன்றினார். இறைவனின்
கருணையாலும், தோன்றும் போதே ராம தாரக மந்திர உபதேசம் பெற்றதாலும் ஞானதிருஷ்டி உடையவராக விளங்கினார். இறைவனது புகழைப் பாடியபடியே, பிச்சை எடுத்து உண்டு வந்தார், இரவில் இரண்டொரு வீடுகளில் நாராயணா என்பார், கிடைத்தால் உண்பார் இல்லாவிடில் இல்லை. பகலில் நகரங்களின் வழியாக செல்லாமல் வனங்களின்
Read 22 tweets
30 Oct
A Teacher from a blind school in Poonamallee near Madras brought the children for MahaSwamigal's darshan but unfortunately Sri Maha Periyava was on 'Mouna Vratham' (Vow of Silence) that day. The Teacher cried saying, "I have disappointed these children! Alas! These children have
no eyesight! They can't see Periyava! Only if a few words are spoken to them, they can hear them and be happy. Even if Periyava does not talk to us, we can have a darshan of Him and go away. What can these children do? It was an unexpected situation. Periyava came out from his
room and gestured to the teacher to stop his wailing. He asked for a wooden plank to be placed near the well and sat on it. His silence gave way. He called each and every child near Him, patiently inquired their name, place and the reason for the loss of vision, and blessed the
Read 6 tweets
30 Oct
மகா பெரியவர் ஒருமுறை பரமக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் பின்னாடியே ஓடி வந்தார் கிழவர் ஒருவர். வெயில் சுட்டெரிக்கும் நேரம். கிழவர் பின்தொடர்ந்து வரும் தகவல் அறிந்து, அவருக்காகவே நின்றார் பெரியவர். அவர் கரம்பக்குடியைச் சேர்ந்தவர் என்பது தெரிந்ததும்,
“நான் இத்தனை நாள் அங்கே தானே இருந்தேன். அங்கேயே பார்த்திருக்கலாமே எதற்கு இப்படிக் கஷ்டப்பட்டுக்கொண்டு என் பின்னால் வருகிறீர்கள்” என்று கேட்டார். நான் அங்கேயும் பார்த்தேன். அதனால்தான் உங்களைப் பிரிய மனமில்லாமல் ஓடி வர்றேன் என்றார் கிழவர்.
என்னையும் மடத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அருகிலேயே இருந்து உங்களையே பார்த்துக் கொண்டு, உங்களுக்குச் சேவகம் செய்யவேண்டும் என்று விரும்புகிறேன் என்று வேண்டிக் கொண்ட அந்தக் கிழவர் ஓர் இஸ்லாமியர்!
“என்னைப் பார்த்துக்கொண்டே இருக்கணும் என்றால் இருக்கும் இடத்திலிருந்து என்னை நினைத்துக் கொள்ளலாமே. உங்கள் நினைவில் நான் வந்தால்,
Read 8 tweets
30 Oct
அதே திருவள்ளுவர் தான்
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
(குறள்:30)
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
(குறள்:28)
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்                    
நின்றது மன்னவன் கோல்
(குறள்:543)
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்                          
பெருமிறை தானே தனக்கு
(குறள்:847)
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்               
ஆன்றாரோ டொப்பர் நிலத்து
(குறள்:413)
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று (குறள்:259)
அந்தணர் அறவோர் எனப்
படுவதும் அவர்கள் வேதம் ஓதுதலைச் செய்யும் ஒழுக்கம் உடையவர் என்பதும், இந்த அந்தணர், வேதம், அறம் இவை செழித்திருக்க மன்னவன் செங்கோல் சரியாக இருக்க வேண்டும் என்பதும் வள்ளுவரின் கூற்று.
மறைப்பொருளை உணராமல் இருப்பவன் தனக்குத் தானே கெடுதி செய்து கொள்கிறான் என்பதை வலியுறுத்திய வள்ளுவர்
Read 7 tweets
29 Oct
புதுடில்லி சுந்தரேசனுக்கு நடராஜப் பெருமானிடம் அளவில்லாத ஈடுபாடு. நடராஜ தத்துவம் அவருடைய அறிவுக்கு விருந்து என்றால், நடராஜர் சிலைகள் அவருடைய கண்களுக்கும், நெஞ்சத்துக்கும் விருந்து.
கோனேரிராஜபுரம் நடராஜர் சிலையில் என்ன சிறப்பு, திருவாலங்காட்டு நடராஜர் எப்படிப் பட்டவர், தில்லை
நடராஜத் திருமேனியின் தனித்தன்மை என்ன, உலகிலேயே பெரிய நடராஜர் நெய்வேலியின் தான் இருக்கிறது என்பது போன்ற ஏராளமான தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். ஆடிக்கொண்டே இருக்கும் தெய்வத்திடம் ஆராத பக்தி
கொண்ட சுந்தரேசனுக்கு, ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்கும் மகா பெரியவாளிடமும் அசைக்க
முடியாத பக்தி. ஒரு முறை அவரை தரிசிக்க வந்தவரிடம் மகாசுவாமிகள், "நீ மகிழஞ்சேரி நடராஜாவைப் பார்த்திருக்கியோ?” என்று கேட்டார். நடராஜரிடம் தனக்கு அந்தரங்கமான ஈடுபாடு என்பதை பெரியவாளிடம் சொன்னதில்லையே, பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது என்று பரவசப்பட்டு, இல்லை தரிசித்ததில்லை என்றார்.
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(