#கோனேரிராஜபுரம் நடராஜரின் சிறப்பு.
சோழ மன்னன் ஒரு மிகச்சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்து பஞ்சலோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை, உயிரோட்டமாக 90 நாட்களுக்குள் வடித்துத் தர உத்தரவிட்டான் மன்னன். குறிப்பிட்ட நாட்களுக்குள் சிலையை வடிக்கவில்லை என்றால் தலையை துண்டித்து விடுவதாகவும் எச்சரித்தான்
சிவ பக்தரான அந்த சிற்பி, ஈசனை வணங்கி தனது பணியைத் தொடங்கினார். எவ்வளவு முறை செய்தாலும், அதில் ஏதேனும் ஒரு குறைபாடு ஏற்பட்டு, சிலையை சிற்பியால் வடிக்க முடியாமல் போனது. மன்னன் கூறிச் சென்ற கால அவகாசம் நெருங்க, நெருங்க சிற்பிக்கு கவலையும், ஆதங்கமும் ஏற்பட்டது. இறுதி முயற்சியாக ஒரு
நாள் சிற்பி கொதித்துக் கொண்டிருக்கும் உலோக கூழை (பஞ்சலோகத்தை) தான் செய்துள்ள அச்சில் ஊற்றுவதற்குத் தயாரானார். அப்போது சிவபெருமான் புலையன் உருவத்தில், கையில் நான்கு வேதங்களையும் நாய்களாக பிடித்துக் கொண்டு வந்தார். அவருடன் அம்பிகை தலையில் கள் குடத்தை சுமந்தபடி முருகப்பெருமானை சிறு
குழந்தையாக இடுப்பில் ஏந்தியபடி தோன்றினாள். அவர்கள் இருவரும் வீடு வீடாகச் சென்று தண்ணீர் கேட்டார்கள். இழி குலத்தோர் எனக்கருதி அறியாமையால் அங்கிருந்தவர்கள் இறைவனுக்கு தண்ணீர் தர மறுத்தனர். சிவனும், அம்பிகையும் உலைக்களத்தில் கவலையுடன் அமர்ந்திருந்த சிற்பியிடம் வந்து தண்ணீர் கேட்டனர்
பரமன் சிலையை சரியாக செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்த சிற்பி, உலைக் களத்தில் ஏது தண்ணீர் வேண்டுமென்றால் உலோகக் கூழ் இருக்கிறது, குடியுங்கள் என்று அந்த தம்பதிகளிடம் நீட்டினார். அவர்களும் அதனை வாங்கிப் பருகிவிட்டனர். மறு நொடியே அந்த தம்பதிகள் நின்று கொண்டிருந்த இடத்தில்
நடராஜர் சிலையும், சிவகாமி அம்பாள் சிலையும் ஆக மாறிப்போனார்கள். அப்போது அங்கு வந்த மன்னன் சிலையைப் பார்த்தான். நடராஜரின் சிலையில் நகங்கள், உரோமங்கள் என உயிரோட்டமாக இருந்ததைக் கண்டதும் மன்னன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். இவ்வளவு அதி அற்புதமான சிலையை எவ்வாறு செய்ய முடிந்தது என்று
சிற்பியைக் கேட்டான். சிற்பியும் நடந்ததைக் கூறினார். சிற்பி பொய்யுரை கூறுவதாக நினைத்த மன்னன், அவரை வெட்ட வாளை ஓங்கினான். அப்போது வாள் சிலையின் காலில் பட, அதில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதே நேரம் மன்னனுக்கும் தொழுநோய் உண்டானது. தன் தவறை உணர்ந்த மன்னன், ஈசனிடமும், சிற்பியிடமும்
மன்னிப்பு கேட்டான். தன் நோய் குணமாக ஈசனிடம் பரிகாரமும் கேட்டான். ‘இவ்வூர் ஆலயத்தில் உள்ள வைத்தியநாத சுவாமியை 48 நாட்கள் பூஜித்தால் குணமடையலாம்’ என்று ஈசன் அருளினார். அதன்படி செய்து மன்னன் குணமடைந்தான். அந்த நடராஜர் விக்ரகத்தை பார்க்க வேண்டுமானால் அதை கோனேரி ராஜபுரத்தில் தான்
நீங்கள் பார்க்க வேண்டும். உலகத்திலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை இந்த ஊரில் தான் இருக்கிறது. அழகு என்றால் அழகு அப்படியொரு கொள்ளையழகு. சிற்ப கலை தெரிந்தவர்கள் மட்டுமல்ல, சிற்பக் கலைப்பற்றி தெரியாதவர்கள் கூட அருகே போய் நின்றார்கள் என்றால் அப்படியே பரவசமாகிவிடுவார்கள். கோனேரிராஜபுரம்
என்று அழைக்கப்படும் திருநல்லம் என்னும் ஊரில் உள்ள பாடல் பெற்ற தலம் தான் இந்த கோவில்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

1 Nov
#கோரக்கர் ஒரு சமுத்திரம். அவரின் குரு ஸ்ரீ #மச்சேந்திரநாதர் ஒருசமயம் சிவபெருமானும், பார்வதிதேவியும் கடற்கரை ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ராமதாரக மந்திரத்தின் பெருமையைச் சிவபெருமான் உமாதேவியாருக்கு உபதேசம் செய்தார். இதை மிகுந்த கவனத்துடன் ஒரு மீன்குஞ்சு கேட்டுக்
கொண்டிருந்தது. இந்த மகாமந்திரத்தை கேட்ட புண்ணியத்தால் அந்த மீன் குஞ்சு ஒரு மானிடனாக பிறந்தது. இவர் மீனாக இருந்து மானிட வடிவம் பெற்றவர் என்ற செய்தி மக்களுக்கு தெரிந்து இவரை மச்சேந்திரநாதர் என்று அழைக்கலாயினர். இவர் தோற்றத்திலும், செயல்களிலும் முனிவர் போல தோன்றினார். இறைவனின்
கருணையாலும், தோன்றும் போதே ராம தாரக மந்திர உபதேசம் பெற்றதாலும் ஞானதிருஷ்டி உடையவராக விளங்கினார். இறைவனது புகழைப் பாடியபடியே, பிச்சை எடுத்து உண்டு வந்தார், இரவில் இரண்டொரு வீடுகளில் நாராயணா என்பார், கிடைத்தால் உண்பார் இல்லாவிடில் இல்லை. பகலில் நகரங்களின் வழியாக செல்லாமல் வனங்களின்
Read 22 tweets
31 Oct
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு ஈயும், தேனீயும் ஒரு நாள் வழியில் சந்தித்துக் கொண்டன. ஈ தேனீயிடம் நண்பா சாப்பிட்டு விட்டாயா என்று கேட்டது. அதற்கு தேனீ, இல்லை நண்பா அதற்காகத்தான் பூக்களைத் தேடிப் பறந்து கொண்டிருக்கிறேன் என்றது. தேனீயின் பதிலைக் கேட்ட ஈ விழுந்து விழுந்து சிரித்தது . பூமி
முழுக்க சுவையான உணவுகள் இறைந்து கிடக்க நீ பூக்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறாயே. உனக்குக் கண்களில் கோளாறா இல்லை புத்தியில் கோளாறா? அனுபவிக்க வேண்டிய இன்பங்கள் கண் முன்னே கொட்டிக் கிடக்க அரிதான விஷயத்தைத் தேடி இவ்வளது தூரம் அலைந்து கஷ்டப்படுகிற உன்னைப் பைத்தியம் என்றுதான் சொல்ல
வேண்டும் என்றது. தேனீ கோபப்படவில்லை அமைதியாய் கூறியது, உன் கண்களுக்கு இனிய உணவாகவும், இன்ப மயமாகவும் காட்சியளிக்கும் சகலமும் எனக்கு நாற்றம் பிடித்தவையாகவும், வெறுக்கத் தக்கவையாகவும் தோன்றுகிறதே. நான் சேமித்து வைக்கும் என் உணவு ஆண்டுகள் பல ஆனாலும் அதே சுவையோடு அப்படியே இருந்து பல
Read 7 tweets
30 Oct
A Teacher from a blind school in Poonamallee near Madras brought the children for MahaSwamigal's darshan but unfortunately Sri Maha Periyava was on 'Mouna Vratham' (Vow of Silence) that day. The Teacher cried saying, "I have disappointed these children! Alas! These children have
no eyesight! They can't see Periyava! Only if a few words are spoken to them, they can hear them and be happy. Even if Periyava does not talk to us, we can have a darshan of Him and go away. What can these children do? It was an unexpected situation. Periyava came out from his
room and gestured to the teacher to stop his wailing. He asked for a wooden plank to be placed near the well and sat on it. His silence gave way. He called each and every child near Him, patiently inquired their name, place and the reason for the loss of vision, and blessed the
Read 6 tweets
30 Oct
மகா பெரியவர் ஒருமுறை பரமக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் பின்னாடியே ஓடி வந்தார் கிழவர் ஒருவர். வெயில் சுட்டெரிக்கும் நேரம். கிழவர் பின்தொடர்ந்து வரும் தகவல் அறிந்து, அவருக்காகவே நின்றார் பெரியவர். அவர் கரம்பக்குடியைச் சேர்ந்தவர் என்பது தெரிந்ததும்,
“நான் இத்தனை நாள் அங்கே தானே இருந்தேன். அங்கேயே பார்த்திருக்கலாமே எதற்கு இப்படிக் கஷ்டப்பட்டுக்கொண்டு என் பின்னால் வருகிறீர்கள்” என்று கேட்டார். நான் அங்கேயும் பார்த்தேன். அதனால்தான் உங்களைப் பிரிய மனமில்லாமல் ஓடி வர்றேன் என்றார் கிழவர்.
என்னையும் மடத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அருகிலேயே இருந்து உங்களையே பார்த்துக் கொண்டு, உங்களுக்குச் சேவகம் செய்யவேண்டும் என்று விரும்புகிறேன் என்று வேண்டிக் கொண்ட அந்தக் கிழவர் ஓர் இஸ்லாமியர்!
“என்னைப் பார்த்துக்கொண்டே இருக்கணும் என்றால் இருக்கும் இடத்திலிருந்து என்னை நினைத்துக் கொள்ளலாமே. உங்கள் நினைவில் நான் வந்தால்,
Read 8 tweets
30 Oct
அதே திருவள்ளுவர் தான்
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
(குறள்:30)
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
(குறள்:28)
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்                    
நின்றது மன்னவன் கோல்
(குறள்:543)
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்                          
பெருமிறை தானே தனக்கு
(குறள்:847)
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்               
ஆன்றாரோ டொப்பர் நிலத்து
(குறள்:413)
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று (குறள்:259)
அந்தணர் அறவோர் எனப்
படுவதும் அவர்கள் வேதம் ஓதுதலைச் செய்யும் ஒழுக்கம் உடையவர் என்பதும், இந்த அந்தணர், வேதம், அறம் இவை செழித்திருக்க மன்னவன் செங்கோல் சரியாக இருக்க வேண்டும் என்பதும் வள்ளுவரின் கூற்று.
மறைப்பொருளை உணராமல் இருப்பவன் தனக்குத் தானே கெடுதி செய்து கொள்கிறான் என்பதை வலியுறுத்திய வள்ளுவர்
Read 7 tweets
29 Oct
புதுடில்லி சுந்தரேசனுக்கு நடராஜப் பெருமானிடம் அளவில்லாத ஈடுபாடு. நடராஜ தத்துவம் அவருடைய அறிவுக்கு விருந்து என்றால், நடராஜர் சிலைகள் அவருடைய கண்களுக்கும், நெஞ்சத்துக்கும் விருந்து.
கோனேரிராஜபுரம் நடராஜர் சிலையில் என்ன சிறப்பு, திருவாலங்காட்டு நடராஜர் எப்படிப் பட்டவர், தில்லை
நடராஜத் திருமேனியின் தனித்தன்மை என்ன, உலகிலேயே பெரிய நடராஜர் நெய்வேலியின் தான் இருக்கிறது என்பது போன்ற ஏராளமான தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். ஆடிக்கொண்டே இருக்கும் தெய்வத்திடம் ஆராத பக்தி
கொண்ட சுந்தரேசனுக்கு, ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்கும் மகா பெரியவாளிடமும் அசைக்க
முடியாத பக்தி. ஒரு முறை அவரை தரிசிக்க வந்தவரிடம் மகாசுவாமிகள், "நீ மகிழஞ்சேரி நடராஜாவைப் பார்த்திருக்கியோ?” என்று கேட்டார். நடராஜரிடம் தனக்கு அந்தரங்கமான ஈடுபாடு என்பதை பெரியவாளிடம் சொன்னதில்லையே, பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது என்று பரவசப்பட்டு, இல்லை தரிசித்ததில்லை என்றார்.
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(