Elder மரம் (Sambucus nigra) Ireland, Scotland களில் அதிகமாக காணப்படும் ஒரு மரம். கிறிஸ்துவம் தழைத்தோங்கியபோது pagan நம்பிக்கைகள் பலவற்றை மறக்கடிக்க அவற்றை கிறிஸ்துவதுடன் தொடர்புப்படுத்தி கதைகளை இயற்றியது. Celtic mythology இல் elder மரம் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.
இது புனிதமாகவும் பேய்களை விரட்டவும் நோய்களை குணப்படுத்தவும் உபயோகப்படுத்தப்படுகிறது. Elder என்கிற பெயர் Anglo-Saxon மொழியில் இருந்து வருகிறது (aeld - நெருப்பு). இந்த மர கட்டைகள் எளிதில் பற்றிக்கொண்டு சீக்கிரம் எரிந்து விடும்.
எரியும் போது சடசடவென்றும் பாம்பு போல ஹிஸ் என்ற சத்தமும் வரும். இது சாத்தானின் குரல் என்று மக்கள் நம்புகின்றனர். Elder மரத்தை வெட்டுவது துரதிர்ஷ்டம் என்றும் அந்த கட்டையை எரிப்பது மரணத்தை வரவழைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இந்த Celtic கதையை சற்றே மாற்றி, இயேசுவை காட்டி குடுத்த Judas தூக்கு போட்டு தொங்கிய மரம் இதுதான் என்று கிறிஸ்துவர்கள் நம்புகிறார்கள். இது Judas tree என்று அழைக்கப்படுகிறது.
Harry Potter கதைகளிலும் இந்த மரம் வருகிறது. அதில் Antioch, Cadmus and Ignotus Peverell எனும் மூன்று சகோதரர்கள். இதில் Antioch மரணத்தை நேரில் சந்திக்கும்போது மரணத்திடம் தனக்கு ஒரு மந்திரக்கோல் வேண்டும் என்று கேட்கிறான்.
மரணம் elder மரத்தில் இருந்து ஒரு மந்திரக்கோலை செய்து இவனுக்கு தருகிறது. இந்த மந்திரக்கோலை வைத்து இருப்பவர்களுக்கு துரதிர்ஷ்டம் நேரும் என சொல்லப்படுகிறது. Harry Potter கதைகளில் இதற்கு ஒரு முக்கிய இடம் உண்டு. #மதங்கள்புராணங்கள்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அய்யா வைகுண்டர் கதை பலருக்கும் தெரிந்து இருக்கும். 1809 CE-ஆம் ஆண்டு தாமரைகுளம் என்ற ஊரில், பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் முடிசூடும் பெருமாள். இந்த பெயருக்கு மேல் சாதியில் இருந்து பலத்த எதிர்ப்பு வந்தால் முத்துக்குட்டி என மாற்றப்பட்டது.
சிறுவயதிலேயே பக்தி ஈடுபாடு அதிகம் முத்துக்குட்டிக்கு. பதினேழு வயதில் திருமணம். நிறைய தவங்கள் எல்லாம் செய்து வந்தார். இந்து மதத்தில் இருக்கும் சாதி கொடுமைகளை எதிர்த்தார். இவருக்கு ஐந்து சீடர்கள் உண்டு. பல சீர்திரு்தங்களை மதத்தில் கொண்டு வருகிறார்.
அவர் சமுதாயப் பார்வையில் ஒரு அற்புத சக்தி படைத்த மனிதராக அறியப்பபட்டார். மக்கள் மத்தியில் இவருக்கு செல்வாக்கு அதிகமானதால் திருவிதாங்கூர் மன்னன் இவரை கைது செய்கிறார்.2 June 1851 இல் இறந்து போகிறார். இவர் இறக்கவில்லை ஜோதியாக வைகுந்தம் சென்று விட்டார் என்கின்றனர்.
12 மற்றும் 30 வயதுக்கு இடைப்பட்ட இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை பற்றிய குறிப்புகள் பைபிளில் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இயேசு எங்கு சென்றிருக்கலாம் அல்லது என்ன செய்திருக்கலாம் என்று எழுதப்பட்ட பதிவுகள் எதுவும் இல்லை. பெரும்பாலும் செவிவழிக் கதைகள் தான் இருக்கின்றன.
இந்தியாவிற்கு வந்தார், பாரசீகம் போனார், அமெரிக்கா போனார், King Arthur ஐ பார்த்தார் இருவரும் நண்பர்கள் அந்த கடைசியாக இயேசு குடித்த cup, Holy Grail இவருகிட்ட தான் இருந்தது என்று பல கதைகள் இருக்கின்றன ஆனால் ஆதாரம் இருக்கின்றதா என்றால் இல்லை.
அப்படியானால் 30 வயதிற்கு முன் என்ன நடந்து இருக்கும்?
கிறிஸ்து பிறந்ததாக நம்பப்படும் இடம் பெத்லஹேம், ஆனால் அவரது குடும்பம் அங்கிருந்து வெளியேறி நாசரேத் நகரில் குடியேறியது. நாசரேத் ஒரு அமைதியான ஊர். மீன்பிடித்தல் விவசாயம் தான் தொழில்.
பூண்டு வெங்காயத்திற்கு இந்து மதத்திலும் நிறைய கதைகள் இருக்கின்றன. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து பெற்ற அமிர்தத்தை விஷ்ணு தேவர்களுக்கு வழங்கி கொண்டு இருந்தார். அப்போது ராகு என்னும் அசுரன் தேவர்கள் வரிசையில் நின்று அமிர்தத்தை வாயில் வாங்கினான்.
அதை பார்த்த சூரியனும் சந்திரனும் விஷ்ணுவிடம் சொல்ல விஷ்ணு சக்கரத்தால் ராகு தலையை வெட்டினார். அப்போது வந்த ரத்தம் பூமியில் பட்ட இடத்தில் முளைத்ததுதான் வெங்காயமும் பூண்டும். அமிருதம் கொஞ்சம் கலந்து இருந்ததால் சிறிதளவு நன்மை நமக்கு கிடைத்தாலும் அசுரர் ரத்தம் என்பதால் தீங்கு அதிகமாம்
பூண்டும் சரி வெங்காயமும் சரி சாப்பிட்டதும் வாயில் வாடை வந்தாலும் கூட அவற்றில் இருக்கும் allicin மூலக்கூறு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி Aphrodisiac ஆக செயல்படுகிறது. துறவிகள் sexual libido வை கட்டுக்குள் வைக்க இவை இரண்டையும் தவிர்க்கின்றனர்.
Christianity வளர துவங்கிய காலகட்டத்தில் pagan பெண் கடவுள்களின் மலர்கள் எல்லாம் Virgin Mary க்கு உரிதாக்கப்பட்டது. அதில் ஒன்று carnations. 13ஆம் நூற்றாண்டுக்கு பின் உள்ள எல்லா Virgin Mary படங்களிலும் carnations இருக்கும்.
நம்பிக்கைகளின்படி இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது கன்னி மரியாள் சிந்திய கண்ணீர் தான் carnations ஆக உருவெடுத்தது. அதில் இருந்து எப்படி ரோஜா காதலர்களுக்கு நடுவில் இருக்கும் காதலை அடையாளப்படுத்துகிறதோ அதே போல
carnations தாய்க்கும் பிள்ளைகளுக்கும் நடுவில் உள்ள அன்பை அடையாளப்படுத்துகிறது. Leonardo da Vinci யின் A Madonna and Child’ (Madonna of the Carnation) ஓவியத்தில் Mary ஆழ்ந்த யோசனையுடன் carnation மலரை குழந்தை ஏசுவிடம் நீட்டுவது போலவும்
ஏதோ அவன் மன ஆறுதலுக்கு கடவுளை கும்பிடுறான் அது இல்லைன்னு நிரூபிச்சு என்ன பண்ண போறீங்க அப்படின்னு கேக்கறாங்க. அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் கடவுள் நம்பிக்கையை வளர்த்து விடுகிறார்கள். எளிய மக்கள் சுரண்டப்படும்போது அடக்கப்படும்போது அவர்கள் அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்பது இல்லை.
மாறாக நம்ம தலையெழுத்து, போன ஜென்மத்துல செய்த பாவம், கடவுள் அவங்களை எல்லாம் கூலி கேட்பான் என்றெல்லாம் சொல்லி அதிகாரத்திற்கு அடங்கி போகிறார்கள்.
இந்த புராண பொய்கள், மூடநம்பிக்கைகள், கடவுள் இதெல்லாம் தகர்த்து எறியும்போதுதான் அதிகாரத்தை எதிர்த்து கேள்விகேட்கும் துணிவு பிறக்கும். at least ஒரு desperation நமக்கு யாரும் இல்ல சாமி பூதம் எதுவும் இல்லை நாம் தான் நம்மை பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் வரும். எதிர்த்து நிற்க தோணும்.
Serpentinite rock tectonic plate ல இருக்கு ஓகே. அது பாக்க பாம்பு மாதிரி இருக்கு ஓகே. அது தான் ஆதிசேஷன் அப்படீன்னா ஆதிசேஷன் அப்பா அம்மா காசிப முனிவர்-கத்ரு என்ன கல்லு? தங்கச்சி வாசுகி என்ன கல்லு? ஆதிசேஷன் மேல விஷ்ணு படுத்துக்கிட்டு இருப்பார் இல்லையா? அவரு என்ன கல்லு?
மஹாவிஷ்ணுவுக்குப் பாம்பு படுக்கை. அவர் உட்கார்ந்தால் அந்தப் பாம்பே சிம்மாசனமாகிவிடும். நடந்து போனாரானால் குடை பிடிக்கும் அப்படினு கதை இருக்கே அப்போ இந்த கல்லு குடை மாதிரி எங்கேயாவது பறந்து போறதை எதாவது ஆராய்ச்சி முடிவுகள் சொல்லுதா?
ஆதிசேஷப் பாம்பு பதஞ்ஜலி மஹரிஷியாக அவதாரம் செய்து நடராஜாவிடம் போய்ச் சேர்ந்தது அப்படின்னு புராணம் சொல்லுதே இந்த கல்லு எங்க எப்படி கைலாச மலைக்கு போச்சு என்று தகவல் இருக்கிறதா? சிதம்பரத்தில் வாசம் செய்துகொண்டு, நடராஜாவை சதா கால தரிசனம் பண்ணி, அவருடைய முக்கியமான இரண்டு பக்தர்களில்