12 மற்றும் 30 வயதுக்கு இடைப்பட்ட இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை பற்றிய குறிப்புகள் பைபிளில் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இயேசு எங்கு சென்றிருக்கலாம் அல்லது என்ன செய்திருக்கலாம் என்று எழுதப்பட்ட பதிவுகள் எதுவும் இல்லை. பெரும்பாலும் செவிவழிக் கதைகள் தான் இருக்கின்றன.
இந்தியாவிற்கு வந்தார், பாரசீகம் போனார், அமெரிக்கா போனார், King Arthur ஐ பார்த்தார் இருவரும் நண்பர்கள் அந்த கடைசியாக இயேசு குடித்த cup, Holy Grail இவருகிட்ட தான் இருந்தது என்று பல கதைகள் இருக்கின்றன ஆனால் ஆதாரம் இருக்கின்றதா என்றால் இல்லை.
அப்படியானால் 30 வயதிற்கு முன் என்ன நடந்து இருக்கும்?
கிறிஸ்து பிறந்ததாக நம்பப்படும் இடம் பெத்லஹேம், ஆனால் அவரது குடும்பம் அங்கிருந்து வெளியேறி நாசரேத் நகரில் குடியேறியது. நாசரேத் ஒரு அமைதியான ஊர். மீன்பிடித்தல் விவசாயம் தான் தொழில்.
Joseph, இயேசுவின் தந்தை ஒரு carpenter என்பதால் இவரும் அந்த வேலையையே செய்து கொண்டு இருந்து இருக்க கூடும். இல்லையென்றால் அருகில் இருக்கும் நகரங்களான செப்போரிஸில் (ரோமானியர்களால் உருவாக்கப்பட்ட விரிவான மொசைக் கலைப்படைப்புக்காக அறியப்பட்ட நகரம்.
வீடுகள் மற்றும் சுவர்களைக் கட்டுவதற்கான பல வாய்ப்புகளைக் கொண்ட நகரம்.) போன்ற இடத்தில் வேலைக்கு சென்று இருக்கலாம். செப்போரிஸில் வாழ்ந்த இளம் இயேசு Aramaic மொழியைப் பேசுவதன் மூலமும் படிக்கக் கற்றுக் கொள்வதன் மூலமும் உலகத்தைப் பற்றிய தனது ஆரம்ப அறிவைப் பெற்றிருக்கலாம்.
இயேசு ஜெப ஆலயத்திற்குள் சென்று தீர்க்கதரிசிகளின் சுருளிலிருந்து படித்ததாகக் இருக்கிறது. அப்படியானால் அவருக்கு படிக்கவும் எழுதவும் தெரிந்து இருக்கிறது. Torah, வேத புத்தகமும் நன்கு தெரிந்து இருக்கிறது.
இயேசுவின் வாழ்க்கை மற்றும் அவரது பதிவிடப்படாத பதினெட்டு ஆண்டுகள் பற்றிய மர்மமான உண்மைகளை (ஒரு மர்மமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை) Vatican வைத்திருப்பதாக பல ஆண்டுகளாக வதந்திகள் உள்ளன.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஒரு ரஷ்ய பயணி Nicolas Notovitch இந்தியாவில் உள்ள ஒரு மடாலயத்தில் இதை பற்றிய documents கண்டுபிடித்ததாகக் கூறினார். Ladakh வரை வந்த இயேசு அங்கு ஒரு புத்த மடலாயம் ஒன்றில் தங்கி இருந்ததாகவும், இசா என்று அழைக்கப்பட்டதாகவும் கதைகள் சொல்கிறார்.
German தத்துவவியலாளர் Max Muller, புத்த பிட்சுகள் ஏதோ விளையாட்டுகாக சொன்னதை Notovitch ரொம்ப serious ஆக எடுத்து கொண்டார் போல என்று கிண்டல் அடித்தார்.
பின் Notovitch சொன்ன Hemis monastery மடாலயத்தில் விசாரித்தபோது யாரும் இங்கே வரவில்லை என்றும் எந்த documents உம் இங்கு இயேசுவை பற்றி இல்லை என்றும் புத்த பிட்சுகள் சொல்லி இருக்கிறார்கள்.
இங்கிலாந்தை சேர்ந்த J. Archibald Douglas என்னும் பேராசிரியரும் Hemis monastery க்கு நேரில் சென்று ஆய்வு செய்து Notovitch சொன்ன எதுவும் நடக்கவில்லை என்றார்.
இப்படியாக நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் அதுல என்ன நடந்தது இருக்கும் என்று ஆளாளுக்கு ஒரு கதை விட்டாலும் எல்லாம் கதை தான்.
எதற்கும் prima-facie evidence இல்லை. என்னை கேட்டால் 30 வயதுக்கு முன்னர் வரை அவர் சாதாரண வாழ்வை வாழ்ந்து இருக்க கூடும். குறிப்பிடும்படியான விஷயங்கள் எதுவும் இருந்து இருக்காது.
இயேசு முதலில் கவனம் ஈர்த்தது அவர் பிரசங்கம் செய்ய தொடங்கிய போது தான்.
அப்போதுதான் மக்கள் ஆச்சரியப்பட்டு அவரை பார்க்கிறார்கள்
"இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி அவரைக் குறித்து இடறலடைந்தார்கள்." - மாற்கு 6:3
அவரு ஒரு தச்சராக வேலை பார்த்து கொண்டு இருந்தார். எழுத படிக்க கற்று கொண்டு வேத புத்தகத்தை படித்து அறிந்து இருக்க வேண்டும். Normal childhood பெருசா சொல்லிக்கிற மாதிரி எதுவும் இல்லை.
"அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகைமுறைமையின்படி எருசலேமுக்குப்போய், பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பி வருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது.
அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின்முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள். மூன்று நாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும்,
அவர்களை வினாவவும் கண்டார்கள். அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்." லூக்கா 2:42-47
12 வயசில் திருவிழாவுக்கு போய்ட்டு திரும்பும் போது வழக்கமாக பிள்ளைகள் காணாம போகிற மாதிரி காணாம போய் இருக்கிறார்.
தேடி பார்த்தா கோவிலில் அமர்ந்து விவாதம் செய்து கொண்டு இருந்து இருக்கிறார். படித்து தெரிந்து இருந்த வேதத்தை பற்றி பேசி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியிருக்கிறார். அந்த காலத்தில் படிக்கவும் விவாதிக்கவும் மதத்தை தவிர வேறு என்ன இருந்து இருக்கக்கூடும்?
"அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமும் இல்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது." ஏசாயா 53:2
பெரிதாக கவனிக்கப்படாத ஒரு ஆள் தான் இயேசு. Judas கூட அவரை முத்தமிட்டு தான் அடையாளம் காட்ட வேண்டி இருந்தது.
அவ்ளோ ஏன் இயேசு உயிர் பெற்று Mary Magdalene க்கு காட்சி அளிக்கும் போது அந்த அம்மா இவரை தோட்டகாரன் அப்படின்னு நினைச்சுகிட்டாங்க.
"இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி:
ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்." யோவான் 20:15
இயேசு (Yeshua) என்கிற பெயர் நம்ம ஊர் குமார் மாதிரி அந்த காலத்தில், அவர் இருந்த இடத்தில் ஒரு common name.
ஒரு 10 பேரை எடுத்தா அதுல ஒருத்தருக்கு இயேசு என்ற பெயர் இருக்கும். பைபிளில் கூட நிறைய இயேசு வருகிறார்கள். நீங்கள் யாரிடமாவது இயேசுவை பற்றி விசாரித்தால் எந்த இயேசு வடக்கு தெரு ஏசுவா? இல்ல தெற்கு தெரு ஏசுவா? என்று தான் கேட்டு இருப்பார்கள்.
ஆக இயேசுவின் சீடர்கள் அவரை பிரபலப்படுத்தும் முன் பெரிதாக அவரை பற்றி யாருக்கும் தெரிந்து இருக்கவில்லை. அவர் பிரசங்கம் செய்வதை பார்க்கும்போதே கூட மக்கள் இவன் மரியாளின் மகன் தச்சர் தானே என்று ஆச்சரியமாக பார்க்கிறார்கள். இவரது பெயரை கூட குறிப்பிடவில்லை.
சுஜாதாவும் அப்துல் காலமும் ஒரே வகுப்பில் படித்து இருந்தும் சுஜாதாவிடம் அப்துல் கலாமை பற்றி கேட்டபோது அவர் வகுப்பில் அமைதியாக இருப்பார் அவ்வளவு பழக்கமில்லை என்று தானே சொன்னார்.
ஏசுவும் அதே போல 30 வயதுக்கு முன் வரை அமைதியாக இப்படி ஒரு பிள்ளை நம்ம தெருவுலயா இருக்கு என்பது போல இருந்து இருக்கலாம். அப்படி இருந்தால் அவரை பற்றி சொல்லுவதர்க்கு என்ன இருந்து இருக்கும்? அப்படி குறிப்பிட்டு சொல்ல கூடிய ஒரே விஷயம் 12 வயசுல திருவிழாவுல காணாமல் போனது தான்.
அது போக இயேசுவை பற்றி எழுதியது அவரது சீடர்கள் மூலமாக செவி வழியாக பரவிய செய்திகளை கேட்டவர்கள் தான். இல்லை அவரது சீடர்கள் தான் என்று சொன்னாலும் அந்த சீடர்கள் அவரை 30 வயதுக்கு பின்னால் தான் சந்திக்கிறார்கள்.
அதற்கு முன் அவரது வாழ்வில் என்ன நடந்தது என்று அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இவர் எதாவது சொல்லி இருந்தால் தான் உண்டு. அவர் இறந்த பின் ரோம அரசுக்கு பயந்து எல்லாரும் ஓடி போனதால் விலாவரியாக 5 வயசில் என்ன செய்தார்? இட்லி சாப்பிட்டாரா? தோசை சாப்பிட்டாரா?
என்றெல்லாம் ஆராய்ந்து எழுதி இருக்க முடியாது. Constantine அதிகாரபூர்வ மதமாக கிறிஸ்துவத்தை அறிவிக்கும்போது 300 வருடங்கள் ஓடிவிட்டது. ஆகையால் இடைப்பட்ட காலத்தை பற்றிய குறிப்புகள் இல்லாமல் இருப்பது பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்த trinity concept இருக்கே அது குழப்பமான concept. யூதர்களை பொறுத்தவரை trinity concept கிடையாது அவர்களுக்கு ஒரே ஒரு கடவுள் தான். அதனால் தான் இறைவனின் மகன் என்னும் இயேசுவை அவர்கள் நிராகரிக்கிறார்கள். கடவுள் மனிதனுடன் தொடர்பு கொள்ள இறை தூதர்களை பயன்படுத்துகிறார்.
இறைத்தூதர்கள் கடவுளின் செய்தியை மனிதனுக்கு சொல்லுவார்கள். இறைத்தூதர்கள் மரியாதைக்குரியவர்கள் ஆனால் வழிபடக்கூட கூடாது. இறைவன் ஒருவனே வழிபட வேண்டியவன். இறைவன் மோசேஸ்க்கு குடுத்த 10 கட்டளைகளில் முதல் 3 கட்டளைகள் என்னை தவிர வேறு யாரையும் வழிபட கூடாது என்பது தான்.
கிறிஸ்தவர்கள் ஒரு குழப்பமான concept வச்சு இருக்காங்க. இயேசு இறைவனின் மகன் ஆனால் அவர்தான் இறைவன். இறைவன் மூன்று பரிணாமமாக இருக்கிறார். தேவன், மகன், பரிசுத்த ஆவி. இவை மூன்றும் ஒன்று ஆனால் வேறு வேறு. கடவுள் ஒருவர் ஆனால் 3 பரிணாமமாக இருக்கிறார்.
Flavius Josephus ( 37 CE– c. 100) கிறிஸ்து இறந்தபின் 4 வருடங்கள் கழித்து ஜெருசலேமில் பிறக்கிறார். அவர் எழுதிய புத்தகத்தில் இயேசுவை பற்றி இரண்டே இடத்தில தான் வருகிறது. ஒரு மனிதன் இறந்து மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து நான் தான் கடவுள் என்று சொன்னால்
அதை இவ்வளவு எளிதாகவா கடந்து போவார்கள்? அதுவும் Pontius Pilate (யேசுவிற்கு தண்டனை வழங்கியவர்) பற்றி பேசும்போது இயேசுவை பற்றி சொல்லி கடந்து செல்கிறார் (Antiquities 18:63). அதாவது இப்படி இப்படி பேசிக்கிறாங்க சொல்றாங்க என்பது போல.
அவரது புத்தகம் முழுவதிலும் பலரை பற்றி விலாவரியாக எழுதி இருக்கும் Flavius Josephus இயேசுவை பற்றி எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் போகிற போக்கில் ஊருல இப்படி பேசிக்கிறாங்க என்பது போல கடந்து போகிறார்.
அய்யா வைகுண்டர் கதை பலருக்கும் தெரிந்து இருக்கும். 1809 CE-ஆம் ஆண்டு தாமரைகுளம் என்ற ஊரில், பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் முடிசூடும் பெருமாள். இந்த பெயருக்கு மேல் சாதியில் இருந்து பலத்த எதிர்ப்பு வந்தால் முத்துக்குட்டி என மாற்றப்பட்டது.
சிறுவயதிலேயே பக்தி ஈடுபாடு அதிகம் முத்துக்குட்டிக்கு. பதினேழு வயதில் திருமணம். நிறைய தவங்கள் எல்லாம் செய்து வந்தார். இந்து மதத்தில் இருக்கும் சாதி கொடுமைகளை எதிர்த்தார். இவருக்கு ஐந்து சீடர்கள் உண்டு. பல சீர்திரு்தங்களை மதத்தில் கொண்டு வருகிறார்.
அவர் சமுதாயப் பார்வையில் ஒரு அற்புத சக்தி படைத்த மனிதராக அறியப்பபட்டார். மக்கள் மத்தியில் இவருக்கு செல்வாக்கு அதிகமானதால் திருவிதாங்கூர் மன்னன் இவரை கைது செய்கிறார்.2 June 1851 இல் இறந்து போகிறார். இவர் இறக்கவில்லை ஜோதியாக வைகுந்தம் சென்று விட்டார் என்கின்றனர்.
பூண்டு வெங்காயத்திற்கு இந்து மதத்திலும் நிறைய கதைகள் இருக்கின்றன. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து பெற்ற அமிர்தத்தை விஷ்ணு தேவர்களுக்கு வழங்கி கொண்டு இருந்தார். அப்போது ராகு என்னும் அசுரன் தேவர்கள் வரிசையில் நின்று அமிர்தத்தை வாயில் வாங்கினான்.
அதை பார்த்த சூரியனும் சந்திரனும் விஷ்ணுவிடம் சொல்ல விஷ்ணு சக்கரத்தால் ராகு தலையை வெட்டினார். அப்போது வந்த ரத்தம் பூமியில் பட்ட இடத்தில் முளைத்ததுதான் வெங்காயமும் பூண்டும். அமிருதம் கொஞ்சம் கலந்து இருந்ததால் சிறிதளவு நன்மை நமக்கு கிடைத்தாலும் அசுரர் ரத்தம் என்பதால் தீங்கு அதிகமாம்
பூண்டும் சரி வெங்காயமும் சரி சாப்பிட்டதும் வாயில் வாடை வந்தாலும் கூட அவற்றில் இருக்கும் allicin மூலக்கூறு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி Aphrodisiac ஆக செயல்படுகிறது. துறவிகள் sexual libido வை கட்டுக்குள் வைக்க இவை இரண்டையும் தவிர்க்கின்றனர்.
Elder மரம் (Sambucus nigra) Ireland, Scotland களில் அதிகமாக காணப்படும் ஒரு மரம். கிறிஸ்துவம் தழைத்தோங்கியபோது pagan நம்பிக்கைகள் பலவற்றை மறக்கடிக்க அவற்றை கிறிஸ்துவதுடன் தொடர்புப்படுத்தி கதைகளை இயற்றியது. Celtic mythology இல் elder மரம் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.
இது புனிதமாகவும் பேய்களை விரட்டவும் நோய்களை குணப்படுத்தவும் உபயோகப்படுத்தப்படுகிறது. Elder என்கிற பெயர் Anglo-Saxon மொழியில் இருந்து வருகிறது (aeld - நெருப்பு). இந்த மர கட்டைகள் எளிதில் பற்றிக்கொண்டு சீக்கிரம் எரிந்து விடும்.
எரியும் போது சடசடவென்றும் பாம்பு போல ஹிஸ் என்ற சத்தமும் வரும். இது சாத்தானின் குரல் என்று மக்கள் நம்புகின்றனர். Elder மரத்தை வெட்டுவது துரதிர்ஷ்டம் என்றும் அந்த கட்டையை எரிப்பது மரணத்தை வரவழைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
Christianity வளர துவங்கிய காலகட்டத்தில் pagan பெண் கடவுள்களின் மலர்கள் எல்லாம் Virgin Mary க்கு உரிதாக்கப்பட்டது. அதில் ஒன்று carnations. 13ஆம் நூற்றாண்டுக்கு பின் உள்ள எல்லா Virgin Mary படங்களிலும் carnations இருக்கும்.
நம்பிக்கைகளின்படி இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது கன்னி மரியாள் சிந்திய கண்ணீர் தான் carnations ஆக உருவெடுத்தது. அதில் இருந்து எப்படி ரோஜா காதலர்களுக்கு நடுவில் இருக்கும் காதலை அடையாளப்படுத்துகிறதோ அதே போல
carnations தாய்க்கும் பிள்ளைகளுக்கும் நடுவில் உள்ள அன்பை அடையாளப்படுத்துகிறது. Leonardo da Vinci யின் A Madonna and Child’ (Madonna of the Carnation) ஓவியத்தில் Mary ஆழ்ந்த யோசனையுடன் carnation மலரை குழந்தை ஏசுவிடம் நீட்டுவது போலவும்