#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் அழகிய குளம். அந்த குளத்திற்கு அருகில் ஒரு மரப்பொந்து ஒன்று இருந்தது. அந்த மரப்பொந்தில் சுண்டெலி ஒன்று வசித்து வந்தது. அந்த சுண்டெலிக்கு குளத்தில் வசித்த தவளையுடன் நட்பு ஏற்பட்டது. தினமும் அந்த தவளையும் எலியும் சந்திப்பது வழக்கம். ஒரு நாள் எலி, தவளை நீரில்
விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தது. உடனே எலி தவளையிடம், எனக்கும் நீச்சல் கற்றுத் தர முடியுமா என்று கேட்டது. தவளையும், நாளை உனக்கு நீச்சல் நான் கற்றுத் தருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றது. அடுத்தநாள் சுண்டெலிக்கு நீச்சல் கற்றுத்தருவதாக கூறிய தவளை தன்னுடடைய காலை எலியின் காலுடன்
சேர்த்து ஒரு கைற்றினால் கட்டிக்கொண்டது. அப்போது மேலே பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று இவைகளைப் பார்த்து தாக்க வந்தது. உடனே தவளை தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது. தண்ணீரில் மூழ்கிய சுண்டெலி மூச்சு திணறி இறந்து போனது. அதன் உடல் மேலே மிதந்த போதும்
அதனுடைய கால்கள் தவளையுடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது. அந்த சமயம் தண்ணீரின் மீது சுண்டெலி செத்து மிதந்ததைக் கண்ட கழுகு கீழ் நோக்கி வந்து அந்த எலியைக் கொத்திக் கொண்டு உயரே பறந்தது. அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த தவளையும் பருந்தின் பிடியில் சிக்கியது. இரண்டு
விருந்து கிடைத்த சந்தோசத்தில் பருந்தானது தவளையையும் கொன்று தின்றது. நாம் ஒருவரை நண்பராக ஏற்றுக்கொள்வதற்கு முன் அதற்கு அவர்கள் தகுதியானவரா என்று யோசிக்கவேண்டும். நம் உயிர் இந்த உலகை விட்டு பிரியும் போது எல்லாம் விட்டு செல்கிறோம், ஓடி ஓடி தேடிய பணம், புகழ், சொந்தம், உறவினர்கள்
என எல்லாம் விட்டு செல்கிறோம். நாம் பரந்தாமனை இதயத்தில் நிறுத்தி அவரை நண்பராக/குருவாக ஏற்றுக்கொண்டு அனுதினமும் நம் வாழ்க்கை சக்கரம் சுழற்றுவோம், அனைத்தும் ஸ்ரீமந் நாராயணன் செயல் என்போம், இல்லையேல் சுண்டெலிக்கும் தவளைக்கும் நேர்ந்த கதிதான் நமக்கும் ஏற்படும். எத்தனையோ
எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் என்ற ஏக்க பெருங்கடலில் சிக்கி மீண்டும் மீண்டும் பிறவிகளை தவிர்ப்போம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தட்சிணாமூர்த்தி என்பவர் வேறு. குரு பகவான் என்பவர் வேறு. பலரும் இருவரையும் ஒருவராக நினைத்து வழிபடுகின்றனர். தட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அவை:
தட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர். தெற்கு நோக்கி கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு
அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர். இவர் எப்போது தியானத்தில் ஆழ்ந்திருப்பார். தட்சிணாமூர்த்தி என்பவர் ஞான குரு. ஆதி குரு என்றும் அழைக்கப்படுபவர்.அவருக்கு விருப்பமான நிறம் வெண்மை.
நவகிரகங்கள் என்பது இறைவன் இட்ட கட்டளையை,
கடமையைச் செய்யக் கூடிய ஒன்பது கோள்களாகும். அவற்றில் ஒருவர் தான் #குருபகவான் எனும் ப்ரஹஸ்பதி. இவர் தேவர்களுக்கு ஆசிரியர். ஆசிரியர் தொழிலைச் செய்வதால் இவர் குரு என அழைக்கப்படுகிறார். நவகோள்களில் 5 ஆம் இடத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து, வியாழனாக இருந்து உயிர்களுக்கு முன்ஜென்மங்களில்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் எப்பொழுதும் தன்னந்தனியாக வேட்டையாடுவதை விருப்பமாக கொண்ட அரசன் கஜேந்திரன் வழிதவறி காட்டுக்குள் வெகுதூரம் சென்றுவிட்டான். காட்டில் முனிவர் ஒருவர் குடில் அமைத்து தங்கி இருப்பதை கண்டு அன்று இரவுப் பொழுதை அங்கேயே கழிக்கலாம் என்று முனிவரிடம் தங்க அனுமதி கேட்டான்.
முனிவரும் தாராளமாக தங்கி கொள்ளுங்கள் அரசே என கூறினார். இருவரும் அந்த சிறிய குடிலில் தூங்க ஆரம்பித்தனர்.
முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த இரவில் குடிலைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அரசரால் தூங்கவே முடியவில்லை. அவர் அன்று முழுவதும் வேட்டையாடி களைத்து இருந்தார். மறுநாளும்
அலைச்சல் இருக்கிறது.
அதை நினைக்க நினைக்க அரசருக்குக் கோபம் அதிகமானது. நாய்களோ வெறித்தனமாகக் குரைத்து இரவின் அமைதியைக் கெடுத்தன. இத்தனைக்கும் மத்தியில் முனிவர் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பிய அரசர் கஜேந்திரன், என்ன மனிதர் அய்யா நீங்கள்? இவ்வளவு சத்தத்துக்கு
சீதையும் பூமிக்குள் மறைந்து லக்ஷ்மணனும் சரயுவில் இறங்கிய பின் ஜனகரின் மனைவி சுனயனா அந்த துக்கத்தில் இருந்த போது இன்னுமொரு அதிர்ச்சியை தாங்கிய செய்தி அயோத்தியில் இருந்து மிதிலை வந்தடைந்தது. ராமனும் பரதனும், சத்ருக்கனனும் சரயு நதியில் இறங்கி சித்தி அடையப் போகிறார்கள் என்பதே அது.
‘ராமனும், பரதனும், சத்துருக்கனனும் சித்தி அடையும் நாளில் நாமும் அயோத்தியில் இருப்பது நல்லது. கணவரை இழந்து நம் புதல்விகள் உணர்ச்சிவசப்பட்டு அழுவார்கள். நேரில் சென்று ஆறுதல் கூற வேண்டியது நம் கடமை’ என முகத்தில் சாந்தி தவழச் சொன்னார் ஜனகர். தன் கணவர் ஜனகர் எதற்கும் எப்போதும்
பதற்றப்படமாட்டார் என்பதை சுனயனா அறிவாள். அவர்கள் இருவரும் நேரே தேரில் சரயு நதிக்கரைக்குச் சென்றனர். நதியின் கரையில் ராமனும் பரதனும் சத்ருக்கனனும் தங்கள் மாமனார் மாமியாரின் வரவுக்காக காத்திருந்தார்கள். மூவர் முகத்திலும் தாங்கள் சித்தி அடைய முடிவேடுத்துள்ளதைப் பற்றி எந்த சலனமும்
I want to share this beautiful story on what is Dharmam. It really touched me.
இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கு மேலாகிறது. மகா பெரியவா மீது அளவற்ற பக்தி கொண்ட ஒரு முதியவர், இறக்கும் தருவாயில், தன் மகனை அருகே அழைத்துப் பல விவரங்களைச் சொன்னார். கடைசியாகத் தான் ரூ.100
ஒருவரிடம் கடன் பட்டதாகவும், அதை மகன் தான் திருப்பித் தரவேண்டும் என்று சொல்லியபின் உயிர் துறக்கிறார். அப்போது மகனுக்கு 62 வயது. கிராமத்தில் கர்ணம் வேலை பார்த்தவர். அவருக்கு சம்பளம் ₹15 ரூபாய். தனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, மூன்று வருடங்கள் சிரமப்பட்டு ₹100
சேர்த்து விட்டார். ஆனால் தந்தைக்குக் கடன் கொடுத்தவர் யாரென்றே தெரியாத நிலை. சேமித்து வைத்த பணத்தை எங்கே கொண்டு போய்த் தருவது? காஞ்சி மகானின் பரம பக்தரான தனது தந்தையின் கடன் விவகாரம், ஒருவேளை மகானுக்குத் தெரிந்திருக்குமோ என்று காஞ்சி வந்த அவர், மகானிடம் விவரத்தைச் சொல்கிறார். ஒரு
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் தினமும் காலையில் ஒரு அந்தணரின் வீட்டு திண்ணையில் அமர்ந்து ஸ்ரீனிவாசர் என்பவர் கிருஷ்ணனின் பாகவத கதையை உபன்யாசம் செய்து வந்தார். அவ்வூரில் உள்ள அனைவரும் கேட்டு ரசித்து வந்தனர். அவ்வூரின் தலைவரும் அதை விருப்பத்துடன் கேட்டு ரசித்து வந்தார். ஒரு நாள் கிருஷ்ணனும்
பலராமனும் பசுக்களை மேய்த்த கதையை கூறி உபன்யாசம் செய்தார். கிருஷ்ணன் கழுத்தில் உள்ள பொன் நகைகள் பலராமன் கழுத்தில் உள்ள பொன் நகைகள் பற்றியும் அழகாக வர்ணித்து அன்றைய உபன்யாசத்தை முடித்து கிளம்பினார். சிறிது தூரம் நடந்திருப்பார் ஹோய் சற்று நில்லும் என்று குரல் ஒரு மரத்தின் மறைவில்
இருந்து வந்தது. ஸ்ரீனிவாசரும் நின்று அழைத்தது யார் என்று பார்த்தார். கையில் கத்தியுடனும் ஒட்டிய வயிறுடனும் திருடன் ஒருவன் நின்றிருந்தான். ஸ்ரீனிவாசர் அதிர்ச்சியாகி ஓட, திருடன் அவரை பிடித்து மரத்தின் மறைவுக்கு அழைத்து சென்று அவரின் கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போடாமல் நான்
#நரசிம்மர்_குடைவரை_கோவில்
இந்தியாவில் சிறந்து விளங்கும் குடவரைக் கோவில், மும்மூர்த்தி தலம் என்ற சிறப்பினை உடைய இத்திருக்கோவிலில் ஈருயிர் ஓர் உடலாக சங்கர நாராயணனாக, பரந்தாமன் காட்சி தரும் அழகிய திருக்கோலம் சைவ வைணவ பேதம் போக்குகிறது. மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம
அவதாரத்தை தரிசிக்க இயலாத மகாலட்சுமி பெருமாளிடத்தில் அவரின் நரசிம்ம அவதாரத்தை தான் தரிசிக்க ஒரு வழி கேட்டார். அதற்கு அவர், ஸ்ரீசைலம் எனும் ஷேத்ரத்தில் கமலாலய குளத்தில் அமர்ந்து அஷ்டக்ஷரமாகிய திருஎட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து அதன் பலனாக தன் நரசிம்ம கோலத்தை தரிசிப்பாய் என்றார்.
அதன்படி மகாலட்சுமி கமல மலர்கள் நிறைந்திருந்த கமல வனத்தினில் ‘கமலாலயம்’ என்னும் குளத்தில் நரசிம்ம மூர்த்தியை நினைத்து கடுந்தவம் புரிந்தாள்.
இந்த சமயத்தில் திரேதாயுகத்தில் ராமராவண யுத்தத்தில் மூர்ச்சையான லக்ஷ்மணனின் மயக்கத்தை தெளிய வைப்பதற்காக சஞ்சீவி பர்வதத்தை ஆஞ்சநேயர் எடுத்து