சீதையும் பூமிக்குள் மறைந்து லக்‌ஷ்மணனும் சரயுவில் இறங்கிய பின் ஜனகரின் மனைவி சுனயனா அந்த துக்கத்தில் இருந்த போது இன்னுமொரு அதிர்ச்சியை தாங்கிய செய்தி அயோத்தியில் இருந்து மிதிலை வந்தடைந்தது. ராமனும் பரதனும், சத்ருக்கனனும் சரயு நதியில் இறங்கி சித்தி அடையப் போகிறார்கள் என்பதே அது.
‘ராமனும், பரதனும், சத்துருக்கனனும் சித்தி அடையும் நாளில் நாமும் அயோத்தியில் இருப்பது நல்லது. கணவரை இழந்து நம் புதல்விகள் உணர்ச்சிவசப்பட்டு அழுவார்கள். நேரில் சென்று ஆறுதல் கூற வேண்டியது நம் கடமை’ என முகத்தில் சாந்தி தவழச் சொன்னார் ஜனகர். தன் கணவர் ஜனகர் எதற்கும் எப்போதும்
பதற்றப்படமாட்டார் என்பதை சுனயனா அறிவாள். அவர்கள் இருவரும் நேரே தேரில் சரயு நதிக்கரைக்குச் சென்றனர். நதியின் கரையில் ராமனும் பரதனும் சத்ருக்கனனும் தங்கள் மாமனார் மாமியாரின் வரவுக்காக காத்திருந்தார்கள். மூவர் முகத்திலும் தாங்கள் சித்தி அடைய முடிவேடுத்துள்ளதைப் பற்றி எந்த சலனமும்
இல்லை. அவர்கள் மரியாதை நிமித்தம் தங்கள் மாமனார் ஜனகரை வணங்கினார்கள். பின்னர் சுனயனாவிடமும் ஆசிபெற்ற அவர்கள் மெல்ல நடந்தார்கள். பரதன், சத்ருக்கனன் இருவரும் மாண்டவியிடமும் சுருதகீர்த்தியிடமும் விடை பெற்றுக் கொண்டார்கள். மக்கள் வியப்போடும் கலவரத்தோடும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே
அவர்கள் மூவரும் ஒன்றாக சரயு நதியின் பெருகிய வெள்ளத்தில் இறங்கி அதன் ஓட்டத்தோடு சேர்ந்து வெள்ளத்திலேயே மெல்ல மெல்ல நடக்கலானார்கள். சிறிது நேரத்தில் வெள்ளம் அவர்கள் தலைக்குமேல் ஓடத்தொடங்கியது. தலைக்குமேல் வெள்ளம் போய்விட்டதை உணர்ந்த மக்கள் “ராமா ராமா” என உணர்ச்சிப் பொங்க உரக்க
கத்தினார்கள். ஊர்மிளை, மாண்டவி, சுருதகீர்த்தி மூவரிடமிருந்தும் பெரிய விம்மல்கள் வெடித்தெழுந்தன. அவர்கள் தங்கள் தாயைக் கட்டிக் கொண்டார்கள். தாய் சுனயனா அவர்கள் மூவரின் தோள்களையும் தட்டி தன்னால் இயன்ற அளவு அமைதிப் படுத்த முயன்றாள். அவள் விழிகளிலிருந்தும் கண்ணீர் இடைவிடாமல் வழியத்
தொடங்கியது. ஆனால் ஜனகர் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. ஊர்மிளை வியப்போடு கேட்டாள், “தந்தையே ! ஸ்ரீராமர் நம்மைவிட்டு நிரந்தரமாய் பிரிந்துவிட்டாரே, இனி நாம் அறத்தின் திருவுருவாக விளங்கிய அந்த அற்புதமான மனிதரைப் பார்க்கவே இயலாதே. உங்களுக்கு வருத்தமாக இல்லையா?” ஜனகர் முகத்தில் ஒரு
மெல்லிய புன்முறுவல் இழையோடியது. மாண்டவி, சுருதகீர்த்தி இருவரும் விழிகளைத் துடைத்துக் கொண்டு தங்கள் தந்தை சொல்லப் போகும் பதிலுக்காக அவர் முகத்தையே கூர்மையாகப் பார்த்தவாறு இருந்தார்கள். பொதுமக்கள் கூட ஜனகரின் பதிலை எதிர்ப் பார்த்துக் காத்திருந்தார்கள். ஜனகர் சாந்தம் தவழும்
முகத்துடன் இனிய குரலில் பரிவு பொங்கச் சொன்னார், “மனித உடல் என்பது உறை, ஆன்மா என்பது அந்த உறையிலிருக்கும் வாள். உடலுக்குத் தான் அழிவுண்டே தவிர ஆன்மாவுக்கு அழிவு கிடையாது. உடல் பயன்படாத நிலை தோன்றுமானால் இறைச் சக்தி உடல் என்ற உறையிலிருக்கும் வாளை உருவித் தன் கையில் வைத்துக்
கொள்கிறது. வாழ்க்கை அநித்தியமானதுதான். பிறக்கும்போதே இறப்பும் உறுதி செய்யப்பட்டு விடுகிறது. எந்த நாள் என்பது வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எல்லோரும் ஒருநாள் இறக்கப் போவது உறுதி. இதை என் மாப்பிள்ளைகள் உணர்ந்து விட்டார்கள். இந்தப் பிறவியில் நிறைவடைந்து விட்டார்கள்.
தாங்கள் வந்த கடமை முடிந்துவிட்டதை உணர்ந்து கொண்டு அதனால் தாங்களே விரும்பி சித்தி அடைந்து விட்டார்கள். ஆனால் அவர்களுக்கு மரணமென்பது இல்லை. என் மாப்பிள்ளைகள் நால்வரும் என் வளர்ப்பு மகள் சீதையும் தெய்வ வடிவங்களே என்ற பரம இரகசியத்தை நான் முன்பே அறிவேன். அவர்கள் மண்ணுலகில் மானிடர்களாக
வசிக்கும்போது அந்த ரகசியத்தை வெளிப்படுத்த எனக்கு உரிமை வழங்கப்படவில்லை. இப்போது அவர்கள் விண்ணுலகம் சென்று விட்டதால் நான் அதைப் பகிரங்கப்படுத்தலாம்.” சுனயனா வியப்போடு கேட்டாள், ‘அப்படியானால் நம் மாப்பிள்ளைகள் தெய்வங்களா? என் செல்ல வளர்ப்பு மகள் தெய்வமேதானா?’
‘ஆமாம். ஒன்றை யோசி.
அவர்கள் தெய்வங்களாய் இல்லாவிட்டால் இத்தனை துன்பங்களை எப்படிச் சாந்தமாகத் தாங்கியிருக்க முடியும்? மானிடர்கள் அறநெறியில் வாழவேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே திருமால் இவ்விதம் அவதாரமெடுத்து வந்தார். அவதார நோக்கமும் காலமும் பூர்த்தியடைந்து விட்டதால் தெய்வங்கள் விண்ணுலகிற்கு சென்று
விட்டன. ஆனால் மண்ணிலும் அவர்கள் சக்தி நிரந்தரமாய்க் குடியிருக்கும். அவர்களை பிரார்த்தித்தால் அந்த பிரார்த்தனைகள் நிறைவேறும். இனி அவர்களுக்கு ஊர்கள் தோறும் ஆலயங்கள் எழும். அந்த ஆலயங்களில் உள்ள விக்கிரகங்களில் அவர்களின் அருள் சக்தி குடி கொள்ளும்.’
‘இதெல்லாம் உண்மைதானா? இதற்கு
உங்களால் சாட்சி காட்ட முடியுமா?’
‘சாட்சி என்ன, என் தெய்வம் ராமன் திருவருளால் உங்களுக்கு ராமனையே நேரில் காட்டுகிறேன். எல்லோரும் அண்ணாந்து ஆகாயத்தை பாருங்கள்!’ ஜனகர் ஒரு கட்டளைபோல் இந்த வாக்கியத்தை கூறினார். பிரமிப்போடு அனைவரும் அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்கள். வானில் சடாரென
மேகங்கள் விலகி ராமபிரானும் சீதா தேவியும் லட்சுமணனும் பரத சத்துருக்கனர்களும் வலக்கரம் உயர்த்தி அனைவருக்கும் ஆசி கூறினார்கள். எல்லோரும் அவர்களைத் தரிசித்துக் கொண்டிருக்கும்போதே விந்தையான பல சம்பவங்கள் நிகழ்ந்தன. லட்சுமணன் உடல் ஒரு கனத்தில் ஆதி சேஷனாக மாறியது. ராமன் திருமாலாய் மாறி
அந்தப் பாம்பணையில் பள்ளி கொண்டான். மறுகணம் பரத சத்துருக்கனர்கள் சங்கு சக்கரங்களாக மாறி திருமாலின் கரங்களில் பொருத்திக் கொண்டார்கள். ஜனகரின் வளர்ப்பு மகளான சீதை இப்போது லட்சுமி தேவியாக விண்மகளானாள். அவள் திருமாலின் பாதங்களைப் பிரியமாய்ப் பிடித்துவிடத் தொடங்கினாள். மெல்ல மெல்ல
அந்த காட்சி மறைந்தது. மேகங்கள் மீண்டும் வைகுண்டத்திற்குத் திரையிட்டன. மக்களனைவரும் அளவற்ற மகிழ்ச்சியோடு ‘ஜெய் ஸ்ரீராம்‘ என உரத்து முழங்கினார்கள். அந்த முழக்கம் அந்த பிரதேசமெங்கும் நிறைந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரின் குரல்களும் அந்த முழக்கத்தில் ஒன்றாய் இணைந்தன.
ஜனகரின் மனைவி சுனயனாதேவி புதல்விகள் மாண்டவி, ஊர்மிளை, சுருதகீர்த்தி அனைவரின் மனங்களும் இன்னதென்றறியாத சாந்தியிலும் நிறைவிலும் ஆழ்ந்தன. அவர்கள் இந்த அற்புத காட்சியைத் தங்களுக்குத் தரிசனம் செய்வித்த ஜனகரை நோக்கிக் கரம் கூப்பி வணங்கினார்கள். ராஜரிஷி ஜனகரின் மனம் ‘ராம ராம’ என ஓயாமல்
ஸ்ரீராமபிரானைத் தியானம் செய்யத் தொடங்கியது.
திருமதி நளினி கோபாலன்
அவர்கள் ஸ்ரீவைஷ்ணவிஸம் முகநூலில் பதிவு செய்த தொகுப்பில் இருந்து எடிட் செய்த பதிவு இது.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

15 Nov
இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள் உள்ளன. அவை
#சைவம்
#சாக்தம்
#வைஷ்ணவம்
#காணாபத்யம்
#கெளமாரம்
#செளரம்
#ஸ்மார்த்தம்
சைவத்தின் முழுமுதற் தெய்வமான சிவனின் பாடல் பெற்ற கோவில்கள் 284ல் 274 தமிழ்நாட்டில் உள்ளன.
வைணவத்தின் 108 திவ்ய தேசத் தலங்களில் 84 தமிழ்நாட்டில்தான் உள்ளன. ImageImageImage
கெளமாரத்தின் 21
#முருகன் கோவில்களில் 18 கோவில்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன.
கானாபத்தியத்தில் அஷ்ட #கணபதிகள் கோவில்கள் அனைத்தும் தமிழ்நாட்டில்தான்!
செளரத்தில் சூரியனை தெய்வமாக #தைப்பொங்கல் தினத்தன்று வழிபடுவது தமிழ்நாட்டில் தான்.
சாக்தத்தில் #பராசக்தி நவதுர்க்கை கோவில்கள்
அம்மன் கோவில்கள் பெண் தெய்வங்களுக்கு கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.
மேற்கண்ட ஏழு பெரும் பிரிவு
தெய்வங்களையும் ஒட்டு மொத்த இந்துக்களாக வணங்கும் ஸ்மார்த்தர்கள் இருப்பதும் தமிழ்நாட்டில் தான் .
#பதிணெட்டு_சித்தர்கள் தோன்றி வாழ்ந்து, ஜீவ சமாதி அடைந்ததும் தமிழ்நாட்டில்தான்.
Read 6 tweets
15 Nov
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கப்பல் கவிழும் ஓர் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் மட்டுமே தப்பிக்கவுள்ள மரப் பலகையில், மனைவியை விட்டுவிட்டு கணவன் மட்டும் தப்பிச் செல்கிறார். கவிழும் கப்பலில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக நம்ம கொழந்தையப் பத்திரமா பார்த்துக்கங்க Image
என்று சொல்லி மூழ்கினாள். தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்திற்குப் பின் பல ஆண்டுகள் கழித்து அந்தப் பெண் தன் தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது. தாய்க்கு உயிர்க் கொல்லி நோய் ஒன்று இருந்திருப்பது அப்போது தான் அவளுக்குத் தெரிய வந்தது. கப்பல்
கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார் : உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும். நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் என்ன செய்வது? நமது பெண்ணை வளர்த்தெடுக்க உன் குறிக்கோள் நிறைவேற, நான் மட்டுமாவது உயிர் தப்பியாக வேண்டுமே!
Read 5 tweets
14 Nov
தட்சிணாமூர்த்தி என்பவர் வேறு. குரு பகவான் என்பவர் வேறு. பலரும் இருவரையும் ஒருவராக நினைத்து வழிபடுகின்றனர். தட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அவை:
தட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர். தெற்கு நோக்கி கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு
அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர். இவர் எப்போது தியானத்தில் ஆழ்ந்திருப்பார். தட்சிணாமூர்த்தி என்பவர் ஞான குரு. ஆதி குரு என்றும் அழைக்கப்படுபவர்.அவருக்கு விருப்பமான நிறம் வெண்மை.
நவகிரகங்கள் என்பது இறைவன் இட்ட கட்டளையை,
கடமையைச் செய்யக் கூடிய ஒன்பது கோள்களாகும். அவற்றில் ஒருவர் தான் #குருபகவான் எனும் ப்ரஹஸ்பதி. இவர் தேவர்களுக்கு ஆசிரியர். ஆசிரியர் தொழிலைச் செய்வதால் இவர் குரு என அழைக்கப்படுகிறார். நவகோள்களில் 5 ஆம் இடத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து, வியாழனாக இருந்து உயிர்களுக்கு முன்ஜென்மங்களில்
Read 8 tweets
14 Nov
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் எப்பொழுதும் தன்னந்தனியாக வேட்டையாடுவதை விருப்பமாக கொண்ட அரசன் கஜேந்திரன் வழிதவறி காட்டுக்குள் வெகுதூரம் சென்றுவிட்டான். காட்டில் முனிவர் ஒருவர் குடில் அமைத்து தங்கி இருப்பதை கண்டு அன்று இரவுப் பொழுதை அங்கேயே கழிக்கலாம் என்று முனிவரிடம் தங்க அனுமதி கேட்டான்.
முனிவரும் தாராளமாக தங்கி கொள்ளுங்கள் அரசே என கூறினார். இருவரும் அந்த சிறிய குடிலில் தூங்க ஆரம்பித்தனர்.
முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த இரவில் குடிலைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அரசரால் தூங்கவே முடியவில்லை. அவர் அன்று முழுவதும் வேட்டையாடி களைத்து இருந்தார். மறுநாளும்
அலைச்சல் இருக்கிறது.
அதை நினைக்க நினைக்க அரசருக்குக் கோபம் அதிகமானது. நாய்களோ வெறித்தனமாகக் குரைத்து இரவின் அமைதியைக் கெடுத்தன. இத்தனைக்கும் மத்தியில் முனிவர் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பிய அரசர் கஜேந்திரன், என்ன மனிதர் அய்யா நீங்கள்? இவ்வளவு சத்தத்துக்கு
Read 10 tweets
13 Nov
I want to share this beautiful story on what is Dharmam. It really touched me.
இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கு மேலாகிறது. மகா பெரியவா மீது அளவற்ற பக்தி கொண்ட ஒரு முதியவர், இறக்கும் தருவாயில், தன் மகனை அருகே அழைத்துப் பல விவரங்களைச் சொன்னார். கடைசியாகத் தான் ரூ.100
ஒருவரிடம் கடன் பட்டதாகவும், அதை மகன் தான் திருப்பித் தரவேண்டும் என்று சொல்லியபின் உயிர் துறக்கிறார். அப்போது மகனுக்கு 62 வயது. கிராமத்தில் கர்ணம் வேலை பார்த்தவர். அவருக்கு சம்பளம் ₹15 ரூபாய். தனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, மூன்று வருடங்கள் சிரமப்பட்டு ₹100
சேர்த்து விட்டார். ஆனால் தந்தைக்குக் கடன் கொடுத்தவர் யாரென்றே தெரியாத நிலை. சேமித்து வைத்த பணத்தை எங்கே கொண்டு போய்த் தருவது? காஞ்சி மகானின் பரம பக்தரான தனது தந்தையின் கடன் விவகாரம், ஒருவேளை மகானுக்குத் தெரிந்திருக்குமோ என்று காஞ்சி வந்த அவர், மகானிடம் விவரத்தைச் சொல்கிறார். ஒரு
Read 9 tweets
13 Nov
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் அழகிய குளம். அந்த குளத்திற்கு அருகில் ஒரு மரப்பொந்து ஒன்று இருந்தது. அந்த மரப்பொந்தில் சுண்டெலி ஒன்று வசித்து வந்தது. அந்த சுண்டெலிக்கு குளத்தில் வசித்த தவளையுடன் நட்பு ஏற்பட்டது. தினமும் அந்த தவளையும் எலியும் சந்திப்பது வழக்கம். ஒரு நாள் எலி, தவளை நீரில்
விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தது. உடனே எலி தவளையிடம், எனக்கும் நீச்சல் கற்றுத் தர முடியுமா என்று கேட்டது. தவளையும், நாளை உனக்கு நீச்சல் நான் கற்றுத் தருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றது. அடுத்தநாள் சுண்டெலிக்கு நீச்சல் கற்றுத்தருவதாக கூறிய தவளை தன்னுடடைய காலை எலியின் காலுடன்
சேர்த்து ஒரு கைற்றினால் கட்டிக்கொண்டது. அப்போது மேலே பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று இவைகளைப் பார்த்து தாக்க வந்தது. உடனே தவளை தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது. தண்ணீரில் மூழ்கிய சுண்டெலி மூச்சு திணறி இறந்து போனது. அதன் உடல் மேலே மிதந்த போதும்
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(