#நரசிம்மர்_குடைவரை_கோவில்
இந்தியாவில் சிறந்து விளங்கும் குடவரைக் கோவில், மும்மூர்த்தி தலம் என்ற சிறப்பினை உடைய இத்திருக்கோவிலில் ஈருயிர் ஓர் உடலாக சங்கர நாராயணனாக, பரந்தாமன் காட்சி தரும் அழகிய திருக்கோலம் சைவ வைணவ பேதம் போக்குகிறது. மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம
அவதாரத்தை தரிசிக்க இயலாத மகாலட்சுமி பெருமாளிடத்தில் அவரின் நரசிம்ம அவதாரத்தை தான் தரிசிக்க ஒரு வழி கேட்டார். அதற்கு அவர், ஸ்ரீசைலம் எனும் ஷேத்ரத்தில் கமலாலய குளத்தில் அமர்ந்து அஷ்டக்ஷரமாகிய திருஎட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து அதன் பலனாக தன் நரசிம்ம கோலத்தை தரிசிப்பாய் என்றார்.
அதன்படி மகாலட்சுமி கமல மலர்கள் நிறைந்திருந்த கமல வனத்தினில் ‘கமலாலயம்’ என்னும் குளத்தில் நரசிம்ம மூர்த்தியை நினைத்து கடுந்தவம் புரிந்தாள்.
இந்த சமயத்தில் திரேதாயுகத்தில் ராமராவண யுத்தத்தில் மூர்ச்சையான லக்ஷ்மணனின் மயக்கத்தை தெளிய வைப்பதற்காக சஞ்சீவி பர்வதத்தை ஆஞ்சநேயர் எடுத்து
வந்தார். யுத்தம் முடிந்த பிறகு அதனைக் கொண்டு இருந்த இடத்திலேயே வைத்து விட்டு வரும் வழியில் கண்டகி நதியில் நீராடும்போது அவருக்கு எம்பெருமானின் திரு உருவாகிய சாளக்கிராமம் கிடைக்கப் பெற்றார்.
மிகவும் ஆனந்தத்தில் அகமகிழ்ந்து தனக்கு ஆராதிக்க கிடைத்த எம்பெருமானின் சாளக்கிராமத்தை
எடுத்துக் கொண்டு வரும்போது அந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர் அப்பொழுது அவர் மகாலட்சுமி தவம் செய்யும் கமலாலய குளத்திற்கு வந்து ஶ்ரீ மகாலட்சுமியின் திருக்கரங்களில் சாளக்கிராமத்தை வைத்திருக்க கொடுத்து விட்டு அனுஷ்டானம் செய்யச் சென்றார்.
சூரிய
நமஸ்காரத்தை முடித்து திரும்ப தாயாரிடம் சாளக்கிராமத்தை கேட்க, தாயாரோ கனம் தாங்காமல் கீழே வைத்துவிட்டிருக்க அது மலையாக மாறிவிட்டது. ‘நீ பராக்கிரமசாலி என்பதால் நீயே எடுத்துக் கொள்’ என்று தாயார் கூறினார். தாயாரின் வாக்கிற்கிணங்க ஆஞ்சநேயசாமி தன் வாலால் மலையை பெயர்க்க முற்படுகையில்
ஸ்ரீநரசிம்ம அவதாரமாய் ஹிரன்யகசிபுவின் வயிற்றை கிழித்த கோலத்தில் மஹாலட்சுமிக்கும், ஸ்ரீ ஆஞ்சநேயருக்கும் சேவை சாதிக்கிறார் எம்பெருமான். நீ கொண்டு வந்த சாளக்கிராமத்தினால் இங்கே ஒரு தலம் ஏற்பட்டதால் நீயும் இங்கேயிருந்து என்னை ஆராதிப்பாயாக என்று அருளினார்.
அதுவே #நாமக்கல் என்னும்
திருத்தலம். இத்திருக்கோயில் மலையின் மேற்கு புறம் குடவரையில் அமைந்துள்ளது. இங்கு வலது காலை தரையில் ஊன்றியும் இடது காலை மடி மீதும் வைத்து ஸ்ரீ நரசிம்மர் வீற்றிருக்கிறார். அருகில் பூஜக முனிவர்களான சநக சநந்தர்களும், சூர்ய சந்திரர்களும் கவரி வீச வலது புறம் ஈஸ்வரனும், இடதுபுறம்
பிரம்மாவும் பகவான் இரணியனை அழித்த உக்கிரம் தீர வழிபடுகிறார்கள். ஸ்ரீ மகாலட்சுமியின் தவத்தால் மகிழ்ந்ததால் இங்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் என அழைக்கப்படுகிறார். பிரம்மா, விஷ்ணு, சிவன், ஆகியோர் ஒரே இடத்தில் அருள் பாலிப்பதால் மும்மூர்த்தி ஸ்தலம் என அழைக்கப்படுகிறது. இங்கு இரணியனை
வதைத்த பின் ரத்தக்கரையுடன் கூரிய நகங்களுடன் பகவான் காட்சி தருகிறார். உலகில் சிவன் சில இடங்களில் மட்டுமே தலையில் பிறைச்சந்திரனுடன் காட்சி தருகிறார். அவற்றில் ஒன்று இத்திருத்தலம். கி.பி. 7-ம் நூற்றாண்டில் பல்லவர்களால் குடையப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ள இரண்டு குடவரை கோவில்கள்
இந்நகரில் உள்ளன.
நடுநாயகமாகத் திகழும் நாமகிரி என்னும் சாளக்கிராம பர்வத மலையில் கீழ்ப்புறம் அருள்மிகு அரங்கநாதர், கார்க்கோடக சயனத்தில் காட்சியளிக்கிறார். மலையின் மேற்புறம் அருள்மிகு நரசிம்மசாமி அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். இங்குள்ள நரசிம்மர் ஸ்ரீவைகுண்ட நாராயணர், ஹிரண்ய
சம்ஹாரமூர்த்தி வாமன அவதாரம் ஸ்ரீவராகமூர்த்தி ஆகிய திருவுருவங்கள் அற்புத சிற்ப வேலைபாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இத்திருத்தலம் மகாவிஷ்ணுவின் அம்சமாக ஒரே கல்லால் ஆன நாமமலையாக, கோவிந்தன் பக்த பிரகலாதனைக் காக்க இரணியனை வதம் செய்து, அதனால் ஏற்பட்ட வெப்பம் தணிய மகாலட்சுமியாகிய
நாமகிரித் தாயாரின் வேண்டுதலுக்கு மனம் இரங்கி, இத்திருத்தலத்தில் எழுந்தருளி தன்னை நாடி வரும் பக்தர்களின் வாழ்வில் இருள் அகற்றி ஒளி ஏற்றுகிறார்.மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெயர் பெற்று விளங்கும் இத்திருத்தலம் சிறந்த பிரார்த்தனைத் தலமாகும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சீதையும் பூமிக்குள் மறைந்து லக்ஷ்மணனும் சரயுவில் இறங்கிய பின் ஜனகரின் மனைவி சுனயனா அந்த துக்கத்தில் இருந்த போது இன்னுமொரு அதிர்ச்சியை தாங்கிய செய்தி அயோத்தியில் இருந்து மிதிலை வந்தடைந்தது. ராமனும் பரதனும், சத்ருக்கனனும் சரயு நதியில் இறங்கி சித்தி அடையப் போகிறார்கள் என்பதே அது.
‘ராமனும், பரதனும், சத்துருக்கனனும் சித்தி அடையும் நாளில் நாமும் அயோத்தியில் இருப்பது நல்லது. கணவரை இழந்து நம் புதல்விகள் உணர்ச்சிவசப்பட்டு அழுவார்கள். நேரில் சென்று ஆறுதல் கூற வேண்டியது நம் கடமை’ என முகத்தில் சாந்தி தவழச் சொன்னார் ஜனகர். தன் கணவர் ஜனகர் எதற்கும் எப்போதும்
பதற்றப்படமாட்டார் என்பதை சுனயனா அறிவாள். அவர்கள் இருவரும் நேரே தேரில் சரயு நதிக்கரைக்குச் சென்றனர். நதியின் கரையில் ராமனும் பரதனும் சத்ருக்கனனும் தங்கள் மாமனார் மாமியாரின் வரவுக்காக காத்திருந்தார்கள். மூவர் முகத்திலும் தாங்கள் சித்தி அடைய முடிவேடுத்துள்ளதைப் பற்றி எந்த சலனமும்
I want to share this beautiful story on what is Dharmam. It really touched me.
இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கு மேலாகிறது. மகா பெரியவா மீது அளவற்ற பக்தி கொண்ட ஒரு முதியவர், இறக்கும் தருவாயில், தன் மகனை அருகே அழைத்துப் பல விவரங்களைச் சொன்னார். கடைசியாகத் தான் ரூ.100
ஒருவரிடம் கடன் பட்டதாகவும், அதை மகன் தான் திருப்பித் தரவேண்டும் என்று சொல்லியபின் உயிர் துறக்கிறார். அப்போது மகனுக்கு 62 வயது. கிராமத்தில் கர்ணம் வேலை பார்த்தவர். அவருக்கு சம்பளம் ₹15 ரூபாய். தனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, மூன்று வருடங்கள் சிரமப்பட்டு ₹100
சேர்த்து விட்டார். ஆனால் தந்தைக்குக் கடன் கொடுத்தவர் யாரென்றே தெரியாத நிலை. சேமித்து வைத்த பணத்தை எங்கே கொண்டு போய்த் தருவது? காஞ்சி மகானின் பரம பக்தரான தனது தந்தையின் கடன் விவகாரம், ஒருவேளை மகானுக்குத் தெரிந்திருக்குமோ என்று காஞ்சி வந்த அவர், மகானிடம் விவரத்தைச் சொல்கிறார். ஒரு
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் அழகிய குளம். அந்த குளத்திற்கு அருகில் ஒரு மரப்பொந்து ஒன்று இருந்தது. அந்த மரப்பொந்தில் சுண்டெலி ஒன்று வசித்து வந்தது. அந்த சுண்டெலிக்கு குளத்தில் வசித்த தவளையுடன் நட்பு ஏற்பட்டது. தினமும் அந்த தவளையும் எலியும் சந்திப்பது வழக்கம். ஒரு நாள் எலி, தவளை நீரில்
விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தது. உடனே எலி தவளையிடம், எனக்கும் நீச்சல் கற்றுத் தர முடியுமா என்று கேட்டது. தவளையும், நாளை உனக்கு நீச்சல் நான் கற்றுத் தருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றது. அடுத்தநாள் சுண்டெலிக்கு நீச்சல் கற்றுத்தருவதாக கூறிய தவளை தன்னுடடைய காலை எலியின் காலுடன்
சேர்த்து ஒரு கைற்றினால் கட்டிக்கொண்டது. அப்போது மேலே பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று இவைகளைப் பார்த்து தாக்க வந்தது. உடனே தவளை தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது. தண்ணீரில் மூழ்கிய சுண்டெலி மூச்சு திணறி இறந்து போனது. அதன் உடல் மேலே மிதந்த போதும்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் தினமும் காலையில் ஒரு அந்தணரின் வீட்டு திண்ணையில் அமர்ந்து ஸ்ரீனிவாசர் என்பவர் கிருஷ்ணனின் பாகவத கதையை உபன்யாசம் செய்து வந்தார். அவ்வூரில் உள்ள அனைவரும் கேட்டு ரசித்து வந்தனர். அவ்வூரின் தலைவரும் அதை விருப்பத்துடன் கேட்டு ரசித்து வந்தார். ஒரு நாள் கிருஷ்ணனும்
பலராமனும் பசுக்களை மேய்த்த கதையை கூறி உபன்யாசம் செய்தார். கிருஷ்ணன் கழுத்தில் உள்ள பொன் நகைகள் பலராமன் கழுத்தில் உள்ள பொன் நகைகள் பற்றியும் அழகாக வர்ணித்து அன்றைய உபன்யாசத்தை முடித்து கிளம்பினார். சிறிது தூரம் நடந்திருப்பார் ஹோய் சற்று நில்லும் என்று குரல் ஒரு மரத்தின் மறைவில்
இருந்து வந்தது. ஸ்ரீனிவாசரும் நின்று அழைத்தது யார் என்று பார்த்தார். கையில் கத்தியுடனும் ஒட்டிய வயிறுடனும் திருடன் ஒருவன் நின்றிருந்தான். ஸ்ரீனிவாசர் அதிர்ச்சியாகி ஓட, திருடன் அவரை பிடித்து மரத்தின் மறைவுக்கு அழைத்து சென்று அவரின் கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போடாமல் நான்
A beautiful story from #SrimadBhagavatam. There was a rich man who was devoted to Krishna. He used to observe the ekadashi vratam every month and the next day he would feed the pious people as It is considered a great punyam to do so. Pleased with his vratam, Krishna appeared
before him one day and said 'Ask me for a boon! You are doing so much wonderful work.' The rich man said, 'If you bless me with more wealth, I will be happy to do this service on a large scale.' Krishna blessed him with abundant wealth. The man was very happy. There was another
devotee, an old lady who used to think about Krishna, meditate on Krishna all the time; she was practically living with Krishna. She was a poor lady and had only a cow as her property. She also used to observe the ekadashi vratam, and the next day she would make a little butter
#குருபக்தி #ஆதிசங்கரர் அவருக்குப் பதினாறு வயதாகும் போது காசியில் அவர் பாஷ்யங்கள் எழுதி முடித்த சமயத்தில் பத்மபாதர் அவருக்கு சிஷ்யரானார். ஆதி சங்கரரின் முதல் சிஷ்யர் பத்மபாதர். சோழ நாட்டிலிருந்து சென்ற அவர் பெயர் ஸனந்தனன். ஆதிசங்கரரை தரிசித்து, பக்தி ஏற்பட்டு, ஆதிசங்கரருக்குக்
கைங்கர்யம் செய்து வந்தார். ஒரு நாள் கங்கையில், அந்த பக்கம் அக்கரையில், பத்மபாதர் இருந்தார். இந்த பக்கம் இக்கரையில ஆதி சங்கரர் இருந்தார். குரு ஸ்னானம் செய்துவிட்டு “துண்டு கொண்டுவா” என்றார். குருநாதர் ஈரமாக நிற்கிறாரே, துண்டு கேட்கிறாரே என்று நடுவில் நதி இருப்பது கூடத் தெரியாமல்
பத்மபாதர் நதியிலேயே நடந்து சென்றார். அப்போது கங்காதேவி அவர் பாதங்களை தாங்கிக் கொள்ள பத்மங்களை- தாமரைகளை உண்டாக்கி அதில் அவர் கால் வைத்துக் கொண்டு வர வழி செய்கிறாள். ஒடி வந்து வந்து துண்டை எடுத்துக் கொடுத்தார். அப்போது ஆதி சங்கரர் அவரிடம் காண்பிக்கிறார் “பார், கங்காதேவி பத்மங்களை