மறுபடியும் ஒரு பாலியல் குற்றச்சாட்டு. மறுபடியும் ஒரு போராட்டம் இப்படியே பேசிப்பேசி தீர்வை எட்டுவதில் தோற்றுப்போகிறோம். முதலில் நுனிப்புல் மேயாமல் பிரச்சினையின் ஆணி வேர் வரை கண்டறிவோம். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இன்று பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்
என குறுக்கப்படுகிறது. இது தவிர மிக முக்கியமான ஒரு விஷயத்தை எல்லோரும் பேச மறக்கிறோம். இங்க தவறு யாருடையது என்பதை ஆராயாமல் நம்பிக்கை எனும் மொத்த பிணைப்பை உடைத்தே விட்டோம். இது 1980 அல்ல 2021. இந்த நேரத்தில் மறுபடியும் அந்த குழந்தை வீட்டில் சொல்லியிருக்க வேண்டும் என்ற
வாதத்தை முன் வைக்காமல் அந்த நம்பிக்கையை தர மறுத்த சக மனிதர்களை பற்றி பேசுவோம். தொடர் புகார்கள் வரும் பட்சத்தில் அந்த ஆசிரியர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் எந்த பள்ளியும் அதனை முன்னெடுப்பதில்லை காரணம் அவர்களின் brand value.இந்த brand value
சமாச்சாரங்களுக்கு நாமும் ஒரு காரணம். 2019-2020 வரை பள்ளிகள் நடந்த பாலியல் குற்றங்கள் குறித்து 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் தீர்ப்பு வழங்கப்பட்டவை 14% மட்டுமே. போக்ஸோவில் வழக்கு பதியப்படும் போது அது 6 மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் அன்றைய அரசு அதில்
முறையாக செயல்படவில்லை.தமிழகத்தில் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை போக்சோ வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன. இதன் மூலம் போக்சோ சட்டம் பாய்ந்தது என்று சொல்வது எல்லாம் பொய். போக்சோ பொம்மை போலவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் பாலியல்
குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியரின் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு அவரை பணி நீக்கம் செய்யவேண்டும் என்று அரசாணை வெளியிட்டார். இப்போது வரை அந்த ஆணையின் படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நபர்கள் 0. அடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஒரு வார்த்தை அல்ல. ஒரு மாணவன்/மாணவியை உடல்ரீதியான துன்புறுத்தல்
என்ற பார்வையில் அனுகாமல், மனம், பாலியல் ரீதியான புறக்கணிப்பு இவையும் அதில் அடங்கும். Sexual harrasment committee தலைமை ஆசிரியர், பெண் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களின் குழுவாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு பள்ளி நிர்வாகம் மட்டுமே அதில் உள்ளது. அப்பறம் அரசு
ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் குழந்தை நலக் குழு, மாவட்டக் குழந்தை பாதுகாப்பு அலகு, மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் இவர்களின் பணி பிரச்சினை நடந்த பிறகு சம்மன் அனுப்புவது அல்ல என்பதை அவர்கள் உணரவேண்டும். சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு சென்று அங்கு மாணவர்களிடம்
ஆலோசனை நடத்த வேண்டும் அங்கும் தவறிவிட்டோம். போஸ்ட்மார்ட்டம் செய்ய மட்டும் மருத்துவர் இல்லை வியாதியை கண்டறியவும்தான் மருத்துவர். இப்போதும் அரசிடம் (எந்த அரசாக இருந்தாலும்) மாநில குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் யார் எனக் கேட்டால் துளியும் தொடர்பில்லாத நபர்களே உறுப்பினர்களாக இருப்பது
தெரியவரும். தற்போதைய அரசு குழந்தைகளுக்கான அமைப்புகளில் பாதுகாப்பு, உரிமை, சட்டம், உளவியல் ஆகியவை பற்றிய தெளிவான புரிதல் இருப்பவர்களை நியமிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் அதற்கான அலுவலகங்கள் அமைக்கப்பட்டு இவர்களுக்கு மட்டுமான சட்டக்குழு அமைக்கப்பட வேண்டும்.
வெறும் கற்றல் மட்டுமே முக்கியமானது அல்ல பள்ளிகள் பாதுகாப்பு குறித்தும் அதற்கான அமைப்புகள் உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். பெற்றோர் பள்ளியின் பெயரையும் உட்கட்டமைப்பு வசதிகளை மட்டும் பார்க்காமல் பள்ளிகளை ஆசிரியர் நியமனத்தின் போது பின்புலத்தை நன்கு சோதிக்க வற்புறுத்த வேண்டும்.
பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முழு பொறுப்பு ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும்தான். எனவே பாலியல் தொடர்பான புகாரில் நடவடிக்கைகள் எடுத்தால் பள்ளியின் பெயர் கெடும் என்ற போக்கில் மாணவர்களை சமாதானம் செய்யும் வேலையில் நிர்வாகம் ஈடுபடக்கூடாது. குழந்தைகளுக்கு
பள்ளியிலோ அல்லது சுற்றுப்புறத்திலோ ஏற்படும் பாலியல் கொடுமை இறக்கும் வரை கூட மாறாது. குழந்தைகளுக்கான நம்பிக்கையை விதையுங்கள். உரக்கச்சொல்வோம் எந்த வித பாலியல் தொடர்பான குற்றங்களுக்கும் நாம் எதிரானவர் என்று. அதைவிடுத்து மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுகள் மட்டும் வைக்க வேண்டாம்
நாளை குழந்தைகள் தினம் மற்றுமொரு கருப்புதினம். இன்னும் எத்தனை ரோஜாக்களைதான் நசுக்கப்போகிறோம்.
#justiceFor_kids
#justiceforpontharani

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பொண்டாட்டி கொடுமை

பொண்டாட்டி கொடுமை Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @bharath_kiddo

23 Oct
குருதிப்புனல் படம் வந்து 26 வருஷம் ஆகுது நிறைய விஷயங்களை இந்த படத்துல பார்த்திருப்போம் அதுல முக்கியமான ஒரு விஷயம் அர்ஜூன் பேசுற கம்யூனிகேஷன் சிஸ்டம். கூடவே சுபலேகா சுதாகர் கமல் வீட்டுக்கு வந்து கொலை பன்ன நாசர் பீப் சவுண்டு மட்டும் தருவோம் அதுதான்சிக்னல்னு சொல்லுவார். இந்த விஷயம்
இன்னிக்கு நடந்த @SpacesScience ல பேசுனவிஷயம் பற்றிய இழை. @Eswarphysics சார் சொன்னார் அந்த விஷயம் ஹாம் ரேடியோ.ஹாம் ரேடியோ என்பது டூ வே ஒலிபரப்பு. அதாவது நாம பேசி முடித்த பிறகு அடுத்த முனையில் இருப்பவர் பேசனும். அதை அந்த அலைவரிசையில் இருக்கும் அனைவரும் கேட்க முடியும். மொபைல் போல
அல்லாமல் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே ஒலிபரப்ப முடியும். அதனால் ஒலிபரப்புபவரும், அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அனைவரும் ஸ்டேஷன்னுதான் சொல்லுவாங்க. எல்லாருக்கும் ஒரு ஸ்டேஷன் கோட்(code)தருவாங்க.அதுவைச்சு எல்லாரும் தொடர்புகொள்ள முடியும். அப்படியே அர்ஜூன் பேசுற சீன் எடுத்துக்கோங்க
Read 14 tweets
21 Sep
நீட் தேர்வு குறித்த ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையை பற்றி விரிவாக குறிப்பிட வேண்டிய நேரம் இது. சோ ஜூஸ் ட்வீட் போடுறவங்க சனி ஞாயிறா பாத்து போடுங்க. அதை விட முக்கியமாக பேச வேண்டிய அறிக்கை இது. முடிஞ்சா இதையும் அதே டேக்ல ஓட்டுங்க.நல்லது மக்களுக்கு சேர்ந்தா சரி அம்புட்டு தான்
பொத்தாம் பொதுவா அறிக்கை நீட் தேர்வை இரத்து செய்ய சொல்கிறது என்பதை மட்டும் வெளியே சொல்லாமல் அதன் பாதகங்களாக குறிப்பிடப்பட்ட விஷயங்களையும் இங்கு தெரிவிக்க வேண்டும்.இந்த குழுவின் முக்கிய பணியாக கூறப்பட்டவை
1. சமூக பொருளாதார, கூட்டாட்சி தத்துவம் இவற்றில் ஏற்பட்ட பாதிப்புகள்
2.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் , கிராமப்புற மாணவர்கள் இவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்
3.அந்த பாதிப்புகளை தீர்ப்பதற்காக செயல்படுத்த வேண்டிய நடை முறைகள்.
4.நீட் தேர்வு சமத்துவமான முறையில் நடை பெறுகிறதா?
5. நீட் பயிற்சி மையங்கள் அவற்றின்
Read 24 tweets
8 Sep
க‌ட‌வுள் தானியேலுக்கு அந்த‌க் க‌ன‌வின் விள‌க்க‌த்தைக் காட்சி ஒன்றில் வெளிப்ப‌டுத்தினார்.

தானியேல் ம‌ன்ன‌ரிட‌ம் சென்றார்.

“ம‌ன்ன‌ரே உங்க‌ள் க‌ன‌வின் விள‌க்க‌த்தை நான் சொல்ல‌ வ‌ந்திருக்கிறேன்”

“நீ பொய் சொல்ல‌வில்லை என்ப‌தை எப்ப‌டி ந‌ம்புவ‌து ?”

“நீங்க‌ள் க‌ண்ட‌ க‌ன‌வையும் நானே
சொல்கிறேன். அப்போது நீங்க‌ள் ந‌ம்புவீர்க‌ள்”

ம‌ன்ன‌ன் ஒத்துக் கொண்டார்.

“ம‌ன்ன‌ரே. நீங்க‌ள் க‌ண்ட‌ க‌ன‌வு ஒரு மிக‌ப்பெரிய‌ சிலை. பொன், வெள்ளி, வெண்க‌ல‌ம், இரும்பு, ம‌ற்றும் ஒரு ப‌குதி ம‌ண்ணினால் ஆன‌ சிலை அது. அதை ஒரு பெரிய‌ க‌ல் மோதி தூள் தூளாக்கி விட்ட‌து.
மோதிய‌ க‌ல்லோ வ‌ள‌ர்ந்து உல‌கை நிறைத்த‌து.” இது தானே க‌ன‌வு ? தானியேல் கேட்க‌, ம‌ன்ன‌ன் பிர‌மித்துப் போய் த‌லைய‌சைத்தான்.

தானியேல் அத‌ன் விள‌க்க‌த்தைச் சொன்னார். அது அந்த‌ நாட்டின் நிக‌ழ‌ இருக்கின்ற‌ ஆட்சிக‌ளையும், அத‌ன் மாற்ற‌ங்க‌ளையும், எதிர்கால‌த்தையும் குறித்து பேசினார்து.
Read 4 tweets
8 Sep
உலகத்துல ஒன்லி 20% பெண்கள் மட்டும்தான் அவங்களுக்கு சரியான,கம்பர்டபிலான ப்ராவை தேர்வு செய்கிறார்களாம்.இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னன்னா ஸ்போர்ட்ஸ் ப்ரா பிகினர்ஸ் இல்லை டீனேஜ் புள்ளைங்களுக்குனு அவங்களே ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க. அவங்கள சொல்லியும் தப்பில்லை அப்படி ட்யூன்
பன்னிட்டாங்க அவங்களை. ஆனா போர்ட்ஸ் மவுத் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான ப்ரா அல்லது ஸ்போர்ட்ஸ் ப்ரா தேர்வினால் மார்பக திசுக்களில் ஏற்படும் பாதிப்பினை விளக்கியுள்ளனர். நீங்க வாங்குற ஸ்போர்ட்ஸ் ப்ரா மூனு வகையா பிரிக்கப்படுது.
1.low impact bra
2. Medium impact bra
3. High impact bra
இதுல low impact bra நடை பயிற்சி, யோகா இல்லைனா strenth training இதுக்கு பயன்படுத்தலாம். ஆனா நம்ம பய புள்ளைங்க க்ராஸ் ஸ்ட்ராப் லோ இம்பாக்ட் ப்ராவை தான் ஜிம்முக்கு வாங்குவாங்க. அப்பறம் மீடியம் impact bra நடனம், சைக்கிளிங் இதுக்கு லாம் பயன்படுத்தலாம். ஆனா நடனத்துக்கு எதுக்கு sports
Read 13 tweets
2 Sep
மதிப்பிற்குரிய பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு @Anbil_Mahesh அவர்களுக்கும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் @SEDTamilNadu அவர்களுக்கும் ஒரு பெரிய நன்றிகள். இன்று முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து எங்கள் பள்ளியை ஆய்வு செய்ய அலுவலர் குழு வந்திருந்தது. இதே போன்ற ஒரு ஆய்வுகடந்த
கோவிட் பள்ளி திறப்பின் போதும் நடந்தது. ஆனால் இந்த முறை சற்றும் எதிர்பாராமல் அலுவலர் குழு பள்ளியில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களின் விவரங்களை கேட்டு வாங்கி அந்த மாணவர்களின் EMIS எண்ணை எங்கள் வளாகத்திலேயே சோதித்தனர். அதில் மாற்றுச்சான்றிதழ்
பெற்ற 10 மாணவர்களின் விவரங்கள் எந்த பள்ளியிலும் சேர்க்கப்படாமல் common poll நிலையிலேயே இருந்தது. உடனடியாக கல்வி அலுவலர் எங்களை அந்த பத்து மாணவர்களின் பெற்றோருக்கும் தொடர்பு கொள்ள செய்து அவர்கள் எங்கு படிக்கிறார்கள் என்பதை விசாரிக்க சொன்னார். நாங்களும் தொடர்பு கொண்டு
Read 8 tweets
13 Jul
KVPY applications invited
Are you a student who just completed your 10th, or right now studying your 11th or 12th Science subjects or just finished any of these ? Here is a wonderful opportunity for you to secure one of India's most prestigious scholarship - KVPY.
If you are planning to pursue science as a career and planning to join any basic science (BSc / BS) courses, you can get a fellowship worth 5000 per month while pursuing your studies any where in India. Yes you can apply for KVPY fellowship starting from 12th July 2021 till
25th August 2021. Aspirants will have to attend the KVPY aptitude test happening across the country on 7th November 2021. The application link is given below 👇

kvpy.iisc.ac.in/main/applicati…

*Eligibility : Stream 1, 10th passed*
*Stream 2, 11th competed*
*Stream 3, 12th completed*
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(