நீட் தேர்வு குறித்த ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையை பற்றி விரிவாக குறிப்பிட வேண்டிய நேரம் இது. சோ ஜூஸ் ட்வீட் போடுறவங்க சனி ஞாயிறா பாத்து போடுங்க. அதை விட முக்கியமாக பேச வேண்டிய அறிக்கை இது. முடிஞ்சா இதையும் அதே டேக்ல ஓட்டுங்க.நல்லது மக்களுக்கு சேர்ந்தா சரி அம்புட்டு தான்
பொத்தாம் பொதுவா அறிக்கை நீட் தேர்வை இரத்து செய்ய சொல்கிறது என்பதை மட்டும் வெளியே சொல்லாமல் அதன் பாதகங்களாக குறிப்பிடப்பட்ட விஷயங்களையும் இங்கு தெரிவிக்க வேண்டும்.இந்த குழுவின் முக்கிய பணியாக கூறப்பட்டவை 1. சமூக பொருளாதார, கூட்டாட்சி தத்துவம் இவற்றில் ஏற்பட்ட பாதிப்புகள்
2.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் , கிராமப்புற மாணவர்கள் இவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்
3.அந்த பாதிப்புகளை தீர்ப்பதற்காக செயல்படுத்த வேண்டிய நடை முறைகள்.
4.நீட் தேர்வு சமத்துவமான முறையில் நடை பெறுகிறதா? 5. நீட் பயிற்சி மையங்கள் அவற்றின்
தாக்கங்கள், கல்வி முறையில் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து அறிதல்.
இவைதான் அந்த குழுவின் முக்கிய பணிகள்.
இதை ஆய்வு செய்து குழு தந்த டீட்டெய்டு ரிப்போர்ட் வருமாறு.
1.ஒரு மாணவரின் உருவாகும் படிப்படியான முன்னேற்றத்தை (growth , development, maturity என்று B.Ed ல் படித்தோம்)
கருத்தில் கொள்வதில்லை இந்த நீட் தேர்வு.
2.நீட் தேர்வின் தேர்ச்சி முறை அல்லது தேர்ச்சி அன்பிரிடிக்டபிலாக உள்ளது.
3.இந்த தேர்வில் கற்றுக்கொள்ள ஒன்றுமே இல்லாமல் குறிப்பிட்ட தேர்வு முறையை மையப்படுத்தி அமைந்ததாக வே உள்ளது. 4. இந்த தேர்வு cultural, lingual, socioeconomic முறையில்
பாரபட்சம் மிகுந்த தேர்வாக உள்ளது.
அதாவது தமிழ்வழியில் படித்து தேர்ச்சி பெற்றவருக்கும் ஆங்கில வழியில் படித்து தேர்ச்சி பெற்றவருக்கும் மருத்துவ கல்லூரி படிப்பில் கிடைத்த இடங்கள் பாரபட்சம் மிக்கதாக உள்ளது.
இணைக்கப்பட்ட படத்தை காண்க
இந்த குழுவிற்கு வந்த மொத்த கருதத்துக்கள் 86342(பாவிகளா ஒரு லட்சம் பேருக்கு கூடவா பொறுப்பு இல்லை. அதானே நமக்கு வெட்டி பேச்சுக்கு தான் நேரமிருக்கும்). அதில் 65007 பேர் நீட் தேர்வு தேவையில்லை என்ற கருத்தை பதிவு செய்திருந்தனர்.அதாவது கிட்டத்தட்ட 75.29% பேர். பிறகு
18966 பேர் நீட் தேர்வுக்கு ஆதரவு தந்திருந்தனர். அதாவது 21.9% பேர். 1453 பேர் நடுநிலையாக கருத்து தெரிவித்துள்ளனர்.916 பேர் அனுப்பிய கருத்தே மறுபடி அனுப்பினார். அந்த 21.9% பேர் வைத்த நீட் வேண்டும் என்பதற்கான கருத்துக்கள் பின்வருமாறு
1.நீட் இருந்தால் எய்ம்ஸ் ஜிப்மர் போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் சேரலாம்(த்து)
2.நீட் 3 முறை எழுதலாம் ஆனால் +2 தேர்வு ஒருமுறைதான் எழுதலாம்.
3.ஸ்டேட் ஃபோர்டு சிபிஎஸ்இ மாணவர்கள் ஒரே மாதிரி மதிப்பிடப்பட்டு நேர்மையாக அட்மிஷன் கிடைக்கும்.(இந்த பொய்க்கு கீழ் உள்ள தரவு சாட்சி)
4.மனப்பாடம் செய்வதை ஊக்குவிக்காமல் சிந்தித்து எழுத நீட் உதவுகிறது(த்தா மூனு வருஷமா சிந்தீப்பீங்க) 5. தமிழ்நாட்டின் கல்வி முறை மாற வேண்டும். நீட் தேர்வு இருந்தால் கொஞ்சநாளில் அதுவே மாறிவிடும்.
6.நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது அல்ல இட ஒதுக்கீடுகள் பின்பற்றப்படுகின்றன(ola cab)
7.ஊச்ச நீதி மன்றமே சொல்லிவிட்டது(இதை சொன்னவனைதான் தேடி பொளக்கனும்)
நீட் தேர்வுக்கு எதிரான வாதங்கள்
1.ஸ்டேட் போர்டு மாணவர் மருத்துவ கல்லூரி சேர்க்கைவிகிதம் குறைந்துவிட்டது
2.சிபிஎஸ்இ பாடத்திட்ட அடிப்படையில் தேர்வு நடைபெறுகிறது 3. அதீத மன அழுத்தம் மானவர்களுக்கு ஏற்படுகிறது.
4.லட்சக்கணக்கில் பணம் கட்டி கோச்சிங் செல்ல ஊக்குவிக்கிறது.
5.தனியார் பள்ளிகள் 11 ம் வகுப்பில் நீட் தேர்வு பாடத்தை நடதாதுகின்றனர். எனவே வசதி இல்லாதவர்கள் படிக்க முடிவதில்லை. 6. நீட் தேர்வு முடித்து வரும் மருத்துவர்கள் கிராமப்புற சேவையை விரும்புவதில்லை.
7.பழங்குடியின மக்களின்
மருத்துவ கனவை பறிக்கிறது.
8.மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிடுகிறது.
9.வெளிமாநில மாணவர்களே தமிழக மருத்துவ கல்லூரிகளில் சேருகின்றனர். இதனால் தமிழக மாணவர் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுகிறது. 10.3 மணிநேரம் 180 கேள்விகள் எழுத பயிற்சி தேவை ஏழை மாணவர்களுக்கு அது கிடைப்பதில்லை
குழுவின் அறிக்கை. 1. மாநில பாடதிட்டத்தில் சேரும் மாணவர் எண்ணிக்கை குறைகிறது. கிட்டத்தட்ட 1,13,322மாணவர்கள் மாநில பாடதிட்டத்தில் இருந்து வெளியேறி cbse ல் சேர்ந்துள்ளனர்.
2.நீட் அறிவுக்கு பின் அறிவியல் பாடப்பிரிவு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு செய்யும் விகிதம் குறைந்துவிட்டது
3.மருத்துவ கல்வியில் மாநில பாடதிட்டத்தில் படித்த மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டது.
4.தமிழ் வழியில் படித்த மாணவர்கள் பெரிதளவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 19.79% ல் இருந்து 1.99% சதவீதமாக குறைந்துள்ளது(அலார்ட்).
5.முதல் தலைமுறை மருத்துவர்கள் எண்ணிக்கை 25 ல் இருந்து 14.46
ஆக குறைந்துள்ளது.
6.2010 - 11ல் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்தவர்களில் 92.85 % பேர் முதல் முறையாக தேர்வு எழுதியவர்கள். ஆனால், 2020-21ல் இது 28.58 %ஆக குறைந்துள்ளது. மீண்டும் மீண்டும் தேர்வெழுதியவர்களே 71.42 % இடங்களைப் பிடித்துள்ளனர்.(ரிப்பீட்டர்ஸ் பேட்ச்)
குழுவின் முடிவுகள்:
1.பலதரப்பட்ட சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை முழுவதுமாக நீட் தேர்வு சீரழித்து விட்டது. 2.5 லட்சத்துக்கும் குறைவான வருமானத்தை உடையவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (மாங்கா கேட்டுக்கோ), பட்டியலின மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்
2.ரிப்பீட்டர்ஸூக்கு சாதகம், முதல் முறை எழுதுபவருக்கு பாதகம். 3. மன அழுத்தம் பதற்றம் மாணவர்களுக்கு அதிகரித்துள்ளது. 4. தரமான மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதை நீட் தேர்வு உறுதிசெய்யவில்லை.
5.12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்த்தால்தரமான மாணவர்கள் பயனடைவர்
6. மருத்துவ படிப்பில் முதுநிலை இடங்களில் 50 சதவீதத்தையும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பரிவில் 100 சதவீதத்தையும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு அளிப்பதால், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். இது மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பை குலைக்கிறது.
அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படாததால், இது சமூக நீதிக்கு எதிரானது. 7. மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் படிப்பவர்கள் கல்வி முறை மீதே நம்பிக்கை இழக்கிறார்கள்
8.நீட் தேர்வுக்கு முந்தைய மருத்துவர்கள், பிந்தைய மருத்துவர்கள் என பிரித்துப்
பார்த்தால், நீட் தேர்வுக்குப் பிந்தைய மருத்துவர்கள் அனைவரும் வசதியான, நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.
குழுவின்பரிந்துரைகள்: 1. நீட் தேர்வை அகற்றுவதற்கான சட்டரீதியான வழிகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.
2.2007ஆம் ஆண்டின் 3வது சட்டத்தைப் போல, மருத்துவக் கல்வியின்
அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை நீக்குவதற்கான ஒரு சட்டத்தை இயற்றி அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். 3. எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கைக்கு 12ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்களையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
4.Adversity Score" என்ற முறையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் மதிப்பெண்கணக்கிடும்போது அவர்கள் நிலையை கருத்தில் கொண்டு மதிப்பெண் நார்மலைஸ் செய்யப்பட வேண்டும்.
5.மனப்பாடம் செய்வதை விட கற்பதை ஊக்குவிக்க வேண்டும்.
6.எல்லா நிகர்நிலை பல்கலைகழகங்களையும் தன்னுடையகட்டுப்பாட்டில்
கொண்டு வருவதற்கான சட்டத்தை தமிழக அரசு இயற்றி, குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
இதுதான் குழுவின் அறிக்கை. தேவையற்ற விவாதங்களை தவிர்த்து இந்த குழுவின் அறிக்கை அனைவருக்கும் சேரும்படி செய்ய வேண்டும் என நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்.இதற்குமேல் இடமில்லை
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
“மன்னரே. நீங்கள் கண்ட கனவு ஒரு மிகப்பெரிய சிலை. பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மற்றும் ஒரு பகுதி மண்ணினால் ஆன சிலை அது. அதை ஒரு பெரிய கல் மோதி தூள் தூளாக்கி விட்டது.
மோதிய கல்லோ வளர்ந்து உலகை நிறைத்தது.” இது தானே கனவு ? தானியேல் கேட்க, மன்னன் பிரமித்துப் போய் தலையசைத்தான்.
தானியேல் அதன் விளக்கத்தைச் சொன்னார். அது அந்த நாட்டின் நிகழ இருக்கின்ற ஆட்சிகளையும், அதன் மாற்றங்களையும், எதிர்காலத்தையும் குறித்து பேசினார்து.
உலகத்துல ஒன்லி 20% பெண்கள் மட்டும்தான் அவங்களுக்கு சரியான,கம்பர்டபிலான ப்ராவை தேர்வு செய்கிறார்களாம்.இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னன்னா ஸ்போர்ட்ஸ் ப்ரா பிகினர்ஸ் இல்லை டீனேஜ் புள்ளைங்களுக்குனு அவங்களே ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க. அவங்கள சொல்லியும் தப்பில்லை அப்படி ட்யூன்
பன்னிட்டாங்க அவங்களை. ஆனா போர்ட்ஸ் மவுத் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான ப்ரா அல்லது ஸ்போர்ட்ஸ் ப்ரா தேர்வினால் மார்பக திசுக்களில் ஏற்படும் பாதிப்பினை விளக்கியுள்ளனர். நீங்க வாங்குற ஸ்போர்ட்ஸ் ப்ரா மூனு வகையா பிரிக்கப்படுது.
1.low impact bra 2. Medium impact bra 3. High impact bra
இதுல low impact bra நடை பயிற்சி, யோகா இல்லைனா strenth training இதுக்கு பயன்படுத்தலாம். ஆனா நம்ம பய புள்ளைங்க க்ராஸ் ஸ்ட்ராப் லோ இம்பாக்ட் ப்ராவை தான் ஜிம்முக்கு வாங்குவாங்க. அப்பறம் மீடியம் impact bra நடனம், சைக்கிளிங் இதுக்கு லாம் பயன்படுத்தலாம். ஆனா நடனத்துக்கு எதுக்கு sports
மதிப்பிற்குரிய பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு @Anbil_Mahesh அவர்களுக்கும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் @SEDTamilNadu அவர்களுக்கும் ஒரு பெரிய நன்றிகள். இன்று முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து எங்கள் பள்ளியை ஆய்வு செய்ய அலுவலர் குழு வந்திருந்தது. இதே போன்ற ஒரு ஆய்வுகடந்த
கோவிட் பள்ளி திறப்பின் போதும் நடந்தது. ஆனால் இந்த முறை சற்றும் எதிர்பாராமல் அலுவலர் குழு பள்ளியில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களின் விவரங்களை கேட்டு வாங்கி அந்த மாணவர்களின் EMIS எண்ணை எங்கள் வளாகத்திலேயே சோதித்தனர். அதில் மாற்றுச்சான்றிதழ்
பெற்ற 10 மாணவர்களின் விவரங்கள் எந்த பள்ளியிலும் சேர்க்கப்படாமல் common poll நிலையிலேயே இருந்தது. உடனடியாக கல்வி அலுவலர் எங்களை அந்த பத்து மாணவர்களின் பெற்றோருக்கும் தொடர்பு கொள்ள செய்து அவர்கள் எங்கு படிக்கிறார்கள் என்பதை விசாரிக்க சொன்னார். நாங்களும் தொடர்பு கொண்டு
KVPY applications invited
Are you a student who just completed your 10th, or right now studying your 11th or 12th Science subjects or just finished any of these ? Here is a wonderful opportunity for you to secure one of India's most prestigious scholarship - KVPY.
If you are planning to pursue science as a career and planning to join any basic science (BSc / BS) courses, you can get a fellowship worth 5000 per month while pursuing your studies any where in India. Yes you can apply for KVPY fellowship starting from 12th July 2021 till
25th August 2021. Aspirants will have to attend the KVPY aptitude test happening across the country on 7th November 2021. The application link is given below 👇
காதல் எப்படி எல்லோருக்கும் கை வந்த கலையாக இருப்பதில்லையோ அது போலத்தான் முத்தமும். இது கொஞ்சம் வாய் வந்த கலை. முத்தம் மட்டுமே சில நேரங்களில் மொத்த காதலின் பூரணத்தை உணர்த்தும். ஒரு சின்ன ஸ்பரிசம் முத்தமிடும் முன்பு வரும். மொத்த காதலையும் முத்தமே தந்துவிடும். முத்தம்
என்பது கையில் தொடங்கி காற்று வரை கூட செல்லும். ஏனோதானோ என்று கடமைக்கு தரும் முத்தங்களை குழந்தைகளே கண்டு பிடித்து விடுவார்கள் அப்பறம் காதலி கண்டு பிடிக்காமல் விடுவாரா?.
காதலில் முத்தம் தான் எல்லாமே. அன்பு, நம்பிக்கை, நெகிழ்ச்சி இப்படி எல்லாவற்றுக்குமான அடிப்படையே முத்தம் தான்.
நடிச்சா ஹீரோதான் என்று முதல் முத்தத்தை உதட்டில் தொடங்காதீங்க மக்கா... ஒரு நல்ல மாலை நேரம் இல்லை முன்னிரவு நேரம் பீச்சு பக்கமோ இல்லை ஒரு லாங் ட்ரைவ் காரில் போறப்பவோ கிடைக்கும் தனிமைதான் முத்தத்தின் விதை. மெல்ல அவரின் விரல் பிடித்து விரல்களுக்கு முத்தமிடுங்கள். அதை அப்படியே
வி.பி.சிங்...கேஜிஎஃப் பிஜிஎம் முழுக்க செட்டாகுற ஆள் இவர் மட்டும்தான். இந்தியா அப்படின்ற நிலப்பரப்பு மேடும் பள்ளமுமா மக்கள் மனசு மாதிரி இருந்த ஒரு இடம். அதை சரி பன்னனும் சமப்படுத்தனும்னு பெரிய வெறியோட செஞ்சு காமிச்ச ஒருத்தர்தான் திரு விபி சிங்.ஏதோ போற போக்ஙுவ மன்டல்
கமிஷன் அறிக்கையை நடைமுறைபடுத்தியவர் இல்லை. இவரோட வரலாறு கொஞ்சம் பெருசு ஆனா இவரை 2K பசங்க நாம் தமிழர் தம்பிங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்துல நாம இருக்கோம். 1931 ம் ஆண்டு இதே நாள் பிறந்தவர்தான் பிறக்கும்போதே ராஜபரம்பரை. அதுக்குன்னு ஆண்ட பரம்பரைனு கத்தி தூக்காம
ஒழுங்கா நியூக்ளியர் பிஸிக்ஸ் படிச்சு தேச சேவை செஞ்சார் 1969ல பர்ஸ்ட் பர்ஸ்ட் mla ஆகுறார். அப்படியே 1971ல் MP. இவரின் திறமை காரணமாக இந்திராகாந்தி வர்த்தக துறை இணை அமைச்சர் ஆக்க எமர்ஜென்சி டைம்லயும் கெத்தா இருந்தார்.இன்னிக்கெல்லாம் புழு கணக்கா ஊர்ந்து முதல்வர் பதவி பிடிச்சு வைச்ச