பூமா தேவி வாயப்பொளக்கப் போறா - வாங்க 70 ஆண்டுகளுக்குப் பின்னாள் போகலாம் என்கிற டூபாக்கூர் அபாய மணி...
டெக்னிகலி பார்த்தா நானும் ஒரு சூழலியர்தான். டைனோசார்கள் வாழ்ந்த காலளவு கூட இந்தப் பூமியில் மனிதன் ஓர் உயிரினமாக வாழ வழியில்லை என்று எழுதி வந்திருக்கிறேன். - 1
டைனோசார்களுக்கு அதன் அகோரப்பசியும், போட்டியின்மையும் அதன் மாண்டழிவிற்கு காரணிகள் என்றால், நமக்கு நம்முடைய அதீத அறிவும், பேராசையும் விரைவில் நமக்கான அழிவை தேடித்தரும் என்று ஒரு முடிவிற்கு வந்தடைந்தேன்.
ஆனால், வயது ஏற ஏற என்னுடைய பார்வையில் சில மாற்றங்கள் வந்திருக்கிறது. - 2
நான் சூழலியல் உணர்வுசார்ந்த மனதோடு வாழ்ந்தாலும், நவீன கண்டுபிடிப்புகளின் அனைத்து விதமான வசதிகளையும் பயன்படுத்தி இன்னல்கள் குறைந்த ஒரு வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகிறேன்.
போலவே...
நான் வசதியாக வாழறத்திற்கு இருக்கிற அனைத்து உரிமைகளும் இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு - 3
பிள்ளை பிறந்தா, அது வளரும் ↔️ அவர்கள் அனைவருக்கும் சாப்பாடு நேரத்திற்கு வேணும் ↔️ இயற்கை (?) உணவு தயாரிப்பு கால நீட்டிப்பை கோரியும், குறைந்த மகசூலையும் தரக் கூடியது ↔️ அனைவருக்கும் கல்வி, மருத்துவம் தேவை ↔️ அதனை அடைய - 4
நவீன போக்குவரத்து வசதி தேவை ↔️ சுகாதாரமான அளவில் வாழ நவீன கழிப்பறையுடன் கூடிய ஒரு வீடும், நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பும் அனைவருக்கும் வேண்டும் ↔️ அடுத்து துணை தேடல், குடும்பம் வளர்த்தெடுப்பு 🔃 பிள்ளைபேறு...
சுருங்கச் சொன்னால் சூழலியர் எப்படி ஒரு வாழ்க்கையை வாழறாரோ - 5
அப்படி ஒவ்வொருத்தரும் வாழ ஆசைப்படுறது தவறுங்களா?
மக்கட்தொகையை கணக்கில் கொண்டு கோவிட்-19 பெருந்தொற்றில் அதிக உயிரிழப்பு, 1918ல் நிகழ்ந்த ஸ்பானிஷ் ஃப்ளூ உயிரிழப்பை விட அதிகமாக இருக்கும் என்று கருதினேன். ஆனால், நம்மை நவீன அறிவியலும், தொழிற்நுட்பமும் காப்பாற்றி இருக்கிறது. - 6
இந்திய துணைக்கண்டத்தில் மட்டும் அன்று 1 கோடியே 20 லட்சம் பேருக்கு அதிகமானோர் மரணித்திருக்கிறார்கள்.
அது போலவே ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்னாள் இந்தியாவில் வாழும் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் ஒரு 50 - 55 ஆண்டுகாலமாக இருந்தது. ஆனால், இன்று அது 70 ஆண்டு - 7
காலமாக அதிகரித்திருக்கிறது. இது எப்படி சாத்தியமானது?
உணவு நச்சாகிவிட்டது. வியாதிக்காடு பெருகி விட்டது என்றெல்லாம் பேசுகிறோம். உண்மையோ பெருகி வரும் மக்கட்தொகையும், சராசரி ஆயுட்கால அதிகரிப்பும் வேறாக சொல்கிறது. அப்படியெனில் என்ன நடக்கிறது? - 8
வியாதிக்காடு பெருகியதாக நாம் புலம்புவதற்கு காரணம் - உடல் அதிக நாட்கள் உழைக்க உழைக்க பழுதடைவது இயற்கையின் இயல்பு (ஓர் இரு சக்கர வாகனத்தைப் போலவே). அதே நேரத்தில் நோய்களை கண்டறியத்தக்க மனித ஆற்றல் பல மடங்கு அதிகரித்துள்ளது. - 9
விளைவு நோய்க்கூறுகளை அக்கு வேறு, ஆணி வேறாக பிரித்து அறியத்தக்க தொழிற்நுட்ப கருவிகளும், மருத்துவமும், சிகிச்சையும் நடைமுறைக்கு வந்திருக்கிறது. எனவே நோயின் தன்மையறிந்து அவற்றிற்கு பெயரிட்டு அழைக்கிறோம். அப்போ இதற்கு முன்னாள் நம் முன்னோர்களுக்கு அந்த நோய்கள் எல்லாம் இல்லை - 10
என்றா பொருள்? அப்படி இல்லை இது. இருந்திருக்கும். அறியும் அறிவும் ஆற்றலும் நம்மிடையே வளர்ந்திருக்கவில்லை. அவர்களிடம் பரவலான நீண்ட ஆயுட்காலமும் இருந்திருக்கவில்லை.
இதிலிருந்து என்ன புரிகிறது. - 11
காலம் முன்னோக்கி நகர்வது. அதனையொட்டியே நம்முடைய வளர்ச்சியும் ஆற்றலும் இயற்கையில் முன்னோக்கிச் செல்ல உந்தப்படும். அதனோடு நம்மை தகவமைத்துக் கொள்ள அறிவியலின் அறிதாலோடு நம்மை தயார்படுத்திக் கொள்வோம் என்பதே உண்மை. தேவை விழிப்புணர்வு மட்டுமே. அச்சமில்லை!
-The end-
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வெளிப்படைத் தன்மையுடன் ஆண்களையும், பெண்களையும் ஒரே தட்டில் வைத்து பழகுவதை எப்படி நாம் நம் வளர்ந்த கட்டமைப்பில் வைத்து ஒருவரை நமது சட்டத்திற்குள் (frame) வர வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்.
அவர் தன்னுடைய மகளான இந்திராவிடம் எப்படி தோழமையுடன் பழகினாரோ - 2
ஆமாம், ஆர் எஸ் எஸ் பின்னணியிலிருந்துதான் அதிகாரிகள் வருகிறார்கள். இப்போ என்ன? - பிஜேபி வானதி சீனிவாசன்.
என்ன கொடுமையிது சரவணா!!!
காலனிய ஆட்சி அகற்றப்பட்டு இந்த நிலப்பரப்பின் பல நாடுகளை ஒன்றித்து ஒன்றியமாக்கி, எல்லா நிலையிலும் நவீன வாழ்விலிருந்து - 1
பின் தங்கிக் கிடந்த குகைவாழ்விகளின் தர்மா வாழ்விலிருந்து மீட்டெடுக்க ஜவஹர்லால் நேரு மட்டும் அன்றைய முதல் பிரதமராக பதவியேற்காமல் போயிருந்தால், இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் பல விசயங்கள் நமக்கு அறிமுகப்படுத்தப்படாமலேயே போயிருக்கும். - 2
அன்று நேரு தனது அறிவின் உயரத்தைக் கொண்டு சரியான நாடுகளோடு போட்டியிட்டு இந்த நாட்டிற்கு அறிமுகமே இல்லாத பல அறிவியல், சமூகத் துறைகளை அந்த நாடுகளுக்கு இணையாக எதிர்காலத்தில் வருமாறு தொடங்கி வைத்தார். ஆரோக்கியமான மக்களாட்சி பின்னணியில் சீர்படுத்தப்பட்ட நிலத்தில் அன்று - 3
பி•டி•ஆர் நம்மிடையே மாறி வந்திருக்கிற திராவிட சிந்தனைக் கொண்ட இளையோர்களுக்கான ஓர் அடையாள மனிதர்.
எப்படி?
ஒரு காலத்தில வெகுஜன ஊடகங்களின் வழியாக நமது பொது புத்தியில் சமூகநீதி, ஜாதியம், இடஒதுக்கீடு, பகுத்தறிவு, திராவிடம் என்று பேசினால், - 1/n @ptrmadurai
ஓரளவிற்கு படித்து விட்டோம் என்பவர்களிடையே, அது போன்ற சாய்வு நிலை "மேட்டிமை தனத்திற்கு" கீழே உள்ள வளர்ச்சியாக நம்ப வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த ஏழாண்டுகளில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கொஞ்சம் இறுக்கமும், கள அரசியலும் புரிந்து அந்த மனச்சிக்கலை உடைத்துக் - 2/n
கொண்டு நம்மில் பலரும் வெளிப்படையாக தங்களது அரசியல் நிலைப்பாட்டை முன் வைத்து எழுதியும் பேசியும் வருகிறோம்.
பி•டி•ஆரின் பின்னணியை வைத்து அவர் ஒயிட் காலர் சொல்லாடலுக்கு கீழாக இறங்கி, தான் பேசவிருக்கும் விசயங்களின் நிலமையின் தீவிரத்தை விளக்க அஞ்சுவார் என்ற நிலையில் - 3/n
இந்த ஊட்டி, கொடைக்கானல், தேராதூன் அப்படின்னு மலைப்பாங்கான இடங்களில் தங்கிப் படிச்சு (boarding school) வளர்ந்த பிள்ளைங்கதான் தனக்கு எப்படி அந்த வசதி வாய்ப்பு கிடைச்சிச்சின்னு தெரியாம மரம் மாதிரி சமூக உணர்வே இல்லாம வளர்ந்து நிற்பானுங்கன்னு நினைச்சேன்... contd
ஆனா பாரு அரசு பள்ளிகளிலேயே படிச்சு, அரசு பாடப் புத்தகங்களையும், நோட்டுக்களையும் வாங்கி எழுதப் படிக்க கற்றுக்கொண்டவிங்கக் கூட என்னமோ தானும் அந்த ஷெப்ஃபெர்ட் சர்வ தேச பள்ளியில படிச்சு வளர்ந்தவிங்க மாதிரி நட்டுக்கிட்டு பேசித் திரியாறனுங்களே அதெப்படிடா?
முட்டாபயலுகளா! சொல்லுறேன் கேட்டுக்கோங்க... வீட்டில இருந்து நடந்து போற அல்லது மிதிவண்டி மிதிச்சு போய்ச் சேருகிற தூரத்தில அவ்வளவு பள்ளிகளை திறந்து வைச்சதுனாலேதான் ஏதோ நம்ம தாத்தா, பாட்டிக்கு கிடைக்காத கல்வி வாசனை நமக்கும் கிடைச்சது. மறந்திடாதே!
வேட்டையாடிகளாக இருந்த பொழுது, நம்முடைய புலம்பெயர்வு என்பது விலங்குகளுடனும், அந்த நிலப்பரப்பின் தட்பவெப்ப நிலையையும் சுற்றியே இருந்தது. பிறகு சரியான நிலப்பரப்பு நீண்ட நெடிய தங்குதலுக்கு உகந்ததாக அமைந்த பொழுது மெல்ல வேளாண்குடிகளாக ஓரிடத்தில் நிலை கொள்ள ஆரம்பித்தோம். - 2
அதனையொட்டி வாழ்வும், சமூகமும் மொல்ல மெல்ல பல சிக்கலான கட்டமைப்பிற்குள் நகர்ந்து நாகரீகங்களாக எழுவதும், வீழ்வதுமென இந்த மனிதகுலம் கடந்து இன்றைய நிலையை வந்தடைந்திருக்கிறது.
இந்த சிக்கலான கட்டமைப்பில் ஒரு பரந்த நிலப்பரப்பின் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளவும், - 3
சமமாக அனைவருக்கும் வாழ்வாதார பொருட்களும், அதற்கான பாதுகாப்பையும் உறுதிப் படுத்த அவர்களிடையே பரந்துபட்ட பார்வை கொண்ட ஒருவரை தேர்ந்தெடுத்து கொடுத்து விட்டு, ஏனையவர்கள் அவரவர்கள் பணிகளில் கவனம் செலுத்தி வாழ்வதாக இருந்தது.