#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சுப்பிரமணி என்பவன் தனக்கு பயணம் செய்ய குதிரை வாங்க குதிரை சந்தைக்கு போனான். ஒரு குதிரை வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு குதிரையை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு ஓட்டி வந்தான். நியாயமான விலையில் நல்ல தரமான குதிரை கிடைத்தது என்று
சுப்பிரமணிக்கு மகிழ்ச்சி. தன் வேலையாள் ரவியை அழைத்து குதிரையை கொட்டிலில் அடைக்க சொன்னான். அதற்கு முன்பாக குதிரையின் மேலிருந்த சேணத்தை அவிழ்க்க முயற்சி செய்தான். அவனால் முடியவில்லை. தன் வேலையாள் ரவியை அழைத்து சேணத்தை அவிழ்க்க சொன்னான் சுப்பிரமணி. குதிரை மீதிருந்த சேணத்தை அவிழ்த்த
வேலையாள் ரவி, பொத் என ஏதோ கீழே விழுவதை கண்டு எடுத்து பார்த்தான். அது ஒரு சிறிய பொக்கிஷப்பை. உள்ளே பிரித்தால், ஆச்சரியத்தால் அவன் கண்கள் விரிந்தன. விலை மதிப்பற்ற நவரத்தின கற்கள் தகதகவென மின்னியது. அதை எடுத்து கொண்டு முதலாளி சுப்பிரமணியிடம் ஓடி காண்பித்தான். உடனே சுப்பிரமணி அந்தப்
பையை இப்படி கொடு, உடனே அந்த குதிரை வியாபாரியிடம் கொடுக்கணும் என்று சொல்லி புறப்பட்டான். பணியாள் ரவியோ, ஐயா இந்த புதையல் விவரம் யாருக்கும் தெரியப் போவதில்லை. இது இறைவனின் பரிசு. நீங்களே வைத்து கொண்டால் என்ன என வற்புறுத்தினான். சுப்பிரமணியோ ஒத்து கொள்ளாமல் புறப்பட்டு போனான். குதிரை
வியாபாரியிடம் சேணத்தை அவிழ்த்த போது கிடைத்த பொக்கிஷப் பையை கொடுத்ததும் நன்றியோடு வாங்கி கொண்டவன், அந்த பொக்கிஷப் பையை வியாபாரியிடம் கொடுத்து, உங்கள் நேர்மையை நான் மெச்சுகிறேன். தங்களுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்புகிறேன். இதிலிருந்து உங்களுக்கு பிடித்தமான கற்களை சிலவற்றை எடுத்து
கொள்ளுங்கள் என்று நீட்டினான். அதற்கு சுப்பிரமணி சிரித்து கொண்டே உங்களிடம் இந்த பொக்கிஷத்தை தரும் முன்பே இரண்டு விலையுயர்ந்த ரத்தினங்களை நான் வைத்து கொண்டேன் என்றான். உடனே வியாபாரி கற்களை எண்ணி பார்க்க எதுவுமே குறையவில்லை. சரியாக இருந்தது கண்டு குழம்பினான். உடனே சுப்பிரமணி நான்
சொன்ன இரண்டு ரத்தினங்கள் என்பது ஸ்ரீமத் பாகவதத்தில் கூறிய
1. நேர்மை.
2. சுயமரியாதை
என்றான் கம்பீரமாக. நேர்மையாளனாக வாழ்வது பெரிய விஷயமல்ல. தவறு செய்யக்கூடிய சந்தர்ப்பமும், வாய்ப்பும், வாய்த்தாலும் நேர்மையாக வாழ வேண்டும். வாழ்வில் ஒரு நாள் நேர்மையையாய் வாழ்ந்து பார்த்தால் அதன்
ருசி உணர்ந்து விட்டால், நாம் எதற்காகவும் நேர்மையை இழக்க மாட்டோம். தினம் தினம் ஸ்ரீமத் பாகவதம் படிப்போம், உயர்ந்த கருத்துகளை நம் வாழ்வின் லட்சியமாக கொள்வோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

18 Nov
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஸ்ரீமந் நாராயணனை நாயகனாகவும், தன்னை நாயகியாகவும் பாவித்து, ஶ்ரீ நடன கோபால் நாயகி சுவாமிகள் பாடிய பாடல்களும் நாமாவளிகளும் மிகவும் பிரபலம். அவர் பெரும்பாலும் மதுரையிலேயே வசித்தார். வயிற்றுக்கு வேண்டிய உணவை உஞ்சவிருத்தி மூலம் பெற்றார். பிரம்மச்சரிய வாழ்க்கை Image
வாழ்ந்தார். அவர் பாடிய தமிழ்ப் பாக்களாலும், சௌராஷ்டிரப் பாடல்கள்களாலும், அவருக்கு வரகவி எனும் பெயரை பெற்று தந்தது. அவருடைய பாடல்களில் அறவுரை, வைணவ தத்துவம், வைணவ பக்தி நெறி, நாயகனாகிய கண்ணனைப் பிரிந்து வாடும் நிலை ஆகியவை அதிகம் வெளிப்பட்டன. ஶ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் தம் Image
ஶ்ரீமடத்தில் தினந்தோறும் பகவத் ஆராதனை செய்யும் போது ஸ்ரீகிருஷ்ணனை நினைத்து பாசுரங்கள், கீர்த்தனைகள் பாடுவாதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்படி பாசுரங்கள் பாடும் போது அவர் கண்களில் கண்ணீர் மல்க பாடுவார். இதை தினமும் பக்தர்கள் பார்த்து கொண்டே இருந்தனர். அப்படி ஒரு நாள் அவர் கண்களில் Image
Read 10 tweets
18 Nov
Something we need to know and learn from:
An astrologer had come for Sri Maha Periyava’s darshan. He said, I have a very big family but very little income. The income I get out of practicing astrology is very less. I find it very difficult to survive. Periyava asked, “Oh Are you Image
living in the same ancestral house that your father was living in?” He said, no my elder brother is living in the same. I am living in another rental house that is on the western side of the ancestral house. Periyava said “Do not stay there. In the ancestral house, on the eastern
side, there is an old cow shed, isn’t it? You put-up a hut and stay there. For generations your family has ritualistically performed the Ambal pooja. Stay in the cow shed” (for it is the place where the Divine Mother herself dwells, as Periyava Himself has said many a time). He
Read 10 tweets
15 Nov
இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள் உள்ளன. அவை
#சைவம்
#சாக்தம்
#வைஷ்ணவம்
#காணாபத்யம்
#கெளமாரம்
#செளரம்
#ஸ்மார்த்தம்
சைவத்தின் முழுமுதற் தெய்வமான சிவனின் பாடல் பெற்ற கோவில்கள் 284ல் 274 தமிழ்நாட்டில் உள்ளன.
வைணவத்தின் 108 திவ்ய தேசத் தலங்களில் 84 தமிழ்நாட்டில்தான் உள்ளன.
கெளமாரத்தின் 21
#முருகன் கோவில்களில் 18 கோவில்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன.
கானாபத்தியத்தில் அஷ்ட #கணபதிகள் கோவில்கள் அனைத்தும் தமிழ்நாட்டில்தான்!
செளரத்தில் சூரியனை தெய்வமாக #தைப்பொங்கல் தினத்தன்று வழிபடுவது தமிழ்நாட்டில் தான்.
சாக்தத்தில் #பராசக்தி நவதுர்க்கை கோவில்கள்
அம்மன் கோவில்கள் பெண் தெய்வங்களுக்கு கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.
மேற்கண்ட ஏழு பெரும் பிரிவு
தெய்வங்களையும் ஒட்டு மொத்த இந்துக்களாக வணங்கும் ஸ்மார்த்தர்கள் இருப்பதும் தமிழ்நாட்டில் தான் .
#பதிணெட்டு_சித்தர்கள் தோன்றி வாழ்ந்து, ஜீவ சமாதி அடைந்ததும் தமிழ்நாட்டில்தான்.
Read 6 tweets
15 Nov
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கப்பல் கவிழும் ஓர் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் மட்டுமே தப்பிக்கவுள்ள மரப் பலகையில், மனைவியை விட்டுவிட்டு கணவன் மட்டும் தப்பிச் செல்கிறார். கவிழும் கப்பலில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக நம்ம கொழந்தையப் பத்திரமா பார்த்துக்கங்க
என்று சொல்லி மூழ்கினாள். தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்திற்குப் பின் பல ஆண்டுகள் கழித்து அந்தப் பெண் தன் தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது. தாய்க்கு உயிர்க் கொல்லி நோய் ஒன்று இருந்திருப்பது அப்போது தான் அவளுக்குத் தெரிய வந்தது. கப்பல்
கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார் : உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும். நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் என்ன செய்வது? நமது பெண்ணை வளர்த்தெடுக்க உன் குறிக்கோள் நிறைவேற, நான் மட்டுமாவது உயிர் தப்பியாக வேண்டுமே!
Read 5 tweets
14 Nov
தட்சிணாமூர்த்தி என்பவர் வேறு. குரு பகவான் என்பவர் வேறு. பலரும் இருவரையும் ஒருவராக நினைத்து வழிபடுகின்றனர். தட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அவை:
தட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர். தெற்கு நோக்கி கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு
அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர். இவர் எப்போது தியானத்தில் ஆழ்ந்திருப்பார். தட்சிணாமூர்த்தி என்பவர் ஞான குரு. ஆதி குரு என்றும் அழைக்கப்படுபவர்.அவருக்கு விருப்பமான நிறம் வெண்மை.
நவகிரகங்கள் என்பது இறைவன் இட்ட கட்டளையை,
கடமையைச் செய்யக் கூடிய ஒன்பது கோள்களாகும். அவற்றில் ஒருவர் தான் #குருபகவான் எனும் ப்ரஹஸ்பதி. இவர் தேவர்களுக்கு ஆசிரியர். ஆசிரியர் தொழிலைச் செய்வதால் இவர் குரு என அழைக்கப்படுகிறார். நவகோள்களில் 5 ஆம் இடத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து, வியாழனாக இருந்து உயிர்களுக்கு முன்ஜென்மங்களில்
Read 8 tweets
14 Nov
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் எப்பொழுதும் தன்னந்தனியாக வேட்டையாடுவதை விருப்பமாக கொண்ட அரசன் கஜேந்திரன் வழிதவறி காட்டுக்குள் வெகுதூரம் சென்றுவிட்டான். காட்டில் முனிவர் ஒருவர் குடில் அமைத்து தங்கி இருப்பதை கண்டு அன்று இரவுப் பொழுதை அங்கேயே கழிக்கலாம் என்று முனிவரிடம் தங்க அனுமதி கேட்டான்.
முனிவரும் தாராளமாக தங்கி கொள்ளுங்கள் அரசே என கூறினார். இருவரும் அந்த சிறிய குடிலில் தூங்க ஆரம்பித்தனர்.
முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த இரவில் குடிலைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அரசரால் தூங்கவே முடியவில்லை. அவர் அன்று முழுவதும் வேட்டையாடி களைத்து இருந்தார். மறுநாளும்
அலைச்சல் இருக்கிறது.
அதை நினைக்க நினைக்க அரசருக்குக் கோபம் அதிகமானது. நாய்களோ வெறித்தனமாகக் குரைத்து இரவின் அமைதியைக் கெடுத்தன. இத்தனைக்கும் மத்தியில் முனிவர் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பிய அரசர் கஜேந்திரன், என்ன மனிதர் அய்யா நீங்கள்? இவ்வளவு சத்தத்துக்கு
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(