கல்வெட்டுகள் கூறும் நீர்பாயும் உரிமை, நீர்பாயும் நேரம் பற்றிய தகவல்கள்!
நன்செய் நிலங்களில் பயிர் செய்தபோது ஊரிலிருந்த குளம், ஏரி ஆகியவற்றை ஊர்ப் பொதுமையாக்கி இன்னின்ன நிலங்களுக்கு இன்னின்ன நேரம் இன்னின்ன மடை வழியாக நீரைப் பாய்ச்சிக் கொள்ளலாம் எனப் பிரிக்கப் பெற்று இருந்தன.
அதன்படியே நீரைப் பாய்ச்சி வேளாண்மையும் செய்து வந்தனர்.
தற்பொழுது வருவாய்த் துறையினரால் நிலத்திற்குப் பாயும் நீருக்கு வரி விதிக்கும்போது, ஒரு பாசத்தின்கீழ்உள்ள நிலத்திற்குப் பிறிதொரு பாசனத்திலிருந்து நீரைப்பாய்ச்சி வேளாண்மை செய்தால்,
அதை முறையற்ற பாசனம் எனக் கருதித் தண்டத்தீர்வை விதிக்கப் பெறுகிறது. எனவே, ஒவ்வொரு பாசனத்திலிருந்தும் இன்னின்ன நிலங்களுக்கு மட்டுமே நீர் பாயவேண்டுமென வரன்முறைப் படுத்தப் பெற்றுள்ளது.
சிலநேரங்களில் ஒரு பாசனத்தின் உரிமையுள்ள நிலத்திற்குப் பிறிதொரு பாசனத்தினின்றும் நீரைப்பாய்ச்சி..
வேளாண்மை செய்ய அனுமதிக்கப் பெறுகிறது.
அவ்விதப் பாசன உரிமை உடையவற்றை இன்று "இசா ஏரி" என்றழைக்கின்றனர்.
அம்முறைகளும் பண்டைக் கால நடைமுறை வழக்கில் இருந்ததாகக் கல்வெட்டின் வாயிலாக அறியலாம்.
#புதுக்கோட்டை மாவட்டம் #மயிலப்பட்டி கிராமத்திலுள்ள கல்வெட்டில் கரியமாணிக்க விண்ணகர எம்பெருமாள் கோவில் உள்ளது.
அக்கோவில் நம்பியாரும் சபையாரும் நிலவிலைப் பிரமாணம் செய்து கொடுத்தபோது, வரி முறைகளைத் தெளிவாக விளக்கி நீர் பாய்ச்சும் முறையைக் குறிப்பிடுகையில்...
இரண்டு குளத்து நீரையும் வேளாண்மைக்காகப் பாய்த்துக் கொள்ளலாம் எனவும்,
அக்குளத்தை அடைத்து வேண்டிய விழுக்காட்டின் அளவுப்படியே நீரைப்பாய்ச்சிக் கொள்ள வேண்டுமெனவும் பின்வரும் கல்வெட்டில் கூறப் பெற்றுள்ளது.
ஒரு குறிப்பிட்ட வாய்க்காலின் வழியாகக் குறிப்பிட்ட நிலத்துக்கு மட்டுமே நீரைப் பாய்த்து வேளாண்மை செய்யப் பெற்றுள்ளது என்பதை,
சோழர் காலத்தில் பொய்க்கணக்கு எழுதியதற்காக அளிக்கப்பட்ட தண்டனை பற்றிய கல்வெட்டுச் செய்தி!
3-ம் இராசராசசோழனின் 19-ம் ஆட்சியாண்டில் (பொ.பி 1235) பொறிக்கப்பெற்ற #தஞ்சாவூர் மாவட்ட கள்ளப்பெரம்பலூரில் உள்ள கல்வெட்டுச் செய்தியில் ஒருவன் வேலை நீக்கம் செய்யப் பெற்றதைக் குறிப்பிடுகின்றது.
பொய்க் கணக்கை எழுதும் முறை புதியதன்று. அம்முறை தொடர்ந்து நடைமுறையில் இருந்துள்ளது.
பாண்டியகுலாசனி வளநாட்டில் தஞ்சாவூர் கூற்றத்தில் இராசசுந்தரி சதுர்வேதி மங்கலத்து மகாசபையார் அப்பணி நீக்க முடிவை எடுத்துள்ளனர்.
அதன்படி அவ்வூர் நில உரிமையாளராயிருந்த "சேஞலூருடையான் மதளை உத்தமபிரியன்" என்பவன் பொய்க் கணக்கை எழுதி வந்தான்.
அவன் அனைவருக்கும் பகைவனாக இருந்து தவறான முறையில் கணக்கெழுதி வந்தான்.
முதியோர் பாதுகாப்பு என்ற பெயரில் அரசாங்கங்கள் இன்று பல்வேறு திட்டங்களை, அறிவிப்பதைக் காண்கிறோம். அவர்களுக்கான உதவிகளைப் பணமாகப் பெறவும், மருத்துவ சலுகைகள், பயணக் கட்டணத்தில் சலுகை, ஆலயத்தினுள் நடக்க முடியாதவர்களுக்கு மோட்டார் வாகனங்கள் என 1/n
இப்படி பல அம்சங்கள் நடைபெறுகின்றன என்பதை நாம் அறிவோம். இந்த விஷயம் பழங்காலத்தில் இருந்தே ஓர் அறமாக பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வயதில் முதியவர்களாக இருப்பவர்களால் வெகு தொலைவு நடக்க இயலாது. அவர்களுக்கு திருக்கோயில்கள் உதவி செய்திருக்கின்றன. 2/n
இவர்களுக்கு உதவி செய்வதற்காகவே பண்டை நாளில் திருக்கோயில்களில் அறச்சாலைகள், மடங்கள், சத்திரங்கள் போன்றவை இருந்தன.
#கும்பகோணம் நாகேசுவர சுவாமி கோயிலில் #அறச்சாலை இருந்ததாக சோழர் காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது... 3/n
The third regnal year (1055 CE) of #RajendraChola-II inscription in #Jambai Village in #Villuppuram district records the gift of 32 Kasu in memory of a lady by name Sendan Umaiyal (சேந்தன் உமையாள்) for burning a perpetual Nanda Lamp in the temple of 1/n
Thanthontri-Mahadevar at #Valaiyur alias Rajendra-puram by one "Palanguran Kunran" (பழங்கூரன் குன்றன்) the Tax Collector of #Kugurppadi the hamlet of Narippalli-nadu.
The gift is said to be in response to a demand made by the community "Nangudisai Padinenbhumi Nanadesi" 2/n
நான்குதிசை பதினெண்பூமி நானாதேசிகள் (வெளிநாடுகளில் சென்று வாணிபத்தில் ஈடுபடுபவர்கள் - வணிகப் பெருங்குழுக்கள்) who held him responsible for the suicide of that lady by poison because of some threat held out by him with regard to a tax due! 3/n
சங்க காலத்திற்கு முன்பிருந்தே மன்னார் வளைகுடாவில் எடுக்கப் பெற்ற முத்துக்கள் கிரேக்க, ரோமானிய நாடுகளில் மிகவும் புகழ்பெற்று விளங்கின.
இதற்கு மெகஸ்தனிஸ் முதலான வெளிநாட்டவர் குறிப்புகள், சங்க இலக்கியங்கள், பாளி மொழி நூலான மகாவம்சம் போன்றவை சான்று தருகின்றன
சங்க இலக்கியங்கள் பாண்டிய நாட்டை ஒட்டிய கடல் பகுதியில் #முத்துக்குளித்தல் பற்றியும், இத்தொழில் புரிந்த #பரதவர்கள் பற்றியும் மிகுந்து குறிக்கின்றன.
அறுபதுகள் (1960-69) வரை மன்னார் வளைகுடாவில் #முத்துக்குளித்தல் தொடர்ந்து நிகழ்ந்து வந்துள்ளது!
கடந்த நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி செயற்கையாக முத்துச்சிப்பி வளர்க்கும் தொழில்நுட்பம் இந்தியாவிலும், பிறநாடுகளிலும் சிறப்பாக ஐப்பானிலும் வளர்ந்த காரணத்தினால் மரபுவழி #முத்துக்குளித்தல் தற்போது நடைபெறுவதில்லை.
#சட்டிச்சோறு எவ்வாறு கொடுக்கப்பட்டது என்பதை பின்வரும் கல்வெட்டுகள் விரிவாக எடுத்துரைக்கின்றது!
#சட்டிச்சோறு என்பதற்கு கோயில் வேலைக்காரர்களுக்கு கொடுக்கப்படும் "உரிமை பிரசாதம்"என திரு T. N சுப்ரமணியம் அவர்கள், "தென்னிந்திய கோயிற் சாசனங்கள்" நூலில் விளக்கம் கூறுகிறார்.
இது திருவிழாவிற்கு வரும் அடியார்களுக்கு, யாத்திரிகர்களுக்கு அளிக்கப்பட்டதாக பல கல்வெட்டுக்கள் கூறுகின்றன!
க) திருவண்ணாமலைக் கல்வெட்டு:
முதலாம் இராசேந்திர சோழன் காலத்தில் திருவண்ணாமலைக் கோயிலில் பல பணிகள் நடைபெற்றிருக்கின்றன.
இவனுடைய பணி மகன் ஒருவன் “பாண்டிய உதய திவாகரன்” என்பவன் சோழமண்டலத்து அருமொழித்தேவ வளநாட்டு ஓர்வலக் கூற்றத்து ராஜராஜ நல்லூரைச் சேர்ந்தவன்.
பண்டைத் தமிழ் மக்கள் பொருளீட்டும் நோக்கில் கடல் வணிகத்தில் ஈடுபடக் கலங்களைப் பயன்படுத்தியதோடு, கடற் போருக்கும் கலங்களை மிக அதிக அளவில் பயன்படுத்தி வெற்றியிற் சிறந்தவர்களாக விளங்கினர்...!
பண்டைக் காலங்களில் மேலைக் கடற்கரைக்கு வந்த மேலை நாட்டுக் கப்பல்களைக் கடம்பர் நாட்டுக் கடற் கொள்ளைக்காரர்கள் கொள்ளையடித்தனர். இதனால் சேர நாட்டுத் துறைமுகங்களுக்கு வெளிநாட்டுக் கப்பல்கள் வர அஞ்சின!
சேர நாட்டில் #செங்குட்டுவன் என்னும் சேர மன்னன் தனது கடற்படையின் வலிமையால் கடற்கொள்ளைக் கூட்டத்தை அடக்கி,
"கடல் பிறக்கோட்டிய குட்டுவன்"
என்று #பதிற்றுப்பத்து பாடலொன்றில் பின்வருமாறு புகழ்ந்துரைக்கப் பெற்றான்!