நம்ப குரூப்ல இங்க எல்லோரும் இப்போ ஒரே apartment complexல இருந்தா எப்படி இருக்கும்... ஒரு #சின்ன_கற்பனை....
[இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களுக்கு நம்மவர்கள் பெயர்களை மட்டும் உபயோகப்படுத்தி உள்ளேன். மற்றபடி.... நிகழ்ச்சிகள் எல்லாம் கற்பனையே.... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.... தவறாக நினைக்காதீர்கள்... தவறு என்றால் மன்னிக்கவும்]
ராயப்பேட்டைலேந்து towards south போனால்.... லஸ் சிக்னல்... அதுல ரைட்ல திரும்பி ஒரு அரை கிலோமீட்டர் தூரம் போய்.... நாகேஸ்வர ராவ் பார்க்குக்கு எதிரே பழமுதிர் நிலையத்துக்கும் தளிகை எனும் ரெஸ்ட்டாரண்ட்டுக்கும் இடையே உள்ள சின்ன ரோட்டில் போனால்.... அதுதான் கென்னடி முதல் தெரு....
அங்கே தான் இருக்கு இந்த... பிரம்மாண்டமான "தமிழக அபார்ட்மெண்ட்".
வாங்க.... காம்பவுண்ட் தாண்டி கொஞ்சம் உள்ளே போகலாம்.....
அதோ அங்க பாருங்க.... நாலஞ்சு பெரிசுங்க.... வாங்க... வாங்க.... என்ன பேசுராங்கனு... கொஞ்சம் ஒட்டுக் கேக்கலாமா?????
(ஊர் வம்புன்னா... நமக்கு அல்வா சாப்பிடற மாதிரி.... வாங்க.. வாங்க... அப்படியே கதைக்குள்ளயும் போயிடலாம்...)
---------------
"நானும் பல தடவை சொல்லி பாத்துட்டேன்.... உங்காத்துல மாதிரி தான் எங்காத்துலேயும்.... சதா சர்வகாலமும்... ஒரே அர்ச்சனை தான் போ...." சலித்துக் கொண்டார் கண்ணன் என்கிற.... @aarjeekaykannan தான்...
"சாயங்காலம் ஆனா ஒரு சினிமாக்கு போனோமா.... இல்ல ...
திடீரென சீனி "அங்க பாரு... நாம பேசிண்டு இருக்கறத எங்காத்து கெழவி... மேலே balconyலேந்து நோட்டம் விடறா பாரு.... இத வச்சுண்டே... ஆத்துக்கு போனவுடனே.... ராமாயணத்த ஆரம்பிப்பா....
என்னமோ.... நாம ஸ்கூல் பசங்க மாதிரி.... இங்கே போகாதே.... அங்கே நிக்காதே... அவன்ட்ட பேசாதே.... இவளோட என்ன வம்பு....ஒரே ரோதனை...ச்சை" சீனியின் குரலில் உச்சம் தெரிந்தது.
"நம்ப தமிழக அபார்ட்மெண்ட்ல இருக்கற எல்லா ரிடயர்ட் ஜென்டில்மேன்களும் சேர்ந்து ஒரு சங்கம் ஆரம்பிக்கலாமா?...
அப்போ தான் இந்த கெழவிங்க தொல்லை பத்தி... நாம தைரியமா மீட்டிங்ல பேச முடியும்" - இது சீனியின் ஆலோசனை.
"அடேய்... என்னடா... கொஞ்சம் கூட பயமில்லாம... இப்படி பட்டுனு சொல்லிட்டே...
அப்புறம்... பூவாவுக்கு என்ன பண்ணுவே... நீ பாட்டுக்கு பேசிட்டு போயிடுவே... அப்புறம் கஷ்டப்படப் போவது யாரு?" எச்சரித்தார் @aarjeekaykannan
"ஆமாம்டா... இவன் சொல்றதும் சரிதான்... ஏடாகூடமா ஏதாவது பேசிட்டு போனா.... அப்புறம் சோத்துல உப்ப அள்ளிப்போட்டு... ப்ராணனை வாங்கிடுவாளுங்க...
கெழவிங்கள... சாதாரணமா நெனக்கப் படாதுடா...அதுவும் எங்க வீட்டு கெழவி.... நான் தூங்குறப்போ... வேணும்னே காலை உதைச்சுட்டு...
கெழம் தூங்கறது பாரு... பன்னி மாதிரின்னு சொல்லிட்டு போகும்... ஏடாகூடக் கெழவி" இதுவரை மௌனமாக இருந்த @naturaize (இந்த பதிவை உன் ஆம்படையாட்ட காட்டிடாத.... Becareful... அப்புறம் உன் பாடுதான் கஷ்டம் சொல்லிட்டேன்)
"சரிய்யா.... இப்படியே பேசிட்டு போனா.... இவங்க அட்டூழியத்த தடுக்க என்னதான் வழி?" - இடையே புகுந்து கேட்டார் @GopalanVs2
"இதுக்கு... ஒரு ப்ளான் இருக்கு...அதுதான் சரியான வழி.... இதை செஞ்சுட்டோம்னா... கெழவிங்க எல்லாம் நம்ம காலடியில் விழுந்து கெடப்பாங்க... நமக்கும் திட்டு விழாது...
இதைத் தவிர வேறு வழியில்லை... எல்லாரும் பக்கத்துல வாங்க..." என்று சொல்லி.... கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஒருவர் தோள் மேல் ஒருவர் கைவைத்து எதிரணியின் வியூகத்தை எதிர்கொள்வது பற்றி ஆலோசிப்பது போல ரகசியமாக பேசினர்.
தமிழக அபார்ட்மெண்ட் ரிடயர்ட் பெரிசுகளின் வியூகம் வடிவம் பெற்றது..
மெதுவாக தலையணை பக்கத்தில் மொபைல் அலாரம் சத்தம் கேட்டு சீனி துள்ளி எழுந்தார்
இதோ ஆரம்பிச்சுட்டேன்ல மனதில் சொன்னபடி கெழவியைப் பார்த்தார் நேத்திக்கு நிறைய வேலை செய்த களைப்பில் அசந்து தூங்கி கொண்டு இருந்தாள் ருக்கு.
பூனை போல சத்தம் போடாமல் நடந்து அவசர அவசரமாக காலைக்கடன்களை முடித்து வெளியே வந்தார்.
பால்கார்டை எடுத்து கொண்டு நைசாக வெளியே வந்து தெரு முனையில் இருக்கும் பால் பூத்துக்கு வந்தார் சீனி. ஏற்கெனவே அங்கு வந்திருந்த @revenge1967@vibhu_prabhu 👍👍👍 காட்டி சத்தம் இல்லாமல் சிரித்தார்கள்.
பாலை வாங்கிண்டு கிடுகிடுவென ஆத்துக்கு வந்து கேஸ் ஸ்டவ்ல வெந்நீர் போட்டு ஃபில்டர்ல இருந்த கோதாஸ் காஃபி பவுடர்ல வெந்நீரை ஊற்றினார் ஐந்து நிமிஷத்தில் பால் பொங்கி வர, ஸ்டவ்வை ஆஃப் பண்ணிட்டு உடனே பக்கத்தில் sinkல பாத்திரத்தை விம் பார் போட்டு பளபளன்னு தேச்சு அலம்பி கவுத்து வைச்சார்.
இதுக்குள்ள ஃபில்டர்ல டிகாக்ஷன் இறங்கி இருந்தது. கிச்சன் லைட்டை ஆஃப் பண்ணிட்டு... கிடுகிடுன்னு பாத்ரூமுக்கு போய்... ஷவரில் நன்றாக குளித்துவிட்டு... ரொம்ப மடியோட சாமி பிறைக்கு வந்து வெள்ளி அம்மன் விளக்கை ஏற்றி... Cycle brand ஊதுபத்தி ஏற்றி வைத்தார் சீனி....
விபூதி டப்பாவை தேடி.... அது ஃப்ரிட்ஜ் மேல இருக்கறதை கண்டு பிடித்து கை நிறைய எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டார்.... அட... இது கூட நல்லா இருக்கே!!!!
இப்போது மறுபடியும் கிச்சனுக்கு போய்.... ஒரு பெரிய டம்ளரில் ஸ்ட்ராங் காஃபி தயார் செய்து அதை ஒரு டவராவில் வைத்து....
பெட்ரூமுக்கு எடுத்து சென்றார். ருக்கு இன்னமும் தூங்கி கொண்டு தான் இருந்தாள்...
இதப் பாருடா.... இன்னும் எழுந்துக்கல....
சீனி காபி டம்ளரை பக்கத்தில் இருந்த டேபிள் மேல் வைத்து விட்டு.... ருக்கு அருகே சென்று.... "மா.... ருக்கு.... எந்திரி மா" என்று ருக்குவை எழுப்பினார்.
நல்ல தூக்கத்தில் இருந்து எழுந்த ருக்கு.... சீனியின் கோலத்தைப் பார்த்து விக்கித்து போனாள்.
சீனி என்ன ஆச்சு உனக்கு.... காலம்பறயே எழுந்து குளிச்சு.... ஒரே ஆச்சரியமா இருக்கு.... Something is wrong.... சீனி ஏதாவது சில்மிஷம்.. கில்மிஷம் பண்ணிட்டியா.... மரியாதையா சொல்லிடு....
நேத்திக்கு கெழங்கட்டை எல்லாம் குசுகுசுன்னு பேசிண்ட போதே நெனச்சேன்... இந்த வயசுல என்ன விஷமம் பண்ணினே.... சொல்லிடு.
என்ன ருக்கு இப்படி ரொம்ப டேமேஜிங்கா பேசற.நேத்திலேந்து நான் திருந்திட்டேன். இதோ பார். உனக்காக உனக்கு புடிச்ச மாதிரியே ஸ்ட்ராங் காஃபி போட்டுண்டு வந்திருக்கேன் பாரு...
சீனியின் செயலால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனாள் ருக்கு.... அவள் முகத்தில் அவ்வளவு பரவசம்...
சீனி இப்போதான் வயித்துல பால் வார்த்தா மாதிரி இருக்கு. வைஷாலி கேட்டா ரொம்ப ஹேப்பியா ஃபீல் பண்ணுவா... இப்படி என் பக்கத்துல வந்து உக்காரேன்... இந்த காஃபில கொஞ்சம் நீயும் குடி சீனி....
இல்லை ருக்கு.... @krishnananban55 சொன்னபடி... போன வாரத்தில் இருந்து நான் காஃபி குடிக்கறதில்லேனு ஒனக்கு தெரியும்... So don't compel me....
வேணா ருக்கு.... காஃபி குடிக்கறதில்லேன்னு சங்கல்பம் பண்ணிண்டு இருக்கேன்.. so don't force me.
பரவால்ல சீனி... ஆசையா தரேன்.. ஒரேயொரு சிப்.... என்று சொல்லிக் கொண்டே.... சீனியின் வாயருகே டம்ளரை கொண்டு சென்றாள்...
இருதலைக் கொள்ளி எறும்பு போல இருந்தது சீனியின் நிலைமை.... அவன் வாய்க்கும் டம்ளருக்கும் இடையே இரண்டு இன்ச் தான் இடைவெளி....
அப்போது....
.....
......
எங்கிருந்தோ.... பறந்து வந்து அருகில் விழுந்தது... ஒரு சொம்பு!!!
சீனிக்கு தூக்கிவாரி போட்டது... எதிரில் பத்ரகாளி போல நின்றிருந்தாள் ருக்கு...
மனுஷன்னா... காலைல எழுந்துக்கணும்... எட்டு மணி வரைக்குமா... எருமையாட்டம் தூங்கறது!?!?...
அதுவும் சின்னப் புள்ளைங்க மாதிரி தூக்கத்திலேயும்... ருக்கு... புக்குனு பொலம்பறது.... எழுந்துருய்யா... சீக்கிரம்..
"காலாகாலத்துல எழுந்து கோவில் கொளம்னு போகாம எப்பப்பாரு நாலு கெழவனுங்கள சேத்துண்டு #மோடி_பண்ணினது_சரியா#மாடி_ஏறினது_பிரியா"னு வெட்டிக்கதை பேசிண்டு அலைய வேண்டியது....
வந்து எனக்குன்னு வாய்ச்சிருக்கு பாரு.... போன ஜென்மத்துல ஏகப்பட்ட பாவம் பண்ணியிருக்கேன்.... ஈஸ்வரா.... என்னை இந்த கொசுத் தொல்லைலேந்து காப்பாத்த மாட்டியா"னு அர்ச்சனை பண்ணிண்டே... கையிலிருந்த தொடப்பத்தால் பெட்ரூமை பெருக்கினாள் ருக்கு.
ருக்கு வீசிய சொம்புல இருந்த சில துளி தண்ணீர் சீனியின் முகத்தில் விழுந்தன
நல்லவேளை இன்னமும் நம்ம மேல இவளுக்கு கொஞ்சூண்டு பயம் இருக்கு. இல்லாட்டி தலைய பாத்து வீசாம சொம்பை கட்டிலுக்கு வீசி இருப்பாளா😢😢😢😢😢" என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டு வெளியே வந்து balconyயில் நின்றார் சீனி
(கதையையும் பின்னர் வரும் பின்குறிப்பையும் தவறாமல் படிக்கவும்)
ஒரு குதிரையில் வெளியூர் சென்று கொண்டு இருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டு சற்று நேரம் ஓய்வு எடுத்து செல்லலாம் என்று எண்ணி குதிரையை விட்டு இறங்கி குதிரையை அருகில ஒரு மரத்தில் கட்டினான்.
குதிரை உண்பதற்கு புல் போட்டு விட்டு சத்திரத்துக்குள் நுழைந்தான். அப்போது அங்கிருந்த ஒரு குறும்புக்கார இளைஞன் ஒருவன் குதிரையின் வால் முடியைப் பிடித்து இழுத்தான்.
இதைப் பார்த்த அந்த வழிப்போக்கன், "தம்பி, இது முரட்டு குதிரை. வால் முடியைப் பிடித்து இழுக்காதே. அது உதைத்தால் உன் பற்கள் எல்லாம் போய்விடும். ஜாக்கிரதை" என்று எச்சரிக்கை செய்தான்.
அந்த இளைஞன் இந்த எச்சரிக்கையை சிறிதும் பொருட்படுத்தவில்லை.
"அப்பா இருக்காரா தம்பி?" என்று சாயங்காலம் ஒரு பெரியவர் வீட்டுக்குள் வந்தார் என்றால்....
ஒன்று அவர் பையனுக்குக் கல்யாணம்.
இல்லையென்றால் அவர் தெருவில் ஸ்ட்ரீட் லைட் எரியவில்லை என்று அர்த்தம்.
ஸ்ட்ரீட் லைட் மேட்டர் என்றால் வாசலோடு முடிந்துவிடும். "நாளைக்கு கார்ப்பரேஷன் ஆஃபீஸ்ல சொல்லி வர சொல்லிடரேன். சேஷாத்ரி வீட்டுக்கு பக்கத்து வீடு தானே நீங்க?"
ஆனால் மேற்படி சொன்ன முதல் விஷயம் என்றால் பேச்சு கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும்.
"பையனுக்கு கல்யாணம் வெச்சிருக்கேன்" என்று சிரிப்பார்.
என்னமோ பையனுக்கு குண்டு வைத்திருக்கிறேன் என்று சொல்வது போல...