திடீரென ராஜா இப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று எதிர்பாராத மந்திரி, "மன்னர் பெருமானே! இதற்கான பதிலை நாளை சொல்கிறேனே?" என்று முறையிட்டார்
மறுநாள் காலை அந்த மந்திரி தன்னிடம் வேலை செய்யும் ஒருவனைக் கூப்பிட்டு, "நான் சொல்வது போல செய்தால் உனக்கு நூறு வெள்ளிக் காசுகள் தருகிறேன்" என்றார்
அந்த வேலைக்காரனும் அமைச்சர் சொல்வது போல் செய்வதாக உறுதி கூறினான்.
உடனே மந்திரி அவனிடம், "உன்னை நான் இப்போது மன்னரின் அரண்மனைக்கு அழைத்து சென்று உன்னை மன்னரிடம் அறிமுகம் செய்து வைப்பேன்.
அச்சமயம் மன்னர் உன்னிடம் சிலபல கேள்விகள் கேட்பார். நீ வாய் திறந்து பதில் எதுவுமே பேசாமல் மௌனமாக இருக்க வேண்டும். சரியா?"
மந்திரி வேலைக்காரனை அரசவைக்கு அழைத்து சென்றார்.
"மன்னர் மன்னா! இதோ இருக்கிறானே இவன் எனது உறவினன். மெத்தப் படித்தவன்.
தாங்கள் என்ன கேள்வி கேட்டாலும் இவனால் உடனடியாக பதில் கூற முடியும்" என்று அவனை மன்னருக்கு அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர்
மன்னர் அவனை நோக்கி முந்தைய நாள் அமைச்சரிடம் கேட்ட அதே கேள்வியை, "முட்டாள்களிடம் சில நேரங்களில் பேச நேரிட்டால் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?" மறுபடி கேட்டார்
அந்த வேலைக்காரன் அமைச்சர் சொன்னபடி மன்னர் கேட்ட கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.
மன்னர் பலமுறை பல்வேறு விதத்தில் இதே கேள்வியை கேட்ட போதும் அவன் பதில் ஏதும் சொல்லவில்லை.
மன்னர் அமைச்சரை நோக்கி, "என்ன? உங்கள் உறவினன் பலமுறை கேட்டும் இதற்கு பதில் சொல்லாமல் மௌனம் சாதிக்கிறானே!!?? நீங்கள் சொன்னது போல் இவன் அறிவாளியாக இருப்பான் என்று தோன்றவில்லையே?" என்று சற்று கோபத்துடன் சொன்னார்.
அதற்கு அமைச்சர், "மன்னரே! தாங்கள் கேட்ட கேள்விக்கு தான் பதில் கூறிவிட்டானே!!" என்றார்.
"நான் கேட்ட கேள்விக்கு எங்கே பதில் சொன்னான். வாய் மூடி மௌனியாக அல்லவோ இருக்கிறான்?" என்றார் மன்னர்.
"அரசே! முட்டாள்களிடம் சில சமயங்களில் பேச நேரிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது தானே உங்கள் கேள்வி?
அதற்கான விடையைத் தான் தன்னுடைய மௌனத்தின் மூலம் விடை கூறியுள்ளான்.
அதாவது, முட்டாள்களிடம் சில சமயங்களில் பேச நேரிட்டால், மௌனமாக இருக்க வேண்டும் என்பதைத்தான் பேசாது வாய் மூடி மௌனமாக இருந்தான்" என்றார் அமைச்சர்.
முட்டாள்களுக்கு உதாரணமாக தன்னை குறிப்பிட்டாலும், முட்டாள்களிடம் எதனைப் பற்றி பேசினாலும் அவர்களுக்கு தக்க பதில் கூற இயலாது. ஆகையால் அவர்களிடம் பேசாமல் இருப்பதே சாலச்சிறந்தது என்பதை உணர்த்திய அமைச்சரை பாராட்டினார் மன்னர்.
யோசித்து செயலாற்றினால் செயல்களில் வெற்றி காணலாம்.
DO NOT ARGUE WITH FOOLS!!!
BECAUSE FOOLS ONLY WILL ARGUE!!!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
(கதையையும் பின்னர் வரும் பின்குறிப்பையும் தவறாமல் படிக்கவும்)
ஒரு குதிரையில் வெளியூர் சென்று கொண்டு இருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டு சற்று நேரம் ஓய்வு எடுத்து செல்லலாம் என்று எண்ணி குதிரையை விட்டு இறங்கி குதிரையை அருகில ஒரு மரத்தில் கட்டினான்.
குதிரை உண்பதற்கு புல் போட்டு விட்டு சத்திரத்துக்குள் நுழைந்தான். அப்போது அங்கிருந்த ஒரு குறும்புக்கார இளைஞன் ஒருவன் குதிரையின் வால் முடியைப் பிடித்து இழுத்தான்.
இதைப் பார்த்த அந்த வழிப்போக்கன், "தம்பி, இது முரட்டு குதிரை. வால் முடியைப் பிடித்து இழுக்காதே. அது உதைத்தால் உன் பற்கள் எல்லாம் போய்விடும். ஜாக்கிரதை" என்று எச்சரிக்கை செய்தான்.
அந்த இளைஞன் இந்த எச்சரிக்கையை சிறிதும் பொருட்படுத்தவில்லை.
நம்ப குரூப்ல இங்க எல்லோரும் இப்போ ஒரே apartment complexல இருந்தா எப்படி இருக்கும்... ஒரு #சின்ன_கற்பனை....
[இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களுக்கு நம்மவர்கள் பெயர்களை மட்டும் உபயோகப்படுத்தி உள்ளேன். மற்றபடி.... நிகழ்ச்சிகள் எல்லாம் கற்பனையே.... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.... தவறாக நினைக்காதீர்கள்... தவறு என்றால் மன்னிக்கவும்]
ராயப்பேட்டைலேந்து towards south போனால்.... லஸ் சிக்னல்... அதுல ரைட்ல திரும்பி ஒரு அரை கிலோமீட்டர் தூரம் போய்.... நாகேஸ்வர ராவ் பார்க்குக்கு எதிரே பழமுதிர் நிலையத்துக்கும் தளிகை எனும் ரெஸ்ட்டாரண்ட்டுக்கும் இடையே உள்ள சின்ன ரோட்டில் போனால்.... அதுதான் கென்னடி முதல் தெரு....
"அப்பா இருக்காரா தம்பி?" என்று சாயங்காலம் ஒரு பெரியவர் வீட்டுக்குள் வந்தார் என்றால்....
ஒன்று அவர் பையனுக்குக் கல்யாணம்.
இல்லையென்றால் அவர் தெருவில் ஸ்ட்ரீட் லைட் எரியவில்லை என்று அர்த்தம்.
ஸ்ட்ரீட் லைட் மேட்டர் என்றால் வாசலோடு முடிந்துவிடும். "நாளைக்கு கார்ப்பரேஷன் ஆஃபீஸ்ல சொல்லி வர சொல்லிடரேன். சேஷாத்ரி வீட்டுக்கு பக்கத்து வீடு தானே நீங்க?"
ஆனால் மேற்படி சொன்ன முதல் விஷயம் என்றால் பேச்சு கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும்.
"பையனுக்கு கல்யாணம் வெச்சிருக்கேன்" என்று சிரிப்பார்.
என்னமோ பையனுக்கு குண்டு வைத்திருக்கிறேன் என்று சொல்வது போல...