குழந்தைகள் நன்றாக கை கால்களை அசைத்தும் கீழே விழுந்து புரண்டும்... விளையாடிய விளையாட்டுக்கள் என்ன ஆச்சு?
அதற்கு இப்போ நேரமும் இல்லை; இடமும் இல்லை; மனிதர்களும் இல்லை... வேதனை!!!!
பாவம் இந்த காலத்து குழந்தைகள்!!!
ஓடிப் பிடிச்சு விளையாடுவதில் உள்ள சுகம்!
நொண்டி விளையாடுவதில் உள்ள நெகிழ்ச்சி!
கபடி ஆடுவதில் உள்ள நெருக்கம்!
கிட்டிப்புள் விளையாட்டில் உள்ள கலகலப்பு!
இவை அனைத்தும் எங்கே மறைந்தன!?!?!?
வேதனை அளிக்கிறது!!!
ஒரே இடத்தில் அசையாமல் கண்கொட்டாமல் எதையோ பார்த்து கொண்டு இருக்கிறார்கள் குழந்தைகள்!!
தானாகவே பேசுகின்றனர்... சிரிக்கின்றனர்.. அந்தோ பரிதாபம்!!!
அக்கம்பக்கத்தினருடன் கூடி விளையாடும் போது சமத்துவம் பெருகியது. பெரியவர்கள் தங்கள் இன்ப துன்பங்களை பகிர்வதற்கு ஏதுவாக இருந்தது. சந்தோஷம் நிரம்பி வழிந்தது அந்த காலத்தில்!!!
மனம் குமுறுகிறது...
காலம் மாற வேண்டும்... குழந்தைகள் எல்லா சுகங்களை இன்பங்களை பெற இப்போதே வழி வகுக்க வேண்டும்.
தவறுகள் நம்மிடையே தான். சற்று யோசியுங்கள்!!!
நாம் பெற்ற சுகங்களை நம் சந்ததிக்கு எப்படித் தரப் போகிறோம்... வழிகள் பல உண்டு... எல்லாம் நம் கையில் தான் இருக்கு.
வீட்டில் இடம் இல்லை என்றால் பரவாயில்லை... விளையாட்டு மைதானம் இருக்கிறது. குழந்தைகளை அங்கே விளையாட அழைத்து செல்வோம்.
நேரம் கிடைக்கும் போது பெரிய பெரிய "மால்"களுக்கு அழைத்து செல்லாமல் வீட்டில் இருக்கும் இடத்தில் அவர்களை விளையாட விடுங்கள்.
அழுக்கு பட்டால் ஒன்றும் பாதகமில்லை... நீங்களும் கூடவே இருந்து கொஞ்ச நேரம் அவர்கள் விளையாடுவதை பாருங்கள்!! ரசியுங்கள்!! பாராட்டுங்கள்!!!
பூங்காவில் விளையாடலாம்... சிறிய பந்து வைத்து... ஸ்கிப்பிங்... ரிங்பால்... போன்ற விளையாட்டுக்கள் நன்றாக இருக்கும்.
நேரம் கிடைக்கும் போது வீட்டிலே ஹாலில்.. கேரம்... தாயம்... விளையாடலாம்!!!
குழந்தைகள் மனம் விசாலமடைய பெரிதும் உதவுகிறது மேற்கூறிய விளையாட்டுக்கள்... இது முற்றிலும் உண்மை.
மழை ஆனாலும் வெயில் ஆனாலும் வீட்டுக்குள் விளையாடும் விளையாட்டுக்கள்.... கேரம்.. சீட்டுக்கட்டு... தாயம்...
கொஞ்சம் நம் பங்கு இருந்தால் எதுவும் சாத்தியமே!!!
குழந்தைகள் சந்தோஷமும் முன்னேற்றமும் நம் கையில் தான்!!
(கதையையும் பின்னர் வரும் பின்குறிப்பையும் தவறாமல் படிக்கவும்)
ஒரு குதிரையில் வெளியூர் சென்று கொண்டு இருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டு சற்று நேரம் ஓய்வு எடுத்து செல்லலாம் என்று எண்ணி குதிரையை விட்டு இறங்கி குதிரையை அருகில ஒரு மரத்தில் கட்டினான்.
குதிரை உண்பதற்கு புல் போட்டு விட்டு சத்திரத்துக்குள் நுழைந்தான். அப்போது அங்கிருந்த ஒரு குறும்புக்கார இளைஞன் ஒருவன் குதிரையின் வால் முடியைப் பிடித்து இழுத்தான்.
இதைப் பார்த்த அந்த வழிப்போக்கன், "தம்பி, இது முரட்டு குதிரை. வால் முடியைப் பிடித்து இழுக்காதே. அது உதைத்தால் உன் பற்கள் எல்லாம் போய்விடும். ஜாக்கிரதை" என்று எச்சரிக்கை செய்தான்.
அந்த இளைஞன் இந்த எச்சரிக்கையை சிறிதும் பொருட்படுத்தவில்லை.
நம்ப குரூப்ல இங்க எல்லோரும் இப்போ ஒரே apartment complexல இருந்தா எப்படி இருக்கும்... ஒரு #சின்ன_கற்பனை....
[இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களுக்கு நம்மவர்கள் பெயர்களை மட்டும் உபயோகப்படுத்தி உள்ளேன். மற்றபடி.... நிகழ்ச்சிகள் எல்லாம் கற்பனையே.... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.... தவறாக நினைக்காதீர்கள்... தவறு என்றால் மன்னிக்கவும்]
ராயப்பேட்டைலேந்து towards south போனால்.... லஸ் சிக்னல்... அதுல ரைட்ல திரும்பி ஒரு அரை கிலோமீட்டர் தூரம் போய்.... நாகேஸ்வர ராவ் பார்க்குக்கு எதிரே பழமுதிர் நிலையத்துக்கும் தளிகை எனும் ரெஸ்ட்டாரண்ட்டுக்கும் இடையே உள்ள சின்ன ரோட்டில் போனால்.... அதுதான் கென்னடி முதல் தெரு....
"அப்பா இருக்காரா தம்பி?" என்று சாயங்காலம் ஒரு பெரியவர் வீட்டுக்குள் வந்தார் என்றால்....
ஒன்று அவர் பையனுக்குக் கல்யாணம்.
இல்லையென்றால் அவர் தெருவில் ஸ்ட்ரீட் லைட் எரியவில்லை என்று அர்த்தம்.
ஸ்ட்ரீட் லைட் மேட்டர் என்றால் வாசலோடு முடிந்துவிடும். "நாளைக்கு கார்ப்பரேஷன் ஆஃபீஸ்ல சொல்லி வர சொல்லிடரேன். சேஷாத்ரி வீட்டுக்கு பக்கத்து வீடு தானே நீங்க?"
ஆனால் மேற்படி சொன்ன முதல் விஷயம் என்றால் பேச்சு கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும்.
"பையனுக்கு கல்யாணம் வெச்சிருக்கேன்" என்று சிரிப்பார்.
என்னமோ பையனுக்கு குண்டு வைத்திருக்கிறேன் என்று சொல்வது போல...