யானைகள் கட்டிய இடம் #யானைச்சாலை எனப்பெற்றது. அவை படையின் பொருட்டு பாதுகாக்கப் பெற்றன.
அவற்றைப் பாதுகாத்தற் பொருட்டு மக்களிடமிருந்து அரசு பெற்ற வரி #ஆணைச்சாலைதேவை எனப் பெற்றது.
ஓராண்டுவரை கார்காலப் பயிர் செய்த உரிமையையோ, மீண்டும் நிலத்தைக் கைக்கொண்டு உழும் உரிமையையோ பெற்றவர்கள் அவ்வுரிமையைத் தொடர்ந்து ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்வதற்காகக் கிராம வரிப் புத்தகத்தாரின் ஒப்பம் பெற்றனர்.
நிலங்களைச் சீர்திருத்தி வேளாண்மை செய்யப் பெறுவதற்காகப் பெற்றவரி #செய்கடமை எனப் பெற்றது.
பண்டைக்காலத்தில் அரபுநாடுகளினின்றும் தமிழகத்திற்குக் கடல் வழியாக வந்து வாணிகம் நிகழ்த்திய சோனகரிடம் (யவனர்) பெற்றவரி #சோனகவரி எனப் பெற்றது.
அரசு வெளியிட்ட பொன், வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களாலான நாணயங்களை அச்சிட்டமைக்காக அமைக்கப்பெற்ற தொழிற்சாலைகளுக்குரிய வகையில் அரசு மக்களிடம் பெற்ற வரி #அக்கசாலை எனப்பெற்றது.
அக்காசின் மதிப்பு அரசர்களின் ஆட்சிக்காலப் பொருளியல் நிலைக்கேற்ப பன்னிரண்டு அக்கம் ஒரு காசு ஒன்றும், எட்டு அக்கம் ஒரு காசு என்றும், ஆறு அக்கம் ஒரு காசு என்றும் கல்வெட்டுக்களில் மதிப்பிடப் பெற்றுள்ளன.
தெருக்களில் பகல் இரவு நேரங்களில் பண்டங்களை விற்பனை செய்தோர் #அங்காடிகள் எனப் பெற்றனர்.
அவர்கள் நாள்தோறும் பண்டங்களையும், பொருள்களையும் விற்பனை செய்தனர். அவர்கள் விற்பனை செய்த பொருள் மதிப்பீட்டுக்கேற்ப அரசு பொதுவாக #அங்காடிப்பாட்டம், #அங்காடிக்கூலி போன்வற்றை வரியாகப் பெற்றது.
வாரச்சந்தையில் கூடிய வணிகர்களிடமிருந்து வசூலிக்கப் பெற்ற (இடத்தின் அளவுக்கு ஏற்ப) வரிக்காக #அடிக்காசு எனப்பெற்றது.
பணியாளர்களிடமிருந்து பெற்ற வரிக்காக #அடிமைக்காசு எனப்பெற்றது.
அரசுக்குத் தனிப்பட்ட வகையில் வந்த வரி #அந்தராயம் எனப்பெற்றது.
தற்காலிகமாக இடம்பெற்ற சிறு வரி #அந்தராயக்காசு எனப்பெற்றது.
அரசுக்காணிக்யைாக ஆட்சிக்குட்பட்ட மக்கள் ஆண்டுதோறும் செலுத்திய சிறு வரி #அரசப்பேறு எனப்பெற்றது.
அரிசிகுற்றுவதற்காகவும், எடுத்து அளத்தற்குரிய அரிசி போன்ற தானியங்களுக்கு அரசு காசாகப் பெற்ற வரி #அரிசிக்காணம் எனப்பெற்றது.
அரசு ஊர்நிலங்களை அளந்து அதன் விளையுளுக்கு ஏற்ப நில உரிமையாளரிடமிருந்து பெறும் வரி #கடமை எனவும், அவ்வரிகளை முறையாக பெற்ற குழு #கடமைவாரியம் எனப்பெறும்.
ஆர் ஆண்டின் பருவகாலங்களுக்கு ஏற்ப பயிரிடப் பெற்ற வகைகளில் இறுதிப்பருவத்தில் விளைந்த விளையுளுக்குச் செலுத்தி வரி #கடைப்பாட்டம்.
திருமணத்தின் போது கொண்டவரும் கொடுத்தவரும் அரசுக்குச் செலுத்தியவரி #கண்ணாலக்காணம் எனப்பெற்றது.
கார் காலங்களில் விளைந்த நெல்லுக்குப் பெறப் பெற்றவரி #கார்க்கடமை.
ஓரிடத்தில் கால்நடைகளைத் தங்கச்செய்தோர் தங்கள் பெயரால் செலுத்திய வரி #இலக்கைவிடப்பேறு எனப்பெற்றது.
சிறந்த காளைகளை வைத்திருப்போர் செலுத்தும் வரியாகவும் கொள்ளலாம் வெற்றிலை வாணிகம் செய்தாரிடம் பெற்றவரி #இலைவாணியபாட்டம் எனப்பெற்றது.
நீர் நிலைகளில் #வண்ணார் துணிகளைத் துவைத்தெடுத்தமைக்கும், அவற்றை உலர்த்தியமைக்கும் பயன்படுத்தியதற்காக அமைந்த பாறைப் பொதுவிடத்திற்காகப் பெற்றவரி #வண்ணார்கற்காசு' எனவும் #வண்ணார்ப்பாட்டம் எனவும் வழங்கப்பெற்றது.
விளையுளுக்குத் தகுதியற்ற தரிசாகக் கிடந்த நிலத்தை ‘வரிச்சிறையாய் கிடந்த பூமி' என்றும்,
அரசுக்குரிய இறைவரி ஆகியவற்றைக் குறித்துவைக்கும் ஏடு #வரிப்புத்தகம் என்றும்,
அப்பணியைச் செய்யும் அலுவலரை 'வரிப்புத்தகக் கணக்கு' என்றும்...
கிராமங்களில் உள்ள நிலங்களுக்குப் புதிய நிலவரிகளைப் பதிவு செய்தலை #வரியிலிடல்,
ஊரிற்கமைந்த இறைவரி, கடமை, ஆயம் உள்ளிட்ட வரிகளை நேரில் கண்டு கணக்கிட்டு விதிக்கும் அலுவலரை #வரியிலார்,
புதிய வரிகளை நில வரிக்கணக்குடன் சேர்க்கும் அலுவலரை #வரியிலீடு' என கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது.
அரசன் தன்னாட்சிக்குட்பட்ட நாட்டைச் சுற்றிப்பார்க்குங்கால் ஒவ்வொரு ஊருக்கும் வருகை தந்தமைக்கான செலவினை ஈடு செய்ய ஊரார் செலுத்திய வரி #திருவெழுச்சிகுடிமை எனப் பெற்றது.
ஆண்டொன்றில் அமைந்த வரியைப் பருவகாலங்களில் பொருள்களாகவோ தொகையாகவோ செலுத்தியது #பச்சைப்பாட்டம் எனப்பெற்றது.
பருத்திச்செடிகளை வளர்த்துப் பஞ்செடுத்துப் பிரித்தமைக்காக செலுத்திய வரி #பஞ்சுபீலி எனப்பெற்றது. பஞ்சுப்பொதியின் மீது விதிக்கப்பெற்ற வரி என்றும் கூறுவர்.
பலவகையான சிறு வணிகரிடம் பெற்றவரி #பட்டடை எனப்பெற்றது.
#படுகை, #களத்துமேடு ஆகிய புன்செய் நிலப்பகுதிகளில் பயிர்களை விளைவித்த குடிமக்களிடத்துப் பெற்றவரி என்றும் கூறுவர்.
கல்வெட்டுக்களில் இச்சொல் #பலபட்டடை' எனக் கூறப்பெற்றுள்ளது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கோவிலில் தங்கம் திருடியமைக்காக்க பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை பற்றிய கல்வெட்டுச் செய்தி!
2-ம் இராசராசசோழனின் 6-ம் ஆட்சியாண்டில் (பொ.பி 1152) #தஞ்சாவூர் மாவட்டம் #பந்தநல்லூர் ஊரில் உள்ள #பசுபதீசுவரர் கோவில் கல்வெட்டில், கோவில் நிலங்களின் ஆட்சிமுறை பழங்காலத்திலிருந்து...
தொடர்ந்து வந்த முறையைக் குறிப்பிடுகிறது. அக்கோவில் திருமேனிக்கு அணிகலன்கள் செய்யப் பெறுவதற்காகக் கருவூலத்தில் தங்கத்தைப் பாதுகாத்து வந்தனர்.
அக்கோவிலில் பணிபுரிந்த பிராமணர்கள் அத்தங்கத்தைத் திருடிக் கொண்டனர். அவர்களுக்குத் தண்டனை அளிக்கும் பொருட்டு...
சோழர் காலத்தில் பொய்க்கணக்கு எழுதியதற்காக அளிக்கப்பட்ட தண்டனை பற்றிய கல்வெட்டுச் செய்தி!
3-ம் இராசராசசோழனின் 19-ம் ஆட்சியாண்டில் (பொ.பி 1235) பொறிக்கப்பெற்ற #தஞ்சாவூர் மாவட்ட கள்ளப்பெரம்பலூரில் உள்ள கல்வெட்டுச் செய்தியில் ஒருவன் வேலை நீக்கம் செய்யப் பெற்றதைக் குறிப்பிடுகின்றது.
பொய்க் கணக்கை எழுதும் முறை புதியதன்று. அம்முறை தொடர்ந்து நடைமுறையில் இருந்துள்ளது.
பாண்டியகுலாசனி வளநாட்டில் தஞ்சாவூர் கூற்றத்தில் இராசசுந்தரி சதுர்வேதி மங்கலத்து மகாசபையார் அப்பணி நீக்க முடிவை எடுத்துள்ளனர்.
அதன்படி அவ்வூர் நில உரிமையாளராயிருந்த "சேஞலூருடையான் மதளை உத்தமபிரியன்" என்பவன் பொய்க் கணக்கை எழுதி வந்தான்.
அவன் அனைவருக்கும் பகைவனாக இருந்து தவறான முறையில் கணக்கெழுதி வந்தான்.
கல்வெட்டுகள் கூறும் நீர்பாயும் உரிமை, நீர்பாயும் நேரம் பற்றிய தகவல்கள்!
நன்செய் நிலங்களில் பயிர் செய்தபோது ஊரிலிருந்த குளம், ஏரி ஆகியவற்றை ஊர்ப் பொதுமையாக்கி இன்னின்ன நிலங்களுக்கு இன்னின்ன நேரம் இன்னின்ன மடை வழியாக நீரைப் பாய்ச்சிக் கொள்ளலாம் எனப் பிரிக்கப் பெற்று இருந்தன.
அதன்படியே நீரைப் பாய்ச்சி வேளாண்மையும் செய்து வந்தனர்.
தற்பொழுது வருவாய்த் துறையினரால் நிலத்திற்குப் பாயும் நீருக்கு வரி விதிக்கும்போது, ஒரு பாசத்தின்கீழ்உள்ள நிலத்திற்குப் பிறிதொரு பாசனத்திலிருந்து நீரைப்பாய்ச்சி வேளாண்மை செய்தால்,
அதை முறையற்ற பாசனம் எனக் கருதித் தண்டத்தீர்வை விதிக்கப் பெறுகிறது. எனவே, ஒவ்வொரு பாசனத்திலிருந்தும் இன்னின்ன நிலங்களுக்கு மட்டுமே நீர் பாயவேண்டுமென வரன்முறைப் படுத்தப் பெற்றுள்ளது.
சிலநேரங்களில் ஒரு பாசனத்தின் உரிமையுள்ள நிலத்திற்குப் பிறிதொரு பாசனத்தினின்றும் நீரைப்பாய்ச்சி..
முதியோர் பாதுகாப்பு என்ற பெயரில் அரசாங்கங்கள் இன்று பல்வேறு திட்டங்களை, அறிவிப்பதைக் காண்கிறோம். அவர்களுக்கான உதவிகளைப் பணமாகப் பெறவும், மருத்துவ சலுகைகள், பயணக் கட்டணத்தில் சலுகை, ஆலயத்தினுள் நடக்க முடியாதவர்களுக்கு மோட்டார் வாகனங்கள் என 1/n
இப்படி பல அம்சங்கள் நடைபெறுகின்றன என்பதை நாம் அறிவோம். இந்த விஷயம் பழங்காலத்தில் இருந்தே ஓர் அறமாக பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வயதில் முதியவர்களாக இருப்பவர்களால் வெகு தொலைவு நடக்க இயலாது. அவர்களுக்கு திருக்கோயில்கள் உதவி செய்திருக்கின்றன. 2/n
இவர்களுக்கு உதவி செய்வதற்காகவே பண்டை நாளில் திருக்கோயில்களில் அறச்சாலைகள், மடங்கள், சத்திரங்கள் போன்றவை இருந்தன.
#கும்பகோணம் நாகேசுவர சுவாமி கோயிலில் #அறச்சாலை இருந்ததாக சோழர் காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது... 3/n
The third regnal year (1055 CE) of #RajendraChola-II inscription in #Jambai Village in #Villuppuram district records the gift of 32 Kasu in memory of a lady by name Sendan Umaiyal (சேந்தன் உமையாள்) for burning a perpetual Nanda Lamp in the temple of 1/n
Thanthontri-Mahadevar at #Valaiyur alias Rajendra-puram by one "Palanguran Kunran" (பழங்கூரன் குன்றன்) the Tax Collector of #Kugurppadi the hamlet of Narippalli-nadu.
The gift is said to be in response to a demand made by the community "Nangudisai Padinenbhumi Nanadesi" 2/n
நான்குதிசை பதினெண்பூமி நானாதேசிகள் (வெளிநாடுகளில் சென்று வாணிபத்தில் ஈடுபடுபவர்கள் - வணிகப் பெருங்குழுக்கள்) who held him responsible for the suicide of that lady by poison because of some threat held out by him with regard to a tax due! 3/n
சங்க காலத்திற்கு முன்பிருந்தே மன்னார் வளைகுடாவில் எடுக்கப் பெற்ற முத்துக்கள் கிரேக்க, ரோமானிய நாடுகளில் மிகவும் புகழ்பெற்று விளங்கின.
இதற்கு மெகஸ்தனிஸ் முதலான வெளிநாட்டவர் குறிப்புகள், சங்க இலக்கியங்கள், பாளி மொழி நூலான மகாவம்சம் போன்றவை சான்று தருகின்றன
சங்க இலக்கியங்கள் பாண்டிய நாட்டை ஒட்டிய கடல் பகுதியில் #முத்துக்குளித்தல் பற்றியும், இத்தொழில் புரிந்த #பரதவர்கள் பற்றியும் மிகுந்து குறிக்கின்றன.
அறுபதுகள் (1960-69) வரை மன்னார் வளைகுடாவில் #முத்துக்குளித்தல் தொடர்ந்து நிகழ்ந்து வந்துள்ளது!
கடந்த நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி செயற்கையாக முத்துச்சிப்பி வளர்க்கும் தொழில்நுட்பம் இந்தியாவிலும், பிறநாடுகளிலும் சிறப்பாக ஐப்பானிலும் வளர்ந்த காரணத்தினால் மரபுவழி #முத்துக்குளித்தல் தற்போது நடைபெறுவதில்லை.