சரிந்த சாம்ராஜ்யங்கள்

இந்த சரிந்த சாம்ராஜ்யத்தை ஏற்கெனவே அணுவணுவாக சரிந்துகொண்டுவரும் திராவிடப் பெருங்குடி மக்களுக்கும், அவர்களல்லாத நடுநிலையாளர்களுக்கும் .
வாளின் ஒளியைவிட ஜோதியாய், அதன் கூர்மையைவிட மகாக் கொடியதாய், மின்சாரத்தைவிட வேகமாய்ப் பாயக்கூடியதான கோதையர்களின் கண்வீச்சால் கருத்தழிந்து சரிந்துவிட்ட சாம்ராஜ்யங்கள்.
பலவித வேறுபட்ட பண்பாடுகளால் நாடுகள் ஒன்றோடொன்று முட்டி மோதி ரணகளத்தில் கைசலித்து வேறு வகையில்லாமல் வாளைத் தூர எறிந்து எதிரியின் காலடியில் தஞ்சம் புகுந்து உயிர்ப்பிச்சைக் கேட்டு மன்னர்கள் ஒடிப்போனதால் வீழ்ந்துவிட்ட சாம்ராஜ்யங்கள், அகழியில் நீர் வற்றியதால்,
அயலார் கோட்டையின் தலை வாயலிலே நுழைய, அதே நேரத்தில் அவர்களைத்தடுத்து நிறுத்தத் திறமற்று கோட்டையின் கடைவாயில் வழியாக கானகம் ஓடி உயிரைக் காப்பாற்றிக்கொண்ட உதவாக்கரை மன்னர்களால் வீழ்ந்துவிட்ட வல்லரசுகள்.
சட்டத்தால் மனிதன் புரத்தையும், சம்பிரதாயத்தால் மனிதனின் அகத்தையும் அடக்கி ஆண்டுகொண்டிருந்த இரட்டைக் கொள்ளைக்காரர்களான மதகுருவுக்கும், மன்னனுக்கும் ஏற்பட்ட போட்டியின் காரணமாக சரிந்துவிட்ட சாம்ராஜ்யங்கள். தேவையைத் தேடித் தேடித் திரிந்தும் பெறமுடியாமல் திகைத்த மக்கள் ஒருபுறமும்,
தேவைக்கதிகமான தேக்கத்தில் திளைத்து மதம் பிடித்து அலைந்த மன்னர்கள் ஒருபுறமும் நின்று போர் செய்து, இறுதியில் மக்கள் சக்தியை எதிர்த்து நிற்கமுடியாமல் மக்களுடைய ஆவேசக்கனலால் கருகி சாம்பலான சாம்ராஜ்யங்கள்.
வேட்டுச் சத்தம் வெளியே கேட்டுக்கொண்டிருந்த போது மக்களைக் காட்டிக்கொடுத்து தானும் தன் குடும்பமும் சுரங்க வழியால் வெளியேறியதால் வேதனைக்குள்ளான சாம்ராஜ்யங்கள். வற்றிய அகழி, வான் பறவைகள் வட்டமிட்டப் பிணக்குழி, பொலிவிழந்த பவனம்,
நாயும் நரியும் நாவை நீட்டிக்கொண்டு பிணங்களின் மேல் திரியும் காட்சி, அரசியல் பங்கீட்டில் போட்டி, அதிகாரத்தைச் செலுத்துவதில் சுயநலம், மக்களையடக்க நானேதான் என்ற இருமாப்பு, மங்கையர்களை சிறைபிடித்ததால் ஏற்பட்ட முற்றுகை,
"நீ அந்த மங்கையை விரும்பினால் மணிமுடியைத் தரமாட்டோம் என்றெழுந்த சம்பிரதாயத்தொனி, காலத்தால் ஞாலத்தைப் பார்க்காமல் கணக்கெடுக்கப்பட்ட ஆயுதங்களின் பட்டியலைக்கண்டு களம்புகுந்த அறியாமை, மண்ணுக்குடையவன் நான், ஆகவே மண்டலாதிபனும் நான் தான்.
மக்களே ! நீங்கள்தான் மண்ணிலும் கேடான வர்கள்" என்று ஏளனம் பேசியதால் அதே மக்களால் அதே மண்ணக் கெளவிய கேலிக்கூற்று. மணியுருட்டிகள், தீக்குண்டத்தார், தேவதூதர்கள் என்று தம்மைச் சொல்லிக்கொண்டோர், தர்ப்பையேந்திகள், ஆந்தை விழியார்,
ஆபாசச்சின்னங்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து மன்னர்களைத் தம் மந்திரங்களென்ற விளையாட்டுக் கூச்சலாலடக்கி மக்களின் மதியையும் நிதியையும் சூறையாடி, அவர்கள் விதியைத் தம்மால் மாற்றமுடியும் என்ற வெட்டி வேதாந்தம் பேசி,
இதை நம்பிய மக்கள் பலவாண்டுகள் தங்கள் வாழ்வில் மாற்றங் காணாததால் செய்த புரட்சியால் புதையுண்டுப் போன சாம்ராஜ்யங்கள் ;
அவைக்களத்தில் அவமதிக்கப்பட்டோம் என்ற ஆத்திரத்தால் அலைகடல் கடந்து ஆயுதமேந்தி வந்தவனுக்கு பூரண கும்பமும் புலால் விருந்தும் அளித்து உள்ளே அழைத்து வர, தன் பரம்பரைக்கு புராதனமாக வாழ்வளித்து வந்த புரவலர்களின் கோட்டைச் சாவியைக் கொடுத்துத் தானும் புதுப் பதவியேற்றதால்
புலியெனப் பாய்ந்த மக்களால் நார் நாராகக் கிழித்தெறியப் பட்ட சாம்ராஜ்யங்கள்.தான் ஆள முடியாவிட்டால், வேறு எவனேயும் ஆளவிடக் கூடாதென்ற பொறாமைத்தீயில் குதித்துவிட்ட மன்னர்களின் அழிவுக்குப்பின் தானாகவே அழிந்துவிட்ட சாம்ராஜ்யங்கள்,
நாட்டைக் காப்பாற்றப் படையெடுத்து, கோட்டையின் மேல்தளத்தில் காமக் காற்றால் அசைந்தாடிக் கொண்டிருந்த சரசவல்லிகளிடம் தன் மதியைப் பறிகொடுத்து மீளாத காதலால் ரணகளத்திலிருந்து மீள முடியாமல் மண்மேடான சாம்ராஜ்யங்கள். நாட்டின் எல்லைக் கோடுகளை விரிவாக்கவும், மதக் கோட்பாடுகளைத் திணிக்கவும்,
மத குருவின் ஆசியைப் பெறவும், மண்டலம் பலவற்றிற்கு மன்னர் மன்னன் என்ற பட்டம் பெற வேண்டுமென்ற பேராசையும் குடிகொண்டு படையெடுத்து ஜெகமஞ்ச போரிட்டு, எதிரிகள் தன்னிடம் சரணாகதி யடையாமுன்னமே பாவையர்கள் மையலில் விழுந்து புரையோடிப்போன சாம்ராஜ்யங்கள்.
"மக்களையடக்க நான், மக்களின் உள்ளத்தையடக்க மதகுரு, இவ்வுலகுக்கு அதிபன் நான், அவ்வுலகுக்கு அதிபர் அவர், இந்த இரண்டுக்குமிடையே இங்குமங்குமாக பறந்துசெல்லும் அணுக்கள் மக்கள், பொருள் என்று கேட்டால் போர்முரசு கொட்டுவேன்.
வாய்திறந்தால் குதிரைக் காலடியால் அவர்கள் வாயிலிருந்து குறுதியைக் காண்பேன், எதிர்த்தால் இருட்டறை, சிந்தித்தால் சித்ரவதையோடு சிறைவாசம், ஏன்? என்று கேட்டால் ஆள்கொல்லி சட்டம், இனி என்னை எவனுமே அணுகமுடியாது. என் பொண்வண்டு தவிர” என்று பொற்கொடியைத் தாவி பூவிரித்த
மஞ்சத்தில் சாய்ந்திருந்த மாமிசமலையை, மக்கள் வேங்கையென வரிப்புலியென பாய்ந்து அந்தக் குணக்கேடனின் உதிரத்தைத் தெளித்து வெற்றிவிழா கொண்டாடிய போது உமிழ்ந்த உதிரவாயோடு வீழ்ந்துவிட்ட சாம்ராஜ்யங்கள்.
பகுத்தறிவு பேசியதால் பாய்ந்து சீறிய பார்த்திபன், விளக்கம் கேட்டதால் வேதனையை வேலெனப் பாய்ச்சிய வேந்தன், சிந்திக்கத் தொடங்கியதால் சினம்கொண்ட சிங்காதனத்தான், வேத தூதர்களின் விஷவேலியைக் காத்த வெண்சாமரத்துக்குடையோன்,
கடவுள் சொன்னதா கற்பனையா என்று கடாவி அறிவின் கபாடக் கதவுகளைத் திறந்துவிட்ட தீனர்களை தீயில்தள்ளிய தீயர்கள், ஆண்டவனே வணங்கப் பணமேன் என்ற அறிவுரையை எழுப்பிய பகுத்தறிவு தூதர்களை பட்டப் பகலில் பகிரங்க மேடையில் நிறுத்திக் கொன்ற பாவிகள்.
உண்டு கொழுத்து வீணைவாசித்து மாதர் மையலில் சிக்கி, மதுவில் குளித்து, பதிகம்கேட்டு, பானம், பாவை, பதிகம் பக்தி இவைகளே பரமண்டலத்தின் திறவுகோல் என்ற மமதையில் திளைத்து எதிரிகளின் முற்றுகையை துளசித் தழைகளால் தடுக்க முடியும் என்று வேதியர்கள் சொன்ன யோசனையாலும்,
வேள் விழியாளின் அணப்பிலிருந்து விடுபட முடியாத உற்சாகத்தாலும், வேதபம்பரங்களை அழைத்து அவர்கள் வாயின்மூலம் மந்திரங்களை கிறு கிறுவென சுற்றவைத்து தானும் சுற்றி தன்னை எதிரியும் சுற்றி கைவிலங்கோடு கைதிகளான மன்னர்கள், ஹரே! ராமா ஆதரிக்கமாட்டாயா,
என்ற பெருமூச்சோடு இருட்குகையில் இருளோடு இருளாய் விட்ட சோம்பேறிகளால் இடிந்துபோன சாம்ராஜ்யங்கள்.
அடையாளங்கள்

அரசியலில் மாற்றங் காண வேண்டுமென்று துடியாய்த் துடித்த மேதைகளின் உயிரை போதைப் பொருளென அருந்தியதால் ஏற்பட்ட ஆவேசக் குரலின் அடி தளத்திலேயே மெளனம் சாதித்துவிட்ட மன்னர்களின் உருவச்சிலைகள், இடிந்த கோட்டையின் கற்பாறைகளின் இடுக்கிலே நொறுங்கிக் கிடக்கும் எலும்புகள்,
காய்ந்தமரத்தின் கிளைகளிலே இரத்தஞ் சொட்டச் சொட்டத் தொங்கிக்கொண்டிருக்கும் பிரேதங்கள். மகனை இழந்த தாயின் மயானக் குரல், கணவனை இழந்த கற்பரசியின் துயரக் குரல், வெஞ்சமரில் வீழ்ந்து விட்ட தன் பிதாவை நினைத்து நினைத்து அழுதக் கண்ணீரின் உப்புக்கோடுகள்
உதட்டின் ஒரத்தைத் தொடுவதற்கு முன்னால் அண்ணனும் இறந்துவிட்டான் என்ற அபாயச்செய்தியை கேட்டு செயலற்று சிலைபோல் நின்று விட்ட உருவங்கள், ஒரு பெண்ணுக்காக ஏற்பட்ட போரில் கணவன் கண்களையிழந்துவிட்டான் என்ற செய்திகேட்டு கதறிய மாதர்கள், தாவரஜங்கம சொத்துக்களையடைய ஏற்பட்ட போரில்
எங்களனைவரையுமே இழந்து விட்டான் என்மகன் என்று தேம்பியழுத தாய், பூதளம் தூங்க புல்லினம் ஓய்வெடுக்க ஆந்தைகள் மட்டும் அலறிக் கொண்டிருக்க ஊர்க்கோடியிலே
ஒரு கிழவியின் அழுகுரல் மட்டிலும் கேட்க, நகரப் பரிசோதகன் கதவைத்தட்ட, அழுகையை நிறுத்தி அந்தப் பெரியவள் கதவைத் திறக்க, எங்கள் மன்னன் மானத்தை வாங்கவா இப்படி பெருங்குரலிட்டு அழுது கொண்டிருக்கின்றாய் என்று வந்த வேட்டைநாய் அந்த முதியவள் வாயில் குத்த,
அடுத்த வினாடியே அவளும் பிணமாய்ச் சாக, அதைத் தங்கள் அதிர்ஷ்டமென நினைத்து வீட்டிலிருந்ததை வந்தவர்கள் சுருட்ட, விடிகிற வரையிலும்யாரும் அந்த வீட்டையணுகாமலிருக்க, வேந்தனிடம் இந்த விவகாரம் வழக்காக நிற்க, விலா வெடிக்கச் சிரித்துவிட்டு தன் பஞ்சணைக்குச் சென்றுவிட்ட பாதகர்கள்.
மக்கள் செலுத்தும் வரியிலேயே மருந்துகளையும் குண்டுகளையும் வாங்கி அதே மக்களை அதே ஆயுதங்களால் அடக்கியாண்ட சேனைத் தலைவர்கள். தீரர்களுக்கும் தீயர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் தீ மிதித்தவர் போலாடிய தறுக்கர்கள்,
தன்னையாதரித்தவனை வஞ்சனையால் கொன்று குவிக்க எதிரிகளுக்கு இருட்டில் ஆயுதங்களைக் கொடுத்துதவிய அற்பர்கள், உள் நாட்டில் புகப் பாதை தெரியாமல் திகைத்தப் பகைவரிடம் பேரம்பேசி பாதையைக் காட்டிய பாதகர்கள், ஜெகத்தைக் கட்டியாள தன் படைகள் புடைசூழ வந்த ஜென்ம விரோதிகளுக்கு துவஜாரோகணம் தூக்கிய
ஜெகஜாலப் புரட்டர்கள். ஜெமீன்கள், இனாம்கள், சங்கீதத்தால் செங்கோலைத் தன் வசப்படுத்த ஜெகன் மோகினிகளைப் பந்தயப் பொருளாக வைத்து தூது சொக்கட்டானாடிய சோற்றுத் துருத்திகள், மோகனப் புன்னகையால் மன்னர்களின் சித்தத்தைச் சண்டைக் கிழுத்துத் தங்கள் காமக் கோடரியால்
மன்னனின் சிரத்தை வெட்டி வீழ்த்தி சதி செய்த சண்டாளிகளின் பாதம்தாங்கிகள். அவன் ஏன் மன்னன்; நான் ஏன் மந்திரி நானே மன்னன் என்று பிரகடனப்படுத்திய அமைச்சனை வஞ்சம் தீர்க்கும் வெறியில் எதிரியின் காலடியில் தஞ்சம் புகுந்து எல்லாவற்றையும் இழந்து விட்ட ஏமாந்த சோணகிரிகள்.

நாட்டில் பஞ்சம் அதிகம், ஆகவே என் தந்கை செய்த சட்டங்களே நான் மாற்றுகிறேன். இனி சதுர் வேதி மங்கலங்கள், தரும ஸ்தாபனங்கள் செல்லாது என திருத்தஞ் செய்த தார்வேந்தர்களையொழிக்கப் பெண்களையேவிய புரோகிதக் கூட்டங்கள்.
அண்ணன் அரசைத் தம்பிக்கும், தம்பியின் உரிமையை மாற்றானுக்கும் ஆக்கி உளம் களித்த உதிரப் பிண்டங்கள்.

⁠தந்தையை இப்படையிலும், தனையனை அப்படையிலும் நிறுத்தி வேடிக்கைப் பார்த்து உருளும் தலைகள் மேல் நின்று வெற்றிச் சங்கமுழங்கிய வீணர்கள், அவர்களுடைய அடாதச் செயலுக்கு ஒத்துதிய வேதியர்கள்
அன்னமிட்டுக் காப்பாற்றியவனுக்கே ஐந்தாம் படை வேலை செய்துத் தங்கள் பஞ்சாங்கத்தின் அட்டைகளைப் பத்திரமாகக் காப்பாற்றிக்கொண்ட இரத்தம் உருஞ்சும் அட்டைகள்.

⁠அரசபோகம் தனக்கும் வேண்டுமென்ற பேராசையால் எழுப்பிய அஜமேக யாகத்தின் புகை, அஸ்வமேத யாகத்தில் இரு துண்டாக்கப்பட்ட குதிரை,
மண்டலத்தை ஒழிக்கிறேன் என்று குள் உரைத்து அவிழ்த்து விடப்பட்ட குடுமி, சோமபானத்தால் ஏற்பட்ட போதை, ஆற்றங்கரைகளிலே போடப்பட்ட தவளைக் கூச்சல், பல யாககுண்டங்களின் முன்னால் நிறுத்தி வெட்டப்பட்ட ஆடுகளின்,
உதிர்ந்த ரோமங்கள், உலர்ந்த மலர்கள், சோற்றுப்பருக்கைகள், அவிர்ப் பாகத்தை அளவில்லாமல் தின்று மயக்கமேறி மண்டபத்தின் படிகளிலே உருண்டுக்கிடந்த மாமிச மலைகள், மோப்பத்தால் வாலைக்குழைத்துக்கொண்டு வந்த நாய்கள்,
இருண்டவுடன் ஊளையிட்ட நரிகள் ஆகிய இவைகளே சரிந்த சாம்ராஜ்யங்களின் அடையாளங்களாக ஏட்டில் இடம் பெற்றிருக்கும் எழுத்துருவங்கள்.

பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு இருட் குகையிலே மாண்டுவிட்ட கிரேக்க மன்னன் பெரிக்லசின் சோகக் காட்சிதரும் உருவச் சிலை. ”பழைய சின்னங்களை அழிக்காதே” என்று ஆங்காங்கே தொங்கவிடப்பட்டிருக்கும் சர்க்காரின் எச்சரிக்கைப் பலகைகள், சரிந்திருக்கும் செஞ்சிக் கோட்டை,
மொகலாய மன்னன் ஷாஜஹானின் சிறப்பின் மயிலாசனம், செங்கோட்டை, போரில் மாண்ட மாவீரர்களின் அடையாளச் சின்ன மான பிரமிட் கோபுரங்கள்.
புகைவடுக்கள் படர்ந்து சாய்ந்து நிற்கும் கோட்டைச் சுவர்கள், தனது பழைய செல்வாக்கை நினைத்து நினைத்து கண்ணீர்வடிக்கும் ரோம், நைல் நதி வெள்ளத்தைக் காட்டிலும் இரத்த வெள்ளம் அதிகமெனக் காட்டிய சீசர்கால எகிப்து மக்கள்,

மதிமயக்கத்தால் தன் செங்கோல் சுதியை மீட்டிக்கொண்டிருந்த மஞ்சு சர்க்காரின் தலைநகராம் நான்கிங், சீன சாம்ராஜ்யத்தை ஒருகாலத்தில் அழித்துத் தன்கொடி பறந்தாட சூழ்ச்சி செய்த வெள்ளையருக்குச் சொந்தமாயிருந்த துறைமுகங்களான காண்டன், பூ செள, சுங்கிங்.

நான்கிங், தேடுவாரற்று தரையில் புதைந்துகிடக்கும் துருப்பிடித்த ஆயுதங்கள், போரில் மாண்ட மாவீரர்களின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்து, இன்று பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கும் வீரப் பட்டயங்கள்,

மிகப் பழைய போராயுதமான வில், அதில் நாணேற்றி அறுந்துவிட்ட கயிறுகள், வில்லிலிருந்து புறப்பட்டு குற்றவாளி கோட்டைச் சுவற்றில் முட்டி கூர்மழுங்கிப் போன அம்புகள், வில்லில் நாணேற்றும்போது ஏற்பட்ட ரீங்கார சத்தத்தை மண்டலமெல்லாம் பரவச்செய்த அணுக்களின் அணுக்கள்.
எதிரிகளின் குதிரைக் குளம்படிப்பட்டு உடைந்துபோன மண்டையோடுகள். சாம்ராஜ்யாதிபதிகள் கையொப்பமிடா முன்னம் களம்புகவேண்டி வந்ததால் அரை குறையாக விடப்பட்ட கையெழுத்தில்லாத சாசனங்கள், சமர்க்களத்தில் சலிக்காது போரிட்டும் வெற்றித் தோல்விகள்
தெரியாததால் வெள்ளைக் கொடி காட்டி, விட்டனுப்பிய சமாதான அறிக்கையின் கையெழுத்துப் பிரதிகள், படைகள் எவ்வழி செல்ல வேண்டுமென்பதை சாலையின் மரங்களில் செதுக்கப்பட்டிருந்த எழுத்துக்கள், தளகர்த்தனுக்கு சேதி சொல்ல அனுப்பட்ட புராவினங்களின்

சந்ததிகள்.ஆள்பவன் உயிரோடிருக்கும்போதே அவன் பாதுகையை வைத்தாண்டு, தம்பியை ஏமாற்றியதாகச் சொல்லும் பாடகனின் கற்பனையில் உதித்து இன்று தெய்வீகத் திருவிளயாடல் எனப் போற்றப்படும் ஏடுகள், நா வல்லோன் தன் கற்பனையால் உண்டாக்கிய காகிதக் கோட்டைகள்,
கற்பனை உலகங்கள், கருத்துக்கே எட்டாத கனவு உலக சாம்ராஜ்யங்கள். சென்னியில் கல்லேற்றி சினம் தீர்த்த மன்னன் மீண்டும் தன் பகைவரை மன்னித்து விருந்தளித்ததால் ஏற்பட்ட விபரீத விளைவுகள் ஆகியவைகளே சரிந்த சாம்ராஜ்யங்களின் அடையாளங்கள்.
எதிரிகளின் குண்டுகளின் தாக்குதலால் வாய்பிளந்து தண்ணீரைக் குடித்துக் கடலின் அடிவாரத்திலே கண் கலங்கிக்கொண்டிருக்கும் மரக்கலங்கள், போர் மூண்டதால் நெடுநாட்கள் புகைவிட முடியாமல் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கும் புகைப் போக்கிகள்.
⁠மக்கள் மடிந்தாலும் தங்கள் மகோன்னத வாழ்வுக்கு முடிவேற்பட்டால் செங்கோலைப் பிடிங்கி மன்னன் செல்லுயிரைப் போக்கும் சீலமற்றவர்கள் விதைத்தவினையால் வீழ்ந்து விட்ட சாம்ராஜ்யங்கள்,
மதக் கோட்டை ஆட்டங் காண்பதைக் கண்டு வாளாவிருந்த மன்னர்களின் மண்டையில் தேளெனக் கொட்டித் தங்கள் தோளை உயர்த்திக்கொண்ட சண்டாளர்கள் செய்த சதியால் சரிந்துவிட்ட சாம்ராஜ்யங்கள், அவைக்களத்தில் ஏதோ அவசர வேலையாக இருந்த மன்னன் தன்னை அவமதித்தான் என்ற மன எரிச்சலால்
அரசுரிமையை மாற்றானுக்கு ஆக்கித்தந்த மடையர்களால் மண் மேடுகளான கோட்டைக் கொத்தளங்கள், மருந்தடைக்கும் பீரங்கியின் வாயில் மண்ணையும் கல்லையும் அடைத்து வெடிக்க ஒட்டாமல் தடுத்து வேடிக்கைப் பார்த்த வேதியர்களால் வேதனைக் குள்ளான வேந்தர்களின் கல்லறைகள்,
காலத்தால் செய்த நன்றியை ஞாலத்திலும் பெரிதென எண்ணாமல் கண நேரத்தில் தன்னக் காப்பாற்றியவனைக் காட்டிக் கொடுத்த கயவர்களால் வீழ்ந்து விட்ட கற்கோட்டைகள் ஆகிய இவைகளே சரிந்த சாம்ராஜ்யங்களின் அடையாளங்கள்.

சாம்ராஜ்ய மென்றால் என்ன ?

ஒன்றாக சேர்க்கப்பட்ட பல நாடுகளின் தலைமை: அல்லது வாள் வலிமையால் ஒன்று சேர்க்கப்பட்ட பல நாடுகளைக் கொண்ட ஆட்சி, அல்லது பல சிற்றரசர்களால் மனம் ஒப்பி கெளரவமாக ஏற்றுக்கொள்ளப்படுகிற ஒரு தலைமையின் கீழ் அன்பு முறையில் இயங்கும் அரசு,

மக்களையாள்வது மன்னன் கடமையென்பதும், மன்னனுக் கடங்கி நடப்பது மக்கள் கடமை யென்பதும் வல்லோன் வகுத்த வழி என்று மக்கள் அறியாமையால் ஒப்புக்கொண்ட ஒரு முறை, பொறுப்பான மன்னர்களால் முதலில் அன்பாக நடத்தப்பட்டு, பிறகு அதே மன்னர்களால் சில சுட்டிக்காட்ட முடியாத காரணங்களால்
யதேச்சாதிகாரத் தன்மையைக் காட்டியபோது, எதிர்க்க சக்தியற்றுக்கிடந்த மக்களையடக்கியாண்ட முறை. ’ஆண்டவன் விட்ட வழி’ பழைய பாவத்தின் விதை, இப்படி நாம் அடங்கித்தீர வேண்டிய நிலை ஏற்பட்டதென்ற அறியாமையினாலே
ஒரு அரசின் இரும்புப் பிடியிலே அகப்பட்டுக் கொண்ட மக்களடங்கிய ஆட்சியையே நாம் பொதுவாக சாம்ராஜ்யங்கள் என்கிறோம்.

அதிகாரத் தொனியை ஆயுதத்தால் எழுப்பி மக்களையடக்கியாள வேண்டுமென்ற நிலையிலே இருந்த நாடுகளை மாத்திரமன்னியில் பரோபகாரத்தால் பாரையாண்டு அன்பு நெறியும் அறவழியும் காட்ட வேண்டு மென்ற முடிவில் ஆண்ட மன்னர்களுக்குட்பட்டிருந்த நாட்டையும் சாம்ராஜ்யம்
என பொதுவாக அழைக்க கடந்த கால சரித்திரங்கள் இடந்தருகின்றன. மண்ணாசையாலும், மத வெறியாலும் மடமை யாலும் சூழ்ச்சியாலும் மறைந்துவிட்ட சாம்ராஜ்யங்கள் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.
இயேசு பிறப்பதற்கு முன் நான்காவது நூற்றாண்டில் மகா வீரன் அலெக்சாண்டர் எழுப்பிய சாம்ராஜ்யத்தைக் கொடுமையான தென்றும் ; அதே நூற்றாண்டில் அசோகன் எழுப்பிய சாம்ராஜ்யத்தை நல்ல வல்லரசென்றும் கூறலாம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

21 Nov
சரிந்த சாம்ராஜ்யங்கள்-4

பிந்துசாரன்

இவன் சந்திரகுப்தனின் மகன். குடி, கேளிக்கை இந்த இரண்டும் மிதமாக இருக்கும் நேரத்தில் தர்க்க ஞானத்தை வளர்த்தலே இவனுடைய பொழுதுபோக்கு. இவன் வாழ்ந்த காலம் சண்டையில்லாத சமாதான காலம். தன் தந்தை போட்டுவிட்டுப்போன
அரசியல் பாட்டையிலேயே தன் அரசியல் தேரை வெகு சுலபமாக செலுத்தியவன் இவன். இவன் தன் சொந்த நாட்டில் கிடைத்த பழங்களையும் மதுவையும் சுவைத்து சுவைத்து நாத்தடித்துப்போய் கிரேக்க நாட்டுக்கு ஒரு கடிதம் எழுதி, அதில் :-பழங்களையும், மதுவையும்,
ஒரு தர்க்க ஞானியையும் அனுப்பும்படிக் கேட்டிருந்தான். இவன் கடிதத்தைக் கண்ட கிரேக்க சர்க்கார், பழங்களையும் மதுவையும் வேண்டுமானால் விற்போம், ஆனால் எங்கள் நாட்டில் தோன்றிய எந்த
Read 4 tweets
21 Nov
சரிந்த சாம்ராஜ்யங்கள்-3

மெளரிய சாம்ராஜ்யம்
அலெக்சாண்டரைக் கொண்டு சூள்முடித்த சாணக்கியன்

அம்மாபெரிய சாம்ராஜ்யத்தை அழிக்க வேண்டுமென்று வேறோர் ஆரியன் சூள் உரைத்தான். அதன்படியே அதை அழித்தும் விட்டான்.
அலெக்சாண்டரைக் கொண்டு சூள்முடித்த சாணக்கியன்

மூவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் ஒருவராலும் காப்பாற்றி வைக்கப்படாதது. தென்னாட்டில் வலிமை பொருந்திய மூன்று வல்லரசுகள் தன்னேரில்லாது ஆண்டு அலைகடல்மேல் தங்கள்

மரக்கலங்களை செலுத்தி வேற்று நாட்டில் தன் விளைப்பொருள்களை வழங்கிக் கொண்டிருந்த நேரம்தான் வடக்கே ஒரு ஏகாதிபத்தியத்தை உண்டாக்க வேண்டுமென ஒரு ஆரியன் சூள் உரைத்தான். அதன்படியே செய்து முடித்தான். கி. மு. மூன்றாவது நூற்றாண்டில் தோன்றிய அம்மாபெரிய சாம்ராஜ்யத்தை அழிக்க வேண்டுமென்று
Read 54 tweets
20 Nov
சிறுத்தையே வெளியில் வா!

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது!

சிறுத்தையே வெளியில்வா!

எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!

நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?

கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்

தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி

நமக்குள உரிமை தமக்கென் பார்எனில்,

வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!
இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!

குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?

மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!

நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!
Read 4 tweets
19 Nov
#FarmLaws #farmlawswithdrawn
#FarmLawsRepealed
#நதியினில்_வெள்ளம்

@OfficeOfOPS @EPSTamilNadu @thenisiraj
@bentalk1 @Civilerbala1979 @TPR62523096
@pdhana @Ananthi90403790

நதியினில் வெள்ளம்
கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே
இறைவனின் சிரிப்பு
ஏணிந்த சிரிப்பு

OPS நவ்
ஒருபாதை போட்ட நாயகன்-அதை
வேலி போட்டு மூடினான்
மனம் வேலி தாண்டி போனது அதை
தாலி வந்து கேட்டது...

தேனுக்குள் விழுந்து
திகைத்தது எறும்பு
இதயத்தின் பிணைப்பு
இறைவனின் சிரிப்பு...

ஒரு நீதி கூண்டில் நின்றது
ஒரு நீதி சாட்சி சொன்னது
ஒரு நீதி தெய்வம் ஆனது இதில்
தர்மம் எங்கு போனது?
@SriniVa05883071
ஒரு பக்கம் இருட்டு
ஒரு பக்கம் வெளிச்சம்
ஒரு பக்கம் வழக்கு
இறைவனின் சிரிப்பு... Image
Read 4 tweets
18 Nov
தமிழ்த்தேசியம் டு ராமதாஸ் வன்னியர் சங்கம்

தமிழ் சினிமாவின் மார்க்கேண்டயன் எனும் சிவகுமார் கோவை 27 OCT 1941 ராக்கிய கவுண்டர் -பழனியம்மாள் தம்பதியர்களின் மகன் பழனிச்சாமியாக பிறந்தவர் .

கொங்கு வெள்ளாள கவுண்டர் (OBC)
ராமதாஸ் சூலை 25, 1939(BC ↪️🔀SC)

கீழ்சிவிரி என்னும் ஊரில். சஞ்சீவராயக் கவுண்டர்-நவநீத அம்மாள் (அரிஜன பட்டியல் வகுப்பை சார்ந்த )தம்பதியர்களின் மகனாக பிறந்து தேவேந்திரர் SC பிரிவில் மருத்துவம் பயின்றவர் .
இது டாக்டர் ராமதாஸ் 1991 யில் கொடுத்த பேட்டியில் இருந்து எடுக்கப்பட்ட தகவல் ஆகும்.

1. டாக்டர் ராமதாஸ் ஜூலை 25, 1939 மிக எளிய குடும்பத்தில் பிறந்தார்.

2.முதலில் மொளவு கவுண்டர் என்பவர் நடத்திய திண்ணை பள்ளிக்கூடத்தில் பயின்றார்.
Read 45 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(