மெளரிய சாம்ராஜ்யம்
அலெக்சாண்டரைக் கொண்டு சூள்முடித்த சாணக்கியன்
அம்மாபெரிய சாம்ராஜ்யத்தை அழிக்க வேண்டுமென்று வேறோர் ஆரியன் சூள் உரைத்தான். அதன்படியே அதை அழித்தும் விட்டான்.
அலெக்சாண்டரைக் கொண்டு சூள்முடித்த சாணக்கியன்
மூவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் ஒருவராலும் காப்பாற்றி வைக்கப்படாதது. தென்னாட்டில் வலிமை பொருந்திய மூன்று வல்லரசுகள் தன்னேரில்லாது ஆண்டு அலைகடல்மேல் தங்கள்
மரக்கலங்களை செலுத்தி வேற்று நாட்டில் தன் விளைப்பொருள்களை வழங்கிக் கொண்டிருந்த நேரம்தான் வடக்கே ஒரு ஏகாதிபத்தியத்தை உண்டாக்க வேண்டுமென ஒரு ஆரியன் சூள் உரைத்தான். அதன்படியே செய்து முடித்தான். கி. மு. மூன்றாவது நூற்றாண்டில் தோன்றிய அம்மாபெரிய சாம்ராஜ்யத்தை அழிக்க வேண்டுமென்று
வேறோர் ஆரியன் சூள் உரைத்தான். அதன்படியே அதை அழித்தும் விட்டான்.
ஆரியம் எந்த சக்தியாலும் அழிந்துபடாமலிருக்க அரசனையும் அவனுடைய செங்கோலையும் காவல் வைத்தே ஆரியத்தை அரியாசனமேற்றினான், சிறந்த ராஜதந்திரியும் ஆரியகுல மக்களின் குலதெய்வம் என்று போற்றப்படும் சாணக்கியன்.
தன் உச்சியிலிருந்த ராஜ தந்திரங்களத்தனையையும் சேர்த்து அர்த்த சாஸ்திரமாக எழுதி மெளரிய சாம்ராஜ்யத்தின் முதல் முடிவேந்தனை சந்திரகுப்தனிடம் ஈட்டிபோல் நீட்டிய கெளடில்யன் என்பவன் இவன்தான்.
ஆரியர்களுக்கு தனித் தனியாக எற்படும் சுயநலத்தைவிட தன் இனம் வாழவேண்டுமென்ற பொதுநலமே மிகுந்தவர்கள் என்பதற்கு இவன் ஒர் தலைசிறந்த உதாரண மனிதனாக விளங்குகிறான்.
இவன் யார்?
யார் இந்த சாணக்கியன் ? தென்னாட்டில் கேரளப் பகுதியிலே எங்கேயோ ஒரு கிராமத்தில் பிறந்து வடக்கே சென்று எப்படியோ நவநந்தர்களின் அபிமானத்துக் குறியவனாக அல்லது அவர்களிடமே ஏதோ ஒரு மதிக்கத்தகுந்த,
அல்லது அரசர்கள் பழகிவைத்துக் கொண்டிருந்த பலவித கெட்ட பழக்கங்களுக்குத் தேவைப்பட்ட பலவிதமான ஆட்களிலே சாணக்கியனும் நந்தனின் தனிப்பட்ட அபிமானத்துக்குறியவனாக இருந்திருக்கவேண்டும் என்பது மட்டிலும் புலப்படுகிறது.
இல்லையானால் கண்ட நேரத்தில் அரண்மனையின் எந்த பக்கங்களிலும் திரிந்துகொண்டிருக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்க மாட்டான். இவனுடைய தாய் தந்தையர்கள் பெயர் தெரியவில்லை.
நந்தர் மாளிகையிலிருந்த இவன் ஓர் நாள், அரச குடும்பத்தார் குளிப்பதற்காகத் தனியாகக் கட்டப்பட்டிருந்த குளத்தில் குளித்தான். இதைக்கண்ட நந்தன் வெகுண்டு சாணக்கியனை வெளியேற்றினான். சினங்கொண்ட சாணக்கியனுடைய கண்கள் அக்கினி கோளங்களாய்விட்டன.
தான் குளிக்கும் போது அவிழ்த்துவிட்ட குடுமியை முடித்தானில்லை. ஒரு சாதாரண ஆரியன். நந்தன் தயவால் வாழ்ந்தவன். எனினும் நந்தராட்சியை ஒழிக்கத்திட்டமிட்டு, 'என்னை அவமானபடுத்திய அறிவிலிகளே !
உங்களை உங்கள் அரியாசனத்திலிருந்து கீழே இழுத்துத் தள்ளும்வரை என் குடுமியை முடிப்பதில்லை' என தன் நெஞ்சம் அதிர சூள் உரைத்துக்கொண்டான். மன எரிச்சலைத் தாங்காது தீமிதித்தவன் போலானான். எப்படி நந்தராட்சியை முடிப்பது.
இவன் மேலிருக்கும் ஆத்திரத்தால் வேற்று நாட்டானைக் கொண்டுவந்தால், வருபவனுடைய ஆட்சி இங்கே நிலைத்து ஆரிய ஆட்சிக்கும் அதன் வளர்ச்சிக்கும் கேடு வந்தால் என்ன செய்வது. இனி தான் ஏற்படுத்தப்போகும் சாம்ராஜ்யத்தில் தன் இனத்துக்கும் மதத்துக்கும் நல்வாழ்க்கையும் நளினமான அந்தஸ்தையும்
நிலைநாட்ட வேண்டுமென்று கருதினான். அவன் எண்ணப்படியே முதலில் எல்லாம் கைகூடியது. ஆனால் இறுதியில் ஆரியத்துக்கே அழிவு தோன்றி விட்டது. எந்த சாணக்கியனால் தன் இனத்தின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று ஒரு பெரிய மெளரிய சாம்ராஜ்யம் தோற்றுவிக்கப்பட்டதோ,
அதே மெளரிய சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னனான பிரஹதத்தனால் ஆரிய உயர்வுக்கு அபாயம் வந்துவிட்டது என்று தெரிந்த உடனே ஒரு ஆரியனாலேயே பிரஹதத்தன் கொல்லப்பட்டான்.
சூழ்ச் உருவெடுத்தல்
நவநந்தர்களால் தான் அடைந்த அவமானத்துக்குப் பதிலாக அவர்களைபழிதீர்க்கவும், அதே நேரத்தில் அவர்களுக்குப் போட்டியாக ஒரு பலம் பொருந்திய சாம்ராஜ்யத்தை யுண்டாக்கவும் எண்ணினான். இது உள் நாட்டிலிருக்கும் யாருடைய துணை கொண்டும் சாதிக்க முடியாத காரியம் என்றெண்ணினான்.
உள்ளம் பேசுகிறது
"சாணக்கியனே! யோசித்து செய். வெளிநாட்டரசர்களைக் கொண்டுவா, ஆனால் நிலைக்கவிடாதே. இங்கே நீ பழிதீர்க்க வேண்டுமென்று நினைக்கின்றவனை பயங்காட்ட வேண்டுமானல், நீ அழைத்து வருவதாக உத்தேசித்திருக்கிற மன்னனைப் பயன்படுத்திக்கொள். வருபவனை இங்கே நீ நிலைக்கவிட்டால் உன் மதம்
உன்கலாச்சாரம் உன் முன்னோர்கள் வாழ்ந்த, இன்னும் உன் இனத்தார் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சிந்துச் சமவெளியும் கங்கைத் திடலும் என்னாகும் என்பதை யோசித்துப் பார். வேற்றான் கொடி பறக்க, விருதுகள் முழங்க, நீயும் உன் சந்ததியும் அவ்வேற்றரசில் அடிமைகளாக இருக்க எண்ணுகிறாயா ?
நீயே மன்னனாகலாமா என்று யோசிக்கிறாய் அதைவிட மோசமான எண்ணம் வேரொன்றுமில்லை, ரண களத்தில் உன் குறுதி சிந்தவா உன் இனத்தார் படைக்கலம் ஏந்தி யுத்த பூமியில் நிற்கும் கோரக் காட்சியை நீ கண்டு கலங்கவா, வேண்டாம். சாணக்கியன் என்ற உன்னைப் போன்றதொரு
சதுர்வித உபாயங்களை யறிந்தவன்தான் அகப்படுவது கஷ்டம். சண்டைக்கா ஆட்கள் அகப்படமாட்டார்கள். அதோடு நீயே நேரில் போர்க்கோளம் பூண்டு புறப்படுவதன் மூலம் ஆர்யா வர்த்தம் முழுவதிலுமே இன்று உன் இனத்தாராண்டுக் கொண்டிருக்கும் மகதம், கோச்லம், கெளசாம்பி,
தட்ச சீலம் முதலான நகரங்கள் நாசமாய் தர்ப்பையும் முளைக்க முடியாத காடாய்விடும் என்பதையும் மறந்துவிடாதே. உன் ஆத்திரத்தின் தோழனும், இனத்தின் எதிரியுமான உன் புன்சிரிப்பின் மூலம் வேற்றானை உள்ளே அனுமதித்தால் வேறுமதமும் புதிய நம்பிக்கையும் உதயமாய்விடும்.
அதனால் ஏற்படும் விளைவு ஆரியத்தின் முடிவு என்பதைக் கண்டிப்பாக கவனத்தில் வைத்துக்கொள். மாற்று மன்னர் ஆட்சி உன் வளர்ச்சிக்கும் எதிர்கால எண்ணங்களுக்கும் ஒரு தடை கல்லாகும் என்பதையும் நினைவூட்டுகிறேன். தெற்கே நீ போகவே முடியாது.
உன் சூழ்ச்சியில் ஒரு அணு அவர்களுக்குத் தெரிந்தாலும் உனக்குமாத்திரமல்ல, உன் இனத்துக்கு மாத்திரமல்ல, நீ அழைத்துச் செல்ல நினைக்கிறாயே அவர்களும் அங்கே அணுக முடியாது. இந்தநாள் ஆரியப்பயிர் தென்னகமண்ணில் முளைக்கவே முடியாது.
ஆகவே அந்த யோசனையையும் கைவிடு' என்றெல்லாம் அவன் மனம் அவனை எச்சரிக்கை செய்கிறது. என்றாலும் தான் அன்றந்த அரசக் குளக்கறையில் கொண்ட சூளுரையை முடித்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு இப்படியும் அப்படியும் திரிந்துகொண்டிருக்கின்றான்.
அந்த நேரம்தான் இமயத்தின் அடிவாரத்தில் மாசிடோனிய மகாவீரன் அலெக்சாண்டரின் பேரிகை சப்தம் கேட்ட நேரம். சூரியனைக் கண்ட செந்தாமரை என முகம் விரித்தான் சாணக்கியன். அவன் கொண்ட களிப்பு அடுத்த வினாடியே நீர் மேல் எழும்பிய குமிழி என்றாய் விட்டது. ஏன்?
நந்தர்கள் மேலிருக்கும் கோபத்தால் வேற்று நாட்டானை உள்ளே அழைத்து வந்தால் கோசலம், அவந்தி, தட்ச சீலம், கோசாம்பி மகதம் முதலான சிறிய சிறிய நாடுகளை ஆண்டுகொண்டிருக்கும் தன் இனத்தாரான ஆரிய மன்னர்களின் கெதி என்னாகுமோ என கெதிகலங்கினான் சாணக்கியன். அடுத்த வினாடியே அவனுக்கொரு ஆறுதல் கிடைத்தது
அலெக்சாண்டரை தானே முதலில் சந்திக்காத வகையில் தன் இனத்தானான ஆரிய மன்னன் அம்பியே இறைச்சி விருந்தளித்து ஏதன்ஸ் வீரனே உள்ளே அழைத்துக் கொண்டான். இனி அவனைக் கொண்டு நந்தனைத் தொலைத்துவிடலாம் எனத் திட்டமிட்டுவிட்டான்.
நந்தன் ஆளுகையை ஒரு முறை வலம் வந்தால் போதும் எனக் கேட்டுக் கொண்டான் சாணக்கியன். அம்பி தந்த போதையில் மதிமயங்கியிருந்த அலெக்சாண்டர் அவ்வண்ணமே செய்வதாக ஒப்புக்கொண் டான். எக்காளமிட்டான் குடுமியை முடிக்காத சாணக்கியன்,
எதிரொலித்தது இமயம் கேலியாக. அந்த வான் முட்டி நிற்கும் பனி மலையில் வதிவதாக நினத்துக் கொண்டிருந்தானே தபோதனர்கள் அவர்கள் தன்னை ஆசீர்வதிப்பதாக எண்ணி மேலும் பூரித்தான். அலெக்சாண்டர் நந்த நாட்டில் காலடி வைக்காமுன்னம், நந்தன் கொல்லப்பட்டான்.
குற்றமற்ற நந்தன் சிந்திய ரத்தத்தில் நெளிந்த கிருமிகள் சாணக்கியன் பெயரைச் சொல்ல அஞ்சி அஞ்சி செத்துவிட்டன. அதையே செய்து முடித்தனர், சரித்திராசிரியர்கள் கொலைக் குற்றம் சாணக்கியனுடையதல்ல வென்றால் அவன் வழி வந்தவர்கள்,
இல்லையானால் வாளுக்கே கை கால் முளைத்தா நந்தனின் கழுத்தைக் துண்டித்திருக்கும்? எப்படியோ முடிந்தான் நந்தன். சாணக்கியன் வஞ்சமும் அலெக்சாண்டரின் அபிமானமும் சேர்ந்து ஆரிய நஞ்சால் அபிஷேகம் செய்யப்பட்ட சந்திரகுப்தன் அரியாசன மேற்றப்பட்டான்.
எந்த ஆரியனால் சந்திர குப்தனுடைய சாம்ராஜ்யம் தோற்றுவிக்கப்பட்டதோ அதே ஆரியத்துக்கு இது மிக மிகக் கடமைப்பட்டதாகிவிட்டது. ஆரியம் இதைத் தோற்றுவித்ததற்குக் காரணம் முன்பு சொன்னவைகள் மாத்திரமல்ல, இந்த சாம்ராஜ்யத்தால் ஆரியத்திற்கு போடப்படும் அஸ்திவாரம்.
அகிலம் அழியும் வரையிலும் யாராலும் அசைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பதிந்துவிட வேண்டுமென்று எண்ணியதும் குறிப்பிடத்தகுந்ததாகும், ஆனால் சாணக்கியன் எண்ணத்தில் இடிவிழுந்ததைப்போல் மெளரிய சாம்ராஜ்யம் சரிந்ததற்கும் புத்தர் பேரொளி தோன்றியதற்கும்
ஆரியம் அடிப்பட்ட பாம்பென துள்ளித் துடித்து இங்கு மங்குமாக வாலை மாத்திரம் ஆடடிக்கொண்டிருந்ததற்கும் சரியாய் விட்டது.
சந்திரகுப்தன் சாணக்கியன் அபிமானம்
இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை தோற்றுவித்த சாணக்கியன் ஏன் தானே மன்னனாக வர வேண்டும் மென்று நினைக்கவில்லை. அல்லது சில நாட்களுக்குப் பிறகாவது மன்னனாக வரலாம் என்ற எண்ணம் ஏன் தோன்றவில்லை.
இங்கேதான் ஆரியர்களுக்கு தனித் தனியான சுயநலத்தைவிட தன் இனத்தையே காப்பாற்றித் தீரவேண்டுமென்ற உணர்ச்சி அதிகம் என்பதை முன்பு சுட்டிக் காட்டியிருந்தோம்.
சந்திரகுப்தன்
அலெக்ஜாண்டரின் நடமாட்டத்தாலும், அவனே நடமாடச் செய்த சாணக்கியனாலும் அழிந்த நந்த சாம்ராஜ்யத்துக்குப்பின் தோன்றிய மெளரிய சாம்ராஜ்யத்தின் முதல் மன்னன் இவன். தனக்கு இவ்வளவு பெருமைகளைத் தேடித் தந்த சாணக்கியனையே தன் ராஜ குருவாக ஏற்றுக்கொண்டான்.
இவனுடைய காலத்தில் தான் பெரிய பெரிய அணைக்கட்டுகளையும், நீர்த் தேக்கங்களையும் உண்டாக்கினான். நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதியை பங்கிட்டு அளித்து அதற்குண்டான வரிகளை வசூல்செய்தான். இவ்வளவு தண்ணீர் வசதிகளைச் செய்து கொடுத்தும் சரியாக விவசாயம் செய்யாதவர்களைக் கடுமையாகத் தண்டித்தான்.
தன் தலை நகருக்கு மிக தூரத்திலிருந்த கத்தியவார் என்ற பிரதேசத்திற்கு புஷ்யமித்திரன் என்பவன் ஒருவனை கவர்னராக அமைத்து ஆளச் செய்தவனும், நீர்ப்பாசன வசதிகளைச் செய்து தருவதில் நிபுணனான சுதர்சனன் என்பவனை ஆதரித்து நாட்டின் பொருளாதார முன் னேற்றத்தையும் நில வளப்பத்தில்
பலவித சீர்த்திருத்தங்களையும் செய்தான். மத்திய சர்க்கார் ஒன்றை அமைத்து அதன்மூலம் தன் ஆட்சியை சிறுசிறு பாகங்களாக பிரித்து அதற்கேற்ற அதிகாரிகளைப்போட்டு ஆட்சியை திறம்பட நடத்திய முதல் மெளரிய மன்னன் இவன்தான். மேலும் இவன் காலத்தில்தான் பல பெரிய நகரங்களுக்கு,
உலகத்தார் அதிசயிக்கத்தகுந்த வகையிலே பெரிய பெரிய ராஜபாட்டைகளைப் போட்டான். தன் தலைநகரான தட்சசீலத்திலிருந்து ஐந்து நதிகளைக் கடந்து பஞ்சாப்புக்கும், அங்கிருந்து ஜம்னா நதியை கனோஜ் வழியாகக் கடந்து பிரயாக் வரையிலும்,
பிரயாக்கிலிருந்து பாடலி புத்திரம் வழியாக கெங்கையின் முகத்துவாரம் வரையிலும் அழகான சாலைகளை அமைத்து அதன் இருமருங்கிலும் மரங்களை வைத்து மைல் கற்களை நட்டு அவற்றை சர்க்காரின் கண்காணிப்பிலே வைத்திருந்தான்.
இப்படி சாலைகளின் ஓரங்களில் மரங்களை வைப்பதானது மக்கள் வெய்யலில் கஷ்டப்படாமல் நிழலில் செல்லவேண்டு மென்ற நல்லெண்ணத்தை சமூகத்துக்கு சர்க்கார் அளிக்கும் நன்கொடையெனக் கருதியவனும் இவன்தான். ஏறக்குறைய இவைகளுக்குக் காரணமான
சாணக்கியன் ஆரியனாக இருந்தும் ஜைன மதத்தைச் சார்ந்த சந்திரகுப்தன் இவனை முழுமனதோடு ஆதரித்தான் என்பதில் வியப்பில்லை. கடலாதிக்கமும் ஆற்றாதிக்கமும் இவனாட்சிக்குள் கொண்டு வந்து அவைகளில் ஒழுங்காக கப்பல்களையும் மரக்கலங்களையும் போக்குவரத்துக்கு
விடச் செய்து அதை ஒரு தனி இலாகாவாக்கி அந்த நிர்வாகத்தை ஒரு மந்திரியிடம் ஒப்படைத்திருந்தான்.
நிலவரி, சுரங்கவரி, சுங்கவரி, கனிப்பொருள் வரி, வருமானவரி, வாணிப வரி, உப்பாதிக்கம் முதலானவை கள் முக்கிய வருமான இனங்களாகக் கருதப்பட்டன.
இவன் செய்த இந்த அரசியல் ஏற்பாட்டால் சிந்து நதி முதல் பிரமபுத்ரா வரையிலும், வடக்கே இமாலயம் முதல் தெற்கே விந்தியம் வரையிலும் ஒரு பலம்பொருந்திய மெளரிய சாம்ராஜ்யம் நிலைக்கக் காரணம்மாயிற்று.
ஆனால் சந்திரகுப்தன் சிங்காதனமேறிய நான்கு ஆண்டுகளில் அலெக்சாண்டரின் தளபதிகளிலே மிகத் திறமையுடையவனும், கிரேக்கர்களால் வெற்றி வீரன் (நிக்கோடார்) என்று புகழப்பட்டவனுமான செலுக்கஸ் காலஞ்சென்றதன் தலைவன்
அலெக்சாண்டரின் இந்திய வெற்றிகளை நினைத்து மீண்டும் கிரேக்க மண்டலத்தின் கொடியை இந்திய மண்ணில் நிலை நாட்டவேண்டுமெனக் கருதினான். முன்பு இருந்தபடியே வட பகுதி சிறிய சிறிய நாடுகளாக இருக்குமென எண்ணினான்.
அம்பி போன்ற தொடை நடுங்கிகளும் அவன் சக மன்னர்களும் முன் போல விருந்து நடத்தி விழுந்து கும்பிடுவார்கள் என்று மனப்பால் குடித்தான்.
அந்த நம்பிக்கையாலேயே சிந்து நதியைக் கடந்து இந்தியாவுக்கு வந்தான். ஆனால் அவன் கனவு பகற் கனவாக முடிந்தது.
மெளரியப் படை அணிவகுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. போர் தொடங்கினால் நிச்சயம் விழுந்து விடுவோம் என்று நினத்தான் செலுக்கஸ் (நிக்கோடார்) பெர்ஷிய சாம்ராஜ்யத்திடமிருந்து தன் தலைவன் அலெக்சாண்டர் சிந்து சமவெளிக்கு மேற்கே காபூல் வரையிலும் வென்றிருந்த நாடுகள்
மகா மெளரிய சந்திரகுப்தன் காலடியில் விழவேண்டி வந்தது மாத்திரமல்ல நிக்கோடார் என்ற செலுக்கஸ் தன் மகளை சந்திரகுப்தனின் மகன் ஒருவனுக்குத் திருமணம் செய்துவைத்து அவனுடைய அபிமானத்துக்குரியவனாய் அரச அவையில் தன் நாட்டு தூதுவன் என்ற பேரால்
தான் சிந்திய ரத்தத்துக்கதிகமாக வெற்றி கண்ட சந்திரகுப்தன் இருபத்துநான்கு ஆண்டுகள் நாட்டை யாண்டு கி. மு. 296-ல் முடி சாய்ந்துவிட்டான்.
மெளரிய மூவேந்தர்களில் முதல்வனான இவனே போர்க்குணம் படைத்தவனும், ஆளும் திறமையுடையவனுமானவன் என வரலாற்றாசிரியர்கள் வர்ணிக்கின்றனர்.
சற்றொப்ப ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு தென் வேந்தர்கள் பெற்றிருந்த தெளிந்த அரசியல் அறிவை வடவேந்தர்களில் சிலர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்புதான் பெற்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இவன் சந்திரகுப்தனின் மகன். குடி, கேளிக்கை இந்த இரண்டும் மிதமாக இருக்கும் நேரத்தில் தர்க்க ஞானத்தை வளர்த்தலே இவனுடைய பொழுதுபோக்கு. இவன் வாழ்ந்த காலம் சண்டையில்லாத சமாதான காலம். தன் தந்தை போட்டுவிட்டுப்போன
அரசியல் பாட்டையிலேயே தன் அரசியல் தேரை வெகு சுலபமாக செலுத்தியவன் இவன். இவன் தன் சொந்த நாட்டில் கிடைத்த பழங்களையும் மதுவையும் சுவைத்து சுவைத்து நாத்தடித்துப்போய் கிரேக்க நாட்டுக்கு ஒரு கடிதம் எழுதி, அதில் :-பழங்களையும், மதுவையும்,
ஒரு தர்க்க ஞானியையும் அனுப்பும்படிக் கேட்டிருந்தான். இவன் கடிதத்தைக் கண்ட கிரேக்க சர்க்கார், பழங்களையும் மதுவையும் வேண்டுமானால் விற்போம், ஆனால் எங்கள் நாட்டில் தோன்றிய எந்த
பலவித வேறுபட்ட பண்பாடுகளால் நாடுகள் ஒன்றோடொன்று முட்டி மோதி ரணகளத்தில் கைசலித்து வேறு வகையில்லாமல் வாளைத் தூர எறிந்து எதிரியின் காலடியில் தஞ்சம் புகுந்து உயிர்ப்பிச்சைக் கேட்டு மன்னர்கள் ஒடிப்போனதால் வீழ்ந்துவிட்ட சாம்ராஜ்யங்கள், அகழியில் நீர் வற்றியதால்,
தமிழ் சினிமாவின் மார்க்கேண்டயன் எனும் சிவகுமார் கோவை 27 OCT 1941 ராக்கிய கவுண்டர் -பழனியம்மாள் தம்பதியர்களின் மகன் பழனிச்சாமியாக பிறந்தவர் .
கொங்கு வெள்ளாள கவுண்டர் (OBC)
ராமதாஸ் சூலை 25, 1939(BC ↪️🔀SC)
கீழ்சிவிரி என்னும் ஊரில். சஞ்சீவராயக் கவுண்டர்-நவநீத அம்மாள் (அரிஜன பட்டியல் வகுப்பை சார்ந்த )தம்பதியர்களின் மகனாக பிறந்து தேவேந்திரர் SC பிரிவில் மருத்துவம் பயின்றவர் .
இது டாக்டர் ராமதாஸ் 1991 யில் கொடுத்த பேட்டியில் இருந்து எடுக்கப்பட்ட தகவல் ஆகும்.
1. டாக்டர் ராமதாஸ் ஜூலை 25, 1939 மிக எளிய குடும்பத்தில் பிறந்தார்.
2.முதலில் மொளவு கவுண்டர் என்பவர் நடத்திய திண்ணை பள்ளிக்கூடத்தில் பயின்றார்.