#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் குரு வையாபுரி தன்‌ சீடர்கள்‌ சிலருடன்‌ பேசியபடி, ஆற்றின்‌ கரையோரம்‌ நடந்து சென்று கொண்டிருந்தார்‌. திடீரென அவர் கால்‌ வழுக்கி, நிலை தடுமாறிஆற்றில்‌ விழப்போனார்‌. அப்போது அருகிலிருந்த சீடன் குமரன் ‌சட்‌டென்று குருவின்‌ கையைப்‌ பிடித்து இழுத்து அவரை ஆற்றில்‌
விழாமல்‌ காப்பாற்றினான்‌. அவன்‌ அவரைக்‌ காப்பாற்றாமல்‌ இருந்திருந்தால்‌ ஆற்றில்‌ விழுந்து, அவர்‌ பெருக்கெடுத்து ஓடும்‌ வெள்ளத்தால்‌ அடித்துச்‌ செல்லப் பட்டிருப்பார்‌. குருவும்‌ மற்ற சீடர்களும்‌ காப்பாற்றிய சீடன் குமரனுக்கு நன்றி தெரிவித்தனர்‌. இதனால்‌ அந்த சீடனுக்குத்‌ தற்பெருமை
அதிகமாகி விட்டது. பார்ப்பவர்களிடம் எல்லாம்‌, ஆற்றில்‌ விழ இருந்த குருவை நான்தான்‌ காப்பாற்றினேன்‌. இல்லா விட்டால்‌, இந்நேரம்‌ குரு ஆற்றில்‌ அடித்துச்‌ செல்லப்பட்டு இறந்திருப்பார்‌ என்று கூறத்‌
தொடங்கினான்‌. இந்த விஷயம்‌ குருவின்‌ காதுக்கு எட்டியது. ஆனாலும்‌ பொறுமையைக்‌ கடைப்
பிடித்தார்‌. மறு நாள்‌ குரு வையாபுரி அதே சீடர்களை அழைத்துக்‌கொண்டு, அதே ஆற்றின்‌ கரையோரம்‌ நடந்து அன்று சம்பவம்‌ நடந்த இடம்‌ வந்ததும்‌, முன்பு தன்னைக்‌ காப்பாற்றிய சீடன் குமரனிடம்‌, என்னை ஆற்றில்‌ தள்ளிவிடு என்றார்‌. அந்த சீடன்‌ திகைத்தான்‌.ம்‌ தள்ளு என்றார்‌ குரு. அது வேண்டாம்‌
குருவே என்றான்‌ சீடன்‌. இது குருவின்‌ உத்தரவு. கேட்டு நடப்பது உன்‌ கடமை, ம் என்னை ஆற்றில்‌ தள்ளு என்றார்‌.
மிரண்டு போன சீடன்‌ அவரை ஆற்றில்‌ தள்ளி விட்டான்‌. மற்ற சீடர்கள்‌ என்ன நடக்கப்‌ போகிறதோ என்று திகிலுடன்‌ பார்த்தனர்‌. ஆற்றில்‌ விழுந்த குரு, எந்தவித பதட்டமும்‌ படாமல்‌,
அமைதியாக நீந்திச்‌ சென்று மறுகரையைத்‌ தொட்டு விட்டுத்‌ திரும்பி வந்தார்‌. அதைப்‌ பார்த்த சீடர்கள்‌ அனைவரும்‌ திகைத்தனர்‌. குரு கரை மேலே ஏறி வந்தார்‌. தள்ளி விட்ட சீடனைப்‌ பார்த்து, இப்போதும்‌ நீ தான்‌ என்னைக்‌ காப்பாற்றினாயா என்று கேட்டார்‌. அந்த சீடன்‌ தலை குனிந்தான்‌. ஆபத்து
நேரத்தில்‌ ஒருவரைக்‌ காப்பாற்றுவது, ஒருவருக்கு உதவுவது என்பது மனிதாபிமானமுள்ள செயல்‌. ஆனால்‌, அதை விளம்பரப்படுத்தி பெருமையடித்துக்‌ கொள்வது அந்த மனிதாபிமான குணத்துக்கே இழுக்கைத்‌ தேடத்‌ தரும்‌. அந்த மனிதன்‌ ஒரு நாளும்‌ சான்றோனாக முடியாது என்றார் ‌குரு. தற்பெருமை கொண்ட சீடன்‌,
குருவிடம்‌ மன்னிப்புக்‌ கேட்டு, தற்பெருமை எண்ணத்தைக்‌ கைவிட்டான்‌. எனக்குத்‌ தெரியும்‌ என்பதற்கும்‌, எனக்கு மட்டும் தான்‌ தெரியும்‌ என்பதற்கும்‌ நிறைய வேறுபாடுகள் உள்ளன. எல்லாம்‌ தெரிந்த மனிதனும்‌ இல்லை, எதுவும்‌ தெரியாத மனிதனும்‌ இல்லை என்ற உலக உண்மையை
மறந்த மனிதன்தான்‌ இந்த
தற்பெருமை வலையில்‌ விழுந்து அவமானப்‌ படுகிறான்‌. மனதில்‌ ஏற்படக்கூடிய களங்கங்களில்‌ பிறருடைய வெற்றியைக்‌ கண்டு பொறுத்துக்‌ கொள்ள முடியாதிருப்பது ஒன்று. பொறாமை குணமே மிகவும்‌ கொடியது. வீண்‌, கர்வம்‌, பொறாமை, அகம்பாவம்‌ என்பன கெளரவர்களையே அழித்தது. இவைகள் மனிதனுடைய உண்மையான
இயல்பின்‌ வேர்களை வெட்டிவிடும்‌. நாம்‌ மலையாக இருப்பினும்‌ இந்த உடம்பு மண்‌ கும்பம்‌ என உணர்வு கொண்டு ஸ்ரீமந் நாராயணன் பதம் சரண் அடைவோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

24 Nov
There was a bank director in France who was keen on having a darshan of Maha Periyava having heard a lot about him. Dr. Raghavan who was a Sanskrit professor in the Madras University used to receive frequent phone calls from the bank director. He would ask if he could come and Image
have a darshan of Periyava. Dr. Raghavan would inform Periyava about the request, he is very keen to have darshan of Periyava, he bothers me frequently, Periyava did not give his consent to meet him. Some years passed in this way. Suddenly one day, Dr. Raghavan received
intimation that said, I have arrived at Bombay. I shall come over to Madras and meet you. Please arrange for the darshan. At that time Acharyas were staying in the Mylapore Sanskrit College. One evening Dr. Raghavan was waiting to have darshan of Maha Periyava. Periyava called
Read 18 tweets
24 Nov
இப்பதிவு ஜோதிடம் பற்றியது. பாண்டு உயிர் பிரியும் தருண‌த்தில் மகன்கள் ஐவரையும் அழைத்து, தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம், மாறாக பிய்த்து தின்று விடவும், அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்ற‌ல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான். பாண்டவர்களும் தந்தை
பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார். விஷயத்தை கேட்டு பாண்ட‌வர்களை திட்டுகிறார். சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகி விட்டதென்றால் உங்களுக்கு என்ன ஆனது? யாராவது பிணத்தை தின்பார்களா? வாருங்கள் விற‌கு எடுத்து வந்து உங்கள் தந்தையை
தகனம் செய்வோம் என்று பாண்டவர்களை அழைத்துச் செல்கிறார். மிருகங்கள் பாண்டுவின் உடலை இழுத்துச் சென்றுவிடாமல் இருக்க சகாதேவனை காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் அப்பால் போனவுடன் சகாதேவன் த‌ன் த‌ந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல் அவரது சுண்டுவிரலை மட்டும் உடைத்து தின்று
Read 12 tweets
23 Nov
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் எங்கும் ராமநாம கோஷம் ஒலித்துக் கொண்டிருந்தது. வானர சேனைகள் மளமளவென்று பெரிய கற்களை கடலில் தூக்கிப் போட்டுப் பாலம் அமைத்துக் கொண்டிருந்தன. அவர்களின் வேகத்திற்கு ஈடாக காற்றும் இதமாக வீசி உதவிக் கொண்டிருந்தது. அப்போது பாலத்தின் நடுவே சிறு அணில் ஒன்று இங்கும் Image
அங்கும் ஓடிக் கொண்டிருந்தது. அதை வானர வீரர்கள் கவனித்தபடியே நின்றனர். அதனால் பாலம் கட்டும் பணி சற்று நேரம் ஸ்தம்பித்தது. அணில் வந்த காரணத்தை அறிய அனைவரும் விரும்பினர். அணிலே! இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய். உன் ஓட்டத்தைப் பார்த்து எங்கள் கவனம் சிதறுகிறது. பாறைகளுக்குள்
அகப்பட்டுக் கொள்ளாதே. ஒதுங்கிப் போய்விடு என்றனர். ஆனால் அணில் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மற்றொரு விஷயத்தைச் சொன்னது வானர வீரர்களுக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. ராம சேவகர்களே! எனக்கொரு உதவி செய்வீர்களா? நான் ராம பிரானைச் சந்திக்க வேண்டும் என்று கூறியது. இந்தப் பதிலைக்
Read 11 tweets
23 Nov
ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் உடலின் எந்த உறுப்புகளிலும் காணவில்லையே! எப்படி நம்புவது? என்று கேட்ட டாக்டர் ரங்காச்சாரிக்கு
மஹா பெரியவாளின் பதில்.
டாக்டர்: ஸ்வாமி, நான் நூற்றுக்கணக்கான அறுவை சிகிச்சை செய்துள்ளேன். ஆனால் தாங்கள் கூறும் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் உடலின் எந்த
உறுப்புகளிலும் காணவில்லையே! எப்படி நம்புவது?
பெரியவா: ஒன்று கேட்கிறேன். பதில் சொல். நீ செய்த அறுவை சிகிச்சைகளில் பலரைக் காப்பாற்றி இருக்கலாம். சிலர் மரணம் அடைந்தும் இருக்கலாம். மரணம் அடைந்ததும் நீ என்ன சொல்வாய்?
டாக்டர்: என்ன செய்வது? பிராணன் போய்விட்டது. அவ்வளவுதான். என்று
சொல்லுவேன்.
பெரியவா: பிறகு?
டாக்டர்: இன்னாரின் பிராணன் போய்விட்டது என்று மரணச் சான்றிதழ் கொடுப்பேன்.
பெரியவா: பிராணன் போனதை நீ பார்த்தாயா? சரி. அறுவை சிகிச்சை செய்யும் போது பிராணன் இருந்ததை நிச்சயம் சொல்ல முடியுமா? பார்க்காத ஒன்றைப் பற்றி பிராணன் போய்விட்டது என்று நீ சான்றிதழ்
Read 4 tweets
22 Nov
ஸ்ரீராமன் காட்டிற்கு வனவாசம் செல்ல கங்கைக் கடந்து அக்கரை செல்ல வேண்டும். அப்போதுதான் முதன் முதலாக குகன் ஸ்ரீராமனைப் பார்க்கிறார். ஶ்ரீராமனைப் பற்றி சகல விஷயங்களும் அவருக்குத் தெரியும். நாட்டைத் துறந்து தன் முன் நிற்கும் மரவுரி தரித்த ஸ்ரீராமனைக் காணமுடியாமல், கண்களில் குகனுக்குக்
கண்ணீர்த்திரை. என்னால் உனக்கு என்ன உதவி ஆகவேண்டும் ஸ்ரீராமா என பக்தியோடு கேட்டார். "கங்கையைக் கடந்து அக்கரை செல்லவேண்டும் குஹா" எனக் கூறினார் ஶ்ரீராமர். அப்போது ஒரு படகு யாரையோ இறக்கி விட்டுவிட்டு புறப்படத் தயாராக இருந்தது.அந்த படகோட்டியின் பெயர் கேவத். குகன் அவனை அணுகி, கேவத் உன
படகை இங்கே கொண்டுவா என்றான். கேவத், இதோ நிற்கிறார்களே, இது யார் தெரியுமா? அயோத்தி மஹாராஜா ஸ்ரீராமர், அது சீதாதேவி, அவர் மனைவி, அது லக்ஷ்மணன் அவருடைய சகோதரன். இவர்களை அக்கரை கொண்டு சேர் என்றான். கேவத் ஸ்ரீராம லக்ஷ்மணர்களை, சீதாவை வணங்கினான். அவன் தினமும் காலையில் எழும்போதும்,
Read 11 tweets
21 Nov
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு கருவுற்ற மான் பேறு காலம் நெருங்கியதும் ஆற்றினருகே ஓர் அடர்ந்த புல் வெளியில் பிள்ளை பெற இடத்தை தேர்ந்தெடுத்தது. அப்போது கருமேகங்கள் சூழ்ந்தன. பலத்த மழைக்காக ஆயத்தங்களான இடியும் மின்னலும் தோன்றின. மான் தன் இடப்பக்கம் பார்த்தது. அங்கே ஒரு வேடன் மானை நோக்கி
அம்பை ஏய குறி பார்த்து நின்று கொண்டிருந்தான். மானின் வலப்பக்கமோ பசியுடன் ஒரு புலி மானை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒரு நிறைமாத கர்ப்பிணி மான் இந்நிலையில் என்ன செய்யும்? அதற்கு பிரசவ வலியும் வந்து விட்டது. இத்ற்கிடையில் காட்டு தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இத்தனை ஆபத்துகள் நிறைந்த
நிலையிலும் மான் தன் கவனம் முழுதும் தன் மகவை ஈவதிலேயே செலுத்தியது. மற்ற சூழல் அதன் கண்களுக்குத் தெரியவில்லை. தான் நல்ல முறையில் பிரசவிக்க வேண்டும் என்பது மட்டுமே அதன் நினைவில் இருந்தது. அப்போது நடந்த ஆச்சர்யங்களை பாருங்கள்! மின்னல் தாக்கியதால் வேடன் கண் பார்வை இழந்தான். தவறி
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(