ரூ.2.27 கோடியுடன் சிக்கிய பெண் அதிகாரிக்கு பதவி உயர்வு
சென்னை : லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் சிக்கிய பெண் அதிகாரிக்கு, புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித் துறையில், வேலுார் மாவட்ட தொழில்நுட்ப கல்விப் பிரிவு செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் ஷோபனா, 58. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள இவரது வீடு மற்றும் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் 3ம் தேதி சோதனை நடத்தினர்.
அப்போது, 2.27 கோடி ரூபாய் ரொக்கம், தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள், பினாமி பெயரிலான சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இந்நிலையில், ஷோபனா திடீரென பதவி உயர்வுடன், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மண்டல பொதுப்பணித் துறையில், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு துணை கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு வழங்கி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை, பொதுப்பணித் துறை செயலர் தயானந்த கட்டாரியா பிறப்பித்துள்ளார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தூத்துக்குடி காற்று மாசுக்கு ஸ்டெர்லைட் காரணம் அல்ல: அண்ணா பல்கலை., அறிக்கை
'துாத்துக்குடி நகரில் காற்று மாசு அளவுக்கு அதிகமாக உள்ளது. இதற்கு, அங்கே இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலை தான் காரணம்' என போராட்டக்காரர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.
ஆனால், அண்ணா பல்கலையின் ஆய்வு அறிக்கை, சாலை துாசும், வாகன புகையுமே இதற்கு முக்கிய காரணங்கள் என தெரிவிக்கிறது. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த விபரத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைக்காமல், காலம் தாழ்த்தியதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், நாடெங்கிலும் உள்ள காற்றின் தரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதற்காக 800 கண்காணிப்பு மையங்களையும், 250 தொடர் கண்காணிப்பு மையங்களையும் நிர்வகித்து வருகிறது.இதன் வாயிலாக, 124 நகரங்களில் காற்றின் தரம் பேணப்படவில்லை என்று கண்டுபிடித்துள்ளது.
மனிதன் மதத்தைத் தோற்றுவித்தான்….
இயற்கை தர்மத்தைத் தோற்றுவித்தது.
ஆனால்ஹிந்துமதம் குறிப்பிட்ட ஒருவரால் தோன்றியதல்ல.
இந்த பூமியில் இயற்கையாகவே உருவான ஒரே மதம் ஹிந்துமதம் தான்.ஹிந்து வழிபாடு,கடவுள்கள்,திருவிழா,பண்டிகை,உணவு முறை எல்லாமே இயற்கையிலிருந்து அருளப்பட்டவபையே.
பிறப்பிலிருந்து இறப்பு வரை பூமிதேவியையும் அதில் வாழும் கோடானு கோடி உயிரினங்களையும் பாதுகாப்பது இந்து தர்மம்.
போன்சாய் செடிபோல் எல்லைக்குள் கட்டுப்படுத்தப்பட்ட வழிமுறையன்று.
அது மிகப்பெரிய ஆலமரம்.தனது கிளைகளை ,வேர்களை நீண்ட நெடுந்தூரம் ஆழமாகப் பரவவிட்டிருக்கும் அதிசய மரம்.பூமியில் வாழும் அத்துணை ஜீவராசிகளுக்கும் இளைப்பாற நிழல் தந்து பாரபட்சமின்றி அரவணைக்கும் விருட்சம்.
ஆன்மீகத்தையும் ஆஸ்திகர்களையும் கேலி பேசுவது திராவிடத்துக்கு ஒன்றும் புதிதே அல்ல.
நமது மத அடையாளங்களான திருமண்,திருநீறு,பூணூல்,குடுமியெல்லாம் அவர்களுக்கு நகைப்புக்குரியதே.
ஆனால் சைவர்களோ வைணவர்களோ இந்த விடத்தை எதிர்த்து கேள்வியெழுப்பியதில்லை,இவர்களுக்கு இறைவன் கூலி கொடுப்பான் என்ற நம்பிக்கையில்.
அந்தச் சகிப்புத்தன்மை தான் இன்றும் அவர்கள் நம்மை,நமது நம்பிக்கையை கேலி பேசி ஏளனப்படுத்தக் காரணமோ?
கலைஞர் தொலைக்காட்சி- கருணாநிதி பெயரில் தொடங்கப்பட்ட திமுக பகுத்தறிவு சேனல்.
அதில் ஒளிபரப்பப்படும் செல்லக் குட்டீஸ் குழந்தைகள் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இமான் எனும் இமான் அண்ணாச்சி.(அந்த நிகழ்ச்சி ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது தான்.)
தமிழ் வளர்த்த இராமானுஜ இராகவையங்கார்
By மகர சடகோபன்
நூல் ஆய்வு:
நவதிருப்பதியில் ஒன்றான எனது ஊர் பக்கம் , ஆழ்வார்களில் தலைவரான நம்மாழ்வார் அவதரித்த, வேதம் தமிழ் செய்த மாறன் அவதரித்த மண்ணில், தமிழ் தன்னுருவம் கொண்டு தவழ்ந்த தவமண்ணில்,
தமிழ் வளர்க்க ஆழ்வார்திருநகரியில் பத்மாஸனி அம்மாள் , இராமானுஜ அய்யங்கார் தம்பதியருக்கு இரண்டாவது மகனாக 1870 ம் ஆண்டு பிறந்தார். அதே சமயத்தில் 1869 ம் ஆண்டு தென்திருப்பேரையில் காளமேகம் அபிநவ அனந்தகிருஷ்ணய்யங்கார் பிறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரது தாய்மாமன்கள் கிருஷ்ணய்யங்கார் , சதாவதானம் முத்துசாமி அய்யங்கார் இருவரும் , சேதுபதி மன்னர் சபையில் புலவராகவும் , அமைச்சராகவும் இருந்தார்கள். பன்மொழியில் தேர்ச்சிப் பெற்றவர்கள். இவர்களது தாத்தா கிருஷ்ணய்யங்கார் சேதுபதி மன்னர் அமைச்சரவையில் இரண்டாவது அமைச்சராக இருந்தவர்.
அருள்மிகு வேட்டைமார்க்க சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில், தஞ்சாவூர், தமிழ்நாடு,
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.
🙏🇮🇳1
இக்கோவில் சிறிய ராஜகோபுரம், கருவறை, மண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது. மேற்கு நோக்கிய ராஜகோபுரத்தை அடுத்து மண்டபம் காணப்படுகிறது.
இந்த கோவில் மூலவராக வேட்டைமார்க்க ஶ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் உள்ளார்.
🙏🇮🇳2
இங்குள்ள ஆஞ்சநேயர் பஜார் ராமர் கோவிலிலுள்ள ஶ்ரீராமரைப் பார்த்த நிலையில் உள்ளார். அதற்குச் சான்றாக சன்னதியின் எதிர்ப்புறம் உள்ள கோவிலின் தெற்கு சுவரில் சிறிய ஜன்னல் காணப்படுகிறது.
அருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில், உதகை, நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
ஊட்டி நகரின் மையப் பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
🙏🇮🇳1
மூலஸ்தானத்தில் இரு அம்பாள்கள் (மாரி, காளி) ஒரே ஆலயத்தில் வீற்றிருக்கிறார்கள். இங்குள்ள நவகிரக நாயகர்கள் தம்பதி சமேதர்களாக அமைந்திருப்பது மிகவும் சிறப்பானதாகும்.
🙏🇮🇳2
இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய 3 வகையான சக்திகளை பக்தர்களுக்கு வழங்க மாரி, காளி, காட்டேரி அம்மன்கள் முப்பெருந்தேவிகளாக ஒரே தலத்தில் வீற்றிருக்கும் அரிய தலம். இத்தலத்தில் உள்ள காளி உக்கிரமாக இல்லாது சாந்தமாக வீற்றிருப்பது அதிசயம்.