கடவுளை காட்டலாம்...

எதை வேண்டுமானாலும் உன்னால் சாதிக்க முடியுமா? என்று யாராவது  உங்களிடம் கேட்டால், முடியும்  என்பது மட்டுமே உங்கள் பதிலாக இருக்கட்டும். முடியாது என்ற வார்த்தையை அகராதியை விட்டு தூக்கி எறிந்து விடுங்கள்.
இதோ! முடியும் என்பதற்கு சாட்சி கல்வியறிவே இல்லாத ஒரு வேடன். ஆதிசங்கரரின் சீடர் பத்மபாதர். இவர் சங்கரரின் சீடராவதற்கு முன், எப்படியாவது விஷ்ணுவின்  நரசிம்ம வடிவத்தை நேரில் கண்டு விட வேண்டும் என நினைத்து காட்டில் தவமிருந்தார்.
ஒருநாள் ஒரு வேடன் வந்தான். அவன் பத்மபாதரிடம், சாமி! எதுக்கு இங்கே வந்து கண்ணை பொத்திகிட்டு தூங்குதே! உனக்கு வீடு வாசல் இல்லையா? என்றான்.  போடா அபிஷ்டு! நான் தியானத்தில் இருக்கிறேன்,. அதெல்லாம் எனக்கு தெரியாது சாமி! எதுக்காக கண்ணை மூடி இருந்தே! சொல்லு! என்றான்.
நான் நரசிம்மத்தை எண்ணி தவமிருக்கிறேன்,. நரசிம்மமா? அப்படின்னா என்ன! சிங்க முகம், மனித உடல் கொண்டது அது.

அப்படி ஒரு மிருகத்தை காட்டில் நான் பார்த்ததே கிடையாதே! சரி... நீ எங்கிட்ட சொல்லிட்டே இல்லே! அது என் கண்ணில் படாமலா போயிடும்!
இன்று சாயங்காலத்துக்குள் அதை புடிச்சுட்டு வந்துடுறேன், என்றவனை பரிதாபமாக பார்த்தார் பத்மபாதர். சரியான ஞானசூன்யம் என்று எண்ணிக்கொண்டார். வேடனின் எண்ணமெல்லாம் நரசிம்மத்தின் மேல் இருந்தது. அவன் காட்டில் கடுமையாக அலைந்தான். இதுவரை அவன் நுழையாத அடர்ந்த பகுதிகளில் எல்லாம் புகுந்தான்.
மான், முயல் என்று எத்தனையோ ஓடின. உணவைப்பற்றி அவன் கவலைப்படவே இல்லை. தாகத்தையும் பொருட்படுத்தவில்லை. மாலையாகி விட்டது.ஐயோ! அந்த சாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போயிற்றே! வாக்கை காப்பாற்றாதவன் பூமியில் வாழ தகுதியில்லாதவன். என் குலதெய்வமே! முருகா!
அந்த மிருகத்தை என் கண் முன்னால் காட்டப்பா! என்று உளமுருக வணங்கினான். பயனில்லை. நரசிம்மம் கண்ணில் படவில்லை.

இனியும் வாழ்வதில் அர்த்தமில்லை என்று உயரமான பாறை ஒன்றில் ஏறி, குதித்து உயிர்விட தயாரானான்.
அவனது கடமை உணர்வு கண்டு அந்த நாராயணனே கலங்கி விட்டார். நரசிம்ம வடிவில் அவன் முன்னால் வந்தார்.ஆகா! மாட்டிகிட்டியா! என்ற வேடன், அவரை காட்டு கொடிகளைக் கொண்டு கட்டினான்.
வேதாந்திகளுக்கும், தபஸ்விகளுக்கும் கட்டுப்படாத அந்த நாயகன் அந்த வேடனின் கட்டுக்கு பணிந்து நின்றான்.நரசிம்மத்தை இழுத்துக்கொண்டு பத்மபாதர் முன்னால் வந்தான்.சாமி! பாருமையா!
இதுதானே நீர் கேட்ட நரசிம்மம்.பத்மபாதரின் கண்ணுக்கு நரசிம்மர் தெரியவில்லை. வேடனின் கையிலிருந்த காட்டுக்கொடிகள் தான் தெரிந்தது. அடேய்! அவன் என் அரிய தவத்திற்கே வர மறுக்கிறான். உன்னிடமா சிக்குவான், என்றபடி ஏளனமாய் சிரித்தார்.
அப்போது அவர் காதில் குரல் கேட்டது.பத்மபாதா! வேடன் என்னை அடைந்தே தீர வேண்டுமென ஒரே குறியுடன் அலைந்தான். என்னைக் காணாமல் உயிரையும் விட துணிந்தான்.
நீயோ, அலைபாயும் மனதுடன் நான் வருவேனோ மாட்டேனோ என்ற சந்தேகத்துடன் தவமிருந்தாய். உன் கண்ணுக்கு எப்படி தெரிவேன்! என்றவர் மறைந்து விட்டார்.
ஒரு வேடனின் பக்திக்கு கட்டுப்பட்ட நரசிம்மன், தனக்கு காட்சியளிக்காமல் போனது பற்றி அவர் வெட்கப்பட்டார். பின், ஆதிசங்கரரை சந்தித்து அவரது சீடரான பிறகே ஞானம் அடைந்தார்.

🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

25 Nov
தூத்துக்குடி காற்று மாசுக்கு ஸ்டெர்லைட் காரணம் அல்ல: அண்ணா பல்கலை., அறிக்கை

'துாத்துக்குடி நகரில் காற்று மாசு அளவுக்கு அதிகமாக உள்ளது. இதற்கு, அங்கே இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலை தான் காரணம்' என போராட்டக்காரர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.
ஆனால், அண்ணா பல்கலையின் ஆய்வு அறிக்கை, சாலை துாசும், வாகன புகையுமே இதற்கு முக்கிய காரணங்கள் என தெரிவிக்கிறது. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த விபரத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைக்காமல், காலம் தாழ்த்தியதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், நாடெங்கிலும் உள்ள காற்றின் தரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதற்காக 800 கண்காணிப்பு மையங்களையும், 250 தொடர் கண்காணிப்பு மையங்களையும் நிர்வகித்து வருகிறது.இதன் வாயிலாக, 124 நகரங்களில் காற்றின் தரம் பேணப்படவில்லை என்று கண்டுபிடித்துள்ளது.
Read 19 tweets
25 Nov
சனாதன தர்மம்!

By காலித் உமர் 

மனிதன் மதத்தைத் தோற்றுவித்தான்….
இயற்கை தர்மத்தைத் தோற்றுவித்தது.
ஆனால்ஹிந்துமதம் குறிப்பிட்ட ஒருவரால் தோன்றியதல்ல.
இந்த பூமியில் இயற்கையாகவே உருவான ஒரே மதம் ஹிந்துமதம் தான்.ஹிந்து வழிபாடு,கடவுள்கள்,திருவிழா,பண்டிகை,உணவு முறை எல்லாமே இயற்கையிலிருந்து அருளப்பட்டவபையே.
பிறப்பிலிருந்து இறப்பு வரை பூமிதேவியையும் அதில் வாழும் கோடானு கோடி உயிரினங்களையும் பாதுகாப்பது இந்து தர்மம்.
போன்சாய் செடிபோல் எல்லைக்குள் கட்டுப்படுத்தப்பட்ட  வழிமுறையன்று.
அது மிகப்பெரிய ஆலமரம்.தனது கிளைகளை ,வேர்களை நீண்ட நெடுந்தூரம் ஆழமாகப் பரவவிட்டிருக்கும் அதிசய மரம்.பூமியில் வாழும் அத்துணை ஜீவராசிகளுக்கும் இளைப்பாற நிழல் தந்து பாரபட்சமின்றி அரவணைக்கும் விருட்சம்.
Read 9 tweets
25 Nov
மந்திரமாவது நீறு!

By ஸ்ரீப்ரியா இராம்குமார் 

ஆன்மீகத்தையும் ஆஸ்திகர்களையும் கேலி பேசுவது திராவிடத்துக்கு ஒன்றும் புதிதே அல்ல.
நமது மத அடையாளங்களான திருமண்,திருநீறு,பூணூல்,குடுமியெல்லாம் அவர்களுக்கு நகைப்புக்குரியதே.
ஆனால் சைவர்களோ வைணவர்களோ இந்த விடத்தை எதிர்த்து கேள்வியெழுப்பியதில்லை,இவர்களுக்கு இறைவன் கூலி கொடுப்பான் என்ற நம்பிக்கையில்.
அந்தச் சகிப்புத்தன்மை தான் இன்றும் அவர்கள் நம்மை,நமது நம்பிக்கையை கேலி பேசி ஏளனப்படுத்தக் காரணமோ?
கலைஞர் தொலைக்காட்சி- கருணாநிதி பெயரில் தொடங்கப்பட்ட திமுக பகுத்தறிவு சேனல்.
அதில் ஒளிபரப்பப்படும் செல்லக் குட்டீஸ் குழந்தைகள் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இமான் எனும் இமான் அண்ணாச்சி.(அந்த நிகழ்ச்சி ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது தான்.)
Read 9 tweets
25 Nov
தமிழ் வளர்த்த இராமானுஜ இராகவையங்கார்
By மகர சடகோபன் 

நூல் ஆய்வு:

நவதிருப்பதியில் ஒன்றான எனது ஊர் பக்கம் , ஆழ்வார்களில் தலைவரான நம்மாழ்வார் அவதரித்த, வேதம் தமிழ் செய்த மாறன் அவதரித்த மண்ணில், தமிழ் தன்னுருவம் கொண்டு தவழ்ந்த தவமண்ணில்,
தமிழ் வளர்க்க ஆழ்வார்திருநகரியில் பத்மாஸனி அம்மாள் , இராமானுஜ அய்யங்கார் தம்பதியருக்கு இரண்டாவது மகனாக 1870 ம் ஆண்டு பிறந்தார். அதே சமயத்தில் 1869 ம் ஆண்டு தென்திருப்பேரையில் காளமேகம் அபிநவ அனந்தகிருஷ்ணய்யங்கார் பிறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரது தாய்மாமன்கள் கிருஷ்ணய்யங்கார் , சதாவதானம் முத்துசாமி அய்யங்கார் இருவரும் , சேதுபதி மன்னர் சபையில் புலவராகவும் , அமைச்சராகவும் இருந்தார்கள். பன்மொழியில் தேர்ச்சிப் பெற்றவர்கள். இவர்களது தாத்தா கிருஷ்ணய்யங்கார் சேதுபதி மன்னர் அமைச்சரவையில் இரண்டாவது அமைச்சராக இருந்தவர்.
Read 15 tweets
25 Nov
அருள்மிகு வேட்டைமார்க்க சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில், தஞ்சாவூர், தமிழ்நாடு,

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.

🙏🇮🇳1
இக்கோவில் சிறிய ராஜகோபுரம், கருவறை, மண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது. மேற்கு நோக்கிய ராஜகோபுரத்தை அடுத்து மண்டபம் காணப்படுகிறது.

இந்த கோவில் மூலவராக வேட்டைமார்க்க ஶ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் உள்ளார்.

🙏🇮🇳2
இங்குள்ள ஆஞ்சநேயர் பஜார் ராமர் கோவிலிலுள்ள ஶ்ரீராமரைப் பார்த்த நிலையில் உள்ளார். அதற்குச் சான்றாக சன்னதியின் எதிர்ப்புறம் உள்ள கோவிலின் தெற்கு சுவரில் சிறிய ஜன்னல் காணப்படுகிறது.

🙏🇮🇳3
Read 6 tweets
24 Nov
இச்சா... கிரியா... ஞான... மூன்று சக்திகளும் ஒருங்கே அமையபெற்ற தலம்...!!

அருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில்...!!

அருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில், உதகை, நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

ஊட்டி நகரின் மையப் பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

🙏🇮🇳1 Image
மூலஸ்தானத்தில் இரு அம்பாள்கள் (மாரி, காளி) ஒரே ஆலயத்தில் வீற்றிருக்கிறார்கள். இங்குள்ள நவகிரக நாயகர்கள் தம்பதி சமேதர்களாக அமைந்திருப்பது மிகவும் சிறப்பானதாகும்.

🙏🇮🇳2
இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய 3 வகையான சக்திகளை பக்தர்களுக்கு வழங்க மாரி, காளி, காட்டேரி அம்மன்கள் முப்பெருந்தேவிகளாக ஒரே தலத்தில் வீற்றிருக்கும் அரிய தலம். இத்தலத்தில் உள்ள காளி உக்கிரமாக இல்லாது சாந்தமாக வீற்றிருப்பது அதிசயம்.

🙏🇮🇳3
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(