#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில்‌ லக்ஷ்மி என்பவர் வசித்துவந்தார். மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்து கணவரையும் இழந்துவிட்டார். விவரம் தெரிவதற்குள் வாழ்க்கையை இழந்து விட்ட அந்தப் பெண்ணை எல்லோரும் அதிர்ஷ்டம்‌ கெட்டவள் என்று அழைக்கத் துவங்கினர். வீட்டை விட்டு
எதற்காகவும் வெளியே வர இயலாது. பெற்றோர் இருந்தவரை அவளைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டே காப்பாற்றி வந்தனர். நாளடைவில் பெற்றோரும் காலகதியை அடைந்துவிட்டனர். நிர்கதியாக இருப்பவர்களுக்கு தூரத்து உறவினர்கள் உணவிடும் பழக்கம் இருந்ததால், தூரத்து உறவினர் லக்ஷ்மிக்கு வேண்டியதை அவள்
வீட்டிற்கே அனுப்பிவிடுவர். யாரும் இல்லை. பேசவும் ஆளில்லை. வெளியிலும் போக முடியாது. அவள் விடியும்‌ முன்பே சென்று காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு வந்து வீட்டிற்குள் புகுந்து கொள்வாள். பொழுது போகவில்லை. தாயும் தந்தையும் சிறு வயதில் சொன்ன கதைகளிலும், ஸ்லோகங்களிலும் அவளுக்கு ராம நாமம்
மிகவும்‌ பிடித்து விட்டது. வீட்டில் ஒரு ஊஞ்சல் இருந்தது. அதில் அமர்ந்து ஆடிக்கொண்டே அனவரதமும் ராம நாமத்தைச் சொல்லத் துவங்கினாள். சில நாட்கள் சொன்னதும், நாமம் அவளைப் பிடித்துக் கொண்டது. பொழுது போகாத போதெல்லாம் நாமம் சொல்லிக் கொண்டிருந்தவள் எப்போதுமே நாமம் சொல்லத் தொடங்கினாள்.
ஆயிரம் நாமம் ஆனதும் சுவற்றில் கரிக்கட்டையால் ஒரு சிறிய கோடு கிழித்து வைப்பாள் லக்ஷ்மி. இப்படியாக வீட்டுச் சுவரில் இடமே இல்லாத அளவுக்கு நாமத்தைச் சொல்லி சொல்லிக் கோடு கிழித்து வைத்திருந்தாள். அவளுக்கும் வயதாகியது. அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் சில இவளைத் தேடி வரத் துவங்கின.
அவர்களுக்கு தனக்குத் தெரிந்த கதைகளும், பாட்டும் சொல்லிக் கொடுத்தாள். ஒருநாள் ஒரு குழந்தை அழுதுகொண்டே இருந்தது. ஏம்மா அழற என்று கேட்டாள். அப்பாவுக்கு உடம்பு சரியில்ல பாட்டி. வைத்தியர் பிழைக்க மாட்டார்னு சொல்றாராம். அம்மா அழுதுண்டே இருக்காங்க என்றது குழந்தை. சரி, அழாத இங்க வா, ராம
நாமத்தை விடப் பெரிய மருந்தே இல்ல. உங்கப்பாவுக்காக நான் ஜபம்‌பண்ணி வெச்சிருக்கறதிலேர்ந்து 1000 நாமா கொடுத்தேன்னு போய்ச் சொல்லு. சரியாப் போயிடும் என்று சொல்லி ஒரு கோட்டை அழித்தாள். சரி பாட்டி என்று கண்ணைத் துடைத்துக் கொண்டு ஓடிய குழந்தை சற்று நேரத்தில் தாயுடன் திரும்பி வந்தது.
அந்தக் குழந்தையின் தாய் ஓடிவந்து லக்ஷ்மி பாட்டியின் காலில் விழுந்து உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலமா. நீங்க நாமா கொடுத்தேள்னு குழந்தை சொன்னதும் மாசக் கணக்கா படுத்த படுக்கையா இருந்தவர் சட்டுனு எழுந்து உக்காந்துட்டார். வைத்தியரும் எல்லா நாடியும் இப்போ சுத்தமா இருக்கு.
இனி வியாதியே வராதுன்னு சொல்லிட்டு போயிட்டார் என்று ‌கூறி மீண்டும் மீண்டும்‌ நமஸ்காரம் செய்தாள். விஷயம் காட்டுத் தீ போல் ஊர் முழுதும் பரவியது. யார் கஷ்டம் என்று வந்தாலும் தான் ஜபம் செய்து வைத்த நாமத்தின் சிறு பகுதியைக் கொடுத்து அவர்கள் கஷ்டத்தைப் போக்கி விடுவாள் பாட்டி. கொடுத்ததை
அன்றே ஜபம் செய்து சமன் செய்து விடுவாள். யார் எதிரில் வந்தால் அபசகுனம் என்று நினைத்துக் கரித்துக் கொட்டினார்களோ, அந்த துக்கிரிப் பாட்டி வராமல் ஊரில் ஒரு நிகழ்ச்சியும் நடப்பதில்லை. துக்கிரிப் பாட்டி மாங்கல்யம் எடுத்துக் கொடுத்தால்தான் திருமணம், அவள் வந்தால்தான் கிருஹப்ரவேசம்!
லக்ஷ்மி அதிருஷ்டமில்லாதவள் என்று அனைவராலும் ஒதுக்கப்பட்டவரை அனைவரும் வரவேற்கும்படி செய்தது #ராமநாமம் அல்லவா. இன்று பலரும் ஒவ்வொரு தருணத்திலும் நம்மை நாமே
குறைத்து மதிப்பிட்டு கொள்கிறோம், என்னால் முடியாது, இயலாது, நான் ராசியாற்றவன்/ள், நேரம் சரியில்லை, வீடு வாசல் இல்லை, குழந்தை
பாக்கியம் இல்லாதவன்/ள், சொந்த பந்தந்கள் இல்லை, உறவுகள் என்னை மதிப்பதில்லை என பல நேரம் நொந்து கொள்கிறோம். இல்லைகளை தவிர்த்து என்றும் இவ்வுலகில் நீக்கமற நிறைந்து இருக்கும் பரந்தாமன் ஸ்ரீராமபிரானை நெஞ்சில் நிறுத்துவோம், தினம் 1000, ஆயிரம் ராம, கிருஷ்ண, நாராயண சிவா, அம்பாள்
நாமாக்களை சொல்லி நம்மை சுற்றி உள்ள அனைவருக்கும் பரிசுகளாய் கொடுப்போம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

28 Nov
இடது காலால் எமனை உதைத்தார், அக்கால் திருவானைக்கால். ஈசனிடம் மரணத்தில் இருந்து காக்க வேண்டுவதே ஸ்ரீ மஹா மிருத்யுஞ்சய மந்திரம் ஆகும். நம் இந்து மதத்தின் படி உடலின் மரணம் மீண்டும் மீண்டும் நிகழக்கூடியது ஆனால் ஆத்மாவிற்கு மரணம் கிடையாது, அது மோட்சம் அடையும் வரை மீண்டும் மீண்டும் Image
இப்புவியில் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் சிக்கி கொண்டு உள்ளது . இச்சூழலில் இருந்து காப்பாற்ற வேண்டுவதே இச்சுலோகத்தின் கருத்து ஆகும் என்று சொல்லி இருக்கிறார் காஞ்சி மகா பெரியவா.
பிரம்மிருஷி வஷிஷ்ட மைத்ரவரூணி வழங்கிய ரிக் வேதத்தின் 7 வது மண்டலத்திலிருந்து வந்தது. நோய், உடல் நல Image
குறைபாடு உள்ளவர்கள் இந்த மந்திரத்தை தொடர்ந்து தினமும் சொல்லி வந்தால் விரைவில் நோய் குணமாகும்.
“ஓம் த்ரியம்பகம் யஜா மஹே, சுகந்திம் புஷ்டி வர்தனம்;
உருவாருகமிவ பந்தனான், ம்ரித்யோர் மோக்ஷியே மா அம்ருதாத்.”
இதன் பொருள் :
ஓம் – பிரணவ மந்திரம்
த்ரியம்பகம் – மூன்று கண்களை உடைய பெருமானே
Read 7 tweets
28 Nov
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் விபீஷணன் ராவணனிடம், அண்ணா, ராமனோடு போரிடாதே! அந்த எண்ணத்தைக் கைவிட்டு விடு என எவ்வளவோ கெஞ்சுகிறார். சும்மா கெஞ்சவில்லை.
ஹிரண்ய வதத்தைப் பற்றிய கதையை ராவணனுக்கு எடுத்துக் கூறுகிறார். ராமராக அவதரித்திருக்கும் நாராயணனின் பெருமைகளை, எடுத்துரைக்கிறார் விபீஷணர். Image
அண்ணா, யாகம் வளர்ப்பதால் வரக்கூடிய பலனை நாராயணா என்கிற ஒரு நாமமே தரும் என்பது ப்ரஹ்லாதன் கூற்று. நாம் சொல்லும் சொல்லில் இருக்கிறார், சின்ன சின்ன பொருட்களிலும் இருக்கிறார் நாராயணன் என்பதும் அவனின் கூற்று. நரசிம்மர் ஹிரண்யகசிபுவை வதம் செய்த பிறகு ப்ரஹ்லாதனுக்கு என்ன வாக்கு தந்தார்
தெரியுமா? உன் வம்சத்தில் இனி யாரையும் சம்ஹாரம் செய்யவே மாட்டேன் என்று. அந்த வாக்கை அவர் அப்படியே காப்பாற்றியும் வந்தார். நாராயண நாமம் அப்படி ப்ரஹ்லாதனையும், அவனது வம்சத்தையும் சேர்த்தே காப்பாற்றி இருக்கிறது. நாராயண நாமத்துக்கே அவ்வளவு மஹிமை என்றால் இதோ உன் எதிரே வந்திருக்கும்
Read 10 tweets
27 Nov
Thirugnana Sambanthar Tapovanam - beautiful temple near #Sriperumbudur Fully demolished! Why is this allowed? 63 Nayanmars, Durgai Amman, Vinayakar (black stone sculptures) were all debris after the destruction. Those that remained after the assault by 3 JCBs were lined up on
the floors. Beautiful colourful Vimanams, roof tops and large Naga statue which once provided back drop of Lingam was broken and was upside down. At every stage, local devotees who pleaded were told they will not demolish main temple and garbagriha, while they were going about
demolishment of every Sannathi one by one. Devotee women who stood ground were pushed and threatened of arrest, so were the children. Entry to the road leading to the temple was cordoned with heavy police deployment and villagers who wanted to rush were threatened and driven away
Read 6 tweets
27 Nov
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் திருவள்ளூர் வீரராகவப் பெருமானை சேவித்து மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார், அதற்கு அடுத்த திருநின்றவூர் பக்தவச்சலப் பெருமாளைப் பாடாமல், மாமல்லபுரத்துக்கு வந்து விட்டார். இதைக் கண்ட தாயார், யோக நித்திரையில் இருந்த பெருமாளை எழுப்பி ஆழ்வாரிடம் பாசுரம் Image
பெற்றுக் கொண்டு வாரும் என்று அனுப்பி வைத்தாள். உடனே பெருமாளும் புறப்பட்டு கடல்மல்லை ஸ்தலசயனக் கோயிலுக்கு வந்து ஆழ்வாரின் முன்னால் நின்றார். ‘என்னை மறந்தது ஏன்?’ என்று கேட்டார். அப்போது அவரைப் பார்த்த ஆழ்வார்,
நீண்டவத்தக் கருமுகிலை எம்மான் தன்னை
நின்றஊர் நித்திலத்து ஒத்தார் Image
சோலை
காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே
என்று பாடினாராம். விஷயம் இதோடு முடியவில்லை. ஒரு பாசுரத்தை பெற்றுக்கொண்டு திரும்பிய பகவானை திருநின்றவூர் பிராட்டி, ‘இது என்ன எல்லா தலங்களுக்கும் பத்து பாசுரங்கள் பாடினாரே நமக்கு மட்டும் ஒன்றுதானா?’ ImageImage
Read 7 tweets
27 Nov
ஷோடஸ லட்சுமி என்றால் ஷோடஸ (16) உபசாரங்களுடன் பதினாறு செல்வத்திற்கும் அதிபதியாக உள்ள லட்சுமி என்று பொருள்.
அகலகில்லேன் இறையும் என்று அலமேல் மங்கையாக திருவேங்கடமுடையானின் திருமார்பில் உறையும் கௌஸ்துப மணியாக விளங்கி வணங்குபவர்களுக்கு பதினாறு பேறுகளையும் வழங்கும் வள்ளல் பெருந்தகையான Image
தயாதேவி அன்னை லட்சுமி. #ஆதிலட்சுமி மேலும் பதினைந்து லட்சுமிகளாக உருவெடுத்து, நமது வாழ்க்கை சிறக்க பதினாறு வகை பாக்கியங்களைக் கொடுத்து வருகிறாள்.
1. சௌந்தர்ய லட்சுமி
நாம் யாரையாவது பார்க்கப் போனால் முதலில் நம் முகத்தைத்தான் பார்ப்பார்கள். முக வசீகரம் இருந்தால் தான் அவர்கள் நம்மை
வரவேற்பார்கள். இதற்கு “சௌந்தர்ய லட்சுமீகரம்" என்று பெயர். இந்த பாக்கியம் நமக்கு எப்போதும் இருக்க முதல் லட்சுமியான சௌந்தர்ய லட்சுமியைப் பூஜை செய்ய வேண்டும்.
2. சௌபாக்கிய லட்சுமி
போகும் இடத்தில் நமக்கு வரவேற்பு நன்றாக இருந்தாலும், நமது சௌபாக்கியங்கள் அதாவது நல்ல மனைவி, நல்ல கணவன்,
Read 18 tweets
26 Nov
#நவவிதபக்தி 9 வகையான் பக்தி
'ஸ்ரவணம் கீர்த்தனம் யஸ்ய
ஸ்மரணம் பாத ஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
ஸக்யம் ஆத்ம நிவேதனம்'
1.ஸ்ரவணம்-இறைவன் பெருமைகளை, லீலைகளை காதால் பக்தியுடன் கேட்பது
2.கீர்த்தனம் - இறைவன் புகழைப் பாடுதல்
3.ஸ்மரணம் - எப்பொழுதும் அவனையே நினைத்து அவன் நாமத்தை
ஜபித்தல்
4.பாதஸேவனம் - அவனுக்குத் தொண்டு செய்தல்
5.அர்ச்சனம் - மலரால் அவன் பாதத்தில் அர்ச்சித்தல்
6.வந்தனம் - நமஸ்கரித்தல்
7.தாஸ்யம் - ஆண்டவன் ஒருவனுக்கே நாம் அடிமை என கருதி அனைத்துச் செயல்களையும் அவனுக்கே அர்ப்பணிதல்
8.ஸ்க்யம் - இறைவனை நண்பனென எண்ணி தோழமை பூணுதல்
9.அத்மநிவேதனம்-
முழுவதுமா இறைவனிடம் அர்ப்பணித்து அவனே அனைத்தும் என்று வாழும் இறைவன் அடியார்.
இராமாயணத்தில் இந்த ஒன்பது வகையான பக்திக்கும் சிலரை உதாரணமாகக் கொள்ள முடியும்.
1. ஸ்ரவண பக்தி - அனுமார், இராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தவர்.
2. கீர்த்தன பக்தி - வால்மீகி, இராமாயணம் இயற்றியவர்.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(