#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் விபீஷணன் ராவணனிடம், அண்ணா, ராமனோடு போரிடாதே! அந்த எண்ணத்தைக் கைவிட்டு விடு என எவ்வளவோ கெஞ்சுகிறார். சும்மா கெஞ்சவில்லை.
ஹிரண்ய வதத்தைப் பற்றிய கதையை ராவணனுக்கு எடுத்துக் கூறுகிறார். ராமராக அவதரித்திருக்கும் நாராயணனின் பெருமைகளை, எடுத்துரைக்கிறார் விபீஷணர்.
அண்ணா, யாகம் வளர்ப்பதால் வரக்கூடிய பலனை நாராயணா என்கிற ஒரு நாமமே தரும் என்பது ப்ரஹ்லாதன் கூற்று. நாம் சொல்லும் சொல்லில் இருக்கிறார், சின்ன சின்ன பொருட்களிலும் இருக்கிறார் நாராயணன் என்பதும் அவனின் கூற்று. நரசிம்மர் ஹிரண்யகசிபுவை வதம் செய்த பிறகு ப்ரஹ்லாதனுக்கு என்ன வாக்கு தந்தார்
தெரியுமா? உன் வம்சத்தில் இனி யாரையும் சம்ஹாரம் செய்யவே மாட்டேன் என்று. அந்த வாக்கை அவர் அப்படியே காப்பாற்றியும் வந்தார். நாராயண நாமம் அப்படி ப்ரஹ்லாதனையும், அவனது வம்சத்தையும் சேர்த்தே காப்பாற்றி இருக்கிறது. நாராயண நாமத்துக்கே அவ்வளவு மஹிமை என்றால் இதோ உன் எதிரே வந்திருக்கும்
நாராயணர் அவதாரமான ராமருக்கு எவ்வளவு பராக்ரமம் இருக்கும் என எண்ணிப்பார். ராமரோடு வீணாக சண்டை செய்யாதே விட்டு விடு என மீண்டும் மீண்டும் விபீஷணர் சொல்கிறார். அதனால் கோபம் கொண்ட ராவணன், உன் உடம்பு தான் இங்கே இருக்கிறது.உன் உள்ளம் எல்லாம் ராமனிடம்தான் இருக்கிறது. உன்னைக் கொன்று
விடுவேன் என கர்ஜிக்க, அண்ணா நான் உன் கையால் இறப்பதை விட ராகவனிடமே சென்று விடுகிறேன் என்றபடியே போகிறார் விபீஷணர். அவர் சென்ற நேரம் இரவு நேரம். இரவு நேரத்தில் செல்வது சரியில்லை என்று எண்ணிய விபீஷணர், தனுஷ் கோடியிலேயே தங்கிவிட்டு மறுநாள் காலை ராமர் இருக்கும் இடம் நோக்கி செல்கிறார்.
அங்கே சுக்ரீவன் எதிர்ப்பட, அவரிடம் தாம் ராமரிடம் சரணாகதி செய்ய வந்திருப்பதாக விபீஷணர் தெரிவிக்கிறார். சுக்ரீவன் ராமரிடம் சென்று, அண்ணனே வேண்டாம் எனச் சொல்லி வந்திருக்கிறான். அதனால் அவனைச் சேர்க்கக் கூடாது என்கிறான். சாம்பன் ராமரிடம், அவன் எவ்வளவு கெட்டிக்காரனாக இருந்தாலும்
சேர்க்காதீர்கள் என்கிறான். நீலன், விரோதியைச் சேர்க்காதீர்கள் என்கிறான். அதுவரை பேசாமல் இருந்த ஹனுமார், ஒருத்தன் நல்லவனா, கெட்டவனா என்பதை அவன் முகமே சொல்லும். ஆக, முகம் பார்த்துத்தான் எதையும் முடிவு செய்யணும். ராமா, நீ கடல் வெள்ளம் மாதிரி. விபீஷணன் கிணற்றுத் தண்ணீர் மாதிரி.
கிணற்று நீர் என்றாவது கடல் பரப்பைத் தாங்க முடியுமா? இலங்கையில் நான் பார்த்தவரையில், இவன் ஒருவன் வீடுதான் அந்தணர் வீடு போலவே இருந்தது. இவன் ஒருவன்தான் நல்லவன். ஆபத்தில் வந்திருக்கிறான். அடைக்கலம் என்று வந்த இவனை எப்படி ஏற்க முடியாது என்று மறுப்பது?
அது சரியாக இருக்காது என்கிறார்.
உடனே ராமர், ‘ஆம் மாருதி சொன்னது சரிதான். விபீஷணனைச் சேர்த்துக் கொள்வதால் தோல்வி வந்தாலும் சரி, அவனைச் சேர்த்துக் கொள்வோம். நம்மிடம் அடைக்கலம் என்று வந்து விட்டவரை கைவிடக் கூடாது.
சுக்ரீவா! நீ போய் அவனை அழைத்து வா‘ என்கிறார். அங்கேதான் ஆரம்பமானது விபீஷணர் சரணாகதி. அதாவது, சரணாகதி
என்றால் பரிபூர்ணமாக அவனிடம் அடைக்கலமாகி விட வேண்டும். அப்போது பகவானின் அருள் பிரவாகம் நம்மைச் சூழ்ந்து காத்து நிற்கும்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இடது காலால் எமனை உதைத்தார், அக்கால் திருவானைக்கால். ஈசனிடம் மரணத்தில் இருந்து காக்க வேண்டுவதே ஸ்ரீ மஹா மிருத்யுஞ்சய மந்திரம் ஆகும். நம் இந்து மதத்தின் படி உடலின் மரணம் மீண்டும் மீண்டும் நிகழக்கூடியது ஆனால் ஆத்மாவிற்கு மரணம் கிடையாது, அது மோட்சம் அடையும் வரை மீண்டும் மீண்டும்
இப்புவியில் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் சிக்கி கொண்டு உள்ளது . இச்சூழலில் இருந்து காப்பாற்ற வேண்டுவதே இச்சுலோகத்தின் கருத்து ஆகும் என்று சொல்லி இருக்கிறார் காஞ்சி மகா பெரியவா.
பிரம்மிருஷி வஷிஷ்ட மைத்ரவரூணி வழங்கிய ரிக் வேதத்தின் 7 வது மண்டலத்திலிருந்து வந்தது. நோய், உடல் நல
குறைபாடு உள்ளவர்கள் இந்த மந்திரத்தை தொடர்ந்து தினமும் சொல்லி வந்தால் விரைவில் நோய் குணமாகும்.
“ஓம் த்ரியம்பகம் யஜா மஹே, சுகந்திம் புஷ்டி வர்தனம்;
உருவாருகமிவ பந்தனான், ம்ரித்யோர் மோக்ஷியே மா அம்ருதாத்.”
இதன் பொருள் :
ஓம் – பிரணவ மந்திரம்
த்ரியம்பகம் – மூன்று கண்களை உடைய பெருமானே
Thirugnana Sambanthar Tapovanam - beautiful temple near #Sriperumbudur Fully demolished! Why is this allowed? 63 Nayanmars, Durgai Amman, Vinayakar (black stone sculptures) were all debris after the destruction. Those that remained after the assault by 3 JCBs were lined up on
the floors. Beautiful colourful Vimanams, roof tops and large Naga statue which once provided back drop of Lingam was broken and was upside down. At every stage, local devotees who pleaded were told they will not demolish main temple and garbagriha, while they were going about
demolishment of every Sannathi one by one. Devotee women who stood ground were pushed and threatened of arrest, so were the children. Entry to the road leading to the temple was cordoned with heavy police deployment and villagers who wanted to rush were threatened and driven away
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் திருவள்ளூர் வீரராகவப் பெருமானை சேவித்து மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார், அதற்கு அடுத்த திருநின்றவூர் பக்தவச்சலப் பெருமாளைப் பாடாமல், மாமல்லபுரத்துக்கு வந்து விட்டார். இதைக் கண்ட தாயார், யோக நித்திரையில் இருந்த பெருமாளை எழுப்பி ஆழ்வாரிடம் பாசுரம்
பெற்றுக் கொண்டு வாரும் என்று அனுப்பி வைத்தாள். உடனே பெருமாளும் புறப்பட்டு கடல்மல்லை ஸ்தலசயனக் கோயிலுக்கு வந்து ஆழ்வாரின் முன்னால் நின்றார். ‘என்னை மறந்தது ஏன்?’ என்று கேட்டார். அப்போது அவரைப் பார்த்த ஆழ்வார்,
நீண்டவத்தக் கருமுகிலை எம்மான் தன்னை
நின்றஊர் நித்திலத்து ஒத்தார்
சோலை
காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே
என்று பாடினாராம். விஷயம் இதோடு முடியவில்லை. ஒரு பாசுரத்தை பெற்றுக்கொண்டு திரும்பிய பகவானை திருநின்றவூர் பிராட்டி, ‘இது என்ன எல்லா தலங்களுக்கும் பத்து பாசுரங்கள் பாடினாரே நமக்கு மட்டும் ஒன்றுதானா?’
ஷோடஸ லட்சுமி என்றால் ஷோடஸ (16) உபசாரங்களுடன் பதினாறு செல்வத்திற்கும் அதிபதியாக உள்ள லட்சுமி என்று பொருள்.
அகலகில்லேன் இறையும் என்று அலமேல் மங்கையாக திருவேங்கடமுடையானின் திருமார்பில் உறையும் கௌஸ்துப மணியாக விளங்கி வணங்குபவர்களுக்கு பதினாறு பேறுகளையும் வழங்கும் வள்ளல் பெருந்தகையான
தயாதேவி அன்னை லட்சுமி. #ஆதிலட்சுமி மேலும் பதினைந்து லட்சுமிகளாக உருவெடுத்து, நமது வாழ்க்கை சிறக்க பதினாறு வகை பாக்கியங்களைக் கொடுத்து வருகிறாள். 1. சௌந்தர்ய லட்சுமி
நாம் யாரையாவது பார்க்கப் போனால் முதலில் நம் முகத்தைத்தான் பார்ப்பார்கள். முக வசீகரம் இருந்தால் தான் அவர்கள் நம்மை
வரவேற்பார்கள். இதற்கு “சௌந்தர்ய லட்சுமீகரம்" என்று பெயர். இந்த பாக்கியம் நமக்கு எப்போதும் இருக்க முதல் லட்சுமியான சௌந்தர்ய லட்சுமியைப் பூஜை செய்ய வேண்டும். 2. சௌபாக்கிய லட்சுமி
போகும் இடத்தில் நமக்கு வரவேற்பு நன்றாக இருந்தாலும், நமது சௌபாக்கியங்கள் அதாவது நல்ல மனைவி, நல்ல கணவன்,
#நவவிதபக்தி 9 வகையான் பக்தி
'ஸ்ரவணம் கீர்த்தனம் யஸ்ய
ஸ்மரணம் பாத ஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
ஸக்யம் ஆத்ம நிவேதனம்'
1.ஸ்ரவணம்-இறைவன் பெருமைகளை, லீலைகளை காதால் பக்தியுடன் கேட்பது
2.கீர்த்தனம் - இறைவன் புகழைப் பாடுதல்
3.ஸ்மரணம் - எப்பொழுதும் அவனையே நினைத்து அவன் நாமத்தை
ஜபித்தல்
4.பாதஸேவனம் - அவனுக்குத் தொண்டு செய்தல்
5.அர்ச்சனம் - மலரால் அவன் பாதத்தில் அர்ச்சித்தல்
6.வந்தனம் - நமஸ்கரித்தல்
7.தாஸ்யம் - ஆண்டவன் ஒருவனுக்கே நாம் அடிமை என கருதி அனைத்துச் செயல்களையும் அவனுக்கே அர்ப்பணிதல்
8.ஸ்க்யம் - இறைவனை நண்பனென எண்ணி தோழமை பூணுதல்
9.அத்மநிவேதனம்-
முழுவதுமா இறைவனிடம் அர்ப்பணித்து அவனே அனைத்தும் என்று வாழும் இறைவன் அடியார்.
இராமாயணத்தில் இந்த ஒன்பது வகையான பக்திக்கும் சிலரை உதாரணமாகக் கொள்ள முடியும். 1. ஸ்ரவண பக்தி - அனுமார், இராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தவர். 2. கீர்த்தன பக்தி - வால்மீகி, இராமாயணம் இயற்றியவர்.
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில் லக்ஷ்மி என்பவர் வசித்துவந்தார். மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்து கணவரையும் இழந்துவிட்டார். விவரம் தெரிவதற்குள் வாழ்க்கையை இழந்து விட்ட அந்தப் பெண்ணை எல்லோரும் அதிர்ஷ்டம் கெட்டவள் என்று அழைக்கத் துவங்கினர். வீட்டை விட்டு
எதற்காகவும் வெளியே வர இயலாது. பெற்றோர் இருந்தவரை அவளைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டே காப்பாற்றி வந்தனர். நாளடைவில் பெற்றோரும் காலகதியை அடைந்துவிட்டனர். நிர்கதியாக இருப்பவர்களுக்கு தூரத்து உறவினர்கள் உணவிடும் பழக்கம் இருந்ததால், தூரத்து உறவினர் லக்ஷ்மிக்கு வேண்டியதை அவள்
வீட்டிற்கே அனுப்பிவிடுவர். யாரும் இல்லை. பேசவும் ஆளில்லை. வெளியிலும் போக முடியாது. அவள் விடியும் முன்பே சென்று காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு வந்து வீட்டிற்குள் புகுந்து கொள்வாள். பொழுது போகவில்லை. தாயும் தந்தையும் சிறு வயதில் சொன்ன கதைகளிலும், ஸ்லோகங்களிலும் அவளுக்கு ராம நாமம்