ஷோடஸ லட்சுமி என்றால் ஷோடஸ (16) உபசாரங்களுடன் பதினாறு செல்வத்திற்கும் அதிபதியாக உள்ள லட்சுமி என்று பொருள்.
அகலகில்லேன் இறையும் என்று அலமேல் மங்கையாக திருவேங்கடமுடையானின் திருமார்பில் உறையும் கௌஸ்துப மணியாக விளங்கி வணங்குபவர்களுக்கு பதினாறு பேறுகளையும் வழங்கும் வள்ளல் பெருந்தகையான
தயாதேவி அன்னை லட்சுமி. #ஆதிலட்சுமி மேலும் பதினைந்து லட்சுமிகளாக உருவெடுத்து, நமது வாழ்க்கை சிறக்க பதினாறு வகை பாக்கியங்களைக் கொடுத்து வருகிறாள்.
1. சௌந்தர்ய லட்சுமி
நாம் யாரையாவது பார்க்கப் போனால் முதலில் நம் முகத்தைத்தான் பார்ப்பார்கள். முக வசீகரம் இருந்தால் தான் அவர்கள் நம்மை
வரவேற்பார்கள். இதற்கு “சௌந்தர்ய லட்சுமீகரம்" என்று பெயர். இந்த பாக்கியம் நமக்கு எப்போதும் இருக்க முதல் லட்சுமியான சௌந்தர்ய லட்சுமியைப் பூஜை செய்ய வேண்டும்.
2. சௌபாக்கிய லட்சுமி
போகும் இடத்தில் நமக்கு வரவேற்பு நன்றாக இருந்தாலும், நமது சௌபாக்கியங்கள் அதாவது நல்ல மனைவி, நல்ல கணவன்,
வீடு, வாகனம், மற்ற வசதிகள் என பலவிதங்களில் நன்மை ஏற்பட சௌபாக்கிய லட்சுமியின் அருள் வேண்டும். அதற்காக சௌபாக்கிய லட்சுமியை வழிபட வேண்டும்.
3. கீர்த்தி லட்சுமி
எவ்வளவு அழகும் செல்வங்களும் இருந்தாலும், நமது பெயர் சமூகத்தில் பல பேருக்குத் தெரிந்திருக்க வேண்டும். இத்தகைய கீர்த்தியைத்
தருபவள் கீர்த்தி லட்சுமி. அவளை வணங்கி கீர்த்தியுடன் வாழ்வோம்.
4. வீரலட்சுமி
நம்மையும், மனைவி, மக்கள், செல்வம் போன்றவற்றையும் காப்பாற்றிக் கொள்ள நம்மிடம் வீரம் இருக்க வேண்டும். இந்த வீரத்தை அளிப்பவள் வீர லட்சுமி. வீர லட்சுமியை வணங்கி இந்த பாக்கியத்தைப் பெறுவோம்
5. விஜயலட்சுமி
மனிதனுக்கு எவ்வளவு செல்வங்கள், மதிப்பு இருந்தாலும் அவனுக்கு செல்வாக்கு அவசியம் தேவை. எதை எடுத்துச் செய்தாலும் அதில் வெற்றியைக் காண வேண்டும். அதற்கு அருள்புரியும் விஜய லட்சுமியை வணங்கி அந்த பாக்கியத்தைப் பெறலாம்.
6. சந்தான லட்சுமி
மனிதனுக்கு அழகு, செல்வம், செல்வாக்கு என பல
பாக்கியங்கள் இருந்தாலும், அவனுக்கு குழந்தை இருந்தால் தான் அவன் பெருமை அடைகிறான். அது நல்ல குழந்தையாகவும் இருக்க வேண்டும். இதற்கு அருள் புரிபவள் சந்தான லட்சுமி. அவளை வணங்கினால் சந்தான பாக்கியம் கிடைக்கும்.
7. மேதா லட்சுமி
பல முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க வேண்டிய சூழல் நமக்கு
ஏற்படும். அதில் சரியான முடிவைத் தீர்மானிக்க புத்தி சரிவர வேலை செய்ய வேண்டும். அதற்கு மேதா லட்சுமியை வணங்கினால் அந்த பாக்கியம் கிடைக்கும்.
8. வித்யா லட்சுமி
கல்வி என்பது தொழிற்கல்வி, வாழ்க்கைக் கல்வி, அறிவுக் கல்வி போன்று பலவகைப்பட்டது. இவை அனைத்தையும் அடைய வித்யா லட்சுமியின்
அருள் வேண்டும்.
9. துஷ்டி லட்சுமி
எல்லா பாக்கியங்களும் இருந்தாலும் எவரிடமும் சொல்லிக் கொள்ள முடியாதபடி மன வேதனையும் இருக்கும். அந்த மன வேதனையை அகற்றி ஆனந்தத்தை அளிப்பவள் துஷ்டி லட்சுமி ஆவாள்.
10. புஷ்டி லட்சுமி
வெளியுலகில் நாம் பழகும்போது நம் சரீரத்தைக் கண்டு எவரும் அருவருப்புக்
கொள்ளாமல் இருக்க வேண்டும். அந்த பாக்கியத்தைப் பெற புஷ்டி லட்சுமியின் அருள் அவசியம் வேண்டும்.
11. ஞான லட்சுமி
வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் அனுபவித்தாலும் அவ்வளவு சுகங்களும் நிலையானது அல்ல. நாம் ஆசைப்பட்ட பொருட்கள் யாவும் ஒரு காலகட்டத்தில் நம்மை விட்டுப் பிரிந்து விடும், இறைவன்
மட்டுமே அழியாத சொத்து என்ற அறிவு நமக்கு இருந்தால், நாம் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அந்த அருளை நமக்கு அளிப்பவள் ஞான லட்சுமி ஆவாள்.
12. சக்தி லட்சுமி
இறையருளால் எல்லாவித பாக்கியங்களை நாம் அடைந்திருந்தாலும், நம் உடலிலும் மனதிலும் சக்தி வேண்டும். எல்லா காரியங்களையும்
சாதிக்க வேண்டுமானால் மனோ பலம் அவசியம் தேவை. இதனைப் பெற சக்தி லட்சுமியை வணங்கவேண்டும்.
13. சாந்த லட்சுமி
எவ்வளவு செல்வம், செல்வாக்கு இருந்தாலும் ஏதோ ஒன்று மனதை உறுத்திக் கொண்டு நமது அமைதியைக் கெடுத்து வரும். அத்தகைய தொல்லைகள் எதுவும் இல்லாமல் இருக்க சாந்தி என்னும் அமைதி நிலவ
வேண்டும். இதைப் பெற சாந்த லட்சுமியை வணங்க வேண்டும்
14. சாம்ராஜ்ய லட்சுமி
வீட்டில் குழந்தைகள் நம்மை மதிக்க வேண்டும். மனைவி/கணவன் நம்மைப் பார்த்து பெருமை கொள்ள வேண்டும். சமூகத்தில் ஒரு உயரிய அந்தஸ்து கிடைக்க வேண்டும். இந்த பாக்கியங்களைப் பெற சாம்ராஜ்ய லட்சுமியின் கடாட்சம் தேவை.
15. ஆரோக்கிய லட்சுமி
மனிதனுக்கு எல்லா வசதிகளும் இருந்து உடல் ஆரோக்கியம் இல்லையென்றால் எந்த வசதிகளையும் அனுபவிக்க முடியாது. உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மேற்கூறப்பட்ட பதினான்கு லட்சுமிகளின் அருளைப் பெற்றதன் பலன்களைப் பெற முடியும். அந்த உடல் ஆரோக்கியத்தைப் பெற ஆரோக்கிய லட்சுமி
அருள் தேவை
16. ஆதி மகாலட்சுமி
ஆதி என்பது ஆரம்பம்/முதல். திருப்பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது நஞ்சு வந்தது. பின் காமதேனு, சந்திரன் எல்லாரும் வந்தார்கள். அப்போது தோன்றிய முதல் லட்சுமியே ஆதி லட்சுமி. ஒவ்வொரு லட்சுமிக்கும் ஒவ்வொரு குணம் பெயரில் உண்டு. ஆதிலட்சுமிக்கு
அப்படியில்லை. ஏனென்றால் , அவளுக்குப் பெயரிட வேண்டிய அவசியமில்லாமல் அவள் மாத்திரமே இருந்தாள் எனப் பௌராணிகர் கூறுவார்.திருமாலின் பத்தினியாகிய திருமகள் மக்களுக்கு நல்கும் வரங்களின் தன்மைக்கேற்றவாறு, பல தோற்றங்களில் காட்சியளிக்கிறாள். ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, அவளருள் வேண்டி
பூஜிக்கும் பக்தர்கள் மனதை ஒருமுகப்படுத்தி கண்களை மூடிப் பிரார்த்திக்க, இத்தகைய தனித்தனித் தோற்றங்கள் அவசியமாகின்றன. இவ்வகையில் நோய்நொடி அற்ற உடல்நலம் பெற்று, ஆரோக்கியமாக நீண்டகாலம் வாழ்வதற்கு பூஜைக்குரிய திருமகளின் உருவத்தோற்றம் ஆதிலட்சுமி ஆகும். அவள் உலகுக்கே அன்னை🙏🏻
@threadreaderapp please compile thanks

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

28 Nov
இடது காலால் எமனை உதைத்தார், அக்கால் திருவானைக்கால். ஈசனிடம் மரணத்தில் இருந்து காக்க வேண்டுவதே ஸ்ரீ மஹா மிருத்யுஞ்சய மந்திரம் ஆகும். நம் இந்து மதத்தின் படி உடலின் மரணம் மீண்டும் மீண்டும் நிகழக்கூடியது ஆனால் ஆத்மாவிற்கு மரணம் கிடையாது, அது மோட்சம் அடையும் வரை மீண்டும் மீண்டும்
இப்புவியில் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் சிக்கி கொண்டு உள்ளது . இச்சூழலில் இருந்து காப்பாற்ற வேண்டுவதே இச்சுலோகத்தின் கருத்து ஆகும் என்று சொல்லி இருக்கிறார் காஞ்சி மகா பெரியவா.
பிரம்மிருஷி வஷிஷ்ட மைத்ரவரூணி வழங்கிய ரிக் வேதத்தின் 7 வது மண்டலத்திலிருந்து வந்தது. நோய், உடல் நல
குறைபாடு உள்ளவர்கள் இந்த மந்திரத்தை தொடர்ந்து தினமும் சொல்லி வந்தால் விரைவில் நோய் குணமாகும்.
“ஓம் த்ரியம்பகம் யஜா மஹே, சுகந்திம் புஷ்டி வர்தனம்;
உருவாருகமிவ பந்தனான், ம்ரித்யோர் மோக்ஷியே மா அம்ருதாத்.”
இதன் பொருள் :
ஓம் – பிரணவ மந்திரம்
த்ரியம்பகம் – மூன்று கண்களை உடைய பெருமானே
Read 7 tweets
28 Nov
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் விபீஷணன் ராவணனிடம், அண்ணா, ராமனோடு போரிடாதே! அந்த எண்ணத்தைக் கைவிட்டு விடு என எவ்வளவோ கெஞ்சுகிறார். சும்மா கெஞ்சவில்லை.
ஹிரண்ய வதத்தைப் பற்றிய கதையை ராவணனுக்கு எடுத்துக் கூறுகிறார். ராமராக அவதரித்திருக்கும் நாராயணனின் பெருமைகளை, எடுத்துரைக்கிறார் விபீஷணர்.
அண்ணா, யாகம் வளர்ப்பதால் வரக்கூடிய பலனை நாராயணா என்கிற ஒரு நாமமே தரும் என்பது ப்ரஹ்லாதன் கூற்று. நாம் சொல்லும் சொல்லில் இருக்கிறார், சின்ன சின்ன பொருட்களிலும் இருக்கிறார் நாராயணன் என்பதும் அவனின் கூற்று. நரசிம்மர் ஹிரண்யகசிபுவை வதம் செய்த பிறகு ப்ரஹ்லாதனுக்கு என்ன வாக்கு தந்தார்
தெரியுமா? உன் வம்சத்தில் இனி யாரையும் சம்ஹாரம் செய்யவே மாட்டேன் என்று. அந்த வாக்கை அவர் அப்படியே காப்பாற்றியும் வந்தார். நாராயண நாமம் அப்படி ப்ரஹ்லாதனையும், அவனது வம்சத்தையும் சேர்த்தே காப்பாற்றி இருக்கிறது. நாராயண நாமத்துக்கே அவ்வளவு மஹிமை என்றால் இதோ உன் எதிரே வந்திருக்கும்
Read 10 tweets
27 Nov
Thirugnana Sambanthar Tapovanam - beautiful temple near #Sriperumbudur Fully demolished! Why is this allowed? 63 Nayanmars, Durgai Amman, Vinayakar (black stone sculptures) were all debris after the destruction. Those that remained after the assault by 3 JCBs were lined up on
the floors. Beautiful colourful Vimanams, roof tops and large Naga statue which once provided back drop of Lingam was broken and was upside down. At every stage, local devotees who pleaded were told they will not demolish main temple and garbagriha, while they were going about
demolishment of every Sannathi one by one. Devotee women who stood ground were pushed and threatened of arrest, so were the children. Entry to the road leading to the temple was cordoned with heavy police deployment and villagers who wanted to rush were threatened and driven away
Read 6 tweets
27 Nov
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் திருவள்ளூர் வீரராகவப் பெருமானை சேவித்து மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார், அதற்கு அடுத்த திருநின்றவூர் பக்தவச்சலப் பெருமாளைப் பாடாமல், மாமல்லபுரத்துக்கு வந்து விட்டார். இதைக் கண்ட தாயார், யோக நித்திரையில் இருந்த பெருமாளை எழுப்பி ஆழ்வாரிடம் பாசுரம்
பெற்றுக் கொண்டு வாரும் என்று அனுப்பி வைத்தாள். உடனே பெருமாளும் புறப்பட்டு கடல்மல்லை ஸ்தலசயனக் கோயிலுக்கு வந்து ஆழ்வாரின் முன்னால் நின்றார். ‘என்னை மறந்தது ஏன்?’ என்று கேட்டார். அப்போது அவரைப் பார்த்த ஆழ்வார்,
நீண்டவத்தக் கருமுகிலை எம்மான் தன்னை
நின்றஊர் நித்திலத்து ஒத்தார்
சோலை
காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே
என்று பாடினாராம். விஷயம் இதோடு முடியவில்லை. ஒரு பாசுரத்தை பெற்றுக்கொண்டு திரும்பிய பகவானை திருநின்றவூர் பிராட்டி, ‘இது என்ன எல்லா தலங்களுக்கும் பத்து பாசுரங்கள் பாடினாரே நமக்கு மட்டும் ஒன்றுதானா?’
Read 7 tweets
26 Nov
#நவவிதபக்தி 9 வகையான் பக்தி
'ஸ்ரவணம் கீர்த்தனம் யஸ்ய
ஸ்மரணம் பாத ஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
ஸக்யம் ஆத்ம நிவேதனம்'
1.ஸ்ரவணம்-இறைவன் பெருமைகளை, லீலைகளை காதால் பக்தியுடன் கேட்பது
2.கீர்த்தனம் - இறைவன் புகழைப் பாடுதல்
3.ஸ்மரணம் - எப்பொழுதும் அவனையே நினைத்து அவன் நாமத்தை
ஜபித்தல்
4.பாதஸேவனம் - அவனுக்குத் தொண்டு செய்தல்
5.அர்ச்சனம் - மலரால் அவன் பாதத்தில் அர்ச்சித்தல்
6.வந்தனம் - நமஸ்கரித்தல்
7.தாஸ்யம் - ஆண்டவன் ஒருவனுக்கே நாம் அடிமை என கருதி அனைத்துச் செயல்களையும் அவனுக்கே அர்ப்பணிதல்
8.ஸ்க்யம் - இறைவனை நண்பனென எண்ணி தோழமை பூணுதல்
9.அத்மநிவேதனம்-
முழுவதுமா இறைவனிடம் அர்ப்பணித்து அவனே அனைத்தும் என்று வாழும் இறைவன் அடியார்.
இராமாயணத்தில் இந்த ஒன்பது வகையான பக்திக்கும் சிலரை உதாரணமாகக் கொள்ள முடியும்.
1. ஸ்ரவண பக்தி - அனுமார், இராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தவர்.
2. கீர்த்தன பக்தி - வால்மீகி, இராமாயணம் இயற்றியவர்.
Read 7 tweets
26 Nov
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில்‌ லக்ஷ்மி என்பவர் வசித்துவந்தார். மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்து கணவரையும் இழந்துவிட்டார். விவரம் தெரிவதற்குள் வாழ்க்கையை இழந்து விட்ட அந்தப் பெண்ணை எல்லோரும் அதிர்ஷ்டம்‌ கெட்டவள் என்று அழைக்கத் துவங்கினர். வீட்டை விட்டு
எதற்காகவும் வெளியே வர இயலாது. பெற்றோர் இருந்தவரை அவளைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டே காப்பாற்றி வந்தனர். நாளடைவில் பெற்றோரும் காலகதியை அடைந்துவிட்டனர். நிர்கதியாக இருப்பவர்களுக்கு தூரத்து உறவினர்கள் உணவிடும் பழக்கம் இருந்ததால், தூரத்து உறவினர் லக்ஷ்மிக்கு வேண்டியதை அவள்
வீட்டிற்கே அனுப்பிவிடுவர். யாரும் இல்லை. பேசவும் ஆளில்லை. வெளியிலும் போக முடியாது. அவள் விடியும்‌ முன்பே சென்று காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு வந்து வீட்டிற்குள் புகுந்து கொள்வாள். பொழுது போகவில்லை. தாயும் தந்தையும் சிறு வயதில் சொன்ன கதைகளிலும், ஸ்லோகங்களிலும் அவளுக்கு ராம நாமம்
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(