#நவம்பர்26 அரசியல் சட்ட எரிப்பு ஏன்?

‘பிராமணன் என்று ஒரு சாதி சட்டத்தில் இருக்க அனுமதிக்க மாட்டோம். அப்படி இருந்தாலும், அவன் பிராமணனாக வாழ அனுமதிக்க மாட்டோம் என்று அரசாங்கம் சொல்லட்டும்’. - தோழர் பெரியார்
இந்த மாதம் 26 ஆம் தேதிக்குள், பிராமணன் என்ற ஒரு சாதி கிடையாது.சட்டத்தில் அந்த மாதிரிக் கருதமாட்டோம்’ என்று அறிக்கை வராவிட்டால் அரசாங்கச் சட்டப்புத்தகத்தை நாங்கள் கொளுத்தப் போகிறோம். இதை நாங்கள் வருத்தத்துடனேயே சொல்கிறோம், வெறும் குறும்புக்காகவோ,
விளம்பரத்திற்காகவோ, ஜெயிலுக்குப் போய் வந்ததைக் காட்டி ஓட்டு வேட்டையாடவோ நாங்கள் அந்தக் காரியம் செய்யவில்லை.

எனக்கு 79 வயதாகிவிட்டது. நம் மக்களுக்கு ஏதாவது காரியம் செய்துவிட்டு நான் சாக வேண்டும்.
இல்லையென்றால், நம் மக்களுக்கு உணர்ச்சியுட்டுவிட்டுச் சாகவேண்டும். இன்றைய தினம் எல்லாப் பார்ப்பனப் பத்திரிக்கைகளும் கட்டுப்பாடாக, நான் பார்ப்பனரை வெட்டச் சொன்னேன், குத்தச் சொன்னேன் என்று கூப்பாடு போடுகின்றன! எந்தப் பார்ப்பானிடம் எனக்கு விரோதம்? யார்மீது துவேஷம்?
நேற்று எனக்கு நடைபெற்ற விழாவுக்குப் பார்ப்பனர் பணம் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த ‘செக்’ என்னிடம் இருக்கிறது. ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால், எனக்குத் தனிப்பட்ட முறையில்யார்மீதும் துவேஷம் இல்லை என்பதைக் காட்டவே!
நான் ஏன் ஒரு கூட்டமே ஒழிய வேண்டுமென்று சொல்லுகிறேன்? நம் சமுதாயத்திற்கே களை மாதிரி இருந்துகொண்டு வளரவொட்டாமல் செய்கிறது – அந்தக்கூட்டம். வெட்டுகிறேன் என்று சொன்னேன். குத்துகிறேன் என்று சொன்னேன் என்று புச்சாண்டி காட்டுகின்றனர்.
அப்படிச் சொல்லுவதன்மூலம் அந்த நாளையே அவர்கள் விரிவுபடுத்துகின்றனர்.

‘காந்தியார் படத்தை எரித்தால் தலைகள் உருளும். இரத்த ஆறு ஓடும், அதற்கு 20,000 பேர் தயார்’ என்று சொன்னார்களே, அவர்களை நீ என்ன செய்தாய்?
நான் சொல்லுகிறேன் – ‘சாதி ஒழியாவிட்டால் இரத்த ஆறு ஓடும்’ என்று . ‘சாதி இருக்கத்தான் வேண்டும்’ என்று நீ சொல்லேன்!

இந்த மாதிரிக் கூப்பாடு போட்டால் அரசாங்கம் பிடித்து எங்களை ஜெயிலில் போடும், நாங்கள் பயந்துகொள்வோம் என்பது பார்ப்பனர்கள் நினைப்பு.இது யாரிடம் பலிக்கும்?
நான்தான் உயிரைவிடத் தயாராயிருக்கிறேனே! என்னுடைய தொண்டர்களும் தயாராயிருக்கிறார்களே!

வேண்டுமானால், இந்தப் பார்ப்பன சமுதாயத்திற்கு நான் வாய்தா கொடுக்கிறேன், தன்னை அது மாற்றிக் கொள்ளட்டும்!
இன்றைய தினம் அரசாங்கத்திற்கு வாய்தா கொடுத்திருக்கிறேனே! சாதி ஒழிப்புக்குப் பரிகாரம் கிடைக்காவிட்டால் அரசியல் சட்டத்தைக் கொளுத்தப் போகிறோம். அதிலும் முடியாவிட்டால் காந்தியார் சிலையை உடைக்கப் போகிறோம். வேண்டுமானால் என்னை ஜெயிலில் போடட்டும்,
வெளியே இருந்துகொண்டு கொடுமைச் சகித்துக்கொண்டிருக்க எங்களால் முடியாது.

இதற்கு முன்பே 1950இலேயே நான் சொன்னேன், ‘இது மநுதர்ம சாத்திரத்தின் மறுபதிப்பு. ஆகவே, இதைக் கொளுத்தவேண்டும்’ என்று!
இந்தச் சட்டம் எழுதியவர்கள் ஆறு பேர்கள், அதில் நூறு பேர் பார்ப்பனர்கள். அல்லாடி கிருஷ்ணசாமிஅய்யர், முன்ஷி, டி.டி.கிருஷ்ணமாச்சாரி, கோபால்சாமி அய்யங்கார் ஆகிய பார்ப்பனர்கள் எழுதினார்கள்.மற்றவர்கள் இரண்டு பேரில் ஒருவர் அம்பேத்கர், மற்றவர் ஒரு சாயபு.
அம்பேத்கர் கொஞ்சம் நம் உணர்ச்சியுள்ளவர். அவர் என்னைக் கேட்டார், ‘உன்னுடைய மக்களுக்கு என்ன செய்யவேண்டும்? என்று. நிறைய விவரங்கனையெல்லாம் அவரிடம் கொடுத்தேன். அதையெல்லாம் அவர் பேச ஆரம்பித்தார். உடனே பார்ப்பனர்கள் அவருக்கு விலை கொடுத்து விட்டார்கள்.
அது என்ன விலையென்றால், அவர் தன்னுடைய மக்களுக்கு 100க்கு 10 இடம் கல்வி வசதியில், கேட்டார். அவன், ‘15 –ஆகவே எடுத்துக்கொள்’ என்று சொல்லிவிட்டார்! அவனுக்குத் தெரியும், 25 இடம் கொடுத்தால்கூட அவர்களில் மூன்று அல்லது நான்கு பேர்கூட வரமாட்டார்கள் என்பது.
பார்ப்பான் எழுதிக்கொடுத்த சட்டத்தில் அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டார். மற்றவர்களுடைய சங்கதியைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை. ஒரு சட்டம் எல்லோருக்கும் சமம், சமவாய்ப்பு என்று சொல்லிக் கொண்டு – பார்ப்பனருடைய
உயர்வைக் காப்பாற்றி அவர்களுடைய ஏகபோக அனுபவத்திற்குக் கல்வியையும், உத்தியோகத்தையும் தருகிற தென்றால், அது எந்த வகையில் நீதியான, நேர்மையான சட்டம்?
இத்தகைய மோசடிச் சட்டம் ஒழிக்கப்பட்டே ஆகவேண்டும். அந்த முயற்சியாக, 26ஆம் தேதியன்று இந்தச் சட்டத்தைத் தீயிலிட்டுபொசுக்கப் போகிறோம்.
- தோழர் பெரியார், ‘விடுதலை’ அறிக்கை - 16.11.1957

ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்பிரிவுகள்

1. அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் (பார்ப்பனர்)

2. டி.டி கிருஷ்ணமாச்சாரி (பார்ப்பான்)

3. என்.கோபால்சாமி அய்யங்கார் (பார்ப்பான்)

4. கே.எம். முன்ஷி (வடநாட்டுப் பார்ப்பான்)
5 டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் (ஆதி திராவிடர்)

6. முகமுது சாதுல்லர் (முஸ்லீம்)

1. 1077 நாள் செலவுசெய்து உருவாக்கிய இந்தச் சட்டத்தில் வெகு ஜாக்கிரதையாகப் பார்ப்பனர் (ஆகிய பிராமணர்) உயர்வும், பார்ப்பனரல்லாத மக்கள் (திராவிடர் – ‘சூத்திரர்’)
இழிவும் சாத்திரப் படிக்குக் கொண்ட இந்து மதத்தைக் காப்பது, மத உரிமை அளிப்பது என்கிற தன்மையில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் தகுந்தபடி பாதுகாப்புச் செய்து கொண்டார்கள்.
2. மேலும், ‘சூத்திர’ என்ற கூறப்படுகின்ற மக்களின் பிரதிநிகள் அறவே இல்லாமல், 6 பேர்களின் 4 பேர் பார்ப்பனர்களாகவே கொண்டு மற்றும் இரு இனத்தின் பிரதிநிகளுக்கும்கூட விலை கொடுத்துவிட்டுச் செய்து கொண்டதுதான் இந்திய அரசியல் சட்டம் என்ற இந்த அரசியலமைப்பாகும்.
3. இந்த நாட்டு வாக்காளர்களின் உண்மையான பிரதிநிகளைக் கொண்டல்ல, இந்தச் சட்டம் செய்யப்பட்டது எவ்வாறெனில், 1946 ல் நடைபெற்ற தேர்தலின்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சட்டசபை அங்கத்தினர்களால் ஓட்செய்யப்பெற்று, அரசியல் நிர்ணயசபை அங்கத்தினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
பிரிடிஷார் அளித்த இந்திய சுதந்திரச் சட்டமே (ஐனேயைே ஐனேநயீநனேநஉேந ஹஉவ) 1947 இல்தான் நமக்குக் கிடைத்தது! நாடு இரண்டாகப் பிரிந்து பிற்பாடு எஞ்சியிருந்த உறுப்பினர்களால், மாகாணங்களிலிருந்து 235 பேர்களும், சமஸ்தானங்களிலிருந்து 72 பேர்களுமாக –
மொத்தம் 307 பேர்கள்தான் அப்போது இருந்தார்கள்.அப்போது ஓட்டு உரிமை பெற்றிருந்த வாக்காளர் எண்ணிக்கை இன்றைய வாக்காளர்களின் எண்ணிக்கையில் பண்ணிரண்டு சதவிதத்தினரேயாவார். எனவே, இது எப்படி மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்டதாகும்?
நாடு ‘சுதந்திர’ மடையாத காலத்தில் நடந்த எலக்ஷன் பிரதிநிதிகளால் காங்கிரசுப் பார்ப்பனப் பிரதிநிகளால் ஏற்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் நம்மை – அதாவது பார்ப்பன ஆதிக்கத்தினின்று விடுதலை பெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிற நம்மை எப்படிக் கட்டுப்படுத்தமுடியும்?
4. மற்றும், மொழி சம்பந்தமாகவும், வரி சம்பந்தமாகவும் பொருளாதார உரிமை சம்பந்தமாகவும், வெளி நாட்டார் சுரண்டுதல் சம்பந்தமாகவும் அதிகாரங்களைத் தங்களுக்கே வைத்துக்கொண்டு – எந்த வகையிலும் மாற்ற முடியாத
அளவுக்கு இரும்புக்கூட்டுப் பாதுகாப்பை இந்தச் சட்டத்தில் மூலம் பார்ப்பனர்களும் வடநாட்டார்களும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். அதிலிருந்து விடுபட ஆசைப்படுகிறோம் என்பதைக் காட்டுவதற்காகத்தான் ‘ அரசியல் சட்ட எரிப்பு’ என்பதாகும்.
இந்திய அரசியலமைப்புப் பீடிகை

இந்தியாவின் மக்களாகிய நாம், இந்தியாவை ஒரு சம்புரண அதிகார ஜனநாயகக் குடிமகள் அனைவருக்கும் – சமூகம், பொருளாதாரம், ராஜீயம் – இவற்றில் நீதியும் எண்ணம், வெளியீடு கோட்பாடு, மதம், வழிபாடு – இவற்றில் சுதந்திரமும்,
அந்தஸ்து, வாய்ப்பு – இவற்றில் சமத்துவமும் கிடைக்குமாறு செய்யவும் தனியொருவரின் கண்ணியமும், தேசமுதாயத்தின் ஒருமைப்பாடும் நிலைபெறும் வண்ணம் அவர்கள் அனைவரிடமும் சகோதரத்துவம் ஓங்குமாறு செய்யவும் மனப்பூர்வமாகச் சங்கற்பம் செய்துகொண்டமையால்,
நமது அரசியல் நிர்ணயசபையிலே 1949ஆம் வருடம் நவம்பர் மாதம் இருபத்தாறாம் தேதியாகிய இன்று, இதனால் இந்த அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு, சட்டம் இயற்றி நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்.
அடிப்படை உரிமைகள்

13, (2) இப் பாகத்தால் அளிக்கப்படுட உரிமைகளைப் பறிகும் அல்லது சுருக்கும் எதையும் ஒரு இராஜ்யம் இயற்றாலாகது. இப் பகுதியை மீறி இயற்றப்படும் சட்டம் எதுவும் அப்படி மீறிய அறிவிற்குப் பயனற்றதாகும்.
மத சுதந்திர உரிமை

25 ,(1) அமைதி, நல்லொழுக்கம், ஆரோக்கியம், இவற்றிக்கும் இந்தப் பாகத்திலுள்ள மற்றைய ஷரத்துக்களுக்கும் உட்பட்டு, மக்கள் அனைவரும், மனசாட்சி சுதந்திரத்திற்கும் தடையின்றி எம் மதத்தையும் தழுவுதல்,
அனுஷ்டித்தல், பரவச் செய்தல் இவை பற்றிய உரிமைக்கும் சமமான பாத்தியதை உடையவராவார்.

பண்பாடு, கல்வி இவை பற்றிய உரிமைகள்

29, (1) தனிப்பட்ட மொழி, லிபி, அல்லது பண்பாடு இவற்றை ஏற்கெனவே உடையவராய், இந்தியாவின் ஆட்சிப் பரப்பின் அல்லது அதன் ஒரு பாகத்தில் வசிக்கும் குடிகளின்
எப் பிரிவினரும் அவற்றைச் சிதையாமல் காக்க உரிமை உள்ளவர் ஆவார்.

(2) மதம்,இனம், சாதி, மொழி இவை காரணமாக அல்லது இவற்றுள் எவையேனும் காரணமாக இராஜ்யத்தினால் பராமரிக்கப்பட்ட அல்லது இராஜ்ய நிதிகளிலிருந்து உதவி பெறுகின்ற எந்தக் கல்வி ஸ்தாபனங்களிலும் சேருவதற்கு எக் குடியும் மறுக்கப்படலாகாது
அரசியலமைப்பின் திருத்தம்

368. இந்த அரசியலமைப்பின் திருத்தம் அதற்கெனப் பார்லிமெண்ட் சபை ஒன்றில் ஒரு மசோதாவைக் கொண்டுவருவதால் மட்டுமே ஆரம்பிக்கப்படலாம். அச்சபை ஒவ்வொன்றிலும் அம்மசோதா அச்சபையின் மொத்த அங்கத்தினர்களில் பெரும்பான்மையோராலும்,

வந்திருந்து ஓட்டுச் செய்யும் அச்சபை அங்கத்தினர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறையாத பெரும்பான்மை யோராலும், நிறைவேற்றப்பட்டால், அது இராஷ்டிரபதியிடம் அவர் அனுமதிக்காகச் சமர்ப்பிக்கப் படவேண்டும், அம் மசோதாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டது
இந்த அரசியலமைப்பு அம்மசோதாவின் ஷரத்துக்களின்படி திருத்தம் பெற்றதாகும். இவைபோன்ற இன்னும் பல அனுமதிகள் உள்ளன.

குறிப்பு: இந்த அரசியல் சட்டத்தை உருவாக்கின ஆறுபேர்களில் நான்கு பேர் பார்ப்பனர், இதை நிறைவேற்றிய அரசியல் நிர்ணயசபை என்பது வயது வந்தோரின்
வாக்குரிமை பெறாதவர்களை பெரும்பாலும் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களே கொண்டதாகும்.

இந்தச் சட்டத்தில் இந்தமதத்துக்குப் பாதுகாப்பு அளிக்கப் பட்டிருக்கிறது.இந்து மதத்தில் சாதிக்குப் பாதுகாப்பு இருக்கிறது. சாதியைக் காப்பாற்றத்தான் இடமிருக்கிறது.

இதை எளிதில் திருத்தியமைப்பதற்கும் சாதி ஒழிப்புக்காரருக்கு வசதியில்லை, வாய்ப்பு இல்லை (368 – ஆவது பிரிவைப் படியுங்கள்)

ஆதலால், சாதியை ஒழிக்க விரும்புகிறவர்கள், தனித் திராவிட நாடு பெற விரும்புகிறவர்கள், தமிழ்நாடு சுரண்டப்படுவதைத் தடுக்க விரும்புபவர்கள் – என்ன செய்வது?
இதை எரிப்பதன்மூலம் நம் எதிர்ப்பதைக் காட்டிக்கொள்வதைத் தவிர வேறு வழி என்ன?

- தோழர் பெரியார், ‘விடுதலை’ 17.11.1957

26 ஆம் தேதி கிளர்ச்சயில் நீதிமன்றத்தில் கூறவேண்டியவை

நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசியல் சட்டத்தில் சாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவுமில்லை,

அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதி தமிழர்களுக்கும் இல்லை.

ஆதலால், என் எதிர்ப்பைக் காட்டிக்கொள்ளும் அறிகுறியாக இச் சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமை உண்டு.இதனால் எந்த உயிருக்கும், எந்தப் பொருளுக்கும் சேதமில்லை.ஆதலால், நான் குற்றவாளி அல்ல.
இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்துகொள்ள விரும்பவில்லை.நான் எதிர் வழக்காட விரும்பவில்லை.நான் குற்றவாளி என்று கருதப்பட்டால், அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

- ‘விடுதலை’ – அறிக்கை 21.11.1957

சட்டத்தைக் கொளுத்துங்கள்!

நான்– மூன்று ஆண்டுக்கோ, பத்து ஆண்டுக்கோ நாடு கடத்தலுக்கோ, தூக்குத் தண்டனைக்கோ, ஆளாக்கப்பட்டாலும், மற்றும், பிரிட்டிஷ்காரன் காங்கிரசுக் கிளர்ச்சியின்மீது கையாண்ட எந்த விதமான கொடிய, தீவிரமான அடக்கு முறைகளை நம்மீதும்,

கழகத்தின்மீதும் பிரயோகித்தாலுங்கூட, அவைகளுக்குப் பயப்பட்டு என் இலட்சியத்தையோ, திட்டத்தையோ, மாற்றிக்கொள்ளப் போவதில்லை.

கழகத் தோழர்களே! தீவிர இலட்சியவாதிகளே! நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்குப் பயந்துவிட வேண்டியதில்லை,
பயந்துவிட மாட்டீர்கள்! சட்டத்தைப் பார்த்துப் பயந்து விட்டதாகப் பெயர் வாங்காதீர்கள்! ஆகவே, இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற - பெயர் கொடுங்கள்!

-‘விடுதலை’ அறிக்கை 11.11.1957
சட்டத்தைக் கொளுத்துங்கள்!

சாம்பலை மந்திரிக்கு அனுப்புங்கள்!!

சட்டத்தை நிறைவேற்றிவிட்டதன்மூலம், அரசாங்கத்தினர் ‘சாதியைக் காப்பாற்றித்தான் தீர வேண்டும்’ என நமக்குச் சவால்விட்டு இருக்கின்றனர்.இந்தச் சவாலுக்கு, நீங்கள் சட்டம் கொளுத்தாவிட்டால் மனிதர்கள்தானா?
சட்டம் கொளுத்திச் சாம்பலைச் சட்டம் செய்த மந்திரிக்கு அனுப்பிக் கொடுங்கள்! சட்டம் கொளுத்தின மக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை அதன்மூலம் கொஞ்சமாவது தெரிந்துகொள்ளட்டும்!
‘விடுதலை’ அறிக்கை 15.11.1957

சிறை செல்லும் முன் பெரியார் வேண்டுகோள்

நவம்பர் 25ஆம் தேதி நடக்கும் விசாரணையில் எனது ‘முச்சலிக்காபாண்டு’ கேன்சல் ஆகி என்னைச் சிறைப்படுத்தும்படியான நிலைமை பெரும்பாலும் ஏற்படலாம்.இந்தச் சமயத்தில் பொதுமக்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டியது அவசியமாகும்.
நான் சிறைப்படுத்தப்பட்டு விட்டேன் என்பதாலேயோ, அல்லது பொதுமக்கள் கொளுத்துவார்கள் என்கிற எண்ணத்தால் அதைத் தடுக்க அரசாங்கத்தார் ஏராளமான மக்களைக் கைதுசெய்து விட்டார்கள் என்ற எண்ணத்தாலேயோ, புதிய சட்டத்தின்படி நீண்டநாள் தண்டிக்கப்பட நேரிடும் என்ற அச்சத்தினாலேயோ – யாரும் அதாவது
கொளுத்த வேண்டிது அவசியந்தான் என்று கருதுகிறவர்கள், எந்தவிதமான தயக்கமும் இல்லாமல், அரசியல் சட்டத்திலிருந்து பொறுக்கி எடுத்துப் போட்டிருக்கிற, நமக்குக் கேடான நாலைந்து பிரிவுகளைக் கொண்ட பிரசுரத் தொகுப்பைக் கொளுத்தியே தீர வேண்டியதே முக்கியமான காரியம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
இதைவிட முக்கியமான காரியம் ஒன்றை வணக்கமான வேண்டுகோளாகத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.அதை அவசியம் ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டியது.

என்னை ‘ரிமாண்டு’ செய்வதனாலேயே மற்றும் இப்பொழுது ‘செஷன்சில்’ நடைபெறும் வழக்கின் பெயரால் என்னை நீண்ட நாள் அரசாங்கத்தார் தண்டனைக் குள்ளாக்கி விடுவதாலேயோ
பொதுமக்கள் யாரும் ஆத்திரப்படுவதற்கோ. “நிலை குலைந்து விடுவதற்கோ ஆளாகாமல் மிக்க மகிழ்ச்சியோடு அச் செய்தியை வரவேற்க வேண்டும். எந்தவிதமான கலவரமோ, பலாத்காமோ பார்ப்பனச் சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்களுக்கோ, பெண்களுக்கோ,
குழுந்தைகளுக்கோ துன்பம் வேதனை உண்டாக்கக் கூடியதான எப்படிபட்ட பலாத்காரமான செய்கையையும் நஷ்டம் உண்டாக்கக் கூடியதான செய்கையையும் அதாவது ஆயுதப்பிரயோகமோ, அடிதடியோ, நெருப்புக் கொளுத்ததலோ முதலிய ஒரு சிறுகாரியம்கூட நடத்தாமலும், நடைபெறாமலும் இருக்கும்படி ஒவ்வொருவரும் நடந்து கொள்ளவேண்டும்.
நான் ஆயுதப் பிரயோகம் செய்யவேண்டும்.என்றும் அக்கிரகாரங்கள் கொளுத்தப்படவேண்டுமென்று சொன்னதும், சொல்லிவருவதும் உண்மை.

ஆனால், இவை இப்பொழுது அல்ல. அதற்கான காலம் இன்னும் வரவில்லை வரக்கூடாதென்றே ஆசைப்படுகிறேன். அப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுவற்குக் காலம் எப்போதுவரும் என்றால் அரசியல் சட்டத்தைக் கொளுத்துவது முதலிய இன்னும் நான்கைந்து கட்டங்கள் நடத்தி, அவைகளில் ஒன்றும் பயனில்லை,
வெற்றிக்கு அவை பயன்படவில்லை என்று கண்டு, பலாத்காரத்தைத் தவிர வேறு வகையில்லை என்ற முடிவுக்கு வந்தபிறகுதான் நாம் அவற்றில் இறங்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

ஆனதால், இந்த என்னுடைய தாழ்மையான வேண்டுகோளை ஒவ்வொருவரும் கருத்தில் வைக்கவேண்டும்.
இப்பொழுது எனக்கு ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் தண்டனையானது நம்முடை அடுத்த திட்டங்களுக்கு வலுவானஆதாரவுகளையும், உணர்ச்சியையும், ஊக்கத்தையும் – துணிச்சலோடும் வேகத்தோடும் ஈடுபடுத்துவதற்கு வலிமையான சாதனமாக அமையும்,
பொது மக்கள்மீது எனக்குப் பலமாக ஆதிக்கம் இருக்கிறது என்று அரசாங்கமும், இந்தியாவில்லுள்ள மற்ற மக்களும் எண்ணியிருக்கிற ஓர் எண்ணத்திற்குப் பாதகம் ஏற்படாமல் பொதுமக்கள் நடந்துகொள்ள வேண்டுமென்றால் – நான் மேலே வேண்டியிருக்கிறபடி எந்தவிதமான தண்டனைக்குப் (ஏற்பட்டால்)
பிறகு பொதுமக்களிடையில் மேற்சொன்னபடி எந்தவிதமான கலவரமும், செய்கையும் ஏற்படாமல் மரியாதையாகவும், கட்டுப்பாடாகவும் நடந்து கொள்ள வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.

தோழர் பெரியார் - ‘விடுதலை ’- தலையங்கம் 25.11.1957)
சிறைக்கு வெளியே அனுப்பினால் மீண்டும் கொளுத்துவேன்!

திருச்சி வாளாடியைச் சேர்ந்தவன் சிறுவன் பெரியசாமி. அவனுடைய தாய்க்கு ஒரே மகன். பதினெட்டு வயது கூட நிறையாத (16 வயது) பெரியசாமி தீவிரமான கருஞ்சட்டைத் தொண்டன். பெரியாரின் கூட்டங்கள் எங்கு நடந்தாலும்,
தவறால் கலந்து கொள்ளும் போர் வீரன். பெரியாரின் ஆணையை ஏற்று அவனும் சட்ட நகலை எரித்தான். இரண்டாண்டுகள் கடும் காவல் தண்டனை விதிக்கப்பட்ட அவன் பதினெட்டு வயதிற்கு உட்பட்டவன் ஆனதால் தூத்துக்குடி தட்டப்பாறை சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டான்.
ஏழ்மையின் காரணமாய் நெடுந்தொலைவு பயணம் செய்ய வசதியில்லாத அவனுடைய தாய், அவனைக் கடைசி வரையில் உயிரோடு பார்க்கவே இல்லை.
ஒருநாள் தட்டப்பாறை சிறையில் பார்வையிட வந்தார் தமிழக கவர்னர் விஷ்ணுராம் மேதி. எல்லோரையும் கேட்டதைப் போலவே பெரியசாமியையும் கவர்னர் விசாரித்தார். பெரியாரின் தொண்டன், அவர் ஆணை கேட்டுப் போராடிச் சிறுவர் சிறைக்கு வந்த ஒரே அரசியல் கைதி என்ற முறையில்
அவனிடம் பெருமதிப்புக்காட்டிய கவர்னர் மேதி, ‘உன்னை மன்னித்து விடுதலை செய்கிறேன். இனிமேல் இது போன்ற காரியம் செய்ய மாட்டாயல்லவா’ என்றார்.

மொழி பெயர்ப்பாளர் மூலம் உரையாடல் நடைபெற்றது.
சட்ட எரிப்பிற்கான காரணத்தைக் கவர்னரிடம் தெளிவாய் விளக்கிய பெரியசாமி, ‘வெளியே அனுப்பினால், மீண்டும் கொளுத்துவேன்’ என்றான்.

கவர்னர் மேதி அதிர்ச்சியும், ஆச்சிரியமும் அடைந்தார். பெரியசாமியைத் தட்டிக் கொடுத்த கவர்னர்
‘கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக’ என அவருடைய நம்பிக்கைப்படிக் கூறிச் சென்றார்.

கவர்னர் சொன்னபடியே கடவுளின் ஆசிர்வாதம் வெகு விரைவிலேயே பெரியசாமிக்குக் கிடைத்தது. கடுமையான கோடைக்காலம் - பழக்கமில்லாத புழு புழுத்த சோளக் கஞ்சி – இரண்டும் ஒப்புக் கொள்ளாமல்

பெரியசாமிக்கு வயிற்று கடுப்பில் தொடங்கி – சரியான மருத்துவ வசதி இல்லாமல் ரத்தம் ரத்தமாய் பேதியாகிப் பெரியசாமி நினைவு தடுமாறலானான். சிறை அதிகாரிகள் , விடுதலை செய்கிறோம். வெளியே போகிறாயா? என்று கேட்க, மெளனமாய்க் கையை அசைத்து மறுத்து விட்டான். சில மணி நேரம் தான்,
இறந்து போனான். அந்த இளம் போராளிக்கு திருச்சி – லால்குடி சாலையில் இன்றும் ஒரு நினைவுச் சின்னம் இருக்கிறது.

மண்மேடான மணவாழ்க்கை!

திருச்சியைச் சேர்ந்த இன்னொரு தீவிரத் தொண்டன் ஓராண்டுத் தண்டுனை பெற்ற மாணிக்கம்! திருமணமாண ஓரே வாரத்தில் போராட்டத்தில் கலந்து கொண்டு தண்டனை அடைந்தார்.
அடுத்தடுத்த நேர்காணல்கள் இளம் மனைவியின் கண்ணீர், திருமணமாகி ஒரே வாரம்! மாணிக்கத்தின் மனதில் சலனம்!

ஆனாலும், தன்னை திடப்படுத்திக் கொண்ட மாணிக்கம் – கோழையாய் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு மனைவியுடன் மணவாழ்க்கை வாழ்வதைவிட வீரனாகச் செத்துப்போவதே மேல் என்ற தன் முடிவை
மனைவியிடம் – நான் விடுதலையாகி வரும் வரையில் என்னைப் பார்க்க வராதே, என் மனம் சலனப்பட்டு நான் மன்னிப்புக் கேட்டு விடுதலையாகி வெளியே வரக்கூடாது. மனதைக் கல்லாக்கிக் கொள். போய்வா’ என்றார்.

மாணிக்கம் சொன்னபடியே அவருடைய மனைவியின் மனம் கல்லாகத்தான் ஆகிவிட்டது.

கணவன் லட்சியவெறியோடு உறுதியாய் இருக்கிறான் என்று அந்தப் பேதைப் பெண்ணால் உணர முடியவில்லை. தன்னை உதறிவிட்டான் என்று எண்ணி சித்த பிரமை பிடித்தவர் போல் சில நாள் இருந்து பின்னர் முழுப்பைத்தியமாகவே ஆகிவிட்டாள்.
ஓராண்டுக்குப் பின்னர் விடுதலையான மாணிக்கம் – அந்த ஒரே வாரக்கால இனிய மண வாழ்வின் நினைவுகளுடனேயே மனநோயாளியாகி விட்ட மனைவியுடன் வாழ்ந்து அவருக்கு முன்னாலேயே மடிந்து போனார்.

தந்தை பெரியார் 1926-ம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியது முதலே ஜாதி ஒழிப்புக்கான போராட்டங்களை முன்னெடுத்து வந்தார். நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என இயக்கங்களின் பெயர் மாறினாலும் தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு, திராவிடர் இன விடுதலை உள்ளிட்ட அடிப்படை கொள்கைகள் தொடர்ந்தன.
இதன் உச்சமாகத்தான் ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சாசன பிரிவுகள் 13,25,26, 372 ஆகியவற்றை தீயிட்டு எரிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்தார். போராடத்துக்கு முன்னதாக தமிழகம் முழுவதும் பிரசார கூட்டங்கள் நடத்தப்பட்டன. 26.11.1957-ல் நடைபெற்ற இப்போராட்டத்தில்
10,000-க்கும் அதிகமானோர் பங்கேற்று இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவுகளை தீயிட்டு எரித்தனர். சுதந்திர இந்தியாவிலேயே அரசியல் சாசனத்தை தீயிட்டு எரித்த முதலாவது போராட்டம் இது.
இதில் 3,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், சிறுவர்- சிறுமியர் என பலரும் அடங்கும். காலையில் கைது மாலையில் விடுதலை என்கிற போராட்டம் அல்ல.. பலருக்கும் 3 மாதம் முதல் 3 ஆண்டுகாலம் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிறை கொட்டடியிலேயே மாண்டு போயினர் பலர்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

27 Nov
சரிந்த சாம்ராஜ்யங்கள்-14

கஜினி முகம்மது (தவறான கண்ணோட்டங்கள்)

இந்தியாவில் இந்து – முசுலீம் முரண்பாட்டின் துவக்கமே கஜினியின் இந்தப் படையெடுப்புதான் என இன்று பாரதிய ஜனதா கும்பல் செய்து வரும் பிரச்சாரத்திற்கு உறுதியான அடித்தளத்தை வழங்குகின்றன நமது பாடநூல்கள்.
பாபர் மசூதியை இடிக்கத் தனது ரதயாத்திரையை குஜராத்திலுள்ள சோமநாதபுரத்திலிருந்துதான் துவங்கினார் அத்வானி.

அயோத்திக்கு பாபர்;

சோமநாதபுரத்திற்கு கஜினி.

அயோத்தியில் ராமர் கோயில் எதையும் பாபர் இடிக்கவில்லை என்பது பல வரலாற்று ஆசிரியர்களாலும்
தொல்பொருள் ஆய்வாளர்களாலும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் சோமநாதபுரத்தின் விசயம் அப்படி அல்ல. சோமநாதபுரம் கோயிலை கஜினி முகமது கொள்ளையிட்ட செய்தி நீண்ட நாட்களாகவே நமது வரலாற்றுப் பாட நூல்களில் இடம் பெற்று வருகிறது. Image
Read 38 tweets
27 Nov
சரிந்த சாம்ராஜ்யங்கள்-13

கஜினி முகம்மது (தவறான கண்ணோட்டங்கள்)

கஜினி 18 முறை படை எடுத்தது தெரியும்.

ஆனால் 17 முறை அவரை தடுத்தது யார்? தடுத்தது உண்மையா தெரியுமா? Image
உலகில் இருக்கும் மற்ற அனைத்து நாடுகளை காட்டிலும் அதிக வரலாற்றையும், மர்மங்களையும் கொண்ட நாடு நமது இந்தியா ஆகும். ஏனெனில் இப்பொழுதும் மட்டுமல்ல அந்த காலத்திலும் நமது மன்னர்கள் இப்போதிருப்பது போலவே மொழியாலும், எல்லையாலும் பிரிந்தே இருந்தனர்.
நம்மை ஆண்ட மன்னர்கள் ஒற்றுமையோடு இருந்திருந்தால் இன்று உலகின் சக்திவாய்ந்த நாடாக நாம்தான் இருந்திருப்போம். Mausoleum of Sultan Mahmud ...
Read 26 tweets
27 Nov
சரிந்த சாம்ராஜ்யங்கள்-12

கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான கண்ணோட்டங்கள்)

முகம்மது துக்ளக்

இப்போது துக்ளக் பற்றிய தகவல்கள்:

டெல்லியைத் தலைநகராகக் கொண்டு இவர் இந்திய நாட்டில் 1321 முதல் 1388 வரை 67 ஆண்டு களுக்கு ஆட்சி செலுத்தினார். முகம்மது துக்ளக் தத்துவம், ...
1340ஆம் ஆண்டு வாக்கில் நாட்டின் தலைநகரைத் தென்னிந்தியப் பகுதியில் உள்ள தேவகிரிக்கு மாற்றினார். தேவகிரி தௌலத்தாபாத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர்கள் மற்றும் அர சாங்கப் பணியாளர்கள் இந்த மாற்றத்தை விரும்ப வில்லை
என்பதாலும் அந்த ஆண்டில் அங்குக் கடும் தண்ணீர்ப் பஞ்சம் நிலவியதாலும் தலைநகர் மீண்டும் டெல்லிக்கு மாற்றப்பட்டது. அவரது இந்த ஒரு செயலை வைத்து அவருக்குக் கோமாளி என்று பட்டம் சூட்டிப் பலரும் மகிழ்கின்றனர்.
Read 20 tweets
27 Nov
சரிந்த சாம்ராஜ்யங்கள்-11

கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான கண்ணோட்டங்கள்)

இந்த இரண்டு நபர்களுமே இந்திய சரித்திரத் தின் மத்திய அல்லது இடைக்காலத்தை (மெடீவல் பீரிய்ட்) சார்ந்தவர்கள் (கி.பி.712 முதல் 1764 வரை யிலான காலம்). Image
பேரரசு என்கிற நிலையில் இந்தியாவைக் கடைசியாக ஆண்ட இந்திய மன்னர் ஹர்ஷவர்த்தனன் ஆவார். கன்னோ ஜியைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த இவரது ஆட்சி கி.பி.700க்குச் சற்று முன்னதாகவே முடிவுக்கு வந்துவிட்டது.
அதற்குப் பின்பு ஹிந்துஸ்தானம் அல்லது ஆர்யாவர்த்தம் என்று குறிப்பிடப்படும் விந்திய மலைக்கு வடக்கே உள்ள பகுதியில் எந்தப் பேரரசும் ஆட்சி செலுத்த வில்லை. பல மன்னர்கள் பல பகுதிகளை ஆண்டு வந்தனர். அவர்களுக்கிடையே பகைமை நிலவிய தால் ஓயாத போர்கள் தொடர்ந்தன.
Read 27 tweets
26 Nov
#நவம்பர்26 அரசியல் சட்ட எரிப்பு ஏன்?

இன்று அரசியல் சட்ட எரிப்பு நாள்!

ஜாதிக்கு எதிராக தொடர்ந்து கடுமையாக போராடி வந்த தந்தை பெரியார், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் உருவான அரசியல் சட்டத்தை கடுமையாக எதிர்த்தார். சுவாமிமலை கூட்டத்தில் பேசிய அவர்,
'பிராமணன் என்றொரு சாதி இல்லை' என்று அறிவிக்காவிட்டால் நங்கள் சட்ட புத்தகத்தை கொளுத்தப் போகிறோம் என்று அறிவித்தார்.

3.11.1957 ல் தஞ்சாவூரில் பெரியார் சாதி ஒழிப்பு மாநாடு ஒன்றைக் கூட்டினார். அதில் அரசியல் சட்டத்தில் உள்ள மதப்பாதுகாப்பு, மத உரிமை என்பதில்,
பார்ப்பன ஜாதியை எவ்வாறெல்லாம் காப்பாற்றும்படி சட்டம் உள்ளது என்றும், ஒடுக்கப்பட்ட மக்களை எப்படி எல்லாம் ஒடுக்கும் ஏற்பாடுகளை செய்துள்ளது என்பதையும் விளக்கிப் பேசினார். அக்கூட்டத்தில் பெரியார்,
Read 11 tweets
25 Nov
#அம்பேத்கர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்று கேட்டால், பெருவாரியான பதில்கள், ‘இந்திய அரசியல் சட்டத்துக்கு எழுத்து வடிவம் தந்தவர்’, ‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர்’ என்பதாகத்தான் இருக்கும்.

#Constitution_Day_Of_India
#இந்திய_அரசியல்_சாசன_தினம்
ஆனால் அம்பேத்கர் என்ற மகத்தான ஆளுமையை இப்படியான சிமிழ்களுக்குள் அடைத்துவிட முடியாது
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நமக்கு சொன்ன செய்தி ஒன்றே ஒன்றுதான். “எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். ‘எனக்கு மேலே ஒருவரும் இல்லை; எனக்குக் கீழேயும் ஒருவரும் இல்லை’ என்பதை மனித விழுமியமாக மாற்றுங்கள்’ என்பதுதான் அது.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(