ஆனால் 17 முறை அவரை தடுத்தது யார்? தடுத்தது உண்மையா தெரியுமா?
உலகில் இருக்கும் மற்ற அனைத்து நாடுகளை காட்டிலும் அதிக வரலாற்றையும், மர்மங்களையும் கொண்ட நாடு நமது இந்தியா ஆகும். ஏனெனில் இப்பொழுதும் மட்டுமல்ல அந்த காலத்திலும் நமது மன்னர்கள் இப்போதிருப்பது போலவே மொழியாலும், எல்லையாலும் பிரிந்தே இருந்தனர்.
நம்மை ஆண்ட மன்னர்கள் ஒற்றுமையோடு இருந்திருந்தால் இன்று உலகின் சக்திவாய்ந்த நாடாக நாம்தான் இருந்திருப்போம்.
நம் மன்னர்களிடையே ஒற்றுமை இல்லாததால்தான் பல நாட்டு மன்னர்களும் நம் மீது போர் தொடுத்து நமது மக்களை கொன்று நம் மண்ணின் செல்வத்தையும் கொள்ளையடித்து சென்றனர். இந்தியாவின் மீது படையெடுத்தவர்களில் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தவர் முகமது கஜினி.
இவர் இந்தியா மீது 17 முறை படையெடுத்து வந்து தோற்று 18வது முறை வெற்றி கண்டதாக நாம் படித்த வரலாறு கூறுகிறது. ஆனால் உண்மையில் மறைக்கப்பட்ட வரலாறு என்னவென்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
முகமது கஜினி கிபி 971 ஆம் ஆண்டு கஜினியை ஆண்ட சுபுக்தகினுக்கு மூத்த மகனாக பிறந்தார்.சுபுக்தகின் இந்தியா மீது போர் தொடுத்த போது ராஜா ஜெய்பால் அவரை எதிர்த்து போர் புரிந்தார். முகமது கஜினி அப்போது தன் தந்தைக்காக போரில் ஈடுபட்டார். ஆனால் அந்த போரில் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.
முகமது கஜினி சுபுக்தகினின் மூத்த மகனாக இருந்தாலும் அவருக்கு முகமதுவை மன்னராக்குவதில் விருப்பமில்லை. ஏனெனில் அவரின் இறுதிகால செயல்களால் அவர் அதிருப்தியில் இருந்தார். அதனால் அவரின் இளைய மகனான இஸ்மாயில் அரசனாக முடிசூடினார்.
ஆனால் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. முகமது தனது தம்பியை வீழ்த்திவிட்டு அரியணை ஏறினார். தன்னுடைய 27 வது வயதில் சுல்தானாக தன்னை அறிவித்து கொண்டார்.
இந்தியா மீது படையெடுப்பு இந்தியாவின் செல்வம் மீது ஆசைப்பட்ட முகமது அதனை கொள்ளையடிப்பதற்காக 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியா மீது படையெடுக்க தொடங்கினார்.
இந்தியா மீது படையெடுக்க காரணம் ஒன்று அதன் அளவில்லாத செல்வம் மற்றொன்று முகமது தனது தலைநகரை கஜினியில் இருந்து இந்தியாவிற்கு மாற்றி ஒட்டுமொத்த ஆசியாவையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர எண்ணினார். ்
கிபி 1000 முதல் 1027 வரை ஒன்றன் பின் ஒன்றாக இந்தியா மீது போர் தொடுத்து கொண்டே இருந்தார்.
ஜெய்பாலுடன் மீண்டும் போர் கிபி 1001 ல் முகமது கஜினி தன் பழைய எதிரியான ஜெய்பால் மீது போர் தொடுத்தார். அப்போது ராஜபுத்திரர்கள் தங்களது வலிமையை இழந்து இருந்தார்கள்.
மன்னர் ஜெய்பால் மிகவும் வீரத்துடன் போரிட்டு முகமது கஜினியை தடுத்தார். ஆனால் இறுதியில் தோல்வியை தழுவினார். கிட்டத்தட்ட 15,000 வீரர்கள் இந்த போரில் கொல்லப்பட்டனர். ஜெய்பால் முகமதுவால் சிறைபிடிக்கப்பட்டார், அவரும் அவரின் 15 உறவினர்களும் முகமது கஜினி முன் நிறுத்தப்பட்டனர்.
முகமது கஜினியின் நிபந்தனை
முகமது கஜினி ஜெய்பாலின் அனைத்து செல்வங்களையும் அபகரித்து கொண்டார். மேலும் அவரை விடுவிக்க 2,50,000 தினார் பணமும், 5,00,000 இந்தியர்கள் அடிமையாகவும் வேண்டுமென்று நிபந்தனை விதித்தார்.
இறுதியில் அவை கொடுக்கப்பட்டு ஜெய்பால் அவரது மகன் அனந்தபாலால் மீட்கப்பட்டார். ஆனால் தோல்வியடைந்ததால் ஜெய்பால் தனது உயிரை எரியும் நெருப்பில் விழுந்து மாய்த்து கொண்டார்.
அனந்தபாலுடன் போர்
ஜெய்பாலின் மறைவிற்கு பிறகு அனந்தபால் மன்னராக பொறுப்பேற்று கொண்டார். 1008 ஆம் ஆண்டு முகமது கஜினி மீண்டும் போர் தொடுத்தார். அனந்தபால் மற்ற அரசர்களை உதவிக்கு வரும்படி கூறினார்.
அவரின் வேண்டுகோளுக்கிணங்க உஜ்ஜயினி, குவாலியர், டெல்லி, அஜ்மீர் நாட்டு மன்னர்கள் அனந்தபாலுக்கு உதவினர். பெஷாவரில் இரண்டு மாபெரும் படையும் சந்தித்தது. ஆனால் ஒருவரை ஒருவர் தாக்காமல் காத்திருந்தனர்.
அனந்தபாலின் வீழ்ச்சி
அந்த சூழ்நிலையில் கோகர்களும் அனந்தபாலுக்கு உதவி செய்ய வந்தனர். முகமதுவின் படையில் கிட்டதட்ட 6000 வில் வீரர்கள் இருந்தனர். கோகர்கள் அதில் 5,000 பேரை கொன்றனர். போரில் அனந்தபாலின் கைதான் ஓங்கியிருந்தது,
ஆனால் எதிர்பாராதவிதமாக அனந்தபாலின் யானைக்கு மதம் பிடித்து அது அவரை போர்க்களத்தை விட்டு வெளியே இழுத்து சென்றது. தலைமை இல்லாத இந்திய படையில் குழப்பம் ஏற்பட்டு அனைவரும் பின்வாங்க தொடங்கினர். அதன்பின் முகமதுவின் கை ஓங்கி இந்திய படையின் 20,000 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
அதன்பின் முகமதுவின் படையெடுப்புகள் தொடர்ந்து அரங்கேறியது.
நாகர்கோட் படையெடுப்பு
அந்த காலத்தில் நாகர்கோட் கோவில் அதன் செல்வத்திற்காக மிகவும் புகழ் பெற்றதாக இருந்தது. அதன் மீது ஆசை கொண்ட முகமது கஜினி தன் படையினரை நாகர்கோட்டை தாக்க உத்தரவிட்டார்.
கிபி 1009 ஆம் ஆண்டு நாகர்கோட் முகமது கஜினியால் தாக்கப்பட்டது. அங்கிருந்து விலைமதிப்பில்லாத தங்கம், வைரம் மற்றும் செல்வத்தை தன் தலைநகருக்கு அள்ளி சென்றார் முகமது கஜினி. அதற்கு பின் தானெசீர், கண்ணுஜ் என பல இடங்களிலும் முகமது தனது படையெடுப்பை நடத்தினார்.
கலிஞ்சர் படையெடுப்பு
கண்ணுஜை ஆண்ட ராஜ்பால் பிரதிகார் முகமதுவின் ஆதிக்கத்தின் கீழ் ஆட்சிபுரிய சம்மதித்தார். இதனால் மற்ற ராஜபுத்திர அரசர்கள் அவர் மீது ஆத்திரம் கொண்டனர். இதனால் கலிஞ்சர், குவாலியர்,
அஜ்மீர் மற்ற இதர ராஜபுத்திர அரசர்கள் கண்ணுஜ் மீது போர் தொடுத்து ராஜ்பால் பிரதிகாரை கொன்றனர். இதனால் கோபமுற்ற முகமது கஜினி கலிஞ்சர் மீது போர் தொடுத்தார். கலிஞ்சரின் அரசர் கண்டா சந்தபால் முகமதுவின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டார். அதற்காக முகமதுவிற்கு பெரும்தொகை கொடுக்கப்பட்டது.
சோமநாத கோவில் படையெடுப்பு
பதினாறாவது முறையாக குஜராத்தில் இருக்கும் சோமநாத கோவில் மீது முகமது கஜினி படையெடுத்தார். ஏனெனில் அப்போது இந்தியாவிலேயே அதிக செல்வமும், புகழும் வாய்ந்த கோவிலாக சோமநாத கோவில் இருந்தது. 1025 ல் சோமநாத கோவில் தாக்கப்பட்டது,
ராஜபுத்திர அரசர்களும் மற்ற அரசர்களும் கோவிலை பாதுகாக்க வீரத்துடன் முன்வந்தனர். முகமதுவின் படைக்கும் இந்தியர்களின் படைக்கும் 3 நாட்கள் போர் நடைபெற்றது. இருதியில் முகமது கஜினியின் படை வெற்றி பெற்று 20 இலட்சம் தினார் மதிப்புள்ள செல்வத்தை கொள்ளையடித்து சென்றது.
முகமது கஜினியின் படையின் வலிமை முகமது கஜினியுடைய படையின் வலிமையே அவரின் காற்றை மிஞ்சும் குதிரைப்படைதான். ஏனெனில் அக்காலத்தில் நமது மன்னர்கள் யானைகளையே அதிகம் போரில் உபயோகப்படுத்தினர்.
ராஜபுத்திர அரசர்கள் போரில் சிறந்து விளங்கினாலும் அவர்களால் துருக்கிய வீரர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலவில்லை. முகமது கஜினியின் மற்றொரு பலமாக இருந்தது நம் மன்னர்களிடையே இருந்த ஒற்றுமையின்மைதான். இறுதியாக 1030, ஏப்ரல் 20 ஆம் தேதி தன் 59 வது வயதில் முகமது கஜினி இறந்தார்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்தியாவில் இந்து – முசுலீம் முரண்பாட்டின் துவக்கமே கஜினியின் இந்தப் படையெடுப்புதான் என இன்று பாரதிய ஜனதா கும்பல் செய்து வரும் பிரச்சாரத்திற்கு உறுதியான அடித்தளத்தை வழங்குகின்றன நமது பாடநூல்கள்.
பாபர் மசூதியை இடிக்கத் தனது ரதயாத்திரையை குஜராத்திலுள்ள சோமநாதபுரத்திலிருந்துதான் துவங்கினார் அத்வானி.
அயோத்திக்கு பாபர்;
சோமநாதபுரத்திற்கு கஜினி.
அயோத்தியில் ராமர் கோயில் எதையும் பாபர் இடிக்கவில்லை என்பது பல வரலாற்று ஆசிரியர்களாலும்
தொல்பொருள் ஆய்வாளர்களாலும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.
ஆனால் சோமநாதபுரத்தின் விசயம் அப்படி அல்ல. சோமநாதபுரம் கோயிலை கஜினி முகமது கொள்ளையிட்ட செய்தி நீண்ட நாட்களாகவே நமது வரலாற்றுப் பாட நூல்களில் இடம் பெற்று வருகிறது.
ஜாதிக்கு எதிராக தொடர்ந்து கடுமையாக போராடி வந்த தந்தை பெரியார், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் உருவான அரசியல் சட்டத்தை கடுமையாக எதிர்த்தார். சுவாமிமலை கூட்டத்தில் பேசிய அவர்,
'பிராமணன் என்றொரு சாதி இல்லை' என்று அறிவிக்காவிட்டால் நங்கள் சட்ட புத்தகத்தை கொளுத்தப் போகிறோம் என்று அறிவித்தார்.
3.11.1957 ல் தஞ்சாவூரில் பெரியார் சாதி ஒழிப்பு மாநாடு ஒன்றைக் கூட்டினார். அதில் அரசியல் சட்டத்தில் உள்ள மதப்பாதுகாப்பு, மத உரிமை என்பதில்,
பார்ப்பன ஜாதியை எவ்வாறெல்லாம் காப்பாற்றும்படி சட்டம் உள்ளது என்றும், ஒடுக்கப்பட்ட மக்களை எப்படி எல்லாம் ஒடுக்கும் ஏற்பாடுகளை செய்துள்ளது என்பதையும் விளக்கிப் பேசினார். அக்கூட்டத்தில் பெரியார்,
‘பிராமணன் என்று ஒரு சாதி சட்டத்தில் இருக்க அனுமதிக்க மாட்டோம். அப்படி இருந்தாலும், அவன் பிராமணனாக வாழ அனுமதிக்க மாட்டோம் என்று அரசாங்கம் சொல்லட்டும்’. - தோழர் பெரியார்
இந்த மாதம் 26 ஆம் தேதிக்குள், பிராமணன் என்ற ஒரு சாதி கிடையாது.சட்டத்தில் அந்த மாதிரிக் கருதமாட்டோம்’ என்று அறிக்கை வராவிட்டால் அரசாங்கச் சட்டப்புத்தகத்தை நாங்கள் கொளுத்தப் போகிறோம். இதை நாங்கள் வருத்தத்துடனேயே சொல்கிறோம், வெறும் குறும்புக்காகவோ,
விளம்பரத்திற்காகவோ, ஜெயிலுக்குப் போய் வந்ததைக் காட்டி ஓட்டு வேட்டையாடவோ நாங்கள் அந்தக் காரியம் செய்யவில்லை.
எனக்கு 79 வயதாகிவிட்டது. நம் மக்களுக்கு ஏதாவது காரியம் செய்துவிட்டு நான் சாக வேண்டும்.
#அம்பேத்கர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்று கேட்டால், பெருவாரியான பதில்கள், ‘இந்திய அரசியல் சட்டத்துக்கு எழுத்து வடிவம் தந்தவர்’, ‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர்’ என்பதாகத்தான் இருக்கும்.
ஆனால் அம்பேத்கர் என்ற மகத்தான ஆளுமையை இப்படியான சிமிழ்களுக்குள் அடைத்துவிட முடியாது
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நமக்கு சொன்ன செய்தி ஒன்றே ஒன்றுதான். “எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். ‘எனக்கு மேலே ஒருவரும் இல்லை; எனக்குக் கீழேயும் ஒருவரும் இல்லை’ என்பதை மனித விழுமியமாக மாற்றுங்கள்’ என்பதுதான் அது.