ஜாதிக்கு எதிராக தொடர்ந்து கடுமையாக போராடி வந்த தந்தை பெரியார், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் உருவான அரசியல் சட்டத்தை கடுமையாக எதிர்த்தார். சுவாமிமலை கூட்டத்தில் பேசிய அவர்,
'பிராமணன் என்றொரு சாதி இல்லை' என்று அறிவிக்காவிட்டால் நங்கள் சட்ட புத்தகத்தை கொளுத்தப் போகிறோம் என்று அறிவித்தார்.
3.11.1957 ல் தஞ்சாவூரில் பெரியார் சாதி ஒழிப்பு மாநாடு ஒன்றைக் கூட்டினார். அதில் அரசியல் சட்டத்தில் உள்ள மதப்பாதுகாப்பு, மத உரிமை என்பதில்,
பார்ப்பன ஜாதியை எவ்வாறெல்லாம் காப்பாற்றும்படி சட்டம் உள்ளது என்றும், ஒடுக்கப்பட்ட மக்களை எப்படி எல்லாம் ஒடுக்கும் ஏற்பாடுகளை செய்துள்ளது என்பதையும் விளக்கிப் பேசினார். அக்கூட்டத்தில் பெரியார்,
" இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கொளுத்தினால் என்ன தண்டனை என்பது சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை" என்பதை கூறியபோதுதான் ஆட்சியாளர்களுக்கே அது தெரிந்தது. உடனடியாக அவசர அவசரமாக, 'அரசியல் சட்டத்தை எரித்தால் மூன்றாண்டுகள் வரை சிறை' என்ற சட்டத்தை அன்றைய மாநில அரசு நிறைவேற்றியது.
பெரியார் கொடுத்த கெடுவுக்குள் அவர் கூறியவை செயற்படுத்தப்படவில்லை. ‘அய்யயோ எனக்கும் அதுக்கும் சமந்தம் இல்லை’ என்று தற்போது சிலர் போலீசுக்கு, வழக்குக்கு பயந்து ஓடுவது போல் அல்லாமல், சட்ட எரிப்பினால் கைதாகும்போது கூற வேண்டியவை என்று பெரியார் ஒன்றை வெளியிட்டார். அதில்,
'ஜாதியை பாதுகாக்கும் சட்டத்தை எதிர்க்கவே சட்டத்தை எரித்ததாகவும், அதில் தவறில்லை என்று எதிர்வாதாட விரும்பவில்லை எனவும், மேலும் என்ன தண்டனை கொடுத்தாலும் மகிழ்ச்சியாய் ஏற்றுகொள்வதாகவும்' நீதிமன்றத்தில் அறிவிக்கும்படி கூறி இருந்தார்.
சட்ட எரிப்பு நாளுக்கு முன்னதாக தந்தை பெரியார் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட, பெரியார் இல்லாமலே, அவர் அறிவித்த நாளில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை 10,000 பேர் திரள, திக்குமுக்காடிப் போனது அரசாங்கமும் போலீசும். வெறும் 3000 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர்.
விடுப்பிலோ, பிணையிலோ யாரும் செல்லவில்லை. பதினான்கு வயது சிறுவனை நீதிபதி மன்னிப்பதாய் முடிவு செய்ய, அச்சிறுவன் சண்டையிட்டு தனக்கான தண்டனையை வாங்கிக்கொண்டான். சிறையில் பட்டுக்கோட்டை ராமசாமி மற்றும் மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோர் இறந்தனர்.
அவர்களின் உடல், மணியம்மையார் கடுமையாக போராடியப் பின் ஊர்வலத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. இவ்விருவரையும் சேர்த்து மொத்தம் பதினெட்டு பேர், சிறையிலும் வெளியில் வந்த பின்னும் இறந்தனர்.
விடுப்பிலோ, பிணையிலோ யாரும் செல்லவில்லை.
பதினான்கு வயது சிறுவனை நீதிபதி மன்னிப்பதாய் முடிவு செய்ய, அச்சிறுவன் சண்டையிட்டு தனக்கான தண்டனையை வாங்கிக்கொண்டான். சிறையில் பட்டுக்கோட்டை ராமசாமி மற்றும் மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோர் இறந்தனர்.
அவர்களின் உடல், மணியம்மையார் கடுமையாக போராடியப் பின் ஊர்வலத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. இவ்விருவரையும் சேர்த்து மொத்தம் பதினெட்டு பேர், சிறையிலும் வெளியில் வந்த பின்னும் இறந்தனர்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்தியாவில் இந்து – முசுலீம் முரண்பாட்டின் துவக்கமே கஜினியின் இந்தப் படையெடுப்புதான் என இன்று பாரதிய ஜனதா கும்பல் செய்து வரும் பிரச்சாரத்திற்கு உறுதியான அடித்தளத்தை வழங்குகின்றன நமது பாடநூல்கள்.
பாபர் மசூதியை இடிக்கத் தனது ரதயாத்திரையை குஜராத்திலுள்ள சோமநாதபுரத்திலிருந்துதான் துவங்கினார் அத்வானி.
அயோத்திக்கு பாபர்;
சோமநாதபுரத்திற்கு கஜினி.
அயோத்தியில் ராமர் கோயில் எதையும் பாபர் இடிக்கவில்லை என்பது பல வரலாற்று ஆசிரியர்களாலும்
தொல்பொருள் ஆய்வாளர்களாலும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.
ஆனால் சோமநாதபுரத்தின் விசயம் அப்படி அல்ல. சோமநாதபுரம் கோயிலை கஜினி முகமது கொள்ளையிட்ட செய்தி நீண்ட நாட்களாகவே நமது வரலாற்றுப் பாட நூல்களில் இடம் பெற்று வருகிறது.
ஆனால் 17 முறை அவரை தடுத்தது யார்? தடுத்தது உண்மையா தெரியுமா?
உலகில் இருக்கும் மற்ற அனைத்து நாடுகளை காட்டிலும் அதிக வரலாற்றையும், மர்மங்களையும் கொண்ட நாடு நமது இந்தியா ஆகும். ஏனெனில் இப்பொழுதும் மட்டுமல்ல அந்த காலத்திலும் நமது மன்னர்கள் இப்போதிருப்பது போலவே மொழியாலும், எல்லையாலும் பிரிந்தே இருந்தனர்.
நம்மை ஆண்ட மன்னர்கள் ஒற்றுமையோடு இருந்திருந்தால் இன்று உலகின் சக்திவாய்ந்த நாடாக நாம்தான் இருந்திருப்போம்.
கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான கண்ணோட்டங்கள்)
முகம்மது துக்ளக்
இப்போது துக்ளக் பற்றிய தகவல்கள்:
டெல்லியைத் தலைநகராகக் கொண்டு இவர் இந்திய நாட்டில் 1321 முதல் 1388 வரை 67 ஆண்டு களுக்கு ஆட்சி செலுத்தினார்.
1340ஆம் ஆண்டு வாக்கில் நாட்டின் தலைநகரைத் தென்னிந்தியப் பகுதியில் உள்ள தேவகிரிக்கு மாற்றினார். தேவகிரி தௌலத்தாபாத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர்கள் மற்றும் அர சாங்கப் பணியாளர்கள் இந்த மாற்றத்தை விரும்ப வில்லை
என்பதாலும் அந்த ஆண்டில் அங்குக் கடும் தண்ணீர்ப் பஞ்சம் நிலவியதாலும் தலைநகர் மீண்டும் டெல்லிக்கு மாற்றப்பட்டது. அவரது இந்த ஒரு செயலை வைத்து அவருக்குக் கோமாளி என்று பட்டம் சூட்டிப் பலரும் மகிழ்கின்றனர்.
கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான கண்ணோட்டங்கள்)
இந்த இரண்டு நபர்களுமே இந்திய சரித்திரத் தின் மத்திய அல்லது இடைக்காலத்தை (மெடீவல் பீரிய்ட்) சார்ந்தவர்கள் (கி.பி.712 முதல் 1764 வரை யிலான காலம்).
பேரரசு என்கிற நிலையில் இந்தியாவைக் கடைசியாக ஆண்ட இந்திய மன்னர் ஹர்ஷவர்த்தனன் ஆவார். கன்னோ ஜியைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த இவரது ஆட்சி கி.பி.700க்குச் சற்று முன்னதாகவே முடிவுக்கு வந்துவிட்டது.
அதற்குப் பின்பு ஹிந்துஸ்தானம் அல்லது ஆர்யாவர்த்தம் என்று குறிப்பிடப்படும் விந்திய மலைக்கு வடக்கே உள்ள பகுதியில் எந்தப் பேரரசும் ஆட்சி செலுத்த வில்லை. பல மன்னர்கள் பல பகுதிகளை ஆண்டு வந்தனர். அவர்களுக்கிடையே பகைமை நிலவிய தால் ஓயாத போர்கள் தொடர்ந்தன.
‘பிராமணன் என்று ஒரு சாதி சட்டத்தில் இருக்க அனுமதிக்க மாட்டோம். அப்படி இருந்தாலும், அவன் பிராமணனாக வாழ அனுமதிக்க மாட்டோம் என்று அரசாங்கம் சொல்லட்டும்’. - தோழர் பெரியார்
இந்த மாதம் 26 ஆம் தேதிக்குள், பிராமணன் என்ற ஒரு சாதி கிடையாது.சட்டத்தில் அந்த மாதிரிக் கருதமாட்டோம்’ என்று அறிக்கை வராவிட்டால் அரசாங்கச் சட்டப்புத்தகத்தை நாங்கள் கொளுத்தப் போகிறோம். இதை நாங்கள் வருத்தத்துடனேயே சொல்கிறோம், வெறும் குறும்புக்காகவோ,
விளம்பரத்திற்காகவோ, ஜெயிலுக்குப் போய் வந்ததைக் காட்டி ஓட்டு வேட்டையாடவோ நாங்கள் அந்தக் காரியம் செய்யவில்லை.
எனக்கு 79 வயதாகிவிட்டது. நம் மக்களுக்கு ஏதாவது காரியம் செய்துவிட்டு நான் சாக வேண்டும்.
#அம்பேத்கர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்று கேட்டால், பெருவாரியான பதில்கள், ‘இந்திய அரசியல் சட்டத்துக்கு எழுத்து வடிவம் தந்தவர்’, ‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர்’ என்பதாகத்தான் இருக்கும்.
ஆனால் அம்பேத்கர் என்ற மகத்தான ஆளுமையை இப்படியான சிமிழ்களுக்குள் அடைத்துவிட முடியாது
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நமக்கு சொன்ன செய்தி ஒன்றே ஒன்றுதான். “எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். ‘எனக்கு மேலே ஒருவரும் இல்லை; எனக்குக் கீழேயும் ஒருவரும் இல்லை’ என்பதை மனித விழுமியமாக மாற்றுங்கள்’ என்பதுதான் அது.