#மரணத்தை_எண்ணி_கலங்கிடும்_மனமே.... (தலைப்பு-2)

நேற்றைய (02/12/2021) பதிவின் தொடர்ச்சியாக...

#Mechanical_மரணம்

பெங்களூரில் இரண்டு வாரம் முன்பு நாங்கள் குடியிருக்கும் வீட்டின் கீழ் போர்ஷனில் இருந்த ஒரு பாட்டி செத்துப்போய்விட்டார்.
ரொம்ப வயதாகி, தள்ளாமல் போய் படுத்தபடுத்தையாய் கிடந்து ஒரு லாஜிக்கல் கன்க்ளூஷனுக்கு வந்துவிட்டபடியால், அவர் மரணம் யாருக்கும் அதிர்ச்சியளிக்கவில்லை.

இதற்கு மேலும் அவஸ்தைப்படாமல் போய்ச் சேர்ந்தாரே என்ற practical thought தான் எல்லார் மனதிலும்.
என் பக்கத்து வீட்டு இளைஞன் ஃப்ரீஸர் பாக்ஸ் ஏற்பாடு செய்தான்.

இன்னொரு வீட்டுக்காரர் டெத் சர்டிஃபிக்கேட் டாக்டரிடம் வாங்கித் தந்தார். பக்கத்தாத்து மாமி காப்பி இரண்டு வேளை கலந்து கொடுத்தார்.
வாத்தியார் ஏற்பாடு, மின்ஸார சுடுகாடு புக்கிங் என அனைத்து வேலைகளும் யாரும் சொல்லாமல் அக்கம்பக்கத்தினர் ஏற்பாட்டில் நடந்து முடிந்தது.

இதெல்லாம் முடிந்து பத்தாம் நாள் காரியங்கள் நடந்துகொண்டே இருக்கும் போது, எதிர்த்த ஃப்ளாட்டின் கீழ் போர்ஷனில் ஒரு பெரியவருக்கு ஹார்ட் அட்டாக்.
மெட்ஸ்டார் அழைத்துச்சென்று ஆஞ்சியோ செய்து தேறாது என்று முடிவுசெய்து வென்டிலேட்டர் போட்டு வைத்துவிட்டனர்.

பையனை தனியாக அழைத்துச் சென்று மேலும் சில டாக்டர்களை வைத்து ஒப்பீனியன் சொல்கிறோம், இரண்டு நாட்கள் ஐ.சி.யூவில் இருக்கட்டும் என்று பேரம் பேசியிருக்கின்றனர்.
எவ்வளவு பணம் செலவாகும் என்று கேட்டதற்கு "உங்களுக்கு மனசாட்சியே இல்லையா ?" என்று கேட்டிருக்கிறார்கள்.

உங்களை மாதிரியே எனக்கும் ரமணா படம் பார்த்த உணர்வுதான் என்றாலும், பதிவு அதைப்பற்றி அல்ல என்பதால் அடுத்த காட்சிக்கு போவோம்.
இரண்டு நாள் கழித்து.... கொஞ்சம் வெளியே போய் விட்டு ஆத்துக்கு வந்தேன்.

வீட்டில் ஒரே பரபரப்பு. #எதிராத்து_மாமா_இன்னும்_ஹாஸ்பிடலிலிருந்து_டிஸ்சார்ஜ்_ஆகவில்லை.

ஆனால் அப்படி ஆன மறு நிமிடம் இறந்துவிடுவார் என்று சொல்லப்பட்டது.
#வாத்தியாருக்கு சொல்லியாச்சு.

#டெத்_சர்டிஃபிக்கேட் எங்கே வாங்குவது என்று குழப்பம்.

#நைட்_சாப்பாடுக்கு ஏற்பாடு பண்ணியாச்சு.

சுடுகாடுக்கு ஃபோன் செய்தால் #எக்ஸாக்ட்_டைம்_வேண்டும் என்று படுத்துகிறான்.
#பார்ட்டி_இன்னும்_சாகவில்லை என்பது அவனுக்குத் தெரியாது.

இவ்வாறான குழப்பங்கள்.

நிற்க.

இதைப் படிக்கும்போது, ஒரு சாவை இவ்வளவு சுலபமாகவும், ஒருவரின் உயிரை இவ்வளவு அல்பமாகவும் மதிக்க முடியுமா? கீழ்த்தரமாக இல்லையா? என்று எனக்கும் தோன்றியது.
அதனால் நான் அவர்களின் உரையாடலை இடைமறித்துச் சொன்னேன்.

"கொஞ்சம் வெய்ட் பண்ணலாமே. என்னத்துக்கு இவ்வளவு preparedஆ இருக்கனும்".

அவர்கள் எல்லாம் என்னை கேள்விக்குறியோடு பார்த்தார்கள்.
அவர் டிஸ்சார்ஜ் ஆன பிற்பாடு இறக்காமல் புஷ்டியாக வீடு வந்தால், இவர்கள் கொஞ்சம் #டிஸ்ஸப்பாயிண்ட் ஆவார்களோ என்று தோன்றியது.

ஆனால் அவர்களது கோணத்தில் மாமாவின் இறப்பு இன்று நிச்சயம் என்று ஆனபிறகு இதையெல்லாம் ஜரூராக வைத்திருப்பது புத்திசாலித்தனம்தான்.
மரணமாகப்போகும்(?!) மாமாவின் மனைவியும் தைரியமாக இருந்தார்.

இதெல்லாம் எனக்குப் புதிது.

ஜெயகாந்தனின், இந்திரா பார்த்தசாரதியின் கதையில் வரும் வெகு பக்குவமான கதாபாத்திரங்களின் சம்பாஷணைகள் மாதிரி இருந்தது அந்த உரையாடல்.
இதெல்லாம் நடந்து கொண்டு இருக்கும் இடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில், #ஒரு_உயிர்_இதயத்துடிப்பை_கடைசியாக_இயக்கி_நிறுத்தியது.

பத்து நிமிடங்களில் மாமா இறந்துவிட்ட செய்தி செல்போனில் உறுதி செய்யப்பட்டது.

ஒரு முனை "ஆச்சு !" என்றும், மறுமுனை "ம்ம் !" என்றும் சொன்னது.
#வாத்தியார், #வெட்டியான், #டாக்டர், #சமையல்காரன், #ஃப்ரீஸர்_பாக்ஸ்காரன் எல்லாரும் வேலைக்குத் தயார் ஆனார்கள்.

ஒரு மரணத்தை எதிர்பார்த்து எத்தனை எத்தனை இயந்திரத்தனமான நிகழ்வுகள்!!!!

இதுதான்

#Mechanical_மரணம்

இந்த பதிவின் சங்கிலித் தொடராக நாளை....

#உலகளாவிய_மரண_அவலம்
கடைசி மூச்சு இருக்கும் வரை எல்லோரும்

வாழ்க வளமுடன்
எல்லா நலமுடன்

@Santhosh0309M @eRC4yFyqTppc4K7 @Jayaram9942Blr @rprabhu @aarjeekaykannan @naturaize @BKannigaa @sri88839783 @anbezhil12 @adv__LK @GopalanVs2 @anavrittim @abjrajesh5 @Bhairavinachiya @bullettuupandi @BUSHINDIA

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர்

Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @srinivasan19041

5 Dec
#கடவுள்_பாத்துக்குவார்

Search for the #positive in negative situation

ஶ்ரீனி என்ன சொல்ல வரே.... #இடுக்கண்_வருங்கால்_நகுக... அதானே...

யோவ்.... தலவலியும் திருகுவலியும் தனக்கு வந்தா தான்யா தெரியும்....
எல்லாத்தையும் #கடவுள்_பாத்துப்பார்_பாத்துப்பார் னு நீயும் ஏமாந்து... மத்தவங்களையும் ஏன்யா ஏமாத்தறே?????

"எல்லாம் நல்லதுக்குன்னு எடுத்துக்கோ.
கடவுள் நமக்கு நல்லது தான் செய்வார்.
எல்லாத்தையும் அவரிடம் விட்டுடு."

இது பெரியவர்கள் கூறும் வாக்கு.
(பிரச்சினையை அவரிடம் விட்டுட்டோம்னு சொல்லிட்டு மனசில் அதைப் பத்தியே தானே பேசிட்டே நினைச்சிண்டே தானே இருக்கோம்}

#எல்லாம்_எப்படி_நல்லதுக்குன்னு_எடுத்துக்கறது?

கேள்வி சரிதான்.

எனக்கும் இதே கேள்விதான்.

வாயாலதான் சொல்லுவோம்.

மனசு கேள்வி கேட்குமே?
Read 22 tweets
4 Dec


#மரணத்தை_எண்ணி_கலங்கிடும்_மனமே சங்கிலித் தொடரில் இன்று....

முன்குறிப்பு: எனது மகளாக பாவிக்கும் இப்போது ஆஸ்ட்ரேலியாவில் இருக்கும் #க்ளாரா (இவள் திருமணம் நிகழ்வு பற்றியவைகளை ஓராண்டு முன்பு பதிந்தது சிலருக்கு ஞாபகம் இருக்கலாம்.
I don't know how to extract that again) மூன்று ஆண்டுகளுக்கு அவள் அமெரிக்கா (அட்லாண்ட்டாவில் இருந்தபோது) முன்பு அவளுடைய நண்பர் ஒருவரின் அனுபவத்தை எனக்கு அனுப்பிய தகவல் தான்.... 👇👇👇👇👇

#I_saw_my_funeral

#உலகளாவிய_மரண_அவலங்கள்
I was about to lose my house...on 29th November 2018, just because I was not able to pay the rent.

I posted it on facebook seeking for help, but all I got were 2 likes & zero comments.

So l sent 250 messages to my contact list #requesting_for_a_loan_of $1500.
Read 14 tweets
4 Dec
#A_must_read_by_one_and_all_Indian_mindset_people

We know only 3 branches when we were growing up, Science, Arts, Commerce.

In 1978, colleges had five branches.
Civil, Mechanical, Electrical, Chemical and Electronics.
But how many of us know that our Indian schools were teaching 50-72 different vidyas, before 1858.

The system of Indian schools were destroyed by British visionaries.

*The first school in England opened in 1811 . At that time India had 732000 Indian schools.*
Find out how our schools got closed. How did indian school learning end.
First will tell you what disciplines were taught in indian culture !

Most Indian schools taught the following subjects.

01 Agni Vidya (Metallurgy)
02 Vayu Vidya (Wind)
03 Jal Vidya (Water)
Read 23 tweets
2 Dec
#மரணத்தை_எண்ணிக்_கலங்கிடும்_மனமே!!!



இந்த கருத்தினை இரண்டு மூன்று தொடர் பதிவுகளாக பகிரலாம் என்று நினைக்கிறேன்.

இதென்ன அபசகுனமாக என்று நினைக்க வேண்டாம்.

#ஜனனம் பற்றி பேசும்போது சந்தோஷிக்கும் நாம் #மரணம் பற்றி பேசும்போது மட்டும் ஏன் சுபமாக நினைப்பதில்லை?
மற்றவர் மரணத்தை அப்படியே கடந்து செல்லும் நாம்... நம் மரணத்தின் முன்னரே தெரிந்து கொள்ள கொஞ்சம் முயலவேண்டி செய்ய வேண்டியதின் ப்ரயத்தனம் தான் இந்த தொடர்பதிவுகள்

#அந்தக்_கடைசி_நொடியின்_தாத்பர்யம்👇👇👇
அந்தகால ரங்காராவ் போன்ற ஆஜானுபாகுவான உடற்கட்டும் பெரிய மீசையும் கிரீடமும் கையில் கதாயுதமும் கொண்டு மூன்று கதவுகளும் இறுக்கமாகப் பூட்டி இருந்தும் உள்ளே வந்ததை வைத்தே எனக்கு புரிந்து போயிற்று இவர் #எமதர்மன்தான் என்று
Read 22 tweets
1 Dec
This is Absolutely Brilliant 😂🙄😂 (just for fun😜)

The European Commission has just announced an agreement whereby English will be the official language of the European Union rather than German, which was the other possibility.
As part of the negotiations, the British Government conceded that English spelling had some room for improvement and has accepted a 5- year phase-in plan that would become known as "Euro-English".
In the first year, "s" will replace the soft "c". Sertainly, this will make the sivil servants jump with joy. The hard "c" will be dropped in favour of "k". This should klear up konfusion, and keyboards kan have one less letter.
Read 9 tweets
1 Dec
#Subconscious_Conversation between a seeker and Guru

Q. What is the #purpose of my life?*
A. The purpose of life in general is to #live_well and #help_others_live_well. Image
Q. No! What is the purpose of my life?
A. The purpose of your life or mine is constantly #evolving even as we pass from one moment to another.
No life comes with a readymade script, as we have to constantly write, erase, rewrite what is good for us and for others. That's one's ever evolving life's purpose!
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(