இந்த கருத்தினை இரண்டு மூன்று தொடர் பதிவுகளாக பகிரலாம் என்று நினைக்கிறேன்.
இதென்ன அபசகுனமாக என்று நினைக்க வேண்டாம்.
#ஜனனம் பற்றி பேசும்போது சந்தோஷிக்கும் நாம் #மரணம் பற்றி பேசும்போது மட்டும் ஏன் சுபமாக நினைப்பதில்லை?
மற்றவர் மரணத்தை அப்படியே கடந்து செல்லும் நாம்... நம் மரணத்தின் முன்னரே தெரிந்து கொள்ள கொஞ்சம் முயலவேண்டி செய்ய வேண்டியதின் ப்ரயத்தனம் தான் இந்த தொடர்பதிவுகள்
அந்தகால ரங்காராவ் போன்ற ஆஜானுபாகுவான உடற்கட்டும் பெரிய மீசையும் கிரீடமும் கையில் கதாயுதமும் கொண்டு மூன்று கதவுகளும் இறுக்கமாகப் பூட்டி இருந்தும் உள்ளே வந்ததை வைத்தே எனக்கு புரிந்து போயிற்று இவர் #எமதர்மன்தான் என்று
இருந்தாலும் மரியாதை நிமித்தம் "வாங்க.... வாங்க... சௌக்யமா??? ... ஏன் இவ்வளவு லேட்??? ... நான் ரெடி போலாமா?" என்றேன்
எமன் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்
எத்தனை யுகங்களா எவ்வளவு உயிரையோ எடுத்திருக்கிறேன். இதுவரை யாரும் உன்போல நான் ரெடி போலாமா என யாருமே சொன்னதில்லை. உனக்கு மரணம் என்றால் பிடிக்குமா இல்லை... வாழ்க்கை வெறுத்துப் போச்சா ஶ்ரீனி???
இல்லை இல்லை நீங்களும் அப்பப்போ அறிகுறிகள் மூலம் வந்துடுவேன்னு சொல்லிண்டே தான் இருந்தீங்க
அதனால்... மனத்தளவில் ரெடியாகிவிட்டேன். அதுதான் தங்கள் வரவு அதிர்ச்சி அளிக்கவில்லை" என்றேன்
"ஶ்ரீனி, நீ எழுத்தாளர் எனத் தெரியும். அதுதான் பொடி வைத்துப் பேசுகிறாய் நான் கோடி வீட்டுக் குப்புசாமியைத்தான் இன்னும் கொஞ்ச நேரத்தில் கொண்டுபோக வந்திருக்கிறேன்.
உன்னைக் கொண்டு போக வரவில்லை. எனவே பதற்றப் படாமல் உக்காரு. உன்னிடம் எனக்கு ஒரு கேள்விக்கு பதில் வேணும். ஒளிக்காமலும் பயப்படாமலும் பதில் சொல்லுவாயா?" என்றார்
"இந்திரலோகத்தில் எல்லோரும் என்னை ஏகமாகப் பேசுகிறார்கள். சாவின் கடைசி நிமிடங்களில் யாரையும் பேசவிடாம அவங்களைக் கொன்னுடறேனாம்.
இதனால் அவங்க வாழ்ந்த வாழ்வில் அறிந்து கொண்டதை.. புரிந்து கொண்டதை... சொல்ல முடியாமலே போகிறதாம்.
அதனால்தான் பூமியில் பஞ்சமா பாதகங்கள் பெருத்துப் போனதாகச் சொல்றாங்க. எனக்கு அது உடன் பாடில்லை. நீ என்ன சொல்ற ஶ்ரீனி? "என்றார்
"அவங்க சொல்ற மாதிரி கொஞ்சம் பரீட்சித்துப் பார்க்கலாமே!!!" என்றேன்
"அதைச் செய்யாமல் உன்னிடம் வருவேனா???"
ஒருவனிடம் கனவில் தோன்றி அடுத்தவாரம் உன் உயிர் எடுக்கப் போகிறேன் எனச் சொன்னேன்
அதுவரை யோக்கியனாக இருந்தவன் அந்த ஒருவாரத்தில் ஆடித் தீர்த்துவிட்டான். முப்பது வருடம் செய்யாத பாவங்களை ஒரே வாரத்தில் முடித்துவிட்டான்
சரி. அடுத்தவனிடம் சொல்லிப் பார்த்தேன். அவன் அந்த ஒரு வாரமும் செத்த பிணமாகத்தான் உலவிக் கொண்டிருந்தான்.
சரி அதுதான் போகட்டும் என கடைசி நிமிடங்களில் ஒருவனுக்கு தகவல் சொல்லி அரை மணி நேரம் கெடு கொடுத்தும் பார்த்தேன். முழு நேரத்தையும் 'பினாத்தியே' தீர்த்துட்டான்.
இதுவரை எவனுக்கும் தான் வாழ்வில் புரிந்து கொண்டதை அடுத்தவருக்குச் சொல்லிச் செல்லவேண்டும் என்கிற எண்ணம் சுத்தமாக இல்லை" என்றார் எமன்.
எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை
"அதுதான் இப்போது அடுத்த முயற்சியாக உங்கிட்ட வந்திருக்கேன் ஶ்ரீனி. உன்னை இப்போது கொண்டு போகப் போவதில்லை.
உன்னைக் கொண்டுபோகப் போகும் நாளையும் சொல்லப் போவதில்லை
எனவே பயப்படாமல் சொல்லு. நீ இப்போது சாகப் போகிற நொடியாக இருந்தால் வாழ்வை அர்த்தப்படுத்துவதாக ஒரு செய்தி சொல்லச் சொன்னால் என்ன சொல்வாய் என்று கேட்டார் எமன்
இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா இவன் (ஶ்ரீனி) ரொம்ப நல்ல்ல்லவன்டா
இது நான் வாழ்க்கையில் சந்தித்த கேள்விகளிலேயே கடினமான கேள்வியாகவும் புதிரான கேள்வியாகவும் பட்டது.
சிறுவயது முதல் இன்றுவரை நடந்த எல்லா நிகழ்வுகளையும் ஒவ்வொன்றாக அசைபோட்டுப் பார்த்தேன்
நல்ல கல்லூரியில் இடம் பிடிக்க பள்ளியில் மெனக்கெட்டது; வேலைக்கான தயாரிப்புக் கூடமாக கல்லூரியைக் கருதியது; நல்ல இல்லறம் அமையவே வேலை எனக் கொண்டது; குழந்தைகளின் எதிர்காலம் கருதியே பகலிரவாய் உழைத்தது ....
யோசிக்க யோசிக்க மர்மம் விலகுவது போலப் பட்டது
*"இத்தனை ஆண்டு காலம் உயிரோடுதான் இருந்திருக்கிறேனே ஒழிய அந்தந்த காலங்களில் வாழவே இல்லை"* என்கிற உண்மை புரிய வெட்கிப் போனேன்
"ஶ்ரீனி.. நாழிகை ஆகிறது... ஏதும் உன்னால் சொல்ல முடியுமா???" என்றார் எமன்.
"முடியும் ஒரு வாக்கியமாகச் சொல்லவா??? விவரித்துச் சொல்லட்டுமா???" என்றேன்
விவரித்தல் வேண்டாம்பா. நான் புரிந்து கொள்வேன் இரத்தினச் சுருக்கமாய் சொல்
நேற்றும் இல்லை நாளையும் இல்லை அந்தந்த நொடியில் வாழ்தலே வாழ்க்கை என்றேன்
எமன் முகத்தில் பரவசம் படரத்துவங்கியது
"சபாஷ் சபாஷ்" எனக் கூச்சலிட்டபடி என் முதுகில் ஓங்கி ஒரு தட்டு தட்டிவிட்டு மறைந்து போனார் எமன்.
நான் நடு நடுங்கிப் போனேன். வலி பொறுக்காது நான் லேசாக உடல் அசைக்க.. உடல் பாரமாகத் தெரிந்தது. கண்களை கஷ்டப்பட்டு திறக்க என்னைச் சுற்றி ஒரு பெருங்கூட்டமே நின்று கொண்டிருந்தது
"அபாயக் கட்டத்தை தாண்டிட்டார். இனி பயமில்லை!!!"
இன்னும் என்னன்னவோ சொல்லிக் கொண்டிருந்தார் குடும்ப டாக்டர்.
The European Commission has just announced an agreement whereby English will be the official language of the European Union rather than German, which was the other possibility.
As part of the negotiations, the British Government conceded that English spelling had some room for improvement and has accepted a 5- year phase-in plan that would become known as "Euro-English".
In the first year, "s" will replace the soft "c". Sertainly, this will make the sivil servants jump with joy. The hard "c" will be dropped in favour of "k". This should klear up konfusion, and keyboards kan have one less letter.
Q. No! What is the purpose of my life?
A. The purpose of your life or mine is constantly #evolving even as we pass from one moment to another.
No life comes with a readymade script, as we have to constantly write, erase, rewrite what is good for us and for others. That's one's ever evolving life's purpose!
Proceedings to buy JJ's residence quashed by MHC: "Today's India is not a land of pharaohs or emperors to immortalise the dead.
Justice N.Seshasayee said the need for the memorial could not be dictated by professional achievements, political populism, an image carefully groomed by cultivated charisma and electoral victories.
Referring to the State having relied on a 1969 SC Judgement related to a memorial for Mahatma Gandhi in Ahmedabad, the Judge asked, "By relying upon this verdict, has not the Govt. acknowledged that the benchmark for establishing a memorial with public money can be justified.....