காது கொடுத்து கேட்கவில்லை என்றால், நாங்கள் மத்திய அரசின் பவரை பயன்படுத்துவோம்
~ அண்ணாமலை. @annamalai_k
கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில் கிட்டத்தட்ட 3,800 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்க தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக, அக்கரை செங்கப்பள்ளி, குப்பனூர், பொகலூர், வடக்கனூர், இலுப்பநத்தம், பெள்ளேபாளையம் ஆகிய,
ஆறு ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான சர்வே பணிகளை முடித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, நிலம் கையகப்படுத்தப்படவிருக்கும் கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில்,
3,800 ஏக்கருக்கு தொழிற்பேட்டை அமைக்கிறோம் என்று கிளம்பி வந்திருக்கின்றனர்.விவசாயிகளுக்காக இங்கு வந்திருப்பதால்,அரசியல் பேசவேண்டாம் என்று நினைக்கிறேன்.விவசாயிகள் மூலமாக நமக்கு உணவு வந்து கொண்டிருக்கிறது.மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அடுத்த சமுதாயம் விவசாயத்தை நாடி வரவேண்டும்
தமிழக அரசின் இந்த நடவடிக்கையை தலையில் விழுந்த இடியாகத்தான் பார்க்கிறோம்.தண்ணீர் இல்லாத வறட்சியான பகுதிக்குதான் தொழிற்பேட்டை வேண்டும். இந்தப் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க பா.ஜ.க ஒருபோதும் அனுமதிக்காது. ஒரு செங்கலை வைக்கக் கூட நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை.
எந்தப் போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம். கோட்டையை நோக்கி பேரணியும் செல்லவிருக்கிறோம்.
இதன்பிறகும் காது கொடுத்து கேட்கவில்லை என்றால், மத்திய அரசின் பவரை முழுமையாக பயன்படுத்த தயாராக இருக்கிறோம்” என்றார். அந்தப் பகுதியில் கன்னடம் பேசும் மக்கள் இருந்ததால், சில இடங்களில்,
சில இடங்களில் அண்ணாமலை கன்னடத்தில் பேசினார்.ஆரம்பத்திலேயே இடைத்தரகர்கள் விவசாய நிலத்தை வாங்க தொடங்கிவிட்டனர். இங்கு தொழிற்பேட்டை கொண்டு வரவேண்டாம். விவசாயிகளை விவசாயம் செய்ய விடுங்கள். 20 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்ற விளை நிலம் கிடைக்காது. இவை அனைத்தும் தங்கம்.
கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க சகோதரர்களை குறிவைத்து வழக்கு போட்டு வருகின்றனர்.அவர்களுக்கு பயம்.அரசியல் நாடகம் செய்து வெற்றி பெற்றுவிடலாம் என்று தி.மு.க-வினர் நினைக்கின்றனர்.பெட்ரோல் டீசல் விலையை குறைக்கிறோம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் வாக்குறுதி கொடுக்கவில்லை.
ஆனால், மத்திய அரசு விலையை குறைத்தவுடன் தற்போது அவர்களும் விலையை குறைத்து விட்டனர்.தி.மு.க தேர்தல் அறிக்கையில் விலையை குறைக்கிறோம் என்று சொல்லிவிட்டு, குறைக்கவில்லை என்றால்,இது கார்ப்பரேட்களுக்காக இயங்குகிற அரசு என்றுதான் அர்த்தம்.டெண்டர் விடுவதென்றால் உடனடியாக கிளம்பிவிடுவார்கள்.
அதில்தான் 20 சதவிகிதம் கமிஷன் கிடைக்கும். எங்கள் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. கப்பல் நடுக்கடலில் போய் கொண்டிருக்கிறது. கேப்டன் இருக்கிறார். மாலுமி இருக்கிறார்.
திடீரென அழைத்த அமித்ஷா !
டெல்லிக்கு பறந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி !
சென்னை:கவர்னர் ஆர்.என்.ரவி திடீரென டில்லி புறப்பட்டு சென்றது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கவர்னராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, செப்டம்பர் 18ல் பதவி ஏற்றார். அதே மாதம் 23ம் தேதி டில்லி சென்று,ஜனாதிபதியை சந்தித்து பேசினார்.அக்டோபர் 23ல் மீண்டும் டில்லி சென்று,
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து சென்னை திரும்பினார்.
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், கவர்னரை சந்தித்து, ‘நீட்’ தேர்வு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப வலியுறுத்தினார்.
அமித்ஷாவின் அடுத்த மாஸ்டர் பிளானா ! புதிய கட்சியை தொடங்கும் குலாம் நபி ஆசாத் ? @AmitShah
முன்னாள் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் டெல்லியில் சிலநாட்கள் முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினர். அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு காங்கிரஸ் கட்சியில் கலக்கம் ஏற்பத்தியுள்ளது.
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்-மந்திரி அமரீந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கி உள்ளார்.அவர் பா.ஜனதாவை சேர்ந்த அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டாரை சந்தித்தார். பஞ்சாபில் பா.ஜனதா மற்றும் சுக்தேவ்சிங் திண்ட்சா தலைமையிலான,
சென்னை உயா் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவில், ‘ கடந்த 2003-ஆம் ஆண்டு கடலூரில் சாதி மறுப்பு திருமணம் செய்த கண்ணகி – முருகேசன் ஆகியோா் ஆணவக் கொலை செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் 13 போ் குற்றவாளிகள் என கடலூா் நீதிமன்றம், கடந்த செப்டம்பரில் தீா்ப்பளித்துள்ளது. அதில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு குறித்தும்,
விவசாயிகளை விவசாயம் செய்யவிடுங்கள் ! திமுகவை வறுத்தெடுத்த அண்ணாமலை !! @annamalai_k
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் விவசாயமக்கள் மத்தியில் பேசியது குறித்து கருது குறிப்பிட்டுள்ளார்..
விவசாயிகளை விவசாயம் செய்யவிடுங்கள் ! விவசாயத்தை அழித்து அந்த இடத்தில் ஒரு செங்கல்லைக் கூட நட விடமாட்டோம் !
“1, “ஆட்சிக்கு வந்தது முதல் எந்தவொரு மக்கள் நலத்திட்டத்தையும் செயல்படுத்தாத @arivalayam அரசு,விவசாய பூமியான அன்னூர் பகுதியைக் கந்தக பூமியாக மாற்றவே TIDCO தொழிற்பேட்டையைக் கொண்டு வருகிறது.ஒரு கார்ப்பரேட் நிறுவனம் சிறு சிறு துண்டுகளாக வாங்கி வைத்திருக்கும் பூமியைச் சுற்றி இருக்கும்
கேரளா மாநிலத்திலும் கால் வைத்து அசத்திய அண்ணாமலை... @annamalai_k
அண்ணாமலை அடுத்த மாநிலத்திலும்
கால் வைத்து அசத்தி இருக்கிறார். நேற்று கேரளாவில கண்ணூர் மாவட்டம் தலசேரியில் நடைபெற்ற கே.டி ஜெயகிருஷ்ணன் மாஸ்டர் நினைவு நாளில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கேரளாவை சிறப்பித்து இருக்கிறார்.தலசேரியில் சுமார் 15,000 மக்கள்
நேற்று
ஜெயகிருஷ்ணன் மாஸ்டரின் 22 வது நினைவு நாளில் பேரணியாக சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பயங்கரவாத அரசியலை உலகிற்கு எடுத்து கூறினார்கள்.ஜெயகிருஷ்ணன் மாஸ்டருக்கு நினைவு பேரணி மட்டுமல்லாமல் அஞ்சலி கூட்டமும் நடைபெற்றது.