அமித்ஷாவின் அடுத்த மாஸ்டர் பிளானா ! புதிய கட்சியை தொடங்கும் குலாம் நபி ஆசாத் ? @AmitShah
முன்னாள் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் டெல்லியில் சிலநாட்கள் முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினர். அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு காங்கிரஸ் கட்சியில் கலக்கம் ஏற்பத்தியுள்ளது.
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்-மந்திரி அமரீந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கி உள்ளார்.அவர் பா.ஜனதாவை சேர்ந்த அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டாரை சந்தித்தார். பஞ்சாபில் பா.ஜனதா மற்றும் சுக்தேவ்சிங் திண்ட்சா தலைமையிலான,
அகாலிதள பிரிவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம். எனது கட்சியில் பிரபலங்கள் சேருவதை பொறுத்திருந்து பார்ப்போம்.என்று குறியிருந்த நிலையில் தற்போழது காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு புதுதலைவலி உண்டாகியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தொடர்ந்து காஷ்மீரில் அரசியல் கூட்டங்களை,
நடத்தி வருகிறார், மறுபுறம் அவரது தொண்டர்கள் பலரும் காங்கிரஸில் இருந்து விலகிவருகின்றனர். அவர் புதிய கட்சியைத் தொடங்குவதான தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் கட்சியில் உள்ள சில மூத்த தலைவர்கள் கட்சியின் தலைமைக்கு எதிராகவும்,
கட்சியில் செய்யப்பட வேண்டிய முக்கிய மாற்றங்கள் தொடர்பாகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.இந்த மூத்த தலைவர்கள் தான் காங்கிரஸ் தலைமை குறித்து சோனியா காந்திக்கும் கடிதம் எழுதியிருந்தனர். இவர்கள் ஜி23 தலைவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
தொடர் கூட்டங்கள் இந்த ஜி23 தலைவர்களில் முக்கியமானவர் குலாம் நபி ஆசாத்.காங்கிரஸ் செயல்பாடுகள் குறித்துத் தொடர்ந்து பேசி வரும் அவர்,கடந்த சில நாட்களுக்கு முன்புகூட காங்கிரஸ் 2024 தேர்தல் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் எனத் தான் நம்பவில்லை எனக் கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார்
இந்தச்சூழலில் அவர் கடந்த சிலநாட்களாகக் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.இதற்கிடையே அவரது ஆதரவாளர்கள் 20பேர் தங்கள் பதவிகளையும் ராஜினாமா செய்திருந்தனர்.இது குலாம் நபி ஆசாத் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக வியூகங்கள் பரவ காரணமாக அமைந்தது.
கூட்டங்கள் ஏன் இந்நிலையில், காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட குலாம் நபி ஆசாத், அதன் பின்னர் என்டிடிவி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து மற்றும் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட பிறகு இங்கு
அரசியல் செயல்பாடுகளுக்கு எதுவும் இல்லை. அதற்குப் புத்துயிர் அளிக்கும் வகையில் தான் இந்த கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி விமர்சனங்களுக்குக் கட்சியில் இடமிருந்தது. ஆனால், இப்போது அதற்கெல்லாம் இடமில்லாமல் போகிவிட்டது.
விமர்சனங்களுக்கு இடமில்லை இங்கு யாரும் தலைமைக்குச் சவால் விடவில்லை. ஒருவேளை, இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் கட்சியில் விஷயங்கள் தவறாக நடக்கும்போது கேள்வி கேட்க எங்களுக்கு அதிக சுதந்திரம் அளித்துவிட்டார்கள் போல, அவர்கள் ஒருபோதும் விமர்சனங்களைப் பெரிதுபடுத்த மாட்டார்கள்.
விமர்சனங்களைக் கண்டு அவர்கள் காயமடைய மாட்டார்கள். ஆனால் இன்றைய தலைமை விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதில்லை. இந்திரா – ராஜீவ் இளைஞர் காங்கிரஸில் இந்திரா காந்தி பரிந்துரைத்த இருவரை பொதுச் செயலாளர்களாக நியமிக்க நான் மறுத்துவிட்டேன்.
அப்போது எனது செயலுக்கு இந்திரா காந்தி என்னைப் பாராட்டவே செய்தார். ராஜீவ் காந்தி அரசியலுக்கு வந்த போது, இந்திரா காந்தி எங்கள் இருவரையும் அழைத்தார். நான் கூறும் விஷயங்களைக் குலாம் நபி ஆசாத் மறுக்கிறார் என்றால் அவர் என்னை மதிக்கவில்லை என அர்த்தமல்ல.
அது கட்சியின் நன்மைக்காகக் குலாம் நபி ஆசாத் எடுக்கும் முடிவு என ராஜீவ்ஜியிடம் கூறினார். இன்று அதைக் கேட்க யாரும் தாயாராக இல்லை. ஒரு விஷயத்தை மறுக்கும் போது அதைக் கேட்க யாரும் தயாராக இல்லை. புதிய கட்சி தொடக்கம்? எனக்குச் சொந்தக் கட்சியைத் தொடங்கும் எண்ணம் எதுவும் தற்போது இல்லை.
ஒருவர் எப்போது உயிரிழப்பார் என்பதை எப்படி யாராலும் சொல்ல முடியாதோ அதேபோல அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதையும் யாராலும் சொல்ல முடியாது, ஆனால் இப்போது எனக்குப் புதிதாகக் கட்சியை ஆரம்பிக்கும் எண்ணம் எதுவும் இல்லை. நான் அரசியலில் இருந்து விலகவே விரும்பினேன்
இருப்பினும், லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் என்னைத் தொடர்ந்து வலியுறுத்தியதாலேயே தொடர்கிறேன்.கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகவே அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லாமல் போகிவிட்டது. கடந்த 2019, ஆகஸ்ட் 5இல் காஷ்மீர் சிறப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்ட போது,
அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் நின்று போனது. அரசியல் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதை மீண்டும் தொடங்கவே நான் இப்போது கூட்டங்களை நடத்தி வருகிறேன்.மேலும், தற்போதைய சூழலில் தனக்குக் காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி தலைவராகும் விருப்பம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதுகுறித்து அரசியில் விமர்சகர்கள் கூறும் கருத்து இந்த தொடர் சம்பவங்களை பார்க்கும்பொழுது பாஜகவினரால் அரசியல் சாணக்கியர் என்று அழைக்கப்படும் அமித்ஷாவின் அடுத்த மாஸ்டர் பிளானாக இருக்கும் என்கின்றனர்.
இந்து மதத்திற்கு மாறிய ஷியா முஸ்லிம் தலைவர்… இந்து மதத்தை வளர்க்கப் போவதாக அறிவிப்பு…
உ.பி.யில் அதிகமுள்ள ஷியா முஸ்லிம்களின் தலைவராக இருப்பவர் சையது வசீம் ரிஜ்வீ. ஷியா மத்திய வக்ஃபு வாரியத் முன்னாள் தலைவரான இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர் பெற்றவர்.
இவர் அயோத்தி வழக்கில் ராமர் கோயிலுக்கு ஆதரவாக பேசினார். இதனால் முஸ்லிம் மவுலானாக்கள் இவரை காஃபீர்,
(முஸ்லிம் அல்லாதவர்) என மதத்திலிருந்து ஒதுக்கினர். முஸ்லிம்களின் மறைநூலான திருக்குர்ஆனின் 26 பக்கங்களில் கூறப்படும் கருத்துகள் தீவிரவாதத்தை வளர்ப்பதாகவும் அவற்றை நீக்கவும் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிஜ்வீ தொடர்ந்த வழக்கால் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால்,
அமித்ஷாவின் அடுத்த அதிரடி ! கோவாவில் மீண்டும் பிஜேபி ஆட்சி உறுதி !
கோவாவில் பிஜேபி ஆட்சி உறுதி ஒரு வழியாக கோவாவில் கூட்டணி குழப்பங்கள் முடிவுக்கு வந்து விட்டது. பிஜேபிகூட்டணி ஆட்சியில் இருந்த கோவா பார்வர்டு பார்ட்டி காங்கிரஸ் கூட்டணிக்கும் மகாராஷ்டிரா கோமந்தக் பார்ட்டி,திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணிக்கு சென்று இருக்கிறது.
பாஜகவினரால் அரசியல் சாணக்கியர் என அழைக்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவா மாநில தேர்தல் பொறுப்பாளராக தேவேந்திர பட்னாவிஸும் நியமித்து மீண்டும் கோவா மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க அடுத்த அதிரடி காட்டியுள்ளார்.
திடீரென அழைத்த அமித்ஷா !
டெல்லிக்கு பறந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி !
சென்னை:கவர்னர் ஆர்.என்.ரவி திடீரென டில்லி புறப்பட்டு சென்றது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கவர்னராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, செப்டம்பர் 18ல் பதவி ஏற்றார். அதே மாதம் 23ம் தேதி டில்லி சென்று,ஜனாதிபதியை சந்தித்து பேசினார்.அக்டோபர் 23ல் மீண்டும் டில்லி சென்று,
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து சென்னை திரும்பினார்.
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், கவர்னரை சந்தித்து, ‘நீட்’ தேர்வு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப வலியுறுத்தினார்.
சென்னை உயா் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவில், ‘ கடந்த 2003-ஆம் ஆண்டு கடலூரில் சாதி மறுப்பு திருமணம் செய்த கண்ணகி – முருகேசன் ஆகியோா் ஆணவக் கொலை செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் 13 போ் குற்றவாளிகள் என கடலூா் நீதிமன்றம், கடந்த செப்டம்பரில் தீா்ப்பளித்துள்ளது. அதில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு குறித்தும்,
விவசாயிகளை விவசாயம் செய்யவிடுங்கள் ! திமுகவை வறுத்தெடுத்த அண்ணாமலை !! @annamalai_k
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் விவசாயமக்கள் மத்தியில் பேசியது குறித்து கருது குறிப்பிட்டுள்ளார்..
விவசாயிகளை விவசாயம் செய்யவிடுங்கள் ! விவசாயத்தை அழித்து அந்த இடத்தில் ஒரு செங்கல்லைக் கூட நட விடமாட்டோம் !
“1, “ஆட்சிக்கு வந்தது முதல் எந்தவொரு மக்கள் நலத்திட்டத்தையும் செயல்படுத்தாத @arivalayam அரசு,விவசாய பூமியான அன்னூர் பகுதியைக் கந்தக பூமியாக மாற்றவே TIDCO தொழிற்பேட்டையைக் கொண்டு வருகிறது.ஒரு கார்ப்பரேட் நிறுவனம் சிறு சிறு துண்டுகளாக வாங்கி வைத்திருக்கும் பூமியைச் சுற்றி இருக்கும்