தமிழ்நாடு அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, பெண்கள், குழந்தைகள், நலிவுற்றோர், ஏழைகள், மூத்தகுடிமக்கள், திருநங்கைகள் போன்றோரின் நல்வாழ்வை உறுதி செய்து வந்துள்ளது. பல்வேறு சமூக நலத் திட்டங்கள் மூலம்,
குடும்ப நலம், ஊட்டச்சத்து நிலை, கல்வி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதுடன் அவர்களுக்கு பல வாய்ப்புகளும் வசதிகளும் அளித்து, கண்ணியமான வாழ்க்கை வாழவும் வழிவகுத்துள்ளதுதமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றார் போல்
சமூக சீர்திருத்தத் திட்டங்களை அறிமுகப்படுத்தி பல சமூக தீமைகளைக் களைந்து சமூகத்தில் நலிந்த பிரிவினரின் நலனை பாதுகாத்து வந்துள்ளார். அரசின் நிதியை, தேவைக்கேற்ப அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், நலத் திட்டங்களை வகுத்து வழங்கியுள்ளார். இவற்றின் மூலம் ஒரு நலமான வளமான
மற்றும் நிலையான மனித ஆற்றல் மிக்க சமுதாயம் விரைவாக உருவாகி, வாழ்க்கையை சுமுகமாக வாழ இத்துறை வழிவகை செய்து வருகிறது.மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து செயல்படுத்தி வரும் அனைத்து சிறப்பு திட்டங்களும், பெண்களுக்கு அதிகாரம் அளித்து, சமூகத்தில் மதிப்புமிகு நிலைக்கு அவர்களை
உயர்த்துவதையே தலையாய குறிக்கோளாகக் கொண்டுள்ளன. அரசின் முன்னணி திட்டங்களான முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், பெண்கள் உயர்கல்வி பயில பெற்றோரை ஊக்குவிக்கும் வகையில் உயர்த்தப்பட்ட திருமண உதவித்தொகையுடன் திருமாங்கல்யம் செய்ய தங்கம் வழங்கும் திட்டம், சிறப்புமிகு சேவை
செய்த பெண்களை கவுரவித்து ஊக்குவிக்கும் வகையில் அவ்வையார் விருது வழங்கும் திட்டம், 13 வகை கலவை சாதம் வழங்கும் சுவைமிகு சத்துணவுத் திட்டம், பள்ளிக்குழந்தைகளுக்கு 4 இணை சீருடைகள் வழங்கும் திட்டம், பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் பலமுனை
நடவடிக்கைகள் ஆகியவை பெண்கள் மற்றும் குழந்தைகளைக் காத்து முன்னேற்றமடையச் செய்வனவாகும்.
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் சேவைகள், அதனுடைய அங்கங்களான சமூக நலம், சமூக பாதுகாப்பு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஆகிய மூன்று இயக்குநரகங்கள் வாயிலாக
செயல்படுத்தப்படுகின்றன. மேலும், ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வருவாய்த் துறை மூலம் செயல்படுத்திட இத்துறை ஒருங்கிணைப்பு முகமையாகவும் செயல்பட்டு வருகின்றது. சமூக நலத் துறை, பெண்கள், குழந்தைகள் மட்டுமல்லாது திருநங்கையருக்கும் உதவிக்கரம் அளிக்கிறது.
கவுரவமாக வாழ விரும்பும் மூத்தகுடிமக்கள், கணவனை இழந்தோர், கணவனால் கைவிடப்பட்டோர், உழைக்கும் திறனற்ற முதிர் கன்னியர், ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விவசாய தொழிலாளர்கள் போன்ற சமுதாயத்தில் நலிவுற்றோருக்கான ஓய்வூதிய நலத் திட்டங்களை வகுத்து
வருவாய்த் துறை மூலம் இத்துறை செயல்படுத்தி வருகிறது.சமூக நலத் துறை மூலமாக பெண்களுக்கான திருமண உதவித் திட்டங்கள், குறைந்த வருமானம் ஈட்டும் பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதிகள், பாதுகாப்பும் இருப்பிடமும் தேவைப்படும் பெண்களுக்கான சேவை இல்லங்கள், முதலமைச்சரின் பெண் குழந்தைகள்
பாதுகாப்புத் திட்டம் ஆகிய திட்டங்கள் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்ய தங்கம் வழங்கும் திட்டம் மிகச்சிறப்பாக 17.05.2011 முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அனைத்து வகையான திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் பெண்களுக்கு
வழங்கப்பட்டு வந்த 25,000 நிதியுதவியுடன் திருமாங்கல்யம் செய்வதற்கென 4 கிராம் (22 காரட்) தங்க நாணயமும் சேர்த்து வழங்கப்படுகிறது. மேலும் பட்டப்படிப்பு / பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு வழங்கப்படும் நிதி 25,000 லிருந்து 50,000
ஆக உயர்த்தப்பட்டு திருமாங்கல்யம் செய்வதற்கென 4 கிராம் (22 காரட்) தங்க நாணயமும் வழங்கப்பட்டு வருகிறது.
திருநங்கைகளின் நலனில் அக்கறை கொண்ட தமிழக அரசு, அவர்கள் பயன்பெறும் வகையில் திருநங்கைகள் நல வாரியம் மூலமாக மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் அளித்தல் போன்ற பல்வேறு நலத் திட்டங்களை
செயல்படுத்துவதன் மூலம் திருநங்கைகள் இன்றைய சமுதாயத்தில் மதிப்புடன் மற்றவர்களை போல பாதுகாப்பான நிலையில் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு ஒரு அங்கீகாரம் அளித்துள்ளது.தேசிய அளவில் தமிழ்நாடு அரசு சிறந்த மாநிலமாக உயர்ந்த நிலையினை அடைந்திடும் நோக்கத்துடன் .
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, குழந்தைகள், பெண்கள், மூத்தகுடிமக்கள் மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் பொருளாதார முன்னேற்றம், சமநிலை, சமூக உரிமைகள் மற்றும் சமூக நீதி பெற்று பயன்பெறும் வகையில் சிறப்பான சேவைகள் செய்து வருகின்றது
கடல் சார்ந்த வணிகத்திலும் கப்பல் கட்டும் தொழில்நுட்பத்திலும் தமிழர்கள் மிகச்சிறந்த ஞானம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அந்தப் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. #ஒன்றியஉயிரினங்கள்
கடல் மற்றும் கடல் போக்குவரத்துத் தொழில்நுட்பத்தில் ஏராளமான வல்லுநர்கள் தமிழகத்தில் இருந்து தயாராகி உள்ளார்கள். கப்பல் சார்ந்த படிப்புகள் காலத்துக்கு ஏற்ப வளர்ச்சியையும் மாற்றங்களையும் கண்டு வருகிறது. அதற்கு ஏற்ப இந்தத் துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது.
மரைன் எஞ்சினியரிங் படிப்பில் கப்பல்களின் தொழில்நுட்பம் மற்றும் பராமரிப்பு குறித்து தெரிந்துகொள்வதால் பரந்து விரிந்திருக்கும் இந்தக் கடல் பரப்பில் உலக அளவில் வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. +2வில் இயற்பியல், கணிதம், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களும்,
ஒரு காலகட்டத்தில் மருத்துவம் சார்த்த படிப்புகளை படித்தால் மட்டுமே சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும் என்ற நிலை இருந்தது. பள்ளியில் படிக்கும் #ஒன்றியஉயிரினங்கள்
ஒவ்வொரு மாணவரும் மருத்துவம் சார்ந்த படிப்புகளைப் படிப்பதையே குறிகோளாகக் கொண்டிருத்தனர். மற்றொரு காலகட்டத்தில் பொறியியல் சார்த்த படிப்புகளை படிப்பதையே மாணவர்கள் குறிக்கோளாக கொண்டிருந்தனர். பொறியியல் சார்ந்த படிப்புகளைப் படித்தாலும் காலகட்டத்திற்கு ஏற்ப ஏற்றதாழ்வுகள்
இருந்தது கொண்டேதான் இருக்கின்றன.
நாகரீகத்தின் பிரதிபலிப்பு ஆடை. இந்த துறை சார்ந்த படிப்புகள் சமீப காலமாக பிரபலமடைந்துள்ளது. காரணம் இத்துறையில் அதிகரித்து வரும் பிரகாசமான வேலைவாய்புகள். இந்த துறைதான் விவசாயத்துக்கு அடுத்து படியாக அதிக அளவிலான நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கித்
தமிழ்நாடு, பாரம்பரியமாக வலிமையான தொழில் அடித்தளம் பெற்று விளங்குவதால் நாட்டின் தொழில் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றது. பொருளாதாரத்தின் அங்கங்களான தொழில்துறை, தொழில்நுட்பம், வேளாண்மை போன்றவற்றின் வளர்ச்சிக்கு சாலைகள், பாலங்கள் மற்றும் துறைமுகங்கள் பெரும் பங்காற்றுகின்றன.
நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தமிழ் நாட்டில் சாலை கட்டமைப்பு மற்றும் சிறு துறைமுகங்களை நிர்வகித்து வருகிறது.
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை பராமரிப்பதும், மேம்பாடு செய்வதும் மற்றும் கிராமப்புறங்களுக்கு இணைப்புச் சாலை அமைப்பதும் இத்துறையின் முக்கிய நோக்கங்களாகும்
சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை பட்டப் படிப்புக்கு நாளுக்கு நாள் முக்கியத்துவம் அதிகமாகிவருகிறது. மேலாண்மை சார்ந்த கல்வி, உலகச் சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய பாடத்திட்டம், படிக்கும் போதே சுற்றுலா சார்ந்த நிறுவனங்களில் பயிற்சி, படித்து முடித்த உடன் வேலை,
எனப் பல சிறப்புகளைக் கொண்டு இருக்கும் சுற்றுலா படிப்புகள் உலக அளவில் அநேக மாணவர்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்படும் படிப்பாக உள்ளது.
சுற்றுலா சார்ந்த பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை நிறுவிச் சிறப்பாகச் செயல்பட்டு,
Secretary to Government
திரு. மகேசன் காசிராஜன்
25672887
tdinfosec@tn.gov.in #ஒன்றியஉயிரினங்கள்
தமிழ் வளர்ச்சித் துறை வரலாறு
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 27.12.1956-இல் நிறைவேற்றப்பட்டு 19.1.1957-இல் ஆளுநரின் இசைவு பெற்று, சனவரித் திங்கள் 23-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேறிய பிறகு 1957-இல் ஆட்சிமொழிக் குழுவை அரசு ஏற்படுத்தியது.
ஆட்சிமொழிக் குழுவின் தலைவராகத் திரு.என்.வெங்கடேசன் அவர்கள் பொறுப்பேற்றார்.
இக்குழு தமிழகம் முழுவதிலுமுள்ள அலுவலகங்களை ஆய்வு செய்து தமிழில் அலுவல்களை நடத்த அறிவுரையும், ஆட்சிமொழித் திட்டத்தைச் செயற்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைக் களைய அறிவுரையும்,
மக்கள் நலத்தைப் பேணுகின்ற மாநிலமான தமிழகத்தில், அரசின் முயற்சிகள் அனைத்தும் ஊரகப்பகுதிகளில் வாழும் மக்களின், சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றத்தை நோக்கியே அமைந்துள்ளன. கிராமப்புறங்களில் மக்கள் பங்கேற்புடன் கூடிய சமூக, பொருளாதார வளர்ச்சியே ஊரக வளர்ச்சியின் நோக்கமாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஊரக வளர்ச்சி என்பது அடிப்படை வசதிகளையும், தரமான சேவைகளையும் சிறந்த முறையில் கிராமப்புற மக்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.