படம் நடப்பது எதிர்காலத்தில் ஒரு நாட்டில்.அந்த நாட்டு ரூல்ஸ் படி திருமணமான/இணைந்து வாழும் ஜோடிகளுக்கு மட்டுமே ஊருக்குள் வசிக்க அனுமதி.
Divorce/break up ஆனால் அப்படியே தூக்கி காட்டுக்கு நடுவே உள்ள ஹோட்டலுக்கு அனுப்பி விடுவார்கள்.
அங்கு தங்க இடம்+சாப்பாடும் கொடுக்கப்படும்
ஆனால் 45 நாட்கள் மட்டுமே. 45 நாளுக்குள் யாரையாவது கரெக்ட் பண்ணி ஜோடி சேர்ந்து விட வேண்டும்.
45 நாட்கள் முடிவில் தனியா இருந்தால் அவர்கள் விருப்பிய மிருகமாக மாற்றி காட்டுக்குள் விரட்டி விடுவார்கள்.
இந்த ஹோட்டலுக்கு ஒரு நாயோட வர்றாரு ஹீரோ. அந்த நாய் வேற யாரும் இல்ல
ஜோடி கிடைக்காததால் சமீபத்தில் நாயாக மாற்றப்பட்ட அவரது சகோதரர்.
இந்த ஹோட்டலில் அவருக்கு ஜோடி கிடைச்சதா ? இல்ல மிருகமாக மாற்றப்பட்டாரா என்பதை படத்தில் பாருங்கள் .
ரொம்பவே கொஞ்சம் கேரக்டர்கள் தான். எல்லாரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
ஹீரோ Collin Farrell நல்ல நடிப்பு.
நிறைய weird ஆன ஹோட்டல் ரூல்ஸ் மற்றும் காட்சிகள் உள்ளன. சில காட்சிகள் டார்க் காமெடி வகையைச் சேர்ந்தது. வசனங்கள் ரொம்பவே கொஞ்சம் தான் பல இடங்களில் பிண்ணனி இசை தான் பேசுகிறது
இந்த மாதிரி வித்தியாசமா யோசித்து படம் எடுக்க தனித்திறமை வேண்டும். படம் நல்லா இருந்தது but not for everyone.
After his wife leaves him, David is transported to a hotel where he has to find a partner in 45 days, failing which he will be converted into an animal of his liking.
Directed by
Yorgos Lanthimos
Written by
Efthimis Filippou
Yorgos Lanthimos
Starring
Colin Farrell
Rachel Weisz
Jessica Barden
Olivia Colman
எனக்கு பிடித்த கொரியன் திரைப்படங்களை இங்கு பதிவிடுகின்றேன். திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒரு வகையைச் சேர்ந்தது.
கொரிய திரைப்படங்கள் பொதுவாகவே இயல்பான முறையில் படம் பிடிக்கப்பட்டு இருக்கும். ஆனால் வன்முறைக் காட்சிகள் அதிகம்
5. The Gangster, The Cop , The Devil
இது ஒரே சீரியல் கொலைகாரனை ரவுடி கும்பல் தலைவன் மற்றும் போலீஸ் இருவரும் இணைந்து எவ்வாறு பிடிக்கிறார்கள் என்பதை கூறும் திரைப்படம் . நான் பார்த்த கொரியன் படங்களில் கொஞ்சம் கமர்சியல் ஆன படம் இதுதான்.
IMDb Rating : 6.9/10
4. The Wailing
ஒரு அழகான மலை கிராமத்தில் திடீரென சில நபர்கள் வன்முறையில் இறங்குகிறார்கள். அதுமட்டுமல்லாமல் தங்கள் குடும்பத்தை மொத்தமும் கொன்று குவிக்கின்றனர். இதற்கு காரணம் ஊருக்குள் புதிதாக வந்த ஒரு ஜப்பானிய மனிதன் என அந்த இந்த ஊர் போலீஸ் அதிகாரி என நினைக்கிறார். அவரது மகளும்
படம் பார்த்து முடித்த பின் ஒன்னுமே புரியல. முக்கியமான கேள்வி யாருதான்டா இதுல பேய்.
அப்ப Quora la விளையாட்டா கீழ உள்ள கேள்வியை கேட்டேன். அதுக்கு ஒரு நண்பர் கொடுத்த ரிப்ளேயை கீழே காப்பி பேஸ்ட் செய்துள்ளேன்.
படம் பார்த்தவர்களுக்கான போஸ்ட் இது. படம் பார்த்து விட்டு புரியல என்பவர்கள் மேலே படியுங்கள்.
கொரிய இயக்குனர்களின் திறமைக்கு இது ஒரு சாம்பிள்.
சமீபத்தில் கொரியன் திரைப்படமான தி வெய்லிங் (The Wailing) பார்த்தேன், ஆனால் கடைசியில் யார் பேய் என்று தெளிவாக தெரியவில்லை. யாராவது விளக்கம் தர முடியுமா?
கொரியன் திரைப்படங்களில் தி வெய்லிங் சற்று வித்தியாசமான திரைப்படமே…மூன்று ஜெனரை மிக்ஸ் செய்து ஒரு படம் எடுத்திருப்பார்கள்,
Series Recommendations - My Personal Favorites-Part 2
முதலில் போட்ட த்ரெட்டுக்கு பயங்கரமான ரெஸ்பான்ஸ்.. அதனால் அப்படியே இரண்டாவது #series#Favorite list யையும் தொடர்கிறேன்.
மறுபடியும் சொல்கிறேன் இது ரேங்கிங் இல்லை
எந்த தொடருக்கும் #Tamil டப் இருக்குற மாதிரி தெரியவில்லை.
Stranger Things : IMDb 8.7
பெயருக்கு ஏற்ற மாதிரி புதுமையான ஒரு தொடர். Netflix தயாரித்து சத்தமே இல்லாமல் வந்து பெரிய அளவில் ஹிட் அடித்த தொடர். பெரிய நடிகர்கள் என்று யாரும் கிடையாது .. சின்ன சின்ன பசங்க தான் நடிச்சு இருப்பாங்க.
சின்ன ஊரில் ஒரு பையன் திடீரென காணாமல் போய் விடுவான்.
ஆனால் அவனை கடத்தியவர்கள் அவனை இன்னொரு Dimension ல் வைத்து இருப்பார்கள்.
அவனது அம்மா, நண்பர்கள், போலீஸ் என அனைவரும் அவனை கண்டுபிடித்தார்களா என்பதை பற்றிய தொடர்.
இன்னும் பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாக பாருங்கள். செம் Engaging ஆக இருக்கும்.
Available in #Netflix
2 வது உலகப்போர் நடந்து கொண்டு இருக்கும் சமயத்தில் அமெரிக்க போர்க்கப்பல் தலைமையில் உணவுப் பொருட்கள், படை வீரர்கள் என மொத்தம் 37 கப்பல்கள் இங்கிலாந்து நோக்கி கிளம்புகிறது.
இந்த கப்பல்களின் பாதுகாப்பிற்காக 3 போர்க்கப்பல்கள் செல்கின்றன.
இந்த போர்க்கப்பல்கள் மற்றும் அனைத்து கப்பல்களிற்கும் தலைமை தாங்கும் கப்பல் தான் #Greyhound என பெயரிடப்பட்ட கப்பல்.
#Greyhound கப்பலின் கேப்டன் பொறுப்பில் Krause (#TomHanks) உள்ளார் . மிகுந்த அனுபவசாலி என்றாலும் போர்க்காலத்தில் இதுவரை பணிபுரிந்தது இல்லை.
சிறுவன் Alton ஒரு Cult மாதிரியான அமைப்பில் தந்தையால் வள்ர்க்கப்படுகிறான். அவன் Prayer ன் போது சில நம்பர்களை தருகிறான் அது அமெரிக்கா மிலிட்டரியில் படு ரகசியமாக பாதுக்காக்கப் படும் தகவல்.
இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் போக வேண்டும்
என்கிறான் அந்த சிறுவன்.
தந்தை தனது நண்பன் ஒருவனை துணைக்கு கூட்டிக்கொண்டு மகனுடன் அந்த இடத்தை நோக்கி கிளம்புகிறார்.
இன்னொரு புறம் அமெரிக்க ராணுவம் மற்றும் அந்த Cult உறுப்பினர்கள் அந்த சிறுவனை கைப்பற்ற துடிக்கிறார்கள்.
Part - 1 இங்க படிங்க: tamilhollywoodreviews.com/2021/11/mutual…
இந்த முறை Direct #MutualFund வாங்குவது எப்படி என்பதை பற்றிய போஸ்ட் போடலாம் என நினைத்தேன்
ஆனால் மார்க்கெட் மற்றும் அதைப் பற்றிய அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ளாமல்
நேரடியாக இன்வெஸ்ட்மென்ட் செய்ய ஆரம்பிப்பது நல்லது கிடையாது. அதுக்கு முன்னாடி கொஞ்சம் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
எப்பவுமே உங்களுடைய #stocks and #MutualFund unit களை #DEMAT அக்கௌன்ட்ல வைப்பது நல்லது. ஆனால் #stocks வாங்கனும்னா கண்டிப்பாக #DEMAT account இருக்க வேண்டும்.
ஆனால் நான் #Zerodha வில் அக்கௌன்ட் வைத்து உள்ளேன் மற்றும் #MutualFund களை அதனுடைய #coin App வழியாக வாங்குவதால் நேரடியாக #DEMAT account ல் கிரடிட் ஆகிவிடும். மற்ற ஆஃப்கள் எப்படி என்று தெரியவில்லை.