இது உங்கள் இடம்: தி.மு.க., வரலாறு தெரிந்தோருக்கு புரியும்.. அதெல்லாம் வெறும் வேஷம்!
எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும்; கிழவியைத் துாக்கி மணையில் வை' என்று ஒரு சொலவடை உண்டு.
அப்படி தான், தமிழகத்தில் தி.மு.க.,வின் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய பிரச்னைகள், நுாற்றுக்கணக்கில் வரிசைக் கட்டி காத்து கொண்டிருக்கின்றன.
அதில் முதல் இடத்தை பிடித்து இருப்பது, மழை நீர் வெள்ளம். வீதி மட்டுமின்றி வீட்டிற்குள்ளும் புகுந்த வெள்ளத்தால், மக்கள் உச்ச கட்ட வேதனையில் தவித்து வருகின்றனர்.
இங்கே நிலைமை இவ்வாறிருக்க, டில்லியில் பார்லிமென்ட் கூட்டத் தொடரில், தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், 'சென்னை ஐ.ஐ.டி.,யில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்' என்று முழங்கி இருக்கிறார்.
பொத்தாம் பொதுவாக இந்த கோரிக்கையை கேட்போர், 'அட, இந்த கழக கண்மணிகளுக்கு தான் தமிழ் மீது எவ்வளவு பற்று' என்ற வியப்பு மேலிடலாம். ஆனால் அது, பற்றும் கிடையாது; பாசமும் கிடையாது; வெறும் வேஷம் என்பது, தி.மு.க., வரலாறு தெரிந்தோருக்கு மட்டும் நன்றாக புரியும்.
அந்த தமிழ்த்தாய் வாழ்த்தான, 'நீராடும் கடலுடுத்த...' பாடல், தி.மு.க., தலைவர்கள் எத்தனை பேருக்கு மனப்பாடமாக பாடத் தெரியும்? ஐ.ஐ.டி., என்பது, ஒரு மத்திய அரசு கலாசாலை. தமிழகத்தில் இருக்கிறதே தவிர, ஐ.ஐ.டி., நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் கிஞ்சிற்றும் சம்பந்தம் கிடையாது.
இறை வணக்கத்தை நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும், தேசிய கீதத்தை நிறைவில் பாடுவதும் நடைமுறை. இந்த இறை வணக்கத்தைத் தான், தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, 'தமிழ்த்தாய் வாழ்த்து' என்று மாற்றி, 'நீராரும் கடலுடுத்த...' பாடலை அரங்கேற்றியது.
நான், 40 ஆண்டு காலம் மத்திய அரசு பணியில் இருந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ளேன். நான் பணியில் இருந்த போது, அலுவலகத்தில் எந்த கூட்டம் நடந்தாலும், 'வந்தே மாதரம்... சுஜலாம் சுபலாம் மலயஜ சீதலாம்...' என்ற பாடலைத் தான் இறை வணக்கமாக பாடுவர்.
இது, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடல். அகில இந்திய வானொலியும், துார்தர்ஷனும், தினமும் நிகழ்ச்சிகளை துவக்குவதற்கு முன், இப்பாடலை ஒலிபரப்புவர்.
அதை விடுங்கள்... தி.மு.க.,வினர் நடத்தும், 'டிவி' நிறுவனங்கள் கூட தினமும், 'சுப்ரபாதம்' ஒளிபரப்பி தான், நிகழ்ச்சியை துவங்குகின்றனரே தவிர, தமிழ்த்தாய் வாழ்த்தை அல்ல.
இவர்கள் தான், மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஐ.ஐ.டி.,யில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என சத்தம் போடுகின்றனர். அதே தி.மு.க.,வினர் தான், தமிழக பள்ளிகளில் இறை வணக்கம் பாடக் கூடாது என்றும் தடையும் விதித்து இருக்கின்றனர்
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
*பிரம்மா சிவனிடம் ஞானஉபதேசம் பெற விரும்பிக் கைலாயம் சென்றார். சிவன் அவரிடம் வில்வ விதைகள் கொடுத்து, பூலோகத்தில் எவ்விடத்தில் விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் வில்வ மரம் வளர்கிறதோ, அவ்விடத்தில் ஞானஉபதேசம் செய்வதாக கூறினார். 🙏🇮🇳3
ஜாதகம் என்பது லக்னத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
ராசி என்பது இரண்டேகால் நாளைக்கு ஒன்று வீதம் வரும்.
லக்னம் என்பது இரண்டு மணி நேரத்துக்கு ஒன்று வீதம் வரும்.
அதுவும் அம்சலக்னம் 13நிமிடத்திற்கு ஒன்று வீதம் வரும்.
இன்னும் சொல்லப்போனால் சஷ்டியாம்ச லக்னம் என்பது 2நிமிடத்திற்க் ஒன்று வீதம் ஒரு நாளைக்கு 720லக்னங்கள் வரும்.ஆகவேதான் ஒரே ராசியில் பிறந்த எல்லோருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரி அமைவதில்லை.
ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை ஒவ்வொரு விதமாக அமைகிறது.ஒரே லக்னத்தில் ஒரே நட்சரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கைமுறைக் கூட வேறு பட்டுள்ளது.ஐந்து நிமிட இடைவெளியில் பிறந்த குழந்தைகளின் வாழ்வில்தான் எவ்வளவு வித்தியாசம்! .
உ.பி.யில் ஐந்து நதிகளை இணைக்கும் பிரமாண்ட நீர்பாசனத் திட்டம்: நாளை தொடக்கம்
உ.பி.யில் ககாரா, சரயு, ரப்தி, பங்கங்கா ரோகினி ஆகிய ஐந்து நதிகளை இணைக்கும் பிரமாண்ட நீர்பாசன திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூர் பகுதியில் 5 நதிகளை இணைக்கும் நீர்பாசன திட்டப்ப பணிகள் 1978 இல் தொடங்கப்பட்டன. ஆனால் போதுமான நிதி ஒதுக்கீடு, துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு போதுமான கண்காணிப்பு ஆகியவற்றில் தொடர்ச்சியின்மை காரணமாக,
இத்திட்டம் தாமதமாகி, கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் முடிக்கப்படவில்லை.
2016 ஆம் ஆண்டு, பிரதமர் வேளாண் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், இத்திட்டம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் கொண்டுவரப்பட்டது.
அந்த மனிதன் மிகப்பெரும் அறிவாளி, அடுத்த 200 ஆண்டுக்காலத்தை முன் கூட்டியே கணிக்கும் அளவு மிகப்பெரும் தீர்க்கதரிசி,லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்ட புனித பிம்பம். சம்பாதிக்கவேண்டிய வழக்கறிஞர் தொழிலை நாட்டுக்காக தியாகம் செய்த வ.உ.சி வகையறா.
அந்த மனிதன் தமிழகத்தில் சுதந்திரப் போராட்டம், அரசியல், தேசபணி எனப் பல இடங்களில் மிகப்பெரிய அடையாளமாய் இருந்தான், இந்தியாவில் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது ஆட்சி என்றால் என்ன? நிர்வாகம் என்றால் என்ன என்பதை முதலில் சொல்லிக் கொடுத்ததே அந்த மாமனிதனே.
ஆளுநர், மத்திய அமைச்சர், எனப் பல பதவிகளை வகித்த தமிழர் அவர், பெரும் ஆளுமையாக டெல்லியில் வலம் வந்தார்.
மொத்த இந்தியாவிற்கு ஒரு இந்தியன் கவர்னர் ஜெனரலாக இருந்தான் என்றால் அது அந்த தமிழன் தான். சக்கரவர்த்தி ராஜாகோபாலசாரியார் சுருக்கமாக ராஜாஜி.
மயிலாடுதுறை வதாரண்யேசுவரர் கோவில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவிலாகும். இக்கோவில் வள்ளலார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
🙏🇮🇳1
*மூலவர்* :
வதாரண்யேஸ்வரர்
தாயார் : ஞானாம்பிகை
தீர்த்தம் : காவிரி
ஊர் : மயிலாடுதுறை
மாவட்டம் : நாகப்பட்டினம்
🙏🇮🇳2
*தல வரலாறு :*
முன்னொரு காலத்தில் தர்மம் ரிஷப உருவமெடுத்து சிவனை, அவர் நினைத்த இடத்திற்கெல்லாம் அழைத்துச் சென்றது. அப்போது, பார்வதிதேவி மயில் உருவமெடுத்து பூலோகத்தில் சிவபூஜை செய்து கொண்டிருந்தாள்.