சக்கரவர்த்தித் திருமகன்

By ஸ்டான்லி ராஜன் 

அந்த மனிதன் மிகப்பெரும் அறிவாளி,  அடுத்த 200  ஆண்டுக்காலத்தை முன் கூட்டியே கணிக்கும் அளவு மிகப்பெரும் தீர்க்கதரிசி,லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்ட புனித பிம்பம். சம்பாதிக்கவேண்டிய வழக்கறிஞர் தொழிலை நாட்டுக்காக தியாகம் செய்த வ.உ.சி வகையறா.
அந்த மனிதன் தமிழகத்தில் சுதந்திரப் போராட்டம், அரசியல்,  தேசபணி எனப் பல இடங்களில் மிகப்பெரிய அடையாளமாய் இருந்தான், இந்தியாவில் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது ஆட்சி என்றால் என்ன? நிர்வாகம் என்றால் என்ன என்பதை முதலில் சொல்லிக் கொடுத்ததே அந்த மாமனிதனே.
ஆளுநர், மத்திய அமைச்சர், எனப் பல பதவிகளை வகித்த தமிழர் அவர், பெரும் ஆளுமையாக டெல்லியில் வலம் வந்தார்.

மொத்த இந்தியாவிற்கு ஒரு இந்தியன் கவர்னர் ஜெனரலாக  இருந்தான் என்றால் அது அந்த தமிழன் தான். சக்கரவர்த்தி  ராஜாகோபாலசாரியார் சுருக்கமாக ராஜாஜி.
அந்த மகா மனிதனைத்தான் அவன் பிராமணன் என்பதாலும், இந்து என்பதாலும், மிகப்பெரிய அறிவாளி என்பதாலும் அதையும் தாண்டி அப்பழுக்கற்ற தேசபக்தன் என்பதாலும் குறிவைத்து சாய்த்தது திராவிட கோஷ்டிகள்.
தமிழகத்தில் சில பிராமணர்களின் அடையாளம் மறைக்கப்பட்டது, அவர்களின் புகழும் அவர்களின் தேசப்பற்றும்  அறிவு கூர்மையும் மக்களிடம் இருந்து அப்பட்டமாக வெளியேற்றப்பட்டது அவர்களில் ஒருவர்தான் சக்கரவர்த்தி  ராஜாகோபாலசாரி.
சக்கரவர்த்தி என்பதால் அவர் தந்தை பெரும் அரசர் என நினைக்கவேண்டாம், அவர் தந்தை பெயர் சக்கரவர்த்தி. சேலத்துக்காரர் பெரும் வழக்கறிஞர், அக்காலத்திலே இந்தியா முழுக்க பிரபலமான பெரும் பிரபலம் அவர்,
அவர் மட்டும் நாட்டுக்காய் அல்லாமல் தனக்காய் வழக்கறிஞராக சம்பாதித்தால் பிரபல வழக்கறிஞர் எத்திராஜும் இல்லை அவர் கல்லூரியும் இல்லை. அதைப் போல் நூறு கல்லூரிகளை கட்டியிருப்பார் ராஜாஜி,
ஆனால் அந்த தேசபக்த மனம் அதை விரும்பவில்லை

சுதந்திரப் போராட்ட வீரர், காந்தியுடன் போராடியவர் சிறைக்குச் செல்லும் அளவு தண்டிக்கப்பட்டவர்.
தேவதாஸ் காந்திக்கும் ராஜாஜியின் புதல்வி லஷ்மிக்கும் திருமணம்

பர்ணகுடியில் 1933-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி லட்சுமி-தேவதாஸ் காந்தி திருமணம் நடைபெற்றது. திருமணம் மிக எளிமையாக நடக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் காந்தி.
மணமகளின் தந்தை ராஜாஜிக்கு ஆன செலவு சென்னை – பர்ணக்குடி ரயில் டிக்கட் செலவு மட்டுமே. மருமகளுக்காக கஸ்துாரிபாய் 2 தங்க வளையல்களையும் 4 கதர்ப்புடவைகளையும் வாங்கிவைத்திருந்தார். காந்திஜியிடம் அதற்கு அனுமதிபெற அவர் படாதபாடுபடவேண்டியதானது.
பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தின் முதல்வராக பணியாற்றியவர்,  முடிந்த வரை நல்லாட்சிதான் நடத்தினார். அவரின் பெரும் சாதனை மதுவிலக்கினை கொண்டுவந்தது.  அரசு வருமானம் குறையத்தான் செய்தது, சாதுரியமாக வரிகளை அதாவது விற்பனை வரிகளைச் சீரமைத்து அரசினை திடப்படுத்தினார்.
பின்னாளைய காமராஜரின் முறையான நிர்வாகத்திற்கு இதுதான் அடிப்படை.

கட்சிக்குள் அவருக்கும் காங்கிரசாருக்கும் எங்கு மோதிற்று என்றால்? சுதந்திரம் வாங்கியவுடன் சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு எல்லாம் பல சலுகைகள் வழங்கப்பட்டன.
நாடு பணமின்றி தவிக்கின்றது, ஏழ்மையில் இருக்கின்றது அதனால் காங்கிரசார் இந்த சலுகைகளை எல்லாம் அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். நாட்டுப்பற்றில்தானே போராடினோம், அதற்கு ஏன் சன்மானம்? என்று கேட்டார் ராஜாஜி.
சுதந்திரப்போராட்ட தியாகி சலுகைகளில் காங்கிரசாரே அனுபவத்து வந்தனர், விடுவார்களா? நீ வழக்கறிஞன் சம்பாதித்துவிட்டீர், நாங்கள் எங்கே போவது? என்ற ரீதியில் எதிர்க்க தொடங்கினார்கள். காங்கிரசில் ராஜாஜி அதிருப்தி கோஷ்டி உருவாகியது இப்படித்தான். ராஜாஜி சொன்னதில் தவறொன்றும் இருக்க முடியாது.
திராவிட கோஷ்டிகளை விட அவருக்கு பெரும் துரோகம் செய்தது காங்கிரஸ், காங்கிரஸ் செய்த மிகப் பெரிய தவறு ராஜாயினினை  அவமானப்படுத்தியது, பின் காமராஜருக்கும் அதுவே நிகழ்ந்தது கடைசியில் மூப்பனாருக்கும் அதுதான் நடந்தது.
தமிழ்நாட்டில் காங்கிரஸை வீழ்த்தியது காங்கிரசே அன்றி நிச்சயம் திராவிட கோஷ்டி அல்ல, இது வெற்று கூச்சல் கயமை கோஷ்டி, உண்மையில் தவறு காங்கிரசின் ஏகாதிபத்திய சிந்தனையிலிருந்தது.
நேருவின் அபரிமிதமான இஸ்லாமியப் பாசமும் கம்யூனிச நேசமும் ராஜாஜிக்கு எரிச்சலைக் கொடுத்தன, நேரு செய்த அனைத்து முட்டாள்தனங்களையும் கண்டித்தார் ராஜாஜி. இந்நாட்டின் எதிரி மதவாதம் என நேரு சொல்ல, “மதம் இந்நாட்டைக் காக்கும் ஆனால் கம்யூனிசமும் அதன் உப கோஷ்டிகளுமே மிகப்பெரிய எதிரி
இதை ஒரு நாள் உணர்வீர்கள். உங்கள் பாகிஸ்தான் பாசமும் சீன நேசமும் இந்நாட்டை மிகபெரும் இக்கட்டில் தள்ளும்” என ராஜாஜி எச்சரித்ததில் காங்கிரஸிலிருந்து விரட்டப்பட்டார்
பின் சுதந்திரா கட்சியினை தொடங்கினார்.

கொஞ்சம் உலகநடை முறைகளை அறிந்தவர், பெரும் தொலைநோக்கு பார்வை கொண்டவர். 2030ல் வரும் மாற்றத்தை அவர் 1950களில் கொண்டுவர நினைத்ததுதான் அவருக்குச் சிக்கலை ஏற்படுத்தியது.
அதாவது பள்ளிக்கூடங்கள் இன்றளவும் வெளிநாடுகளில் காலைமுதல் மதியம் வரைதான் செயல்படும்,  அதன்பின் அம்மாணவர்கள் பகுதிநேர பணிகளில் ஈடுபடுவார்கள்,  முன்னேறிய நாடுகளில் எல்லாம் அதுதான் நிலை, அவை அழிந்துவிடவில்லை, மாறாக உச்சம் பெற்றன.
அதனைத் தமிழகத்திலும் கொண்டுவர நினைத்தார், அறிவித்தார்.  யாரடா சிக்குவார்? என அலைந்த கழகங்களுக்கு அல்வா போல மாட்டினார் ராஜாஜி. அப்படியானால் மதியத்தின் பின் மாணவர்கள் என்ன செய்வார்கள்? என கேட்டனர்,
பெற்றோருக்கு உதவியாக இருக்கலாம், கைத்தொழில்கள் அல்லது வேறுதொழில்கள் படிக்கலாம், கல்வி மட்டும் வாழ்வாகாது என்றார்.

விடுவார்களா? கழகத்தார். துண்டை தலையில் கட்டிக்கொண்டு  களமிறங்கினர், அவர்களாக ராஜாஜியின் திட்டத்திற்குப் பெயர் வைத்தனர்.
இது குலகல்வி திட்டம்,  பார்ப்பனியத்தின்  விஷம்,  விவசாயி மகன் விவசாயி, மாடு மேய்ப்பவன் மகன் மாடு மேய்ப்பான், செருப்பு தைப்பவன் மகன் செருப்பு தைப்பான், ஐயகோ விட மாட்டோம், திராவிடரே எழுவீர் இந்த ஆச்சாரியாரை விரட்டுவீர் என பொங்கினார்கள்.
(ஆனால் அரசியலில் எங்களுக்கு பின் எங்கள் மகன் எனும் குல அரசியலை மட்டும் மனதிற்குள் வைத்திருந்தனர்)
பெரும் கலவரத்தில் ராஜாஜியின் சமாதானம் எடுபடவில்லை, அவர் சொன்னதற்கெல்லாம் கடும் திரிபுகள் காட்டப்பட்டன, அமைதியாகச்  சொன்னார், ஒரு காலத்தில் நான் சொன்னதை உணர்வீர்கள், அதோடு அவர் தீவிர அரசியலை விட்டு வெளியேறினார்.
அவரின் குலகல்வி சர்ச்சகுரியது எனத் திராவிட கும்பல் கூப்பாடு போட்டதெல்லாம் தாண்டி உண்மையிலே அதன் நோக்கத்தை அறிந்தால் வாழ்த்தாமல் இருக்க முடியாது.
ஆம் மூன்று விஷயங்களை உள்ளடக்கிய மிக நுட்பமான விஷயம் அது, ராஜாஜியின் குலகல்வியினை பார்க்கும் முன் சீனாவின்  மாவோவினையும் ஜப்பானியரையும் நோக்கிவிட்டு வரவேண்டும்
மாவோ தன் ஆட்சியில் ஒருவிஷயத்தைச்  செய்தான்,  அதாவது விவசாயம் மற்றும் தன் குடும்ப தொழிலை விட்டு நகரில் ஒருமாதிரி சுற்றிக்கொண்டிருந்தவர்களைப் பிடித்து தேவைப்பட்டால் அடித்து அதையும் மீறி தேவைப்பட்டால் கொன்றுமிரட்டி “கலாச்சார புரட்சி” செய்தான்
ஏன் என அவனிடம் கேட்டதற்கு பதில் இப்படி இருந்தது. “எல்லோரும் இந்த தொழில்களை விட்டுவிட்டுச்  சென்றால் ஒரு காலத்தில் சீனாவில் அந்த தொழிலே மறைந்துவிடும், அதெல்லாம் பரம்பரை பரம்பரையாக வந்தவை. அழிந்துவிட்டால் மீட்டெடுக்க ஆயிரம் ஆண்டு ஆகலாம்.”
ஜப்பானியர்கள் சொல்வதும் இதுதான், குழந்தைகளுக்கு எல்லா தொழிலும் தெரிந்திருக்க முடியாது ஆனால் பெற்றோர் என்ன சொல்லிக் கொடுக்க முடியுமோ அதைச் சொல்லிக் கொடுக்கலாம், ஜப்பான் நாட்டில் எல்லா தொழில் கலையும் அடையாளம் அற்று போகாது.
இதை இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அது ஆச்சரியமானது மட்டுமல்ல முழு உண்மையுமானது, கொரோனா  காலத்தில் அதைச் சிலர் உணர்ந்திருக்கலாம். இன்று மானிட இனம் விஞ்ஞான மாயையில் சிக்கித் தவிக்கின்றது, கடிகாரம் இல்லாவிடில் அவனால் மணிபார்க்க தெரியாது,
கடை திறக்காவிட்டால் உணவு இல்லை, கேஸ் சிலிண்டர் இல்லாவிட்டால் சமைக்க முடியாது,  மின்சாரம் இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை அந்த அளவு ஒரு விஞ்ஞானத்தை நம்பிய வாழ்வுக்குள் சிக்கிவிட்டது மானிட இனம்.
இந்த விஞ்ஞானத்தைக் காட்டி ஒவ்வொரு நாளும் அதன் மேம்பட்ட வடிவத்தைச் சொல்லிச் சொல்லி மக்களிடம் இருந்து பணத்தை ஒரு கூட்டம் பிடுங்கிக் கொண்டே இருக்கும்.
அறியாமையில் சிக்கியிருக்கும் கூட்டமும் அதைக் கொடுத்து ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கும், இதனால் மனம் கெட்டு , மதிகெட்டு, பணமும் கெட்டு ஒரு மாயை உலகம் உருவாகிவிட்டது. ஒருவன் வீடு முதல் வாழ்வு வரை விஞ்ஞானம் வைத்ததே வாழ்க்கைத்தரம் என்றாயிற்று?
சரி, ஒருநாள் ஏதோ இயற்கை கோளாற்றால் மின்சாரம் இல்லை, வானியல் கோளாற்றால் செயற்கைக் கோளும் இல்லை, விஞ்ஞானம் மொத்தமாய் தோற்றுவிட்டால் மானிட இனம் எப்படி இயங்கும்? விவசாயம் தெரியாது, நெசவு தெரியாது, வயல் வேலை தெரியாது, தச்சு வேலை தெரியாது, உலோக வேலை தெரியாது, சிற்பம் தெரியாது,
ஓவியம் தெரியாது , இசைக் கருவி தெரியாது, சமையல் தெரியாது, துணி துவைக்க‌ எனில் ஒரு மானிட இனம் எப்படி வாழும்?

ஒரு நாடு எல்லாவற்றுக்கும் தயாராக இருத்தல் வேண்டும், இப்பொழுதெல்லாம் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் ஒரு சிந்தனை வந்திருக்கின்றது.
விஞ்ஞானம் தோற்றுவிட்டால் என்ன எனும் சிந்தனை அதே நேரம் மானிட உழைப்பில் எந்திரங்களைக் குறைத்துச் சுற்றுச் சூழலை காத்து எல்லோருக்கும் வேலை எனும் பெரிய சிந்தனை.
சுருக்கமாகச் சொன்னால் பாரதத்தில் அன்று இருந்த அந்த சிந்தனை. இதைத்தான் ராஜாஜி சொன்னார், அதுவும் கல்வி பயிலாமல் செய்யவேண்டும் எனச் சொல்லவில்லை, தகப்பன் தொழிலைத்தான் மகன் பார்க்க வேண்டும் எனச் சொல்லவில்லை
மாறாக மதியம் வரை கல்வி அதன் பின்னால் மாணவர்கள் விரும்பிய தொழிலை கற்கலாம் என்றார்.

இது இன்றுவரை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சாதாரண விஷயம், மதியம் வரை பாடகல்வி மதியத்துக்குப் பின் வாழ்க்கைக்கான கல்வி என அது இயல்பாய் இருக்கின்றது.
வெளிநாடுகளில் தங்கள் கல்விக்கான பணத்தை மாணவர்களே சம்பாதிக்கும் படி இது செயல்படுத்தப்படுகின்றது. இதனால் தந்தையிடம் இருந்து வியாபாரம் முதல் எல்லா தொழிலையும் மகன் கற்கலாம். அத்தொழில் அழியாது, அதைத் தாண்டி தனக்கு பிடித்தமான தொழிலுக்குச் செல்ல அதை கற்கும் வாய்ப்பாகவும் இருக்கும்.
இன்றும் மேலைநாட்டு மாணவர்கள் அதிக பாடசுமையின்றி  பள்ளியினையும் அதைத் தாண்டி ஏகப்பட்ட வாய்ப்புகளை பெறவும் இதுதான் காரணம்.

இந்தியப் பாடத்திட்டம் அப்படி அல்ல 24 மணிநேரமும் படிப்பு எனும் மாபெரும் சுமையினை ஏற்றி வைத்திருக்கின்றது.
தமிழக மாணவர்கள் அன்றே உலகத்தரத்துடன் இருக்க வழிசெய்தவர் ராஜாஜி. ஆம் மதியம் வரை கல்வி என்பது அரசின் நிதிச்சுமையினை குறைத்தது, பலவகையான தொழில்களை இங்குக் காக்கச் செய்தது. எந்த காலத்தையும் சமாளிக்கும் வண்ணம் சமூகத்தையும் எதிர்கால தலைமுறை மனதையும் அது காத்தது.
இதனால்தான் அன்று படித்து வேலை இல்லை என்றால் உழைத்து முன்னேற எல்லோரும் தயாராய் இருந்தனர், ஜி.டி நாயுடு முதல் இன்றைய பெரும் வியாபார சாம்ராஜ்யம் வரை அப்படியே ஆனால் முழு படிப்பு எனும் மாயைதான் பள்ளி தேர்வில் சாவு,கல்லூரி தேர்வில் சாவு,
பணியிடத்தில் தற்கொலை என பல கொடுமையினை செய்கின்றது ஆம், கல்வி தொழில் எனப் பலவிஷயம் கையில் இருப்பவன் எதையாவது பற்றி வாழ்வான், இதைவிட்டால் எதுவும் தெரியாது என்பவன் சாவான்.
ராஜாஜி மாணவர் எல்லா வகையிலும் சிறக்க வழிசெய்தார் குலகல்வி என அவர் கல்வியினை விரட்டிவிட்டார்கள், இன்று என்னாயிற்று?

ஒரு வாதத்துக்குச் சொல்லலாம். விவசாயம் ஒழிந்தது இன்றிருக்கும் தலைமுறைக்கு ஏர்மாடு கொடுத்து உழவு செய்யத் தெரியாது,
களை எது பயிர் எது என தெரியாது மிக்ஸி இல்லா இடத்தில் அம்மி பயன்படுத்தத் தெரியாது, சிலிண்டர் இல்லா இடத்தில் எந்த விறகு எரியும் என்று கூட தெரியாது, ஏன் விறகு வெட்டவும் தெரியாது.
ஆம், நாகரீகம் கல்வி என வெகுதொலைவுக்கு வந்துவிட்டோம், இது அந்நிய நாடுகளிடம் நம்மை அடிமைப்படுத்துகின்றது,  பாரம்பரியத்துக்கும் நமக்குமான தொடர்பை வெட்டுகின்றது, வந்த வழி தெரியாமல் செல்லும் வழியும் தெரியாமல் ஒரு அடிமை சமூகத்தை உருவாக்குகின்றது.
இதைத் தடுக்க அன்றே சிந்தித்தவர் ராஜாஜி, இன்று  இல்லையேனும்  இன்னும் 20 வருடமல்ல 100 வருடம் ஆனாலும் ஒரு நாள் உலகமே மாறும் அப்பொழுது ராஜாயினை நிச்சயம் தமிழகம் கைகூப்பி வணங்கும். ஆம் இந்த கல்வி முறையும் மாறி வாழ்வுக்கான விஷயங்களைத் தேடி எடுக்கும்.
விவசாயம், வியாபாரம் , கலைகள்,  எல்லா தொழிலும் இங்கு ஒரே இரவில் வந்தது அல்ல, அவை ஒவ்வொரு குலமும் தனித்  தனியாகப் போராடிச் சிந்தித்துச் சிந்தித்து உருவாக்கிய பொக்கிஷங்கள். அது இந்திய விவசாயம், கலை, கோவில் சிற்பம் வழிபாடு பிரமாண்டம், இந்திய உணவு , மருத்துவம்,  நெசவு,
கால்நடை பராமரிப்பு, ஆன்மீகம், இசை, பாடல் என எல்லா இடத்திலும் உண்டு.

அதை எந்த சாதி செய்கின்றது என்பது மகா குறுகிய மனப்பான்மை,  அக்கலை மேம்பட்டு வருகின்றதா?  காக்கப்பட்டு  வருகின்றதா   என்பதுதான் மேம்பட்ட உன்னத மனப்பான்மை. அந்த பரந்த மனப்பான்மை ராஜாஜிக்கு இருந்தது.
நிச்சயமாக அவர் பீஷ்மரதான்,  ஆச்சாரியார்  எனும்  பட்டத்திற்குத் தகுதி கொண்டவர்தான், அவரின் அறிவாற்றல் பெரிது. புத்திக் கூர்மை மிகப் பெரிது. ஆனால் அவர் வாழ்வில் செய்த பெரும் தவறு ஒன்று உண்டு.
நேருவினை பகிரங்கமாக எச்சரித்த ராஜாஜி அப்படியே காமராஜரையும் எச்சரித்தார், ஆனால் ராஜாஜிக்கு நேரு போல காமராஜருக்கு இந்திராதான் பின்னாளில் காங்கிரஸ் பாடம் நடத்தினார்.
காமராஜருக்கு எதிராக ஒரு கூட்டணி அமைத்தார் ராஜாஜி, அதில் ஒரு நல்ல கணிப்பும் இருந்தது திமுக சிறுபான்மையாக தன் கட்டுப்பாட்டு அரசில் இருக்கும் என நம்பினார், காங்கிரஸுக்கு மாற்றுவழி அது தவிர ஏதும் அன்று இல்லை.
ஆனால்  MGR சுடப்பட்ட எதிர்பாரா சம்பவம் திமுகவினை தனிப்பெரும்பான்மையாக ஆட்சியில் அமர்த்தியது, ஆம் அதுதான் ராஜாஜியின் கணிப்பைத் தகர்த்தது

எம்.ஆர் ராதா திமுகவுக்கு செய்த பெரும் உதவி, தமிழ்நாட்டுக்கு செய்த பெரும் துரோகம்.
விளைவு கர்ணனான காமராஜரை அந்த கூட்டணி வீழ்த்தி காட்டிற்று, விளைவு அண்ணாவும் விழ ஆட்சி கருணாநிதி வசமாயிற்று. திமுக அட்சியினை பிடிக்கும் என அண்ணாவே கருதா காலம், திமுக தன் பிடியில் இருக்கும் என்றுதான் ராஜாஜி கணக்கிட்டார், ஆனால் திமுகவின் பெரும் வெற்றி ராஜாஜியின் கணக்கை தவறாக்கிற்று.
மதுக்கடைகள் திறக்கப்பட்டபொழுது கொட்டும் மழையில்  90 வயதில் கருணாநிதியிடம் மன்றாடினார், யாரை எங்கு  எப்படிப் பயன்படுத்தவேண்டும் எப்போது கழற்றிவிட வேண்டும் என அவர் நம்பாத கடவுளிடமே கருவறையிலே பாடம் படித்தவர் கருணாநிதி, கேட்பாரா? நொந்துபோனார் ராஜாஜி,
நாடு சீரழியும் பாதை அவர் கண்ணுக்குத்  தெரிந்தது, காமராஜரை வீழ்த்தியதை எண்ணி மனம் வருந்தத்தான் செய்தார்.

புரிந்துகொள்ளக் கொஞ்சம் சிரமானவர் ராஜாஜி, ஆனால் அவரின் திட்டங்கள் எல்லாம் மிகுந்த தொலைநோக்கும் , ஆழ்ந்த அர்த்தமும் கொண்டவை. மிகப்பெரும் புத்திசாலி அவர்.
இதனால்தான்  ஈவெரா  கடைசிவரை அவரை தன் ஆலோசகராக வைத்திருந்தார்.

அமெரிக்கா சென்று கென்னடியின் கரங்களைப் பிடித்து ரஷ்யாவுடன் அணு ஆயுத பெருக்கத்தில் சண்டையிடாதீர்கள், மனிதகுலத்திற்காக இருவருமே அணுக்குண்டுகளைக் கடலில் எறியுங்கள்  எனச்  சொன்னவர் ராஜாஜி.
அவர் சுதந்திர போராட்டக்காரர்தான், ஆனால் சில இடங்களில் தன் தொலைநோக்கு பார்வையினை அழுத்தமாக வைத்தார்,  அதில்தான் ராஜாஜியின் திறன் அடங்கி இருக்கின்றது, அது என்ன?
“சுதந்திரம் வாங்குவது பெரிதல்ல, நாம் இந்த நாட்டை நாம் ஆளும்பொழுது கடுமையான சட்டமும், பெரும் கட்டுப்பாட்டுக்குள் ஆட்சி நடத்தும்  ஆட்சியாளர்களும்  நமக்குத் தேவை. இல்லை என்றால் கொஞ்ச நாளில் இந்த சுதந்திரப் போராட்ட கஷ்டம் எல்லாம் நம் மக்களுக்கு மறக்கும்,
அரசியல் அயோக்கியர்கள் கையில் சிக்கும், எங்கும் பிரிவினைவாதமும்,  லஞ்சமும், ஊழலும், மக்கள் நலம் காக்கா அரசுகளின் சுயநலமும் பெருக்கெடுக்கும்.
அப்பொழுது வெள்ளையன் ஆட்சி எவ்வளவு பரவாயில்லை என மக்கள் வாய்விட்டு சொல்லும் காலம் வரும், அதனால்தான் சொல்கின்றேன் சுதந்திர இந்தியா பற்றியும், அதன் ஆட்சிமுறை பற்றியும் பெரும் திட்டமில்லாமல் சுதந்திரம் வாங்குவது மகா ஆபத்தானது,
காலம் காலமாக மன்னராட்சியிலும் பின் பிரிட்டனுடனும்  அடிமையாக வாழும் இந்நாட்டு மக்களுக்கு மக்களாட்சியின் மகத்துவம் புரியாது, இவர்கள் நிச்சயம் அரசியல் அடிமைகளாக மாற வாய்ப்புக்கள் அதிகம்”
எவ்வளவு தீர்க்கதரிசனமான உண்மை, இப்பொழுது அதனைத்தானே பாரதம் கண்டுகொண்டிருக்கின்றது? வெள்ளையன் ஆட்சி பரவாயில்லை எனச் சொல்லாதோர் யார்?

அரசியல் அடிமைகள் உருவாவார்கள் எனக் கணித்துச் சொன்ன ராஜாஜி பிறந்த தமிழகத்தின் இன்று  திரியும் அடிமைகள் எண்ணிக்கை என்ன?
இதில்தான் இந்த முத்திரையில்தான் ராஜாஜி தனித்து நிற்கின்றார், அதுவும் தமிழனாக, வாழ்த்த வேண்டிய தலைவர்தான், மறக்கக் கூடாதவர்.
இலக்கிய பணிகளிலும் அவர் ஆற்றிய பங்கு மகத்தானது, பல நூல்களை எழுதினார். “குறை ஒன்றும் இல்லை..மறை மூர்த்தி கண்ணா” என்ற பாடல் அவரின் கவி முகத்தையும் காட்டும். குறை ஒன்றும் இல்லை பாடல் பாடியது எம். எஸ். சுப்புலட்சுமி
வியாசர் விருந்து என மகாபாரதத்தைச் 
சுருக்கி கொடுத்த ராஜாஜியின் பணி மகத்தானது, மிக அற்புதமான தமிழும் ஆழ்ந்த கருத்தும் கொண்ட அட்டகாசமான படைப்பு அது. அறிவார்ந்த எழுத்து எப்படி இருக்கும் என்பதை அதில்தான் காணமுடியும்.
ராஜாஜி போன்றவர்களை பார்ப்பான் என்றும், காமராஜர் போன்றவர்களை மக்கள் நலன் அறியா எருமை என்றும் விரட்டிவிட்டு, பொற்கால ஆட்சியினை திராவிடர் கழக ஏடுகளிலும், சினிமா உலகிலும் காட்டிவிட்டு, அதனை ஆட்சிக்கும் கொடுத்துவிட்டு,
தமிழனைக் கண்ணீர் கடலில் எறிவதுதான், தமிழன் பிச்சைக்காரனாய் வாழ்வதுதான் விதி என்றால்? என்ன செய்வது?

காமராஜரும், ராஜாஜியும் என்ன செய்யமுடியும்? இனியாவது திருந்துவார்களா? 

இப்படியும் ஒரு தலைவர் இருந்திருக்கின்றார் என்பதை நினைத்துக்கொள்ளலாம்.
அவர் இந்தியாவின்  கவர்ணர் ஜெனரல் என்ற பொழுதும் டெல்லியில் வாடகை வீட்டில்தான் இருந்தார், பதவி விட்டு இறங்கும் பொழுது  கைக்கடிகாரமும் உடையும் தவிர ஏதும் எடுத்து வரவில்லை.
மதம் நாட்டை காக்கும், கம்யூனிசமும் போலி புரட்சிகளுமே நாட்டை கெடுக்கும் என முதலில் சொன்னவர் அவரே. இந்தியாவின் அரசியல் மற்றும் வணிகத்தைச் செலுத்த ஹிந்தி அவசியம்.
“தமிழ்மொழி நமக்குக் கால் போன்றது , ஹிந்தி வண்டி மாதிரி ,ஆங்கிலம் ரயில் மாதிரி “என்று விளக்கம் தந்த ராஜாஜியினை மறக்க முடியாது. எல்லா எதிர்ப்பிலும் அவர் சொன்ன அந்த தைரியமான வார்த்தை மறக்க முடியாதது
“ஆதி சங்கரரும், ராமானுசரும் தங்கள் அபிமானத்தை சொன்னார்கள், நான் என் அபிமானத்தைச்  சொன்னேன் அதை மாற்றமுடியாது”

சாதிக் கொடுமை தொடர்பான சட்டம், பெண் உரிமை, ஆலய நுழைவு சட்டம் எனப் பல முன்னோடி சட்டங்களும் வரைவுகளும் அவர் கொடுத்ததே.
சாதிக் கொடுமை தொடர்பான சட்டம், பெண் உரிமை, ஆலய நுழைவு சட்டம் எனப் பல முன்னோடி சட்டங்களும் வரைவுகளும் அவர் கொடுத்ததே 1937ல் தன் அமைச்சரவையில்  தாழ்த்தப்பட்டோரைச் சேர்த்து, பெண்களை வழிகாட்டியவர் ராஜாஜி, அதைத்தான் பின் கக்கன் மூலம் காமராஜர் செய்தார்
மதுவிலக்கு கொண்டுவந்து, பள்ளிச்சாலை திறக்க வழி செய்தவர் ராஜாஜி, காமராஜர் பள்ளிகளை அதிகப்படுத்தினார், பின் திராவிட கட்சிகள் அதை இப்பொழுது மூடிக் கொண்டிருக்கின்றன, காரணம் பெரும்பான்மை தனியார் பள்ளிகள் அவர்கள் பள்ளிகளாயிற்று.
ராஜாஜி காலத்தையும் இக்காலத்தையும்  ஒப்பிட்டுப்  பாருங்கள்,  திராவிட கும்பலால் இம்மாநிலம் இழந்திருப்பது தெரியும்.

எந்த குலகல்வி என கூறப்பட்ட திட்டத்தால் அவர்  வீழ்த்தப்பட்டாரோ?  அந்த முறை அதாவது மதியம் வரை மட்டும் பள்ளி திறக்கும் காலம் தொலைவில் இல்லை.
பல கல்லூரிகளில் அது நடந்துகொண்டே இருக்கின்றது, இதனை எல்லாம் 65 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து சொன்னதுதான் தவறா?காலம் பதில் சொல்லிக்கொண்டிருக்கின்றது, பல அரசியல் சாயம் வெளுத்துக் கொண்டிருக்கின்றது.
மனித புனிதன், முக்கால ஞானி ராஜாஜியின் நினைவுகளில் மூழ்கும் பொழுது அவனின் அந்த பாடல் காதோரம் ஒலிக்கின்றது

“குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா..”
என அந்த வரி மோதுகின்றது அவன் காட்டிய வழியில் ஆன்மீகமும் கலாச்சார பண்பாடும் கொண்ட இந்தியா உருவாகிவரும் வேளையில் என்ன குறை இருக்க முடியும்?
விரைவில் தமிழகத்தில் தேசியம் மலர்ந்து, “குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா..” என நிச்சயம் நெஞ்சம் நிறைந்து நன்றி கண்ணீருடன் அவரை நினைந்து நெஞ்சுருகிப் பாடும் நிலை வரும்.
அந்த அஞ்சலி உண்மையான அஞ்சலியாக அந்த மாமனிதனுக்கு, பெரும் ஞானிக்கு அமையும்.

இன்று ராஜாஜியின் பிறந்த நாள் 10 December 1878

🇮🇳🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

11 Dec
*இந்திய ராணுவத்தின் 10 சிறந்த விலைமதிப்பற்ற பொன் மொழிகள்*

இதனை,
ஒவ்வொரு இந்தியரும்...
கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்...
என வீரமரணமடைந்த
ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் கூறியுள்ளார்.
1. *′′உங்களுக்கு வாழ்நாளின் அசாதாரண சாகசம் என்னவோ...*
*அதுவே,*
*எங்களின் அன்றாட வாழ்க்கை′′*
- லே-லடாக் நெடுஞ்சாலையில், இந்திய ராணுவம் வைத்துள்ள வாசகம்.
2. *′′காற்று வீசுவதால் எங்கள் கொடி பறக்கவில்லை...*
*தன் உயிரை தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரரின் இறுதி மூச்சுடன் பறக்கிறது"*
- இந்திய ராணுவம்
Read 9 tweets
11 Dec
*அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர்,*
*நாகப்பட்டினம்*

*மூலவர் –  அமிர்தகடேஸ்வரர்*

*உற்சவர் –  காலசம்ஹாரமூர்த்தி*

*அம்மன் –  அபிராமியம்மன்*

*தல விருட்சம் –  வில்வம்*

*தீர்த்தம் –  அமிர்தபுஷ்கரணி, கங்கை தீர்த்தம்*

*பழமை –  1000 வருடங்களுக்கு முன்*

🙏🇮🇳1
*புராணப் பெயர் –  திருக்கடவூர்*

*ஊர் –  திருக்கடையூர்*

*பாடியவர்கள் –  அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர்*

🙏🇮🇳2
*பிரம்மா சிவனிடம் ஞானஉபதேசம் பெற விரும்பிக் கைலாயம் சென்றார். சிவன் அவரிடம் வில்வ விதைகள் கொடுத்து, பூலோகத்தில் எவ்விடத்தில் விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் வில்வ மரம் வளர்கிறதோ, அவ்விடத்தில் ஞானஉபதேசம் செய்வதாக கூறினார். 🙏🇮🇳3
Read 8 tweets
10 Dec
பிறப்பின் ரகசியம்!..

ஜாதகம் என்பது லக்னத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
ராசி என்பது இரண்டேகால் நாளைக்கு ஒன்று வீதம் வரும்.
லக்னம் என்பது இரண்டு மணி நேரத்துக்கு ஒன்று வீதம் வரும்.
அதுவும் அம்சலக்னம் 13நிமிடத்திற்கு ஒன்று வீதம் வரும்.
இன்னும் சொல்லப்போனால் சஷ்டியாம்ச லக்னம் என்பது 2நிமிடத்திற்க் ஒன்று வீதம் ஒரு நாளைக்கு 720லக்னங்கள் வரும்.ஆகவேதான் ஒரே ராசியில் பிறந்த எல்லோருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரி அமைவதில்லை.
ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை ஒவ்வொரு விதமாக அமைகிறது.ஒரே லக்னத்தில் ஒரே நட்சரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கைமுறைக் கூட வேறு பட்டுள்ளது.ஐந்து நிமிட இடைவெளியில் பிறந்த குழந்தைகளின் வாழ்வில்தான் எவ்வளவு வித்தியாசம்! .
Read 11 tweets
10 Dec
உ.பி.யில் ஐந்து நதிகளை இணைக்கும் பிரமாண்ட நீர்பாசனத் திட்டம்: நாளை தொடக்கம்

உ.பி.யில் ககாரா, சரயு, ரப்தி, பங்கங்கா ரோகினி ஆகிய ஐந்து நதிகளை இணைக்கும் பிரமாண்ட நீர்பாசன திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூர் பகுதியில் 5 நதிகளை இணைக்கும் நீர்பாசன திட்டப்ப பணிகள் 1978 இல் தொடங்கப்பட்டன. ஆனால் போதுமான நிதி ஒதுக்கீடு, துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு போதுமான கண்காணிப்பு ஆகியவற்றில் தொடர்ச்சியின்மை காரணமாக,
இத்திட்டம் தாமதமாகி, கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் முடிக்கப்படவில்லை.

2016 ஆம் ஆண்டு, பிரதமர் வேளாண் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், இத்திட்டம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் கொண்டுவரப்பட்டது.
Read 10 tweets
10 Dec
இது உங்கள் இடம்: தி.மு.க., வரலாறு தெரிந்தோருக்கு புரியும்.. அதெல்லாம் வெறும் வேஷம்!

எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும்; கிழவியைத் துாக்கி மணையில் வை' என்று ஒரு சொலவடை உண்டு.
அப்படி தான், தமிழகத்தில் தி.மு.க.,வின் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய பிரச்னைகள், நுாற்றுக்கணக்கில் வரிசைக் கட்டி காத்து கொண்டிருக்கின்றன.
அதில் முதல் இடத்தை பிடித்து இருப்பது, மழை நீர் வெள்ளம். வீதி மட்டுமின்றி வீட்டிற்குள்ளும் புகுந்த வெள்ளத்தால், மக்கள் உச்ச கட்ட வேதனையில் தவித்து வருகின்றனர்.
Read 11 tweets
10 Dec
அருள்மிகு வதாரண்யேஸ்வரர் திருக்கோவில் !!

மயிலாடுதுறை வதாரண்யேசுவரர் கோவில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவிலாகும். இக்கோவில் வள்ளலார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

🙏🇮🇳1
*மூலவர்* :

வதாரண்யேஸ்வரர்
தாயார் : ஞானாம்பிகை
தீர்த்தம் : காவிரி
ஊர் : மயிலாடுதுறை
மாவட்டம் : நாகப்பட்டினம்

🙏🇮🇳2
*தல வரலாறு :*

முன்னொரு காலத்தில் தர்மம் ரிஷப உருவமெடுத்து சிவனை, அவர் நினைத்த இடத்திற்கெல்லாம் அழைத்துச் சென்றது. அப்போது, பார்வதிதேவி மயில் உருவமெடுத்து பூலோகத்தில் சிவபூஜை செய்து கொண்டிருந்தாள்.

🙏🇮🇳3
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(