மயிலாடுதுறை வதாரண்யேசுவரர் கோவில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவிலாகும். இக்கோவில் வள்ளலார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
🙏🇮🇳1
*மூலவர்* :
வதாரண்யேஸ்வரர்
தாயார் : ஞானாம்பிகை
தீர்த்தம் : காவிரி
ஊர் : மயிலாடுதுறை
மாவட்டம் : நாகப்பட்டினம்
🙏🇮🇳2
*தல வரலாறு :*
முன்னொரு காலத்தில் தர்மம் ரிஷப உருவமெடுத்து சிவனை, அவர் நினைத்த இடத்திற்கெல்லாம் அழைத்துச் சென்றது. அப்போது, பார்வதிதேவி மயில் உருவமெடுத்து பூலோகத்தில் சிவபூஜை செய்து கொண்டிருந்தாள்.
🙏🇮🇳3
இதைக் காண பிரம்மா அன்ன வாகனத்திலும், பெருமாள் கருடன் மீதும், மற்ற தேவர்கள் குதிரைகளிலும் வந்தனர்.
ஆனால் ரிஷபம் சிவனின் அருளால், மற்ற வாகனங்களை விட வேகமாக சிவனை சுமந்தபடி வந்தது.
🙏🇮🇳4
இதையடுத்து ரிஷபத்திற்கு நம்மால் தான் உலகையே ஆளும் சிவபெருமான் கூட விரைவாக செல்ல முடிகிறது என்ற கர்வம் ஏற்பட்டது.
🙏🇮🇳5
இதையறிந்த சிவன், நந்தி என்னால் தான் நீ பெருமையடைகிறாய் என்பதை மறக்காதே என்று கூறி தன் சடைமுடி ஒன்றை எடுத்து அதன் முதுகில் வைத்தார். அதன் பலம் தாங்காத நந்தி மயக்கமடைந்து விழுந்தது.
🙏🇮🇳6
இதைப்பார்த்த சிவன் கருணை உள்ளத்துடன் நந்தி, என்னை குறித்து உன்னிடம் கர்வம் ஏற்பட்டு விட்டது.
இந்த பாவத்தை நீக்க, பூலோகத்தில் காவிரிக்கரையில் தவம் செய். நான் குரு வடிவாய் (தட்சிணாமூர்த்தி) காட்சியளிப்பேன்.
🙏🇮🇳7
நீ காவிரியில் நீராடி வில்வத்தினால் தினமும் என்னை பூஜித்தால் நன்மை உண்டாகும். அதன்பின் என்னை வந்து அடையலாம் என்று கூறினார்.
அதன்படி நந்தி தவம் செய்ய சிவனும் குரு வடிவாய் காட்சியளித்து இறைவனே உயர்ந்தவன் என்ற ஞானத்தை வழங்கினார். 🙏🇮🇳8
அப்போது நந்தீஸ்வரர் குரு வடிவாக காட்சி தந்த சிவனே இத்தலத்தில் தாங்கள் என்மீது அமர்ந்து அருள்பாலிக்க வேண்டும்.
எப்போதும் உங்கள் எதிரில் இருக்கும் பாக்கியத்தையும் தந்தருள வேண்டும் என்றார். எட்டு பாடல்களால் துதித்தார்.
🙏🇮🇳9
நந்தியின் விருப்பத்தை ஏற்ற சிவன் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தார். வதாரண்யேஸ்வரர் என்ற பெயரில் ஞானாம்பிகையுடன் அமர்ந்தார்.
*தலபெருமை* :
நந்தி பாடிய 8 பாடல்களை பாடி தட்சிணாமூர்த்தியை வழிபடுவோருக்கு, சகல தோஷங்கள், பாவங்கள், ஆணவம் நீங்கி ஞானம் கிடைக்கும்.
🙏🇮🇳10
குருபகவான் தன்னை வழிபடுவோரின் கஷ்டங்களை போக்கும் வரத்தை, இத்தல தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்து பெற்றதாக தல புராணம் கூறுகிறது.
குருவினால் வணங்கப்பட்ட இத்தலம் குரு பரிகாரத்திற்கு சிறந்த தலமாக விளங்குகிறது.
🙏🇮🇳11
காவிரியில் நந்தீஸ்வரர் நீராடிய இடம் இப்போதும் ரிஷப தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.
ஆற்றின் நடுவே நந்தி கோவில் உள்ளது. இத்தீர்த்தத்தில் நீராடினால் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, தாமிரபரணி ஆகிய தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம், குருக்ஷேத்ரம், பிரயாகை மற்றும் 🙏🇮🇳12
புண்ணியத்தலங்களில் தானம் செய்த பலன், பதினெட்டு புராணங்கள் படித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோவிலின் வடக்கே ஞான புஷ்கரணி தீர்த்தம் உள்ளது.
🙏🇮🇳13
குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இதில் நீராடுகிறார்கள். சப்தமாதர்களில் ஒருவரான சாமுண்டி, மகிஷனை கொன்ற தோஷம் நீங்க இத்தலத்தில் பூஜித்திருக்கிறாள்.
🙏🇮🇳14
*தல சிறப்பு :*
சிவன் கோவில்களில் நந்தியை மூலவரான லிங்கத்திருமேனி முன்பு காணமுடியும். இக்கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு முன்பாக நந்தி காணப்படுகிறது.
🙏🇮🇳15
இந்த தட்சிணாமூர்த்தி மேதா தட்சிணாமூர்த்தி எனப்படுகிறார். சப்த கன்னியரில் சாமுண்டி வழிபட்ட தலம். குருப்பெயர்ச்சியை ஒட்டி இங்கு சிறப்பு பூஜை நடக்கும்.
🙏🇮🇳16
*பிரார்த்தனை :*
திருமணத்தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், கல்வியில் சிறந்து விளங்கவும் குருவை வழிபடுவது சிறப்பு.
🙏🇮🇳17
*நேர்த்திக்கடன் :*
சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோவில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.
*பிரம்மா சிவனிடம் ஞானஉபதேசம் பெற விரும்பிக் கைலாயம் சென்றார். சிவன் அவரிடம் வில்வ விதைகள் கொடுத்து, பூலோகத்தில் எவ்விடத்தில் விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் வில்வ மரம் வளர்கிறதோ, அவ்விடத்தில் ஞானஉபதேசம் செய்வதாக கூறினார். 🙏🇮🇳3
ஜாதகம் என்பது லக்னத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
ராசி என்பது இரண்டேகால் நாளைக்கு ஒன்று வீதம் வரும்.
லக்னம் என்பது இரண்டு மணி நேரத்துக்கு ஒன்று வீதம் வரும்.
அதுவும் அம்சலக்னம் 13நிமிடத்திற்கு ஒன்று வீதம் வரும்.
இன்னும் சொல்லப்போனால் சஷ்டியாம்ச லக்னம் என்பது 2நிமிடத்திற்க் ஒன்று வீதம் ஒரு நாளைக்கு 720லக்னங்கள் வரும்.ஆகவேதான் ஒரே ராசியில் பிறந்த எல்லோருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரி அமைவதில்லை.
ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை ஒவ்வொரு விதமாக அமைகிறது.ஒரே லக்னத்தில் ஒரே நட்சரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கைமுறைக் கூட வேறு பட்டுள்ளது.ஐந்து நிமிட இடைவெளியில் பிறந்த குழந்தைகளின் வாழ்வில்தான் எவ்வளவு வித்தியாசம்! .
உ.பி.யில் ஐந்து நதிகளை இணைக்கும் பிரமாண்ட நீர்பாசனத் திட்டம்: நாளை தொடக்கம்
உ.பி.யில் ககாரா, சரயு, ரப்தி, பங்கங்கா ரோகினி ஆகிய ஐந்து நதிகளை இணைக்கும் பிரமாண்ட நீர்பாசன திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூர் பகுதியில் 5 நதிகளை இணைக்கும் நீர்பாசன திட்டப்ப பணிகள் 1978 இல் தொடங்கப்பட்டன. ஆனால் போதுமான நிதி ஒதுக்கீடு, துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு போதுமான கண்காணிப்பு ஆகியவற்றில் தொடர்ச்சியின்மை காரணமாக,
இத்திட்டம் தாமதமாகி, கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் முடிக்கப்படவில்லை.
2016 ஆம் ஆண்டு, பிரதமர் வேளாண் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், இத்திட்டம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் கொண்டுவரப்பட்டது.
அந்த மனிதன் மிகப்பெரும் அறிவாளி, அடுத்த 200 ஆண்டுக்காலத்தை முன் கூட்டியே கணிக்கும் அளவு மிகப்பெரும் தீர்க்கதரிசி,லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்ட புனித பிம்பம். சம்பாதிக்கவேண்டிய வழக்கறிஞர் தொழிலை நாட்டுக்காக தியாகம் செய்த வ.உ.சி வகையறா.
அந்த மனிதன் தமிழகத்தில் சுதந்திரப் போராட்டம், அரசியல், தேசபணி எனப் பல இடங்களில் மிகப்பெரிய அடையாளமாய் இருந்தான், இந்தியாவில் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது ஆட்சி என்றால் என்ன? நிர்வாகம் என்றால் என்ன என்பதை முதலில் சொல்லிக் கொடுத்ததே அந்த மாமனிதனே.
ஆளுநர், மத்திய அமைச்சர், எனப் பல பதவிகளை வகித்த தமிழர் அவர், பெரும் ஆளுமையாக டெல்லியில் வலம் வந்தார்.
மொத்த இந்தியாவிற்கு ஒரு இந்தியன் கவர்னர் ஜெனரலாக இருந்தான் என்றால் அது அந்த தமிழன் தான். சக்கரவர்த்தி ராஜாகோபாலசாரியார் சுருக்கமாக ராஜாஜி.
இது உங்கள் இடம்: தி.மு.க., வரலாறு தெரிந்தோருக்கு புரியும்.. அதெல்லாம் வெறும் வேஷம்!
எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும்; கிழவியைத் துாக்கி மணையில் வை' என்று ஒரு சொலவடை உண்டு.
அப்படி தான், தமிழகத்தில் தி.மு.க.,வின் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய பிரச்னைகள், நுாற்றுக்கணக்கில் வரிசைக் கட்டி காத்து கொண்டிருக்கின்றன.
அதில் முதல் இடத்தை பிடித்து இருப்பது, மழை நீர் வெள்ளம். வீதி மட்டுமின்றி வீட்டிற்குள்ளும் புகுந்த வெள்ளத்தால், மக்கள் உச்ச கட்ட வேதனையில் தவித்து வருகின்றனர்.