நாம் ஏன் இளம் வயதிலேயே முதலீட்டு பழக்கத்தை தொடங்க வேண்டும்?

1. அதிக ரிஸ்க் மற்றும் அதற்கேற்ற returns எடுக்க சரியான தருணம்.

ஒரு 25 வயது முதலீட்டாளர் எடுக்கும் ரிஸ்க் அளவும், 40 வயதான முதலீட்டாளர் எடுக்கும் ரிஸ்க் அளவும் ஒரே மாதிரி இருக்காது. இருக்கக் கூடாது.
அதாவது, ஒரு 25 வயது முதலீட்டாளர், சந்தை சார்ந்த முதலீடுகளில் பணத்தை முதலீடு செய்யும் விகிதம் 75% (100 மைனஸ் உங்கள் வயது). மீதமுள்ள 25%, அவர் நிச்சய முதலீடுகளில் (Liquid Funds, Bonds, NCD's, PPF, FD's முதலியன). அவர் எடுக்கும் ரிஸ்க் அளவிற்க்கேற்றாற்போல் returns மாறுபடும்.
இளம் வயதிலேயே அதிக ரிஸ்க் எடுப்பதால், அவர்களின் வருமானமும் அதிகமாகும். ஆனால் இதே ஒரு 40 வயதுடைய முதலீட்டாளர், வெறும் 60% மட்டுமே சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 40%, நிச்சய முதலீடுகளில் செய்யலாம்.
பணவீக்க விகிதத்தை கழித்தால், நிச்சய முதலீடுகளில் வரும் வருமானம் உங்களுக்கு நஷ்டத்தையே கொடுக்கும்.

இப்படியாக, அதிக வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பை குறைந்த வயதிலேயே முதலீடு செய்யும் முதலீட்டாளர் பெறுகிறார்.
2. Compound Interest.
விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது இது.
“Compound interest is the eighth wonder of the world. He who understands it, earns it. He who doesn't, pays it.”

Power of Compounding என்று படித்திருப்பீர்கள்.
அது எந்த அளவிற்கு நமக்கு வருமானத்தை அள்ளித்தருமென்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். இதே 25/40 வயதுடைய இரண்டு நபர்களை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். இருவருமே சந்தை சார்ந்த முதலீடுகளில் வருடத்திற்கு 12% CAGR தரும் திட்டங்களில் மாதம் ₹10,000 முதலீடு செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்
இருவருமே, ஒரே திட்டத்தில், 60 வயது வரை முதலீடு செய்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் தொகை:
25 வயது முதலீட்டாளர் : ₹5,80,15,574
40 வயது முதலீட்டாளர் : ₹96,83,848

சுமார் 4.74 கோடிகள் வித்தியாசம்.

ஆச்சரியமாக இருக்கின்றதா? அதனால்தான் இதை எட்டாவது அதிசயம் என்று ஐன்ஸ்டீன் சொன்னார் ImageImage
3. Recovery time.
இளம் வயதில் முதலீடு செய்பவர்க்கு நஷ்டம் ஏற்பட்டால், அதை ஈடு செய்ய அவருக்கு நிறைய வருடங்கள் கிடைக்கும். ஆனால் வருடங்கள் ஆக ஆக, recovery time குறைந்துகொண்டே போகும்.

40 வயது முதலீட்டாளர் அதிக ரிஸ்க் எடுக்க முடியாமைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
4. More disposable Income.
25 வயதில் எந்தவொரு commitment ம் கிடையாது. ஆகையால், சம்பளத்தில், செலவுகள் போக, முதலீடு செய்ய அதிக பணம் கையில் இருக்கும்.

அதிக முதலீடு X அதிக வருடங்கள் = மலை போல் வருமானம்.
இதே 40 வயதுடைய முதலீட்டாளர்க்கு, குடும்பம், குழந்தைகள், கல்வி, வீட்டு செலவு போன்ற பல செலவுகள் போக முதலீடு செய்ய குறைந்த அளவு பணமே மிச்சமிருக்கும்.

குறைந்த முதலீடு X குறைந்த வருடங்கள் = குறைந்த வருமானம்.

இதனால் தான் மிகச்சிறிய வயதிலேயே முதலீடு செய்ய சொல்கிறேன்.
எந்தவொரு காரணமும் சொல்லாமல், EMI கட்டுவதுபோல், மாதா மாதம் ஒரு சிறிய தொகையினை உங்கள் முதல் சம்பள தேதியிலிருந்து நீங்கள் நல்ல திட்டங்களில் / பங்குகளில் முதலீடு செய்யத் தொடங்கினால், Power of Compounding மற்றும் Time Value of Money இவ்விரண்டும் உங்கள் முதலீடுகளை பன்மடங்காக்கும்.
சந்தேகமிருப்பின், TLல் கேட்கலாம். Personal பைனான்ஸ் குறித்த தனிப்பட்ட சந்தேகங்களுக்கு DMல் கேள்விகளை கேட்கலாம்.

முடிந்த அளவிற்கு விரைவாக பதிலளிக்கிறேன்.

நன்றி. #வாழ்கபணமுடன் 🙏🙏🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with K. RAJESH

K. RAJESH Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @rajeshkmoorthy

12 Dec
எது சிறந்தது?
Endowment பாலிசியா அல்லது Mutual Fund முதலீடா?

வருமான வரி விலக்கு பெறவும், Guaranteed Returns மற்றும் காப்பீடு பெறவும் ஆகச்சிறந்த முதலீட்டு வழி Endowment பாலிசி தான் என்று இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இந்நேரம் உங்களை முற்றுகையிட்டிருக்கும் இல்லையா?
உங்களுக்கும், ஆஹா நமக்கு காப்பீடு, வரி விலக்கு மற்றும் Guaranteed Returns கிடைக்கிறதே என்று நீங்கள் சற்றும் யோசிக்காமல் உடனே அந்த நிறுவனங்களின் பாலிசியை வாங்குபவரா?

சொந்தங்கள்/நண்பர்கள் பாலிசி விற்கிறார்களே என்று அவர்களுக்கு உதவ நினைப்பவரா?

சற்றே நிறுத்தி சிந்தியுங்கள்.
உதாரணத்திற்கு நான் எடுத்துக்கொண்ட Endowment பாலிசி ஒரு சிறந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பாலிசி. அதன்படி, வருடத்திற்கு ₹1 லட்சம் வீதம் 10 வருடங்கள் நீங்கள் பிரீமியம் செலுத்தினால், உங்களுக்கு 20 வருடங்கள் முடிந்தவுடன் ₹22,87,200 கிடைக்கும். இது போக 20 வருடங்களுக்கு 10 லட்சம் cover
Read 13 tweets
25 Nov
Cryptocurrency Bill 2021
இந்திய அரசாங்கம் கிரிப்டோகரன்சிகளை தடை செய்யுமா இல்லையா என்பது குறித்து தற்போது பெரியதாக சமூகவெளியில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. அவற்றின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் 2021 மசோதா நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
2019 இல், இது போன்றொரு மசோதா Cryptocurrency களை மொத்தமாக தடை செய்ய (blanket ban) பரிந்துரைத்தது. அந்த மசோதா, கிரிப்டோகரன்சியை யாரும் mining செய்யவோ, உருவாக்கவோ, வைத்திருக்கவோ, விற்கவோ, மாற்றவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என்று பரிந்துரை செய்தது.
2021ல், இந்த மசோதாவிற்கு ‘Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021 என்று பெயரிடப்பட்டுள்ளது.
அரசாங்க வட்டாரத்தில் இருந்து கிடைக்கும் தகவலின்படி, இந்த முறை, Blanket Ban இருக்காது. ஆனால் இதற்கொரு ஒழுங்குமுறை உருவாக்கப்படும் என்று தெரிகிறது.
Read 22 tweets
24 Nov
#StarHealth #IPO

IPO Open Date: Nov 30, 2021
IPO Close Date: Dec 2, 2021
Basis of Allotment Date: Dec 7, 2021
Initiation of Refunds: Dec 8, 2021
Credit of Shares to Demat Account: Dec 9, 2021
IPO Listing Date: Dec 10, 2021
DM me the below details and we will arrange the allotted IPO shares credited to the Demat account of your choice.

Name
PAN
Mobile
Email ID
DP ID & Client ID
Bank Name & Branch
IFSC Code
Account Number
Bank UPI ID
No of Lots
About #StarHealth
Largest private health insurance company in India Largest network distribution in the health insurance industry.
Diversified product suite and specialized products.
Strong risk management with a superior claims ratio.
Track record of good financial performance.
Read 4 tweets
15 Oct
எல்லாரும் ஆயுத பூஜை கொண்டாடியிருப்பீங்க. வர்த்தகம் செய்வோர் புதிய கணக்கை தொடங்கியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

அதேபோல், நம்மை போன்ற சம்பளதாரர்கள் என்ன செய்வது? நாமும் புதிய கணக்கை தொடங்களாமே? ஆமாம். சேமிப்பு கணக்கை தான் சொல்கிறேன்.
இது மற்றுமொரு வங்கிக் கணக்கல்ல. நமது வாழ்க்கை மேன்மை பெறுவதற்கான கணக்கு. இதே போன்று நம்மிடையே ட்விட்டரில் இருக்கும் எனது client ஒருவரின் சக்ஸஸ் ஸ்டோரி உங்களுக்கு ஒரு உத்வேகத்தை தருமென்று நினைக்கிறேன்.
அவருடைய பெயரை இங்கே குறிப்பிட விரும்பவில்லை (Client Confidentiality). எனது followers ல் அவரும் ஒருவர். அவரும் நம்மை போலவே மாத சம்பளதாரர் தான். எனது யோசனையின் பேரில், டீமேட் கணக்கொன்று துவக்கினார். முதலில் அவர் செய்த முதலீடு வெறும் ₹6,000 தான்.
Read 12 tweets
16 Aug
வாகனக் கழிவுக் கொள்கை (Automobile Scrappage Policy) - ஒரு பார்வை.

நேற்றைய தினம், பிரதமர் மோடி, தேசிய அளவிலான வாகனக் கழிவுக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். இந்த கொள்கை ஏப்ரல் 1, 2022 முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஏற்படும் மாற்றங்களை இந்த இழையில் காணலாம்.
இதனால் ஏற்படப்போகும் நன்மைகள் என்று பிரதமர் சொன்னவை:
1. சுற்றுச்சூழலை பாதிக்கும் பழைய வாகனங்களை அகற்றுவது.
2. சாத்தியமான சுழற்சி பொருளாதாரத்தை உருவாக்குவது.
3. ₹10,000 கோடி அளவிற்கு புதிய முதலீடுகளை பெறுவது.
4. வாகன சந்தையின் பொருளாதாரத்தை அதிகரிப்பது.
வாகன உரிமையாளர்களுக்கு இதனால் என்ன மாற்றங்கள் / பாதிப்புகள்.
1. சொந்த உபயோகத்திற்கான வாகனங்கள் 20 வருடத்திற்கு மேலும், வணிக உபயோகத்திற்கான வாகனங்கள் 15 வருடங்களுக்கு மேலும் பயன்படுத்த தடை விதிக்கப்படும்.
Read 11 tweets
24 Jul
Where do you stand in the rich list?

The minimum wealth for an adult to be part of the richest 1 per cent in India is $150,902. At current rates of around Rs 74.5 to a dollar, that would be around Rs 1.12 crore.
To be in the top 5 percent, your minimum wealth should be $45,909, while you require a minimum of $22,476 to be among the richest 10 percent of Indian adults. In rupee terms, you should have just Rs 16.74 lakhs to be in the top 10 percent
To be among the richest 1% of adults in the world requires a minimum of $1,055,388, or Rs7.86 crore.
If you have assets worth at least $278,520, you would be among the richest 5 percent in the world and at $129,624 you would be among the world’s richest 10%.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(