#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் சைதன்ய மகாபிரபு தன்னுடைய சேது யாத்திரைக்குச் செல்லும்போது வழியில் ஒரு ஊரில் பூரி ஜகந்நாதரைப் போலவே ஒரு ஜகந்நாதர் கோவில் இருப்பதை அறிந்த சைதன்ய மகாபிரபு, ஜகந்நாதரை வழிபட அந்தக் கோயிலுக்குச் சென்றார். அங்கே ஹிமாம்சு என்ற அர்ச்சகர் ஜகந்நாதப் பெருமாளுக்கு
நித்திய பூஜைகளைச் செய்து வந்தார். அவருக்கு வடமொழியோ, ஆகமங்களோ எதுவுமே தெரியாது. அவரது தந்தை நிசாகர் தாஸ் என்பவர் வேத சாஸ்திரங்களை நன்கு கற்றவர்.ஜயதேவரின் அஷ்டபதி பாடுவதில் வல்லவர். பல வருடங்கள் அதே கோயிலில் ஜகந்நாதப் பெருமாளுக்குப் பூஜை செய்து வந்தார். அதனால் நிசாகர் தாஸுக்குப்
பின் அவரது மகனான ஹிமாம்சுவையே அர்ச்சகராக நியமித்து விட்டார்கள். சீடர்கள் புடைசூழ சைதன்ய மகாபிரபு கோயிலுக்கு வந்தபோது, ஹிமாம்சு பக்தியுடன் அவரை வரவேற்றார். மகாபிரபுவின் சீடர்கள் ஹிமாம்சுவிடம் பெருமாளுக்கு விஷ்ணு ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்யும்படி கூறினார்கள். அர்ச்சனையைத் தொடங்கிய
ஹிமாம்சு 'விச்வாய நமஹ', 'விஷ்ணாய நமஹ' என்றார். நிறுத்துங்கள் என்றொரு ஒலி. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார் ஹிமாம்சு. மகாபிரபுவின் சீடர்களுள் ஒருவரான ஸ்ரீரங்கதாஸ் எழுப்பிய ஒலி அது.
ஸ்ரீரங்கதாஸ் வடமொழி இலக்கண இலக்கியங்களில் பெரிய மேதை.ஹிமாம்சு! ‘விஷ்ணவே நமஹ’ என்று சொல்வது தான்
இலக்கணப் படிச் சரி! ‘விஷ்ணாய நமஹ’ என்பது தவறு. விபக்தியைச் சரியாகப் பயன்படுத்து! என்றார். (வடமொழியில் வேற்றுமை உருபுக்கு விபக்தி என்று பெயர்.) ஹிமாம்சு, அய்யா உங்கள் அளவுக்கு நான் இலக்கணம் கற்கவில்லை. என் தந்தை எனக்கு இப்படித்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதைத் தான் தினமும்
சொல்லி வருகிறேன். ஜகந்நாதனும் இதை ஏற்று எனக்கு அருள்புரிந்து கொண்டிருக்கிறார் என்று பணிவுடன் கூறினார். ஆனாலும் அங்கிருந்த பல பண்டிதர்கள் இவ்விளக்கத்தை ஏற்கவில்லை. விபக்தியில் தவறு செய்து விட்டாய் என ஹிமாம்சுவை இகழ்ந்தார்கள். அப்போது குறுக்கிட்ட மகாபிரபு, மேதைகள் சரியான
விபக்தியுடன் அர்ச்சனை செய்வார்கள். பேதைகள் தவறான விபக்தியுடன் அர்ச்சனை செய்வார்கள். ஆனால் இறைவனோ அந்த விபக்தியைப் பார்ப்பதில்லை, பக்தியைத் தான் பார்க்கிறான். உண்மையான பக்தியோடு செய்யும் அர்ச்சனையில் எத்தனை குற்றங்கள் இருந்தாலும் அதை இறைவன் ஏற்றுக் கொள்வான் என்றார். இதை ஒரு
ஸ்லோகமாகவே இயற்றி விட்டார் மகாபிரபு. "மூர்க்கோ வததி விஷ்ணாய புதோ வததி விஷ்ணவே | உபயோஸ்து பலம் துல்யம் பாவக்ராஹீ ஜநார்தந: ||”
மேலும், "இதை நானாகச் சொல்லவில்லை. திருவரங்கநாதனின் கோயிலில் விஷ்ணு ஸஹஸ்ரநாம விளக்கப் புத்தகம் எனக்குக் கிடைத்தது. அதில் 104வது திருநாமமான ‘ஸர்வயோக
விநிஸ்ருதஹ’ என்ற திருநாமத்தை விளக்குகையில் பராசர பட்டரே இக்கருத்தைக் கூறியுள்ளார். அதாவது, சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட நெறிகளைப் பின்பற்றுபவர்கள் இறைவனின் அருளைப் பெறுகிறார்கள். ஆனால், அந்த விதிகளை அறியாதவர்கள், உண்மையான பக்தியுடன் தங்களால் இயன்ற முறையில் இறைவனை வழிபட்டாலும்
அவர்களுக்கும் இறைவனின் அருள் நிச்சயம் கிட்டும் என்று பட்டர் விளக்கியுள்ளார் என்றார் மகாபிரபு. யோகம் என்றால் மார்க்கம் என்று பொருள். ‘ஸர்வ யோகம்’ என்றால் சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட, விதிக்கப்படாத அனைத்து மார்க்கங்களையும் குறிக்கும். அந்த அனைத்து மார்க்கங்களாலும் அடையப்படுவதால்
திருமால் ‘ஸர்வயோக விநிஸ்ருத:’ என்றழைக்கப்படுகிறார்.
'ஸர்வயோக விநிஸ்ருதாய நம:' என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் செய்யும் பூஜைகள் அனைத்தையும் திருமால் உகந்து ஏற்றுக் கொள்வார்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

20 Dec
சிவபெருமானை வழிபடுவதற்கு ‘மகாசிவராத்திரி’ எப்படி விசேஷமான நாளோ அதேபோல ஈசனின் திருவடிவங்களில் ஒன்றான நடராஜப் பெருமானை வழிபடுவதற்கு ‘ஆருத்ரா தரிசனம்’ சிறப்பு மிக்க தினமாகும். ‘சிவம்’ என்பது அனைத்தையும் தனக்குள் அடக்கி வைத்துக் கொண்டு அசையாதிருப்பது. அதுவே நடராஜர் என்பவர் ஆனந்த
நடனம் ஆடி உலகின் அனைத்து இயக்கங்களுக்கும் ஆற்றலாக இருப்பவர். அப்படிப் பட்ட நடராஜப் பெருமானை வழிபடுவதற்கு உகந்த தினமே மார்கழி மாதத்தில் வரும் ஆருத்ரா தரிசனம். மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரமும், பவுர்ணமி தினமும் இணையும் நாளில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படுகிறது. அன்று
நடராஜருக்கு ஆறுவிதமான அபிஷேகங்களைச் செய்து அவரை குளிர்விப்பது வழக்கம். ருத்ரன் என்பவர் அக்னி வடிவமாக இருப்பவர். அவருக்கு குளிர் மிகுந்த மார்கழி மாதத்தில், அந்த மாதத்திலேயே அதிக குளிர்ச்சி நிறைந்த திருவாதிரை நாளில், ஆறுவிதமான அபிஷேகம் செய்து குளிரூட்டி வெப்பத்தை தணிக்கிறார்கள்.
Read 7 tweets
13 Dec
நம் இந்து மதம் பற்றிய கேள்விகள்- பதில் தெரிகிறதா என்று பாருங்கள்!
1. தேவாரம்,திருவாசகத்தை அளித்த
நால்வர் யார்?
2. தசரதனின் நான்கு பிள்ளைகளை
மணந்த நாலு பெண்கள் யார்?
3.வேதங்களை நான்காகப் பகுத்த
வேத வியாசர் எந்த நாலு
ரிஷிக்களிடம் அவைகளைப்
பரப்பும் பொறுப்பை ஒப்படைத்தார்?
4. நான்கு புருஷார்த்தங்கள் (அடைய
வேண்டிய லட்சியங்கள்) என்ன?
5. மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை கடந்து செல்ல வேண்டிய நாலு நிலைகள் என்ன?
6. நான்மணிக் கடிகை நூலில்
கூறப்படும் நாலு என்ன?
7. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்கிறார்களே நாலின் பொருள் என்ன?
8. நாலும் கலந்துனக்கு நான்
தருவேன் என்று பிள்ளையாரிடம் அவ்வையார் கூறினாரே, அந்த நாலு என்ன?
9. தமிழில் புற நானூறு, அகநானூறு
பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள்?
வேறு என்ன பழந்தமிழ் நூல்கள்
நானூறு (நாலு நூறு) பாடல்கள்
உடையவை?
10. பிரம்மாவின் நாலு மானச
புத்திரர்கள் யாவர்?
11. நான்கு வகைப் பூக்கள் யாவை?
Read 10 tweets
13 Dec
குழந்தை கிருஷ்ணரின் வடிவம் யசோதைக்கு மட்டும் தான் தெரியும். ஒரு முறை ருக்மணி அவ்வடிவத்தைப் பார்க்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள, அவர் அவ்வாறே குழந்தையாக மாறிய போது, விஸ்வகர்மா அவ்வுருவத்தை மாதிரியாக வைத்து செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலை, மனைவி ருக்மணிதேவியால் வழிபடப்பட்டு துவாரகை
கடலில் மூழ்கிய போது மூழ்கி பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து, மத்வராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட (பாலகிருஷ்ணர்) குழந்தை கிருஷ்ணரின் திருவுருவமே #உடுப்பி கிருஷ்ணரின் கோயிலில் உள்ளது. தட்சனின் சாபத்தால் தனது ஒளியையும் அழகையும் இழந்து வருந்திய சந்திரன், சிவபெருமானை
நோக்கி உடுப்பியில் கடும் தவம் செய்து இழந்த ஒளியையும் அழகையும் திரும்பப் பெற்றார். அப்போது சந்திரன் நிர்மாணித்த திருக்குளம் ’சந்திர புஷ்கரணி’. நட்சத்திரங்களின் அதிபதியான சந்திரன் தவம் புரிந்ததால் (உடு=சந்திரன்; பா=அதிபதி)
உடுபா என்றும் பின்னர் அது மருவி உடுப்பி
Read 4 tweets
12 Dec
நாளை காசியில் #காசிவிஸ்வநாதர் ஆலயத்தின் புதிய வளாகம் திறக்கபடுகிறது. பிரதமர் மோடி அதை திறந்து வைக்கிறார். ரிஷிகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ‘காசி வாழ இத்தேசம் வாழும், காசி வீழ்ந்தால் இத்தேசம் வீழும்’ என்பது. அது முக்கால உண்மை. காலமெல்லாம் போராடிய சத்ரபதி சிவாஜி
காசியில் கால்வைத்த பின் தான் இந்துகளின் அதிபதியாக முடிசூட்டி கொண்டார். அவர் காலத்துக்குப் பின் காசி சுல்தான் பிடியில் சிக்கினாலும் தமிழக சித்தஞானி குமரகுருபரர் சிங்கத்தின் மேல் அமர்ந்து அரபுமொழி பேசி காசி ஆலயத்தின் உரிமையினை மீட்டு கொடுத்தார். ஞானியர் எப்பொழுதும் முழு காரியமும்
முன்னின்று செய்யமாட்டார்கள், தொடங்கி வைத்துவிட்டு அவர்கள் போக்கில் செல்வார்கள், பின் வருபவர்தான் தொடரவேண்டும். ஆனால் ஏனோ பிற்காலத்தில் யாரும் வரவில்லை சிக்கல் நீடித்தது. சிவாஜியும், குமரகுருபரரும் மட்டும் இல்லாது போயிருந்தால் காசி எனும் அடையாளமே அழிந்திருக்கும், அழிந்துவிட்ட அதை
Read 15 tweets
12 Dec
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் திருமாலும், மகாலட்சுமியும் ஆதிசேஷனின் மீது அமர்ந்து சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தனர். கலியுகத்தில் மனிதன் எப்படியிருப்பான் என்பது பற்றிய பேச்சு அது. திடீரென திருமால் எழுந்தார். கருடன் கணப்பொழுதில் அவர் முன் வந்து நின்று, சுவாமி ஏறுங்கள் என்றான். அவர் எங்கு
போகிறார் எனத் தெரியாவிட்டாலும் தன் மேல் அவர் ஏறியதும், அதுபற்றிய விபரம் கேட்டு, அங்கே வேகமாகப் போய் நிற்பது கருடனின் வழக்கம். பெருமாளும் கருடன் மேல் ஏறி, "கருடா அதோ வண்ணத்துணிகள் காய வைக்கப்பட்டுள்ள அந்த ஆற்றங்கரைக்குப் போ'' என்றார். கருடன் அதை நோக்கிப் பறக்கவும், சிறிது
நேரத்தில், “வேண்டாம் வைகுண்டத்துக்கே திரும்பி விடு'' என்றார். கருடனும் வைகுண்டத்தில் அவரை இறக்கி விட்டான். அவரைப் பார்த்த லட்சுமி,"சுவாமி! பேச்சைக் கூட பாதியில் விட்டு விட்டு, என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் அவசரமாகக் கிளம்பினீர்கள்! இப்போது, திரும்பி விட்டீர்களே!'' என்றாள்.
Read 7 tweets
12 Dec
Experiences with Maha Periyava: Grammy winning Ghatam Maestro Vikku Vinayakram.
An ardent devotee of Periyavaa he attributes all his success to His bountiful blessings. “I have felt His divine presence on more than one occasion,” he says. Once Vinayakram had gone on a tour to
Athens to perform at a concert along with L. Shankar & Zakir Hussain. Somehow the Ghatam (a circular mud pot beaten with the hands as a percussion instrument) he took broke a few days before the scheduled date of performance. Vinayakram was heart broken and called his wife in
Chennai and told her that he wanted to return as there was no point of staying in Athens. His wife asked him to wait for one day and in the meantime, went to Kanchi Mutt and explained the situation to Sri Maha Periyava. Periyava did not react to her narrative and kept quiet. She
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(