தசாவதாரங்களில் ரொம்பப் பேசப்படாத அவதாரம் 6வது அவதாரமான் #பரசுராம_அவதாரம். பரசுராமர் நீதியை நிலைநாட்ட வந்த அவதாரம். சப்தரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் நான்காவது மகனாக அவதரித்தவர் பரசுராமர். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை நிலைநாட்டியவர். அதனாலேயே
தன்னுடைய தந்தையால் சிரஞ்ஜீவி வரத்தைப் பெற்றவர். அதற்கு முன் உள்ள எந்த அவதாரத்திலும் பகவான் எந்த ஆயுதத்தையும் பிரயோகப்படுத்தவில்லை. ஆனால் முதன்முதலாக பரசுராம அவதாரத்தில் தான் கோடலி ஆயுதத்தை பிரயோகப்படுத்துகிறார்.இதை ராமானுஜ நூற்றந்தாதி பாசுரம்
கோக்குலமன்னரை ஓர் கூர் மழுவால்
போக்கிய தேவன்
என்று வர்ணிக்கிறது. பரசுராமர் சிரஞ்ஜீவி என்பதால் இன்றைக்கும் கன்னியாகுமரிக்கு அருகில் மகேந்திர மலையில் தவம் செய்து கொண்டிருப்பதாக ஐதீகம். எங்கெல்லாம் தர்மம் குறைந்து, நலிந்து மக்கள் துன்பப்படுகிறார்களோ அப்பொழுதெல்லாம் பரசுராம அவதாரம் நிகழும். கோடாரியை ஆயுதமாகக்கொண்ட
பரசுராமர் தம்முடைய அவதார காலத்தின் முடிவில் கோடரியை கடலில் வீசினார். அதன் வேகத்திற்கு பயந்து மேற்குக் கடல் பின் வாங்கியது. அப்படி உருவான புண்ணிய பூமிதான் கேரள பூமி. திருவல்லம் பரசுராம சுவாமி கோவில் தென்னிந்தியாவின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாகும். இது திருவனந்தபுரத்தின்
திருவல்லம் அருகே கரமணா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பரசுராமருக்கான ஒரே கோயில் இது. தான் செய்த சபதத்தின்படி அரச குலத்தைச் சேர்ந்த பலரையும் தேடிச்சென்று சண்டையிட்டு, அவர்களை அழித்துக் கொண்டிருந்த அவர் சில காலத்துக்குப் பிறகு, இனி எவருடனும் போர் செய்வதில்லை என்று முடிவெடுத்து, இறை
வழிபாட்டில் ஆர்வம் செலுத்தினார். ஒரு நாள், கேரள மாநிலத்தில் ஓடிக் கொண்டிருந்த கரமனை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அந்த ஆற்றில் அவருக்கு சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. அந்தச் சிவலிங்கத்தை ஆற்றின் கரைப்பகுதியில் நிறுவி வழிபட தொடங்கினார். அப்போது அவர், தன் தாயைக் கொன்ற பாவம், பல
அரசர்களைக் கொன்ற பாவமெல்லாம் நீங்கியதாக உணர்ந்தார். அந்தக் கோவிலிலேயே தன் தாயின் ஆன்மா உயர்வுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் பிதுர் தர்ப்பணம் செய்தார். அந்தச் சடங்கிற்குப் பின்பு, அவருடைய அம்மாவின் ஆன்மாவுக்கு உயர்வு கிடைத்தது தெரிந்து மகிழ்ந்தார். அவருக்கு ஏற்பட்டிருந்த மன வருத்தம
எல்லாம் மறைந்து போனது. சிவபெருமானை வழிபட்ட அந்த இடம்தான் திருவல்லம் திருக்கோவிலாக தற்போது மாறியிருக்கிறது. இங்கு பரசுராமரின் பாதம் பொறிக்கப்பட்ட பீடம் இருக்கிறது. இந்தப் பீடத்தின் அருகில் பரசுராமர் கோடரியுடன் நிற்கும் சிலை உள்ளது. இங்குள்ள பீடத்திற்கு தினசரி வழிபாடுகள் செய்யப்
படுகின்றன. கரமனை ஆறு, கிள்ளியாறு, பார்வதிபுத்தனார் ஆறு ஆகிய மூன்று ஆறுகள் சேருமிடத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா என மூவருக்கும் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன. இங்குள்ள சிவபெருமானை பரசுராமரும், விஷ்ணுவின் தோற்றமான வேதவியாசரை விபா கரண முனிவரும்,
பிரம்மாவை ஆதிசங்கரரும் நிறுவினர் என்று இக்கோவிலுக்கான தல வரலாறுகள் தெரிவிக்கின்றன. ஆலயம் தினமும் அதிகாலை 5 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். ‘திருவோணம் ஆறாட்டு’ மற்றும் ‘பரசுராமர் ஜெயந்தி’ எனும் இரு விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்
படுகின்றன. அவர் ஜெயந்தி நாளில் (அகஷ்ய திரிதியை நன்னாள் தான் பரசுராம ஜெயந்தியும்) பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளை வழிபடுவதன் மூலம் எண்ணற்ற நற்பலன்களை அடைய முடியும்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

24 Dec
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒருமுறை அரசன் கபிலன் பெரும் போர் ஒன்றிலே வெற்றிவாகை சூடினான். பெரும் களிப்பில் இருந்த அரசன் தன் தளபதிகளை அழைத்து உங்களுக்கு என்ன வேண்டுமோ அதனைக் கேளுங்கள் தருகின்றேன் என்று ஆணையிட்டான். இதுதான் சந்தர்ப்பம் என்று எண்ணி, தளபதிகள் மாளிகை, கோட்டைகள் கட்டித் Image
தருமாறு கேட்டனர், ஆனால் தளபதி ஜெயந்தன் மட்டும் தனக்கு கொஞ்சம் பொன்னும் பொருளும், இரண்டு வருடத்திற்கான அரச விடுமுறையும் தேவை என்று கேட்டு அன்றே பெற்றுக்கொண்டான் ஜெயந்தன். இதனைப் பார்த்த மற்ற தளபதிகள், அவனைப் பார்த்து முட்டாளே மன்னனிடம் இவ்வளவு அற்பமான கோரிக்கையை கேட்டுப் பெற்றுக்
கொண்டாயே, எங்களைப் போல கோட்டை கொத்தளங்கள் என்று கேட்டிருக்கலாமே என்றார்கள்.
அதற்கு அந்த தளபதி ஜெயந்தன் நானா முட்டாள்? எனக்கு இன்றைக்கே நான் கேட்டது கிடைத்துவிட்டது. நீங்கள் கேட்பது கிடைக்க சில காலம் ஆகலாம். கோட்டை கொத்தளங்கள் கட்ட வருடக் கணக்காகும். ஒரு வேளை மன்னன் கபிலன் வேறொரு
Read 6 tweets
24 Dec
திருமயிலை #ஸ்ரீகபாலீஸ்வரர் #கற்பகாம்பாள் அடியார் கூட்டத்தில் தலைசிறந்தவர் ஸ்ரீ முத்துலக்ஷ்மி எனும் மூதாட்டி. பல வருடங்களாக கற்பகாம்பாள் சன்னிதியில் லலிதா ஸஹஸ்ரநாமம், ஸௌந்தர்யலஹரி முதலியவற்றை மனமுருகி பாராயணம் நெய்த இவர் தான் மட்டும் இந்த நற்பணியை செய்யாமல் தன் போன்ற மாதர்களையும் ImageImage
சேர்த்துக் கொண்டு பாராயணம் செய்வார். அவர்களுக்கும் இதை பிழையின்றி சொல்லிக் கொடுத்து ஈடுபடுத்தியதால் அந்த மாதர்சங்கம் (சுவாஸினி மண்டலி) அவரை குரு பாட்டி என்றே அழைப்பது வழக்கம்.
அந்த குரு பாட்டிக்கு ஒரு நாள் அதிகாலை 3 1/2 மணிக்கு கனவு வந்தது. அதில் ஸஹஸ்ரநாமம் பொறித்த தங்கக்காசு
மாலையை அணிந்து கொண்டு அன்னை கற்பகாம்பாள் நிற்க உடன் மஹா பெரியவரும் நிற்கிறார். ஆனந்தம் கொண்ட பாட்டி, அன்னையிடம் உனக்கேது ஸஹஸ்ரநாம மாலை, காஞ்சி காமாக்ஷிக்கு தானே பெரியவா பண்ணிப் போட்டா என்று கேட்க உடனே அருகில் நிற்கும் காஞ்சி மஹான் “ஆமாம் நான் காமாக்ஷிக்கு போட்டேன். கற்பகத்துக்கு Image
Read 16 tweets
24 Dec
#மார்கழிஸ்பெஷல் #தர்மசாஸ்திரம்
பீஷ்ம பிதாமஹர் அம்புப்டுக்கையில் இருந்து கொண்டு யுதிஷ்டிர மஹாராஜாக்கு உரைத்த தர்ம சாஸ்திரம்:
எவனெருவன் தனுர் (மார்கழி) மாசத்தில் சந்திரன் மூல நட்சத்திரத்தில் வரும்போது அன்றைய தினத்தில் ஸ்ரீமன் நாராயணை தியானிக்கிறானோ அவனுக்கு சௌக்கியம் உண்டாகும். மூல Image
நட்சத்திரத்தை ஸ்ரீமன் நாராயணனுடைய திருப்பாதங்களாகவும் ரோகிணியை கணுக்கால்களாகவும் அஸ்வினியை முழங்கால்களாகவும் பூராட உத்திராட நட்சத்திரத்தை துடையாகவும் பூர உத்திரங்களை மறைவு ஸ்தானமாகவும் கிருத்திகையை இடுப்பாகவும் பூரட்டாதி உத்திரட்டாதி நட்சத்திரத்தை நாபியாகவும் ரேவதியை வயிறாகவும்
அவிட்டத்தை முதுகாகவும் அனுஷத்தை மார்பாகவும் விசாக நட்சத்திரத்தை கைகளாகவும் ஹஸ்த நட்சத்திரத்தை நுனிகையாகவும் புனர்பூசத்தை விரல்களாகவும் ஆயில்யத்தை நகங்களாகவும் கேட்டையை கழுத்தாகவும் ஸ்ரவணத்தை காதாகவும் புஷ்யத்தை வாயாகவும் ஸ்வாதியை பல்லும் உதடுமாகவும் சதய நட்சத்திரத்தை Image
Read 5 tweets
23 Dec
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத்தில் மேல் தளத்தில் நவக்கிரக சிலைகள் உள்ளன. ஒரே கல்லில் அவை வடிவமைக்கப் பட்டுள்ளன. இதுதவிர அந்த கல்லில் 12 ராசிகளும் இடம் பிடித்துள்ளன. புதிதாக செல்பவர்கள் நவக்கிரக மண்டபத்துக்கு சென்றால் அங்கு வெறும் மேடை மட்டுமே தென்படும் Image
தலையை உயர்த்தி மேலே பார்த்தால் தான் நவக்கிரகங்களையும், ராசிகளையும் காண முடியும். சிவனும், பார்வதி தேவியும் இக்கோவிலில் அமர்ந்து யாகம் செய்தபோது நவக்கிரகங்கள் மேலிருந்து கீழ் நோக்கி வழிபட்டதால் எல்லா நவக்கிரகங்களும் கீழ் நோக்கி பார்ப்பதாக கூறப்படுகிறது. அதே போல வழிபடும் பக்தர்களை
மேலிருந்து நவக்கிரங்கள் பார்க்கின்றன. பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் தொடங்கி சித்திரை மாதம் பரணி நட்சத்திரம் வரை சிவன், பார்வதி, குமரி தேவி விக்ரகங்கள் இந்த மண்டபத்தில் பூஜையில் இருப்பார்கள். இது அக்னி நட்சத்திர காலமாகும், தெய்வங்களை குளிர்விக்க நடத்தப்படும் பூஜை. இதற்காக
Read 4 tweets
23 Dec
It is very important to get involved in our local temples. This is the least we can do to save our Dharma. I asked my neighborhood temple if they open the temple at midnight on 31st Dec. They said they do and have been doing so for many years now. It is a Vinayakar temple
with deities of Murugan, Durgai, Vishnu along the circumference of the Moolavar Vinayagar, Navagraham and Anjaneyar separately to one side. It is a small temple on a main road catering to the spiritual needs of lower income households. They have a Brahmin priest and all Hindu
festivals like Thai poosam, Vinayakar Chathurthi etc. are celebrated well. The temple opens morning & evening for a few hours everyday & has a good number of devotees visiting the temple. I told them as per Agama Vidhi the temple once closed at 9pm cannot be opened at midnight
Read 9 tweets
23 Dec
#பாண்டவதூதப்பெருமாள்கோவில் பஞ்ச பாண்டவர்களுக்கு ஐந்து வீடாவது கொடுக்கச் சொல்லி கேட்பதற்காக கவுரவர்களிடம் தூது போகிறார் கிருஷ்ணர். கிருஷ்ணர் வருவதை அறிந்து அவரை கொல்ல சதி செய்கிறார்கள் கௌரவர்கள். மூங்கிலால் ஆன பொய்யாசனம் அமைத்து, அதன் கீழ் ஆயுதங்களுடன் மல்லர்களை நிறுத்தி Image
வைக்கிறான் துரியோதனன். கிருஷ்ணருக்கு இது தெரிந்துவிடுகிறது. அடுத்து அவர் செய்ததுதான் காஞ்சிபுரம்/திருப்பாடகம் பாண்டவதூதர் பெருமாள் கோயில் எழுந்த வரலாறு. கொல்ல சதி செய்து அமைக்கப்பட்ட பொய்யாசனத்தில் பாண்டவர்களுக்கு தூது போன பெருமாள் அமர்கிறார் சாதாரணமாக அல்ல. விஸ்வரூபம் எடுத்து Image
அமர்கிறார். பொய்யாசனத்தின் கீழ் இருந்த மல்லர்கள் அழிக்கப் படுகிறார்கள். திருதுராஷ்ட்ரருக்கு பார்வை அளித்த அந்த நேரம் அவருக்கு விஸ்வரூப தரிசனம் தருகிறார் கிருஷ்ணர். ஜெனமே ஜெயனும், ஹரித முனிவரும் இந்த விஸ்வரூபத்தை தரிசனம் செய்யும் பேறு பெற்றனர். பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசை
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(